Skip to main content

பொருட்பால் - அரசியல் - கொடுங்கோன்மை-The Cruel Sceptre- La Tyrannie-550 -560.


பொருட்பால்-அரசியல்-கொடுங்கோன்மை-The Cruel Sceptre- La Tyrannie -550-560. 
கொலைமேற்கொண் டாரிற் கொடிதே அலைமேற்கொண்டு
அல்லவை செய்துஒழுகும் வேந்து. 551

குடிகளை வருத்தும் தொழிலை மேற்கொண்டு முறையிலாத செயல்களைச் செயும் அரசன் கொலைத் தொழிலைக் கொண்டவரை விடக் கொடியவன் 

எனது கருத்து :

இப்பிடியான அரசர்களுக்குதானே ஐயா இண்டைக்கு வாழ்மானம் வந்திருக்கு. எந்த அரசன் நேர்மையா குடிகளை நடத்திறான்?

Than one who plies the murderer's trade, more cruel is the king
Who all injustice works, his subjects harassing.

Le Roi qui. pour extorquer leurs biens, opprime ses sujets et emploie des procédés illégaux est plus cruel que ceux qui tuent par haine.

வேலொடு நின்றான் இடுஎன் றதுபோலும்
கோலொடு நின்றான் இரவு. 552

அரசன் குடிமக்களிடம் முறைகடந்து பொருளைக் கேட்பது,கையில் வேலோடு வழிப்பறி செய்யும் கள்வன் 'கொடு 'என்று கேட்பதைப் போன்றது. 

எனது கருத்து :

ஆனால் இதிலை ஒரு சிக்கல் இருக்கு ஐயா . வரி இல்லாமல் எல்லாம் இலவசம் எண்டு தன்ரை குடிமக்களை அரசன் விட்டால் எப்பிடி இருக்கும் ?? குடிமக்கள் ஒழுங்கு முறையா வேலைக்கு போவினமோ ?? தாங்கள் எடுக்கிற சம்பளத்துக்கு எப்பிடி வரி கட்டுவினம்?? அதாலை அந்தந்த இடத்திலை அரசன் இறுக்கினால் தான் குடிமக்களும் ஒழுங்காய் இருப்பினம். 

As 'Give' the robber cries with lance uplift, So kings with sceptred hand implore a gif.

La réquisition de donner, faite par le tyran qui commande avec le sceptre, équivaut à la sommation de donner, faite par le voleur, armé de flèches, au passant isolé.

நாள்தொறும் நாடி முறைசெய்யா மன்னவன்
நாள்தொறும் நாடு கெடும். 553

நாட்டில் நாள்தோறும் நடைபெறும் நன்மை தீமைகளை ஆராய்ந்து ,ஆட்சி செய்யாத அரசன் நாளிக்கு நாள் தன் நாட்டை இழந்து வருவான் .

எனது கருத்து :

இது அந்த காலத்திலை சரிவரலாம். இப்ப உது சரிவராது.ஏனெண்டால் ஒரு அரசன் ரெண்டு தரம் அரசாள சட்டம் இருக்கு. பேந்து மனிசி பிள்ளையள் பேரப்பிள்ளையள் எண்டு குடும்பமே கதிரையை விட்டு அரக்கமாட்டினம் . இதுக்கு எங்கடை நாடும் பக்கத்திலை இருக்கிறவையும் நல்ல உதாரணம் பாருங்கோ. 

Who makes no daily search for wrongs, nor justly rules, that king
Doth day by day his realm to ruin bring

Le Roi, qui ne s'informe pas tous les jours des injustices commises dans son Etat et ne punit pas les coupables, perd son rayaume jour par jour.

கூழும் குடியும் ஒருங்குஇழக்கும் கோல்கோடிச்
சூழாது செய்யும் அரசு. 554

நடக்கப் போவதைப் பற்றிக் கருதாமல் , முறை தவறி ஆட்சி செய்யும் மன்னன் பொருளையும் குடிகளையும் ஒரு சேர இழந்து விடுவான் .

