Skip to main content

Posts

Showing posts from July, 2013

பொருட்பால் - அரசியல் - பொச்சாவாமை- Unforgetfulness-Ne pas s’oublier-531-540.

பொருட்பால் - அரசியல் - பொச்சாவாமை- Unforgetfulness-Ne pas s’oublier-531-540.







இறந்த வெகுளியின் தீதே சிறந்த உவகை மகிழ்ச்சியின் சோர்வு. 531
மிகுந்த உவகையால் மகிழ்ந்து இருக்கும்பொழுது மறதியால் வரும் சோர்வு, அளவு கடந்து கொள்ளும் சினத்தைக் காட்டிலும் தீமையானதாகும் .
எனதுகருத்து:
ஒருத்தன் எந்த நிலமையிலை இருந்தாலும் செய்யவேண்டிய வேலையளை மறக்காமல் அந்தந்த நேரத்திலை செய்யவேணும் . அப்படி மறந்தால் அதாலை வாற சேதாரங்கள் கூடவாய் இருக்கும் .
'Tis greater ill, it rapture of o'erweening gladness to the soul Bring self-forgetfulness than if transcendent wrath control .
L'oabli de soi-même qui provient d'une trop grande joie est plus nuisible (au Roi) que la colère violente.
பொச்சாப்புக் கொல்லும் புகழை அறிவினை நிச்ச நிரப்புக்கொன் றுஆங்கு.532
நாள்தோறும் விடாமல் வரும் வறுமை, அறிவைக் கெடுப்பது போல , மறதி ஒருவனது புகழைக் கெடுத்து விடும் .
எனதுகருத்து:
ஒருத்தனுக்கு வாழ்க்கை முழுக்க ஏழையாய் இருந்தால் எப்பிடி பெரிய அளவிலை படிக்கேலாதோ , அப்பிடித்தான் அவன் மறந்து போற விசையங்களாலை அவனின்ரை புகழும்…

பொருட்பால் - அரசியல் - சுற்றம் தழால்-Cherishing one's Kindred , S'attacher aux parents-520 -530.

பொருட்பால்-அரசியல்-சுற்றம் தழால்- Cherishing one's Kindred-S'attacher aux parents-520-530.










பற்றுஅற்ற கண்ணும் பழைமைபா ராட்டுதல் சுற்றத்தார் கண்ணே உள. 521
ஒருவர் செல்வத்தை இழந்து வறியவனாய் வாழும் போதும் தமக்கும் அவனுக்கும் உள்ள உறவுகளைக் கொண்டாடும் இயல்புகள் சுற்றத்தாரிடமே உள்ளன .
எனது கருத்து :
இண்டையான் திகதியிலை இருக்கிற சுற்றங்கள் எல்லாம் ஒருத்தனின்ரை பறியிலை எவ்வளவு இருக்கு எண்டு பாத்து பழகிற ஆக்கள் . ஏன் பெத்த அம்மாவே காசு உள்ள மகனிட்டை ஒருமாதிரியும் , காசு இல்லாத மகனிட்டை ஒரு மாதிரியும் பழகிற கலிகாலம் . இதிலை நாங்கள் கஸ்ரப்பட்ட நேரம் எங்கடை சொந்தங்கள் எங்களைப் பத்தி நல்லாய் கதைப்பினம் எண்டு எதிர்பார்க்கிறது பிழையானவேலை கண்டியளோ .
When wealth is fled, old kindness still to show, Is kindly grace that only kinsmen know.
Témoigner l'ancien attachement, à celui qui est abandonné par la fortune ne se rencontre que chez les parents.
விருப்புஆறாச் சுற்றம் இயையின் அருப்புஆறா ஆக்கம் பலவும் தரும். 522
அன்பு அழியாத நல்ல சுற்றம் ஒருவனுக்கு வாய்க்குமாயின் அஃது அவனுக்கு குறைவில்லாத …