Skip to main content

Posts

Showing posts from 2014

பொருட்பால் - அரசியல் - ஊக்கம் உடைமை-Energy- De l'énergie- 590-600.

பொருட்பால்-அரசியல்-ஊக்கம் உடைமை- Energy- De l'énergie-590-600. 
உடையர் எனப்படுவது ஊக்கம் அஃதுஇல்லார் உடையது உடையரோ மற்று. 591
ஊக்கம் உடைமையே "உடையவர் " என்று சொல்லப்படும் சிறப்புக்கு உரியது .ஊக்கம் இல்லாதவர் வேறு எதைப் பெற்றிருந்தாலும் உடையவர் அல்லர் .
எனது கருத்து: 
சரி ஊக்கம் இருக்கிற ஆக்கள்தான் உடையவர் எண்டால், வேலை வெட்டி இல்லாமல் பரம்பரை சொத்திலை பண்ணையார் விளையாட்டு காட்டுறவையையும் "உடையார்" எண்டுதான் ஊரிலை சொல்லுறவை. அவைக்கு இந்த காசுகள் எங்கை இருந்து வருகுது எண்ட விசையமெல்லாம் தெரியாது. அவையளை எப்பிடி ஊக்கம் உள்ளவை எண்டு எடுக்கிறது ஐயா ?
Tis energy gives men o'er that they own a true control; They nothing own who own not energy of soul.
Ceux que l'on appelle possédants sont ceux qui ont de l'énergie. Ceux qui n'en ont pas deviendront-ils possédants, quoi qu'ils possèdent autre chose ?
உள்ளம் உடைமை உடைமை; பொருள்உடைமை நில்லாது நீங்கி விடும். 592
ஊக்கம் உடைமையே ஒருவனுக்கு நிலையான செல்வம் .ஏனைய பொருள் வளத்தைப் பெற்றிருந்தாலும் அவை நிலை…

பொருட்பால் - அரசியல் - ஒற்றாடல்- Detectives-Du service des renaeignemcnts- 580-590.

பொருட்பால் - அரசியல் - ஒற்றாடல்-Detectives-Du service des renaeignemcnts-580-590. 
ஒற்றும் உரைசான்ற நூலும் இவைஇரண்டும் தெற்றுஎன்க மன்னவன் கண். 581
ஒற்றரும் ,புகழ் அமைந்த நீதி நூலும் ஆகிய இரண்டு கருவிகளையும் மன்னவன் தன்னுடைய இரண்டு கண்களாகக் கருத வேண்டும் .
எனது கருத்து :
இவை இரண்டும் மட்டும் காணாது . நடைமுறை யதார்த்தம் எண்ட ஒருசாமானும் இருக்கு .அதையும் அரசர்மார் மூண்டாவது கண்ணாய் வைச்சிருக்கவேணும் .
These two: the code renowned and spies, In these let king confide as eyes.
Que le Prince considère le service des Renseignements et la science du Droit, dignes d'éloge comme ses deux yeux.
எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும் வல்அறிதல் வேந்தன் தொழில். 582
எல்லாரிடத்தும் நிகழ்வன எல்லாவற்றையும் நாள்தோறும் ஒற்றனைக்கொண்டு விரைந்தறிதல் வேந்தனுடைய தொழில் ஆகும். 
எனது கருத்து :
பகையாளியிட்டை றொக்கி எடுக்கலாம் சரி . நண்பர் நடுநிலையாளரிட்டை றொக்கி எடுத்து அவையிட்டை மாட்டினால் அரசனுக்கு பிரச்சனையெண்டால் அவையள் காப்பாத்துவினமோ ??
Each day, of every subject every deed, 'Tis duty of the king to learn…

பொருட்பால் - அரசியல் - கண்ணோட்டம்- Benignity- De l’égard-570-580.