எனது கருத்து :

இப்பிடி எந்த அரசன் எல்லாத்தையும் இழந்திருக்கிறான் சொல்லுங்கோ ?? தான் சம்பாதிச்ச காசெல்லாம் சுவிஸ் பாங்கிலை இருக்கும் . குடிகளை திருப்பி தன்ரை பக்கம் கொண்டுவர தேர்தல் எண்ட நாடகங்கள் இருக்க எந்த அரசன் உதுகெல்லாம் பயப்பிடிறான்?? 

Whose rod from right deflects, who counsel doth refuse,
At once his wealth and people utterly shall lose.

Le Roi, qui gouverne contrairement à l'équité, sans songer aux conséquences de ses actes; perd à la fois son trésor et ses sujets.

அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீர்அன்றே
செல்வத்தைத் தேய்க்கும் படை. 555

கொடுங்கோல் ஆட்சியால் துன்புற்ற குடிமக்கள் அதைப் பொறுக்க மாட்டாமல் அழுத கண்ணீர் ,மன்னனின் செல்வத்தை அழிக்கும் படையாகும். 

எனது கருத்து : 

சும்மா அழுதால் மட்டும் காணாது கோட்டையை தூள் தூள் ஆக்கிறதுக்கு எல்லாரும் ரெடியா இருக்கவேணும் . அப்ப இந்த அரசர் பயப்பிடுவினம். மத்தும்படி சும்மா அழுகிறதிலை வேலை இல்லை. 

His people's tears of sorrow past endurance, are not they Sharp instruments to wear the monarch's wealth away?

Les larmes versées par les sujets, qui sont opprimés par l'injustice et qui ne peuvent pas supporter leurs maux, sont l'arme qui diminue la prospérité du Roi.

மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை; அஃதுஇன்றேல்
மன்னாவாம் மன்னர்க்கு ஒளி. 556

செங்கோன்மையால்த்தான் மன்னற்குப் புகழ் நிலைபெறும். அச்செங்கோன்மை இல்லையென்றால் புகழ் நிலைபெற்றிராது.

எனது கருத்து :

அப்பிடியெண்டால் இந்த இலங்கை அரசரிலை மகிந்தா எண்ட அரசனுக்கு எப்பிடி வராலற்றில புகழ் வந்துது ?? இதுக்கெல்லாம் கனக்க மினைக்கெட தேள்வையில்லை ஐயா . இடம் பொருள் பாத்து அடிச்சால் இந்த புகழ் எல்லாம் தன்ரை பாட்டிலை வரும் . ஆனால் அது நேர்மையான முறையிலை வந்துதா எண்டதுதான் என்ரை கேள்வி??

To rulers' rule stability is sceptre right; When this is not, quenched is the rulers' light

C'est la justice qu'il rend, qui établit solidement la gloire du Roi; l'injustice ne procure pas la gloire. 

துளிஇன்மை ஞாலத்திற்கு எற்று அற்றே வேந்தன்
அளிஇன்மை வாழும் உயிர்க்கு. 557

மழைத்துளி இல்லையேல் உலகம் ,எத்தகைய துன்பம் அடையுமோ ,அத்தகைய துன்பத்தை மக்கள் அடைவார்கள் அருள் இல்லாத ஆட்சியினால் .

எனது கருத்து :

சரி நீங்கள் உப்பிடி சொல்லுறியள் அனால் குடிமக்கள் என்ன செய்யினம் ஒருக்கால் பிழை விட்ட அரசனை தூக்கி ஏறியவேணுமோ வேண்டாமோ அரசன்ரை ஒரு குவாட்டருக்கும் காசுக்கும் புரியாணிக்கும் ஆசைபட்டு அதே அரசனையலலோ கொண்டு வருகினம் 

As lack of rain to thirsty lands beneath, Is lack of grace in kings to all that breathe

Les maux, endurés par les êtres ici-bas par manque de pluie, sont les mêmes que ceux dont souffrent les sujets du Roi, qui n'a pas de pitié. 

இன்மையின் இன்னாது உடைமை முறைசெய்யா
மன்னவன் கோற்கீழ்ப் படின். 558

முறை இல்லாத ஆட்சியின் கீழிருக்கும் மக்களுக்கு செல்வம் உடையவனாய் வாழ்வது ,வறுமையைவிடத் துன்பம் தரும் .

