பொருட்பால் - அரசியல் - ஒற்றாடல்- Detectives-Du service des renaeignemcnts- 580-590.


பொருட்பால் - அரசியல் - ஒற்றாடல்-Detectives-Du service des renaeignemcnts-580-590. 




ஒற்றும் உரைசான்ற நூலும் இவைஇரண்டும்
தெற்றுஎன்க மன்னவன் கண். 581

ஒற்றரும் ,புகழ் அமைந்த நீதி நூலும் ஆகிய இரண்டு கருவிகளையும் மன்னவன் தன்னுடைய இரண்டு கண்களாகக் கருத வேண்டும் .

எனது கருத்து :

இவை இரண்டும் மட்டும் காணாது . நடைமுறை யதார்த்தம் எண்ட ஒருசாமானும் இருக்கு .அதையும் அரசர்மார் மூண்டாவது கண்ணாய் வைச்சிருக்கவேணும் .

These two: the code renowned and spies, In these let king confide as eyes.

Que le Prince considère le service des Renseignements et la science du Droit, dignes d'éloge comme ses deux yeux.

எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும்
வல்அறிதல் வேந்தன் தொழில். 582

எல்லாரிடத்தும் நிகழ்வன எல்லாவற்றையும் நாள்தோறும் ஒற்றனைக்கொண்டு விரைந்தறிதல் வேந்தனுடைய தொழில் ஆகும். 

எனது கருத்து :

பகையாளியிட்டை றொக்கி எடுக்கலாம் சரி . நண்பர் நடுநிலையாளரிட்டை றொக்கி எடுத்து அவையிட்டை மாட்டினால் அரசனுக்கு பிரச்சனையெண்டால் அவையள் காப்பாத்துவினமோ ??

Each day, of every subject every deed, 'Tis duty of the king to learn with speed

La fonction du Roi est d'apprendre promptement et chaque jour,
tout ce qui se passe chez tout le monde.

ஒற்றினால் ஒற்றிப் பொருள்தெரியா மன்னவன்
கொற்றம் கொளக்கிடந்தது இல். 583

ஒருவரால் நாட்டு நிகழ்சிகளை அறிந்து அவற்றின் பயனை ஆராய்ந்துணராத மன்னவன் ,வெற்றி பெறத் தக்க வழி வேறு இல்லை .

எனது கருத்து :

இப்பவெல்லாம் நாட்டுநடப்புகளை தெரியாமல் தங்கடை பொக்கற் நிரம்பினால் காணும் எண்டு இருக்கிற அரசர்மாருக்குத்தான் காலம் கண்டியளோ. கடைசிநேரத்திலை அரசன் வெல்லுறதுக்கு வழியும் இருக்கு .அதுதான் இலவசம் எண்ட ஆயுதம் . இதுக்கு மருளாத சனம் இல்லை .

By spies who spies, not weighing things they bring, Nothing can victory give to that unwary king.

Le Prince n'a pas d'autre moyen de vaincre (ses ennemis) que de se faire renseigner par ses espions et de savoir tirer profit (de ces renseignements).

வினைசெய்வார் தம்சுற்றம் வேண்டாதார் என்றுஆங்கு
அனைவரையும் ஆராய்வது ஒற்று. 584

ஒற்றர் வேலை செய்பவர் ,சுற்றத்தார் ,பகைவர் , என்று சொல்லப்பட்ட அனைவரையும் சொல் செயல்களால் ஆராய்பவனே ஒற்றனாவான் .

எனது கருத்து :

நீங்கள் சொல்லுறது சரியெண்டாலும் றொக்கியளை முழுக்க நம்பக்கூடாது .அவைக்கும் ஒரு றொக்கி வைக்கவேணும் .

His officers, his friends, his enemies, All these who watch are trusty spies

L'espion est celui qui surveille tout le monde: fonctionnaires, parents et ennemis.

கடாஆ உருவொடு கண்அஞ்சாது யாண்டும்
உகாஅமை வல்லதே ஒற்று. 585

சந்தேகப்படாத மாற்று உருவுடன் ,பார்த்தவர்களுக்கு அஞ்சாமல் அறிந்ததை யார்க்கும் வெளிப்படுத்தாமல் இருக்க வல்லவனே ஒற்றன் ஆவான் .

எனது கருத்து :

எங்களுக்கும்தான் இதைவிட திறமான ஒற்றர்கள் இருந்தவை.என்ன நடந்தது ?? காலம் எண்ட ஒற்றனை விட மற்ற ஒற்றர்கள் ஒருபடி கீழைதான் .

Of unsuspected mien and all-unfearing eyes, Who let no secret out, are trusty spies.

