Skip to main content

பொருட்பால் - அரசியல் - மடி இன்மை-Unsluggishness -S'Abstenir de la Paresse- 600 - 610.


பொருட்பால் - அரசியல் - மடி இன்மை- Unsluggishness-S'Abstenir de la Paresse-600-610.


குடி என்னும் குன்றா விளக்கம் மடிஎன்னும் 
மாஊர மாய்ந்து கெடும். 601

ஒருவன் பிறந்த குடியாகிய அணையா விளக்கு அவனுடைய சோம்பலாகிய இருள் படியப்படிய ஒளி குறைந்து (தேய்ந்து ) அணைந்து போகும் .

எனது கருத்து :

ஒருத்தன் எங்கைதான் பிறந்து இருந்தாலும் அவனிட்டை சோம்பல் மட்டும் இருந்திதோ ஆள் துலைஞ்சார்.அந்த ஆண்டவனாலையும் அவனை காப்பாத்தேலாது கண்டியளோ.

Of household dignity the lustre beaming bright, Flickers and dies when sluggish foulness dims its light

La flamme inextinguible appelée famille S’éteint, envahie par les ténèbres appelées paresse.

மடியை மடியா ஒழுகல் குடியைக் 
குடியாக வேண்டு பவர். 602

தாம் பிறந்த குடியைச் சிறந்த குடியாக உயர்த்த விரும்புபவர் சோம்பலைச் சோம்பலாகக் கருதிக் கைவிட்டு முயற்சியோடு வாழ்வார்களாக .

எனது கருத்து :

நீங்கள் சொல்லுறது சரிதான். ஆனால் இண்டைக்கு உள்ள லேற்றஸ் பாசன் என்னவெண்டால், வீட்டிலை புரியன் காறன் நீங்கள் சொன்ன மாதிரி இருக்கவேணும். பொம்மனாட்டியள் சீரியலிலையும் சூப்பர் சிங்கரிலையுமல்லோ காலத்தை கழிக்கினம். இதை என்னவெண்டு சொல்லுறது ஐயா ??

Let indolence, the death of effort, die, If you'd uphold your household's dignity.

Ceux qui désirent faire de leur famille, une bonne famille, doivent considérer la paresse comme la paresse (un mal).

மடிமடிக் கொண்டு ஒழுகும் பேதை பிறந்த 
குடிமடியும் தன்னினும் முந்து. 603

கைவிடவேண்டியதான சோம்பலை தன்னிடம் கொண்டுவாழும் அறிவில்லாதவன் பிறந்த குடியானது அவனுக்