எனது கருத்து :

அரசனை நெடுகலும் பிழை சொல்லக்கூடாது . செல்வம் இருக்கிறவன் அதை எல்லாருக்கும் குடுத்து சாப்பிட்டால் எப்பிடி அவனுக்கு துன்பம் வரப்போகுது ?? காசை பதுக்கினால் அரசன் கொஞ்சம் ஏறுக்குமாறாய் நடக்கத்தான் செய்வான் .

To poverty it adds a sharper sting,To live beneath the sway of unjust king.

Aux sujets, qui vivent sous le sceptre d'un Roi qui ne rend pas la justice, la richesse cause plus de mal que la pauvreté.

முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி
ஒல்லாது வானம் பெயல். 559

மன்னன் முறைதவறி ஆட்சி செய்வானாயின் அந்த நாட்டில் பருவ மழை தவறி ,மேகம் மழை பெய்யாமல் போகும் 

எனது கருத்து :

சரியாய் சொன்னியள் .இண்டைக்கு இலங்கையிலை வடக்கு கிழக்கு மாகாணங்கள் ஒரு நல்ல உதாரணம் கண்டியளோ .

Where king from right deflecting, makes unrighteous gain,
The seasons change, the clouds pour down no rain.

Dans l'Etat du Roi qui gouverne contrairement à l'équité, les nuages ne font pas pleuvoir les pluies de saison.

ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்
காவலன் காவான் எனின். 560

ஆட்சியாளன் மக்களைத் தக்கபடி காக்காவிட்டால் அந்நாட்டில் பசுக்கள் பால் தரும் , பயன்குறைந்து போகும் .அறுவகையான தொழில்களைச் செய்வோர் தங்கள் தொழில்களைச் செய்ய மறந்து விவார்கள் .

எனது கருத்து :

இதிலை குழப்பம் இருக்கு எப்பிடியெண்டால் . அரசன் தன்ரை குடிகளை பாக்கிரானா இல்லையா எண்டது ஒருபக்கம் இருக்க ன், எல்லாத்துக்கும் இலவசம் என்டதை அரசன் குடிமக்களுக்கு குடுத்தால் அதாலையும் நாடு கெட்டு குட்டி சுவராய் போடும் ஐயா 

Where guardian guardeth not, udder of kine grows dry, And Brahmans' sacred lore will all forgotten lie.

Le lait tarit chez les vaches et les bhrames oublient leurs sastras dans le Royaume du Prince, qui, ayant le devoir de protéger, ne protège pas ses sujets.
Comments

Popular posts from this blog

அறத்துப்பால்- துறவறவியல்- கொல்லாமை-Not killing- Ne pas tuer- 321-330.

அறத்துப்பால்-துறவறவியல்-கொல்லாமை-Not killing-Ne pas tuer-321-330.


அறவினை யாதெனில் கொல்லாமை கோறல் பிறவினை எல்லாம் தரும். 321
அறச்செயல் எதுவென்றால் எந்த ஓர் உயிரையும் கொல்லாத செயலே . அவ்வாறு கொல்லுதல் பிறதீவினைகளை எல்லாம் தானே கொண்டுவரும்.
எனது கருத்து:
நியாயமான சீவியம் எண்டால் மற்றவனைப் போடுத்தள்ளாமல் இருக்கிறதுதான் அப்பிடி போட்டுத்தள்ள வெளிக்கிட்டால் பாருங்கோ சொந்தச் செலவிலை சூனியம் செய்யவேண்டிவரும் உதாரணத்திக்கு ஏன் வெளியாலை போவான் நம்மடை மகிந்து
What is the work of virtue? 'Not to kill'; For 'killing' leads to every work of ill. 
Qu’est ce que l’acte vertueux? C’est ne pas tuer; tuer engendre tous les péchés. 
பகுத்து உண்டு பல்லுயிர் ஓம்புதல், நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை. 322
கிடைத்ததைப் பகுத்துக்கொடுத்து தானும் உண்டு , பல உயிர்களையும் காப்பாற்றுதல் , அற நூலோர் தொகுத்துக்கூறிய அறங்கள் எல்லாவற்றிற்கும் தலையாய அறமாகும் .
எனது கருத்து:
மனுசனாப் பிறந்தால் கடைசி ஒருத்தனுக்காவது பிரையோசனமாய் இருக்கவேணும் கண்டியளோ . சிலபேற்றை வீட்டை போனியள் எண்டால் முழங்கையிலை பிடிச்ச…

இல்லறவியல் ஒழுக்கமுடைமை-The Possession of Decorum - La moralité .131 - 140.