Celui qui se présente sous un dehors insoupçonnable, qui ne se trouble pas devant quelqu'un qui le scrute avec colère et qui a la maîtrise de ne pas révéler ses secrets, quand même les quatre ruses sont employées contre lui, est l'espion.

துறந்தார் படிவத்தார் ஆகி இறந்து ஆராய்ந்து
என்செயினும் சோர்விலது ஒற்று. 586

துறந்தார் வேடத்தோடு அரிய இடங்களுக்கும் சென்று ஆராய்ந்து ஐயுற்றவர் என்ன செய்தாலும் சோர்வடையாதவரே ஒற்றர் ஆவார் .

எனது கருத்து :

இப்ப உள்ள நிலமையிலை எதிரிக்கும் அரசனுக்கும் ஒற்றாடல் செய்யியிறவன்தான் நல்லாய் இருக்கிறான் .

As monk or devotee, through every hindrance making way, A spy, whate'er men do, must watchful mind display.

Celui qui, déguisé en ascète ou en pénitent va partout, fait des investigations complètes et qui ne se découvre pas, quelles que soient les tortures employées contre lui, est l'espion. 

மறைந்தவை கேட்கவற்று ஆகி அறிந்தவை
ஐயப்பாடு இல்லதே ஒற்று 587

மறைந்த செய்திகளையும் கேட்டறிய வல்லவனாய் ,தான் அறிந்தவற்றில் எவ்வித சந்தேகமும் இல்லாதவனே நல்ல ஒற்றன் .

எனது கருத்து :

இந்தக்காலத்திலை ஒருத்தனை ஒருத்தன் விழுத்தவேணும் எண்டு முடிவுகட்டினால் எந்த ஒற்றனாலும் அதை மாத்தேலாது .அதுக்கு நாங்கள்தான் சாட்சி .

A spy must search each hidden matter out, And full report must render, free from doubt.

Celui qui a l'habileté de connaître par ses intimes les agissements secrets de quelqu'un, et qui a l'assurance de ne pas douter de ses informations, est l'espion. 

ஒற்று ஒற்றித் தந்த பொருளையும் மற்றுமோர்
ஒற்றினால் ஒற்றிக் கொளல். 588

ஓர் ஒற்றன் அறிந்து வந்த சொன்ன செய்தியையும் மற்றோர் ஒற்றனால் கேட்டுவரச் செய்து ,ஒப்புமை கண்டபின் உண்மையை அறிதல் வேண்டும் .

எனது கருத்து :

ரெண்டு றொக்கி சொல்லுறதையும் வடிகட்டிற மூளையுமல்லொ அரசனுக்கு இருக்கவேணும் ?? இப்பத்தையான் அரசருக்கு அண்ணை தம்பி சொன்னால் சரி .

Spying by spies, the things they tell To test by other spies is well.

Le Roi doit vérifier l'information apportée par un espion par celle qu'il se procure par un autre et s'assurer de leur identité.

ஒற்றுஒற்று உணராமை ஆள்க ; உடன்மூவர்
சொல்தொக்க தேறப்படும். 589

ஓர் ஒற்றனை மற்றோர் ஒற்றன் அறியாதபடி ஆளவேண்டும், இவ்வாறு மூன்று ஒற்றர் சொல்வதையும் ஒருங்கே ஆராய்ந்து உண்மை தெளிய வேண்டும் .

எனது கருத்து :

எத்தினை றொக்கி வைக்கிறம் எண்டதில்லை பிரச்சனை . அரசன் அந்த பிரச்னையை நேரடியாய் டீல் பண்ணவேணும் .அப்பத்தான் வெற்றி .

One spy must not another see: contrive it so; And things by three confirmed as truth you know.

Dans l'emploi des espions, veiller à ce que l'un ne connaisse pas l'autre.
Tenir pour vrai, le renseignement résultant des rapports concordants de trois espions.

சிறப்பு அறிய ஒற்றின்கண் செய்யற்க; செய்யின்
புறப்படுத்தான் ஆகும் மறை. 590

பிறர் அறியும்படியாக ஒற்றனுக்கு சிறப்புகளை செய்யக் கூடாது .அவ்வாறு செய்தால் மறை பொருளைத் தானே வெளிப்படுத்தியவன் ஆவான் .

எனது கருத்து :

இப்பவெல்லாம் தங்களிட்டை இருக்கிறதுகள் மற்றவைக்கு தெரியவேணும் எண்டுதான் சனம் விரும்புதுகள் . இதிலை ஒற்றர்மார் எப்பிடி விதிவிலக்காய் வருவினம் ??

Reward not trusty spy in others' sight, Or all the mystery will come to light.

Ne pas recompenser, au su d’une troisième personne, un espion;
agir ainsi, c'est dévoiler soi même ses secrets.

Comments