பொருட்பால் - அரசியல் - கண்ணோட்டம்- Benignity- De l’égard-570-580.


பொருட்பால்-அரசியல்-கண்ணோட்டம்-Benignity -De l’égard-570-580.













கண்ணோட்டம் என்னும் கழிபெருங் காரிகை
உண்மையான் உண்டுஇவ் வுலகு. 571

கண்ணோட்டம் என்று சொல்லப்படும் மிகச் சிறந்த அழகு இருப்பதனால்தான் ,இவ் உலகம் பெற்றுள்ளது .( கண்ணோட்டம் = தாட்சண்யம் ,பரிவு நோக்கு )

எனது கருத்து :

இந்த கண்ணோட்டம் எண்டாலே குழப்பம்தான் .ஒரு இடத்திலை சரியாய் தெரியிறது கொஞ்சம் தள்ளி பிழையாய் தெரியிது ,ஆனால் இதுகளையெல்லாம் தாண்டி ஒரு நடுநிலை கண்ணோட்டதோடை பாக்கிறவையாலைதான் இண்டைக்கும் உலகம் வாழுது எண்டு ஐயன் சொன்னாலும், ஆர் நடுநிலமையாய் இருக்கினம் எண்டதிலையும் குழப்பம்தான் கண்டியளோ. டொட்டலி கொன்பியூசன் .

Since true benignity, that grace exceeding great, resides In kingly souls, world in happy state abides.

C'est par la ravissante parure appelée égard que ce monde subsiste en vérité.

கண்ணோட்டத்து உள்ளது உலகுஇயல் ;அஃதுஇலார்உண்மை நிலக்குப் பொறை. 572

உலகியல் கண்ணோட்டத்தில் நிகழ்வதாகும் .ஆதலால் அக்கணோட்டம் இல்லாதார் உலகில் இருத்தல் இவ்வுலகிற்குச் சுமையே ஆகும் .

எனது கருத்து :

உப்புடி பாத்தால் இண்டைக்கு பூமி குப்பை கூளங்கள் கூடி வெடிச்சிருக்கவேணும் .

The world goes on its wonted way, since grace benign is there; All other men are burthen for the earth to bear.

La marche du monde dépend de la considération. S'il y a des gens qui n'en ont pas, ils existent pour être le poids lourd de la terre.

பண்எனஆம் பாடற்கு இயல்புஇன்றேல் ;
கண்என்ஆம்கண்ணோட்டம் இல்லாத கண். 573

பாடலோடு பொருந்தாத இசையால் பயனில்லை ; அது போல் தக்க அளவிற்கு கண்ணோட்டம் இல்லாத கண்கள் முகத்தில் உள்ளவை போல் தோன்றுமே அல்லாது வேறு என்ன பயனைச் செய்யும் ?

எனது கருத்து :

செத்தபாம்பை நாலைஞ்சு பேர் சுத்தி நிண்டு அடிப்பினம். பேந்து அந்த பாம்பிலை இரக்கம் காட்டிறம் எண்டு புனருத்தாரணம் செய்வினம். இதுகளிலை உண்மையான கண்ணோட்டம் இருக்கெண்டு நைக்கிறியளே ?? 

Where not accordant with the song, what use of sounding chords?
What gain of eye that no benignant light affords?

De quelle utilité est le chant qui n'est pas harmonieux ? Ainsi, de quelle utilité est l'œil qui n'a pas d'égard?

உளபோல் முகத்து எவன் செய்யும் அளவினால்
கண்ணோட்டம் இல்லாத கண். 574

முகத்தில் உள்ளது போல் காட்சி தருவதைத் தருவதை கண்ணோட்டம் இல்லாத கண்ணால் ஒரு பயனும் இல்லை .

எனது கருத்து :

சட்டியிலை இருக்கிறதுதான் அகப்பையிலை வரும் எண்டு சொல்லுவினம். அதுமாதிரி உங்கடை நெஞ்சுக்கை என்ன கிடக்கோ அது கண்ணாலை காட்டிபோடும் .அதாலைதான் கண்ணை பாத்து பேசவேணும் எண்டு சொல்லிறது. 

The seeming eye of face gives no expressive light, When not with duly meted kindness bright.

Les yeux, qui n'ont pas de considération raisonnable, semblent bien orner le visage, mais de quelle autre utilité sont-ils?

கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம் ;
அஃதுஇன்றேல்புண்என்று உணரப் படும். 575

கண்ணிற்கு அணிக்கலாமாக அமைவது கண்ணோட்டம் ,அக்கண்ணோட்டமாகிய அணிகலன் இல்லையாயின் அக்கண்கள் அறிவுடையோரால் புண் என்று கருதப்படும். 

எனது கருத்து :

இதைத்தானே நாங்களும் சொல்லிறம் கண்ணிருந்தும் குருடர் எண்டு .எங்கடை விசயத்திலயும் இதுதான் நடந்தது .

