Skip to main content

Posts

Showing posts from 2015

பொருட்பால்-அமைச்சியல்-சொல்வன்மை-Power in Speech-Puissance de la parole-641-650.

பொருட்பால்-அமைச்சியல்-சொல்வன்மை-Power in Speech-Puissance de la parole-641-650.


நாநலம் என்னும் நலன்உடைமை அந்நலம்  யாநலத்து உள்ளதூஉம் அன்று.641
ஒருவனுக்கு இன்றியமையாத குணங்களுள் சிறந்தது நாவன்மையாம் .அந்த நலம் ஏனைய நலன்களையும் விட மேலான சிறப்புடையது .
எனது கருத்து :
நாக்கை அடக்கினவன் இந்த உலகத்தையே அடக்கியாளுவான் எண்டு எங்கடை பெரிசுகள் தெரியாமலே சொல்லி இருக்கினம். அதாலை குறைச்சு பேசி கூட செய்யிறவனைத்தான் சனத்துக்கு கூட பிடிக்கும் .
A tongue that rightly speaks the right is greatest gain,It stands alone midst goodly things that men obtain.
Qu'ils-les Ministres possèdent ce qui est appelé le don de la langue. Ce bien ne fait partie d'aucun autre bien.
ஆக்கமுங் கேடும் அதனால் வருதலால்  காத்துஓம்பல் சொல்லின்கண் சோர்வு. 642
ஒருவருக்கு நன்மையும் அழிவும் தம் சொற்களால் ஏற்படும். ஆதலால் அத்தகைய சொற்களை சொல்லுமாறு சோர்வு நேராதவாறு போற்றிக் காக்க வேண்டும்.
எனது கருத்து :
நாக்கு எண்டது கெட்ட சாமான். அதிலை சனி பிடிச்சால் எந்தகொம்பனாய் இருந்தாலும் கவிண்டு கொண்டிண்ட வேண்டியதுதான். இப்ப சுமந்த…

பொருட்பால் - அமைச்சியல் -அங்கவியல்-The Office of Minister of state-Des Ministres- 631-640.

பொருட்பால் - அரசியல் - அமைச்சு-அங்கவியல் - The Office of Minister of state- Des Ministres-631-640.

கருவியும் காலமும் செய்கையும் செய்யும்  அருவினையும் மாண்டது அமைச்சு.631
ஒரு செயலைச் செய்வதற்கு வேண்டிய கருவிகளையும் ,ஏற்ற காலத்தையும் ,செய்யும் வகையையும் செயலின் அருமையையும் நன்கு சிந்திப்பவனே நல்ல அமைச்சன் .
எனது கருத்து :
இப்பிடியான சிந்தனையள் இப்ப ஒரு அமைச்சருக்கு இருக்கெண்டால் அந்த அமைச்சர் ஒரு வெங்காயம் எண்டுதான் சொல்லுவினம். இப்பத்தையான் அமைச்சருக்கு இருக்கிற மெயின் நோக்கம் சிந்தனையெல்லாம், தான் லெக்சனிலை போட்ட காசை எப்பிடி எடுக்கிறதெண்டும் , எப்பிடி எட்டு தலைமுறைக்கும் சொத்துபத்து சேக்கிறதெண்டிலையும் தான் கண்டியளோ .
A minister is he who grasps, with wisdom large, Means, time, work's mode, and functions rare he must discharge.
Celui-là est ministre qui est capable de bien discerner les moyens, l'opportunité et la manière de mener une entreprise et de s'acquitter de ces délicates fonctions.
வன்கண் குடிகாத்தல் கற்றுஅறிதல் ஆள்வினையோடு  ஐந்துடன் மாண்டது அமைச்சு.632
அஞ்ச…

பொருட்பால்-அரசியல்- இடுக்கண் அழியாமை- Hopefulness in Trouble- Ne pas se laisser abattre par le malheur- 621-630.

பொருட்பால்-அரசியல்-இடுக்கண் அழியாமை- Hopefulness in Trouble-Ne pas se laisser abattre par le malheur-621-630.