பொருட்பால்-அரசியல்-கண்ணோட்டம்-Benignity -De l’égard-570-580.
கண்ணோட்டம் என்னும் கழிபெருங் காரிகை உண்மையான் உண்டுஇவ் வுலகு. 571
கண்ணோட்டம் என்று சொல்லப்படும் மிகச் சிறந்த அழகு இருப்பதனால்தான் ,இவ் உலகம் பெற்றுள்ளது .( கண்ணோட்டம் = தாட்சண்யம் ,பரிவு நோக்கு )
எனது கருத்து :
இந்த கண்ணோட்டம் எண்டாலே குழப்பம்தான் .ஒரு இடத்திலை சரியாய் தெரியிறது கொஞ்சம் தள்ளி பிழையாய் தெரியிது ,ஆனால் இதுகளையெல்லாம் தாண்டி ஒரு நடுநிலை கண்ணோட்டதோடை பாக்கிறவையாலைதான் இண்டைக்கும் உலகம் வாழுது எண்டு ஐயன் சொன்னாலும், ஆர் நடுநிலமையாய் இருக்கினம் எண்டதிலையும் குழப்பம்தான் கண்டியளோ. டொட்டலி கொன்பியூசன் .
Since true benignity, that grace exceeding great, resides In kingly souls, world in happy state abides.
C'est par la ravissante parure appelée égard que ce monde subsiste en vérité.
கண்ணோட்டத்து உள்ளது உலகுஇயல் ;அஃதுஇலார்உண்மை நிலக்குப் பொறை. 572
உலகியல் கண்ணோட்டத்தில் நிகழ்வதாகும் .ஆதலால் அக்கணோட்டம் இல்லாதார் உலகில் இருத்தல் இவ்வுலகிற்குச் சுமையே ஆகும் .
எனது கருத்து :
உப்புடி பாத்தால் இண்டைக்கு பூமி குப்பை கூள…

பொருட்பால் - அரசியல்-வெருவந்த செய்யாமை- Absence of 'Terrorism-Ne pas inspirer la terreur- 561-570.

பொருட்பால்-அரசியல்-வெருவந்த செய்யாமை-Absence of 'Terrorism-Ne pas inspirer la terreur-561-570.

தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால் ஒத்தாங்கு ஒறுப்பது வேந்து. 561
செய்த குற்றத்தைத் தக்கவாறு ஆராய்ந்து , மீண்டும் அதைச் செய்யாதபடி குற்றத்துக்கு ஏற்றவாறு தண்டிப்பவனே மன்னன் ஆவான் 
எனது கருத்து : 
நீங்கள் சொல்லுறது ஞாயம்தான்.ஆனால் இண்டைக்கு சனங்களை விட மன்னர்கள்தான்கூட பிழை விடினம். இவையளுக்கு ஆரப்பா தண்டனை குடுக்கிறது?
Who punishes, investigation made in due degree, So as to stay advance of crime, a king is he.
Le Roi est celui qui informe impartialement contre le délinquant et inflige à sa faute une peine appropriée pour empêcher la récidive.
கடிது ஓச்சி மெல்ல எறிக ; நெடிது ஆக்கம் நீங்காமை வேண்டு பவர். 662
ஆட்சிப் பொறுப்பான செல்வம் தம்மைவிட்டு நீங்காமலிருக்க விரும்புகிறவர் ,குற்றம் செய்தவரைக் கடுமையாகத் தண்டிபவரைப் போலத் தொடக்கி ,அளவு மீறாதபடி மென்மையாகத் தண்டிக்க வேண்டும் 
எனது கருத்து :
அப்ப உந்த அரசியல் கட்சியள் மாதிரி மொள்ளைமாரி வேலையள் செய்யச் சொல்லுறியள் . ஒருத்தர் பிழை விட்…

பொருட்பால் - அரசியல் - கொடுங்கோன்மை-The Cruel Sceptre- La Tyrannie-550 -560.

பொருட்பால்-அரசியல்-கொடுங்கோன்மை-The Cruel Sceptre- La Tyrannie -550-560. கொலைமேற்கொண் டாரிற் கொடிதே அலைமேற்கொண்டு அல்லவை செய்துஒழுகும் வேந்து. 551
குடிகளை வருத்தும் தொழிலை மேற்கொண்டு முறையிலாத செயல்களைச் செயும் அரசன் கொலைத் தொழிலைக் கொண்டவரை விடக் கொடியவன் 
எனது கருத்து :
இப்பிடியான அரசர்களுக்குதானே ஐயா இண்டைக்கு வாழ்மானம் வந்திருக்கு. எந்த அரசன் நேர்மையா குடிகளை நடத்திறான்?
Than one who plies the murderer's trade, more cruel is the king Who all injustice works, his subjects harassing.
Le Roi qui. pour extorquer leurs biens, opprime ses sujets et emploie des procédés illégaux est plus cruel que ceux qui tuent par haine.
வேலொடு நின்றான் இடுஎன் றதுபோலும் கோலொடு நின்றான் இரவு. 552
அரசன் குடிமக்களிடம் முறைகடந்து பொருளைக் கேட்பது,கையில் வேலோடு வழிப்பறி செய்யும் கள்வன் 'கொடு 'என்று கேட்பதைப் போன்றது. 
எனது கருத்து :
ஆனால் இதிலை ஒரு சிக்கல் இருக்கு ஐயா . வரி இல்லாமல் எல்லாம் இலவசம் எண்டு தன்ரை குடிமக்களை அரசன் விட்டால் எப்பிடி இருக்கும் ?? குடிமக்கள் ஒழுங்கு முறையா வேலைக்கு போ…