அறத்துப்பால். இல்லறவியல் ஒழுக்கமுடைமை- The Possession of Decorum- La moralité-131-140.


ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும். 131
ஒழுக்கம் எப்போதும் மேன்மையைத் தருவதால் , அந்த ஒழுக்கமே உயிரினும் மேலானதாகப் போற்றப்படுகின்றது .
எனது கருத்து:
ஒருத்தருக்கு ஒழுக்கம் அக ஒழுக்கம் புற ஒழுக்கம் எண்டு ரெண்டு வகையாலுமே இருக்கவேணும் இருந்தால் மட்டும் காணாது அதை அவற்றை உயிரைவிட உயர்வாய் பேணிப் பாதுக்கவேணும் அதைத்தான் இந்தக் குறளும் சொல்லுது
Decorum' gives especial excellence; with greater care 'Decorum' should men guard than life, which all men share.
Puisque la moralité honore tous les hommes, il faut la conserver de préférence à la vie.
பரிந்துஓம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்துஓம்பித் தேரினும் அஃதே துணை. 132
வருந்தியேனும் ஒழுக்கத்தைப் போற்றிக் காக்கவேண்டும் . பலவற்றை ஆராய்ந்து பாரத்தாலும் ஒழுக்கமே உயிரிற்குத் துணையாகும் .
எனது கருத்து:
எப்பிடித்தான் பாத்தாலும் ஒழுக்கமாய் இருக்கிறதுதான் நல்லது ஆனால் அது அவ்வளவு லேசான விசையமில்லை அதுக்கு ஒருத்தர் கனக்க விலையள் குடுக்க …

அறத்துப்பால்-துறவறவியல்-நிலையாமை- Instability-De l’instabilité- 331-340.

அறத்துப்பால்-துறவறவியல்-நிலையாமை- Instability-De l’instabilité-331-340.


நில்லாத வற்றை நிலையின என்று உணரும் புல்லறி வாண்மை கடை. 331
நிலையில்லாதவற்றை நிலையானவை என்று எண்ணி மயங்குகின்ற புல்லறிவாண்மை ( அற்ப அறிவு )துறந்தார்க்கு இழிவாகும் .
எனது கருத்து :
ஒரு உயிரை உடம்புக்குளை கடவுள் விடேக்கை அதுக்கு ஒரு கால அளவை வைச்சுத்தான் விடுறார் . கொஞ்சக்காலத்தில அந்த உடம்பு இல்லாமல் போடும் . இது எங்களுக்கும் சரி இளையராசாவுக்கும் சரி ஒண்டுதான் . இதுகள் தெரியாமல் இந்த சனங்களுக்கை எவ்வளவு புடுங்குபாடுகள் குத்துபாடுகள் ?? இந்த அற்ப குணத்தாலை மனசிலை வளராத கூட்டங்களாய் இந்த சனங்கள் இருக்கிதுகள் .
Lowest and meanest lore, that bids men trust secure, In things that pass away, as things that shall endure!
C’est la dernière des sottises, que de croire que ce qui est instable est stable.
கூத்துஆட்டு அவைக்குழாத்து அற்றே பெருஞ்செல்வம் போக்கும் அதுவிளிந் துஅற்று. 332
பெருஞ் செல்வம் வந்து சேர்தல் கூத்தாடுமிடத்தில் கூட்டம் வந்து கூடுவதைப் போன்றது அது நீங்கிப் போதலும் கூத்து முடிந்ததும் கூட்டம் கலைவதைப் போன்றது
எனத…