இடுக்கண் வருங்கால் நகுக; அதனை  அடுத்தூர்வது அஃதுஒப்ப தில். 621 
துன்பம் வரும்போது அதற்காக வருந்தாமல் நகைத்து ஒதுங்குக.அத்துன்பத்தை வெல்வதற்கு அதைப்போன்றது வேறு இல்லை .
எனது கருத்து :
ஒருத்தனுக்கு கஸ்ரம் துன்பம் வாற நேரம் சிரிச்சு கொண்டு இருக்கவேணும் எண்டு சொல்லுறது எந்த விதத்திலை ஞாயம் எண்டு கேக்கிறன்? மற்றவை லூசன் எண்டு சொல்ல மாட்டினமோ? ஒருத்தனுக்கு ஒரு கஸ்ரம் துன்பம் வந்தால் முதலிலை அதை தீக்கிறதுக்கு ஏதாவது வழி இருக்கோ எண்டுதான் முதலிலை யோசிக்க வேணும் கண்டியளோ .
Smile, with patient, hopeful heart, in troublous hour; Meet and so vanquish grief; nothing hath equal power.
Quand le malheur arrive, il faut s'en réjouir intérieurement: il n'y a rien de tel pour le réduire.
வெள்ளத்து அணைய இடும்பை அறிவுடையான்  உள்ளத்தின் உள்ளக் கெடும். 622
வெள்ளம் போல் துன்பம் பெருகி வருகிறபோது அறிவுடையவன் அதைப் போக்க நினைக்கும் அளவிலேயே அத்துன்பம் இல்லாமல் ஓடிவிடும் .
எனது கருத்து :
ஒருத…

பொருட்பால் - அரசியல் - ஆள்வினைஉடைமை- Manly Effort- l'effort incessant-611 -620.

பொருட்பால் - அரசியல் - ஆள்வினைஉடைமை- Manly Effort-l'effort incessant-611 -620 .
அருமை உடைத்துஎன்று அசாவாமை வேண்டும்  பெருமை முயற்சி தரும். 611 
இது செய்வதற்கு முடியாத செயல் என்று சோர்வடையாமல் இருக்க வேண்டும். இடைவிடாத முயற்சி அதைச் செய்து முடிக்கும் வலிமையைத் தரும் .
எனது கருத்து :
இது மட்டும் காணாது. சுத்தி இருக்கிற கூட்டத்தின்ரை கதையளை மண்டையுக்கை போட்டியளோ அவ்வளவுதான். அதாலை உங்கடை மனம் என்ன சொல்லுதோ அதின்படி முடிவு எடுத்தியள் எண்டால் முடியாதது எண்டு ஒண்டும் இல்லை. 
Say not, 'Tis hard', in weak, desponding hour, For strenuous effort gives prevailing power.
Penser toujours à l'exellence de l'entreprise et ne jamais cesser de s'efforcer; l'effort donne la gloire du succès.
வினைக்கண் வினைகெடல் ஓம்பல்; வினைக்குறை  தீர்ந்தாரின் தீர்ந்தன்று உலகு. 612
ஒரு செயலைச் செய்து முடிக்காமல் இடையில் விட்டவரை உலகம் கை விடும். ஆதலால் முயற்சியை கைவிடல் ஆகாது .
எனது கருத்து :
ஒரு அலுவலை செய்ய தொடங்கிற நேரமே ஆயிரம் நொட்டை சொல்லிற சனத்துக்கை ஒரு அலுவலை பாக்கிறதுக்கு தில்லு எண்…

பொருட்பால் - அரசியல் - மடி இன்மை-Unsluggishness -S'Abstenir de la Paresse- 600 - 610.

பொருட்பால் - அரசியல் - மடி இன்மை- Unsluggishness-S'Abstenir de la Paresse-600-610.

குடி என்னும் குன்றா விளக்கம் மடிஎன்னும்  மாஊர மாய்ந்து கெடும். 601
ஒருவன் பிறந்த குடியாகிய அணையா விளக்கு அவனுடைய சோம்பலாகிய இருள் படியப்படிய ஒளி குறைந்து (தேய்ந்து ) அணைந்து போகும் .
எனது கருத்து :
ஒருத்தன் எங்கைதான் பிறந்து இருந்தாலும் அவனிட்டை சோம்பல் மட்டும் இருந்திதோ ஆள் துலைஞ்சார்.அந்த ஆண்டவனாலையும் அவனை காப்பாத்தேலாது கண்டியளோ.
Of household dignity the lustre beaming bright, Flickers and dies when sluggish foulness dims its light
La flamme inextinguible appelée famille S’éteint, envahie par les ténèbres appelées paresse.
மடியை மடியா ஒழுகல் குடியைக்  குடியாக வேண்டு பவர். 602
தாம் பிறந்த குடியைச் சிறந்த குடியாக உயர்த்த விரும்புபவர் சோம்பலைச் சோம்பலாகக் கருதிக் கைவிட்டு முயற்சியோடு வாழ்வார்களாக .
எனது கருத்து :
நீங்கள் சொல்லுறது சரிதான். ஆனால் இண்டைக்கு உள்ள லேற்றஸ் பாசன் என்னவெண்டால், வீட்டிலை புரியன் காறன் நீங்கள் சொன்ன மாதிரி இருக்கவேணும். பொம்மனாட்டியள் சீரியலிலையும் சூப்பர் சிங்கரிலையுமல்ல…