பொருட்பால் - அரசியல்-வெருவந்த செய்யாமை- Absence of 'Terrorism-Ne pas inspirer la terreur- 561-570.


பொருட்பால்-அரசியல்-வெருவந்த செய்யாமை-Absence of 'Terrorism-Ne pas inspirer la terreur-561-570.










தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால்
ஒத்தாங்கு ஒறுப்பது வேந்து. 561

செய்த குற்றத்தைத் தக்கவாறு ஆராய்ந்து , மீண்டும் அதைச் செய்யாதபடி குற்றத்துக்கு ஏற்றவாறு தண்டிப்பவனே மன்னன் ஆவான் 

எனது கருத்து : 

நீங்கள் சொல்லுறது ஞாயம்தான்.ஆனால் இண்டைக்கு சனங்களை விட மன்னர்கள்தான்கூட பிழை விடினம். இவையளுக்கு ஆரப்பா தண்டனை குடுக்கிறது?

Who punishes, investigation made in due degree, So as to stay advance of crime, a king is he.

Le Roi est celui qui informe impartialement contre le délinquant et inflige à sa faute une peine appropriée pour empêcher la récidive.

கடிது ஓச்சி மெல்ல எறிக ; நெடிது ஆக்கம்
நீங்காமை வேண்டு பவர். 662

ஆட்சிப் பொறுப்பான செல்வம் தம்மைவிட்டு நீங்காமலிருக்க விரும்புகிறவர் ,குற்றம் செய்தவரைக் கடுமையாகத் தண்டிபவரைப் போலத் தொடக்கி ,அளவு மீறாதபடி மென்மையாகத் தண்டிக்க வேண்டும் 

எனது கருத்து :

அப்ப உந்த அரசியல் கட்சியள் மாதிரி மொள்ளைமாரி வேலையள் செய்யச் சொல்லுறியள் . ஒருத்தர் பிழை விட்டால் "கடுமையாய் கண்டிக்கிறம்" எண்டு சவுண்டு விடிறது . உள்ளாலை அவையளோடை தேனிலவு கொண்டாடிறது.

For length of days with still increasing joys on Heav'n who call, Should raise the rod with brow severe, but let it gently fall.

Que celui qui désire ne pas être abandonné pour longtemps parla fortune, commence par paraître vouloir punir sévèrement, mais qu'il frappe doucement.

வெருவந்த செய்துஒழுகும் வெங்கோலன் ஆயின்
ஒருவந்தம் ஒல்லைக் கெடும். 663

குடிமக்கள் அஞ்சுமாறு கொடுங்கோல் ஆட்சி செய்யும் மன்னன், விரைவில் அழிவைத் தேடிக் கொள்வான் .

எனது கருத்து :

உப்பிடி பாத்தால் எத்தினை மன்னர்மார் அழியவேணும் ?? ஆனால் அவையள் தானே ரெண்டு மூண்டுதரம் அரசாங்கதிலை இருக்கினம், எங்கடை மகிந்தர் மாதிரி . எத்தினை பேர் ஆட்டி பாத்தினம் ??

Where subjects dread of cruel wrongs endure, Ruin to unjust king is swift and sure.

Si le Roi est un tyran qui terrorise ses sujets, il se perd sûrement et promptement.

இறைகடியன் என்றுஉரைக்கும் இன்னாச்சொல் வேந்தன்
உறைகடுகி ஒல்லைக் கெடும். 664

'எம் அரசன் கொடியன் ' என்று குடிமக்கள் சொல்லும் பழிச்சொல்லுக்கு ஆளாகிய வேந்தன் ,தன ஆயுள் குறைந்து விரைவில் அழிவான் .

எனது கருத்து :

சும்மா கொமடி விடாதையுங்கோ . இண்டையான் உலகம் நீங்கள் நினைக்கிற மாதிரி இல்லை. சனம் சொல்லுறதை எந்த மன்னன் கேக்கிறான்?? எல்லா அரசரும் ஆடாத ஆட்டம் எல்லாம் போட்டு ஆண்டு அனுபவிச்சுதான் போகினம் .

h! cruel is our king', where subjects sadly say, His age shall dwindle, swift his joy of life decay

Le Roi, auquel ses Sujets font la mauvaise réputation de cruauté,
voit ses jours raccourcis et perd incontinent sa fortune.

அருஞ்செவ்வி இன்னா முகத்தான் பெருஞ்செல்வம்
பேஎய்கண் டன்னது உடைத்து. 665

எளிதில் காண முடியாத அருமையும் ,கடுகடுத்த முகமும் உடையோனின் பெருஞ்செல்வம் பேய் காவல் காத்திருப்பதைப் போன்ற குற்றமுடையது .

எனது கருத்து :

நீங்கள் பேய் பூதம் எண்டு சொன்னாலும் , இண்டைக்கு ஒருத்தன் எப்பிடி பட்டவனாய் இருந்தாலும் காசு வைசிருக்கிறவனைதான் சனம் கொண்டாடுது .

Whom subjects scarce may see, of harsh forbidding countenance; His ample wealth shall waste, blasted by demon's glance.

La grande richesse de celui qui est d'un abord difficile et qui reçoit avec une mine renfrognée ressemble au trésor découvert par le démon.

கடுஞ்சொல்லன் கண்ணிலன் ஆயின் நெடுஞ்செல்வம்
நீடின்றி ஆங்கே கெடும். 566

கடுமையான சொல்லும் ,இரக்கமற்ற தன்மையும் உடையவன் அனால் , அம்மன்னனது பெருஞ்செல்வம் நீடிதிருக்காமல் அப்போதே கெடும் .