Benignity is eyes' adorning grace; Without it eyes are wounds disfiguring face

La parure de l'œil est la considération.L'œil, qui ne l'a pas, est considéré comme une plaie.

மண்ணோடு இயைந்த மரத்து அனையர்; கண்ணோடு இயைந்துகண் ஓடா தவர். 576

கண் கொண்டிருக்கும் இரக்கம் இல்லாதவர் மண்ணோடு இருக்கும் மரத்தைப் போன்றவர் .

எனது கருத்து :

தன்னட்டை சொந்தமாய் அபிப்பிராயம் இருந்தும் சொல்லவேண்டிய இடத்திலை சொல்லாமல் இருக்கிறவனை "மரம்போலை நிக்கிறான்" எண்டு இதைத்தான் சொல்லுறனாங்கள் .

Whose eyes 'neath brow infixed diffuse no ray Of grace; like tree in earth infixed are they.

Ceux qui n'ont pas d'égard ressemblent aux arbres enracinés dans le sol,bien qu'ils aillent et viennent. 

கண்ணோட்டம் இல்லவர் கண்இலர் ;
கண்உடையார்கண்ணோட்டம்இன்மையும்இல். 577

ஒருவனுக்கு இறக்கம் இல்லை என்றால் அவன் கண்ணில்லாதவன் ,இரக்கம் உடையவன் என்றால் அவன் கண்ணுள்ளவன் .

எனது கருத்து :

இப்பிடி கருணை உள்ளவையை காட்டுங்கோ பாப்பம்? தனக்கு இதிலை லாபம் எண்டு தெரிஞ்சால் தான் கருணையும் இந்தக்காலத்திலை பிறக்கிது கண்டியளோ.


Eyeless are they whose eyes with no benignant lustre shine;Who've eyes can never lack the light of grace benign.

Ceux qui n'ont pas d'égard sont aveugles; ceux qui ont des yeux ne sont pas sans avoir des égards.


கருமம் சிதையாமல் கண்ணோட வல்லார்க்கு
உரிமை உடைத்து இவ் உலகு. 578

மறை செய்தலாகிய தம் தொழில் அழியாமல் கண்ணோட்டமுடைய வல்லார்க்கு இவ்வுலகமே உரிமையுடையதாம் .

எனது கருத்து :

இப்ப உள்ள நிலமையிலை மொள்ளமாரிக்கும் முடிச்சவிக்கிக்கும் தான் உலகம் சொந்தம் கண்டியளோ .ஆரும் நீதி நேர்மை எண்டு இருந்தால் ஒருத்தரும் ஏன் எண்டும் எட்டிப்பாக்க மாட்டினம் .

Who can benignant smile, yet leave no work undone; By them as very own may all the earth be won.

La nature de ce monde est d'appartenir (au Roi) qui a le pouvoir d'avoir des égards, sans manquer à la justice.

ஒறுத்து ஆற்றும் பண்பினார் கண்ணும்கண் ணோடிப்பொறுத்து ற்றும் பண்பே தலை. 579

தம்மைத் துன்புறுத்தும் இயல்பு உடையோரிடத்தும் கண்ணோட்டம் உடையராய் அவர் செய்த குற்றத்தைப் பொறுத்துக் கொள்ளும் பண்பே அரசர்க்குத் தலையாய பண்பாகும் .

எனது கருத்து :

இந்த உயந்த பண்பை வைச்சு என்ன நாக்கே வழிக்கிறது ?? கண்ணுக்கு முன்னாலை சனம் அள்ளு கொள்ளையாய் செதுக்கொண்டிருந்திது .கிட்டமுட்ட 25 பேர் நிண்டு குரூப்பாய் நிண்டு சனங்களை கொழுத்தி எறிஞ்சாங்கள் .நாங்கள் பொறுமை காட்டவேணும் எண்டு சொல்லுறியள். நல்லாய் வருவீங்கப்பு .

To smile on those that vex, with kindly face, Enduring long, is most excelling grace.

Témoigner de l'égard même à ceux qui font du mal et leur pardonner les fautes, sont la première bonne qualité (do Roi).


பெயக்கண்டும் நஞ்சுஉண்டு அமைவர், நயத்தக்க
நாகரிகம் வேண்டு பவர். 580

யாவராலும் விருமபதக்க கண்ணோட்டத்தினை வேண்டுபவர் தம்மோடு நெருங்கிப் பழகியவர் தமக்கு நஞ்சிடுவதைக் கண்டும் அதனை உண்டு பின்னும் அவரோடு பொருந்தியிருப்பர் .

எனது கருத்து :

அதைத்தானே ஐயா நாங்கள் வன்னியிலை செய்தம் . ஐயன் கடுப்படியாதையுங்கோ .

They drink with smiling grace, though poison interfused they see, Who seek the praise of all-esteemed courtesy.

Ceux qui cultivent l'égard qui est digne d'être désiré, absorbent ce qu'ils ont vu empoisonner et fréquentent encore après, les empoisonneurs.

Comments