Skip to main content

Posts

Showing posts from October, 2013

பொருட்பால் - அரசியல் - செங்கோன்மை ,540 -550)

பொருட்பால்-அரசியல்- செங்கோன்மை- The Right Sceptre -Manière de Gouverner-540-550. 

ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும் தேர்ந்துசெய் வஃதே முறை. 541
நடுநிலை தவறாமல் யாரிடத்துதும் இரக்கம் காட்டாமல் குற்றத்தின் கடுமையை ஆராய்ந்து அதற்குத் தகுந்த தண்டனை விதிப்பதே அரசனுக்கு முறையாகும் .
எனது கருத்து :
இந்தக் கலி காலத்திலை இது எங்கை ஐயா நடக்குது நடு நிலைமை எண்டுறதே தங்கடை வசதிக்கு எத்த மாதிரி சொல்லுறதுதானே இப்ப நடக்குது இல்லாட்டில் ஒரு இடத்திலை தங்கடைநாட்டுக்கு விடுதலை போராடுறவங்களை பாத்து சுதந்திரப் போராளி எண்டு சொலுற அதே ஆள்தான் தனக்கு பிடிக்காத இன்னொருத்தனை பாத்து பயங்கரவாதி எண்டு சொல்லுறான். 
Search out, to no one favour show; with heart that justice loves Consult, then act; this is the rule that right approves.
Connaître les infractions, les examiner sans parti pris, n'incliner ni d'un côté ni de l'autre désirer et tenir le juste milieu, délibérer avec les hommes de Loi, puis prononcer la son tence: voilà rendre la justice.
வான்நோக்கி வாழும் உலகுஎல்லாம் மன்னவன் கோல்நோக்…