Skip to main content

Posts

Showing posts from May, 2013

பொருட்பால் -அரசியல் -இடன் அறிதல்-Knowing the Place- Du discernement du terrain-490 -500.

பொருட்பால்-அரசியல்-இடன் அறிதல்-Knowing the Place-Du discernement du terrain.






தொடங்கற்க எவ்வினையும் ; எள்ளற்க முற்றும்  இடம்கண்ட பின்அல் லது.491
பகைவரை வளைத்தற்குத் (முற்றுகையிடுவதற்கு) தகுந்த இடத்தைத் தெரிந்து கொண்டாலன்றி எத்தொழிலையும் தொடங்கக் கூடாது . அவர் வலிமையற்ற சிறியர் என்று இகழவும் கூடாது .
எனது கருத்து :
இந்த " இடம் " எண்டிற சாமான் எவ்வளவு தூரம் ஒருத்தனை கவிண்டுகொட்டுண வைக்கும் எண்டு சதாம் விசையத்திலை பாத்தன் . ஒழுங்காய் அமெரிக்காவுக்கு தண்ணி காட்டி கொண்டிருந்த சதாம் , சும்மா கிடக்காமல் பக்கத்திலை இருந்த குவைத்துக்குள்ளை காலை வைக்கைப்போய் , கடைசியிலை அந்தாளே பங்கருக்குள்ளை இருக்கவேண்டியதாய் போச்சுது .
Begin no work of war, depise no foe, Till place where you can wholly circumvent you know.
Ne rien commencer avant d'avoir trouvé le terrain où (l’ennemi) puisse être enveloppé ! Ne pas le dédaigner !
முரண்சேர்ந்த மொய்ம்பி ன்அவர்க்கும்  அரண்சேர்ந்தாம் ஆக்கம் பலவும் தரும்.492
பகைவரைக்காட்டிலும் வலிமையுள்ள அரசர்க்கும் தக்க காவலையுடைய இடத்தை அடைதல் பல நலன்களை உண்டாக்கு…