எனது கருத்து :

சிவசத்தியமாய் இப்பிடி ஒரு அரசு இருந்தால் எனக்கு காட்டுங்கோ ?? இப்பத்தையான் அரசர்மார் எல்லாம் வறுகு மட்டும் வறுகிறதும், வாறதை எந்த பாங்கிலை போடலாம் எண்டுதான் யோசிக்கினம் . தங்கடை காலத்திலை வாற காசு பிரச்சனையளை பேந்து ஆட்சிக்கு வாற அரசர் பாத்துக்கொள்ளுவார் எண்டதுதான் கணக்கு ஐயா .

The tyrant, harsh in speach and hard of eye,His ample joy, swift fading, soon shall die.

Si (le Roi) a ta parole dure et le regard inexorable, sa grande fortune,au lieu de durer se dissipe instantanément.

கடுமொழியும் கையில்கந்த தண்டமும் வேந்தன்
அடுமுரண் தேய்க்கும் அரம். 567

கடுமையான சொல்லும் ,முறை கடந்த தண்டனையும் அரசனுடைய வெற்றிக்குக் காரணமான வலிமையைத் தேய்க்கும் அரமாகும் .

எனது கருத்து :

இதிலை உங்களை குறை சொல்லப்படாது. சொன்னாலும் சொன்னியள் பொழிப்பாய் சொல்லியிருக்கிறியள் . உந்த சதாமுக்கோ இல்லை கொலொனல் கடாபிக்கு எத்தினை ஆயிரம் உயிரைகுடுக்கிற பொடிகாட்டுகள் இருந்தாங்கள் . ஆனால் கடைசியிலை ஒருத்தனும் அவையின்ரை உயிரை காப்பாத்தேலையே ??

Harsh words and punishments severe beyond the right, Are file that wears away the monarch's conquering might.

Lea paroles cruelles et le châtiment excessif sont la lime qui use le fer dont (le Roi) s’arme, pour vaincre (ses ennemis). 

இனத்துஆற்றி எண்ணாத வேந்தன் சினத்துஆற்றிச்
சீறின் சிறுகும் திரு. 568 

அமைச்சர் முதலானவரோடு கலந்து ஆராய்ந்து செய்யாமல் அரசன் தன் சினத்தின் வழியிலிலேயே சென்று பிறரைச் சீறுவான் ஆனால் அவனுடைய செல்வம் சுருங்கும் .

எனது கருத்து :

இதை என்னாலை ஏத்துக்கொள்ளேலாமல் கிடக்கு . சினம் இருந்தாலும் அதிலை பிழை இருந்தாலும் தன்ரை கூட்டாளியளை தன்ரை வழிக்கு கொண்டு வந்து தன்ரை காசுகளுக்கு சேதாரம் இல்லாமல் படை எடுக்குறதுதான் இப்பத்தையான் அரசர்மாரின்ரை பாசன் .வெளியாலை போகாமல் நம்ம மகிந்தாவை பாருங்கோ. எத்தினை பேர் கடைசியிலை கை குடுத்தினம் ??

Who leaves the work to those around, and thinks of it no more; If he in wrathful mood reprove, his prosperous days are o'er!

Décroît la richesse du Roi qui ne discute pas ses projets avec les Ministres, agit de son gré, et qui, irrité par l'insuccès, s'emporte contre eux.

செருவந்த போழ்தில் , சிறைசெய்யா வேந்தன்
வெருவந்து வெய்து கெடும். 569

போர் வருவதற்க்கு முன்பாகவே பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்து கொள்ளாத வேந்தன் அது வரும் போது , பாதுகாப்பு இல்லாமல் அஞ்சி விரைவில் அழிவான் .

எனது கருத்து :

என்னதான் பாதுகாப்பு செய்து வைச்சாலும் காலம் எண்ட நேரம் வரேக்கை எந்த கொம்பனும் விழவேண்டியதுதான் . கடாபிக்கு நடந்தது பாத்தியள் தானே ?? 

Who builds no fort whence he may foe defy, In time of war shall fear and swiftly die

Périra promptement la Roi, qui ne s'aménage pas une place forte et qui tremble, lorsqu'il est surpris par la guerre.

கல்லார்ப் பிணிக்கும் கடுங்கோல் ; அதுஅல்லது
இல்லை நிலக்குப் பொறை. 570

கொடுங்கோல் ஆட்சி மூடர்களையே தனக்குத் துணையாக்கிக் கொள்ளும் , நிலத்திற்குச் சுமை இது போல் வேறு இல்லை .

எனது கருத்து :

உண்மைதான் ,கடாபியையும் சதாமையும் சுத்தி அவையளை ஏத்திக்கதைக்கிற கூட்டம்தான் இருந்திது . நல்லதுகெட்டதுகளை சொல்லுறதுக்கு ஆக்கள் இல்லாமல் இப்ப ஆக்களே உலகத்திலை இல்லை எண்ட விசயம் எல்லா அரசர்மாருக்கும் தெரிஞ்சும் அதே பிழையைத்தானே விட்டுக்கொண்டு இருக்கினம். 

Tyrants with fools their counsels share: Earth can no heavier burthen bear

Le tyran s'entoure d'illettrés pour conseillers et il n'y a pas pour la terre,
de fardeau plus lourd que leur assemblée.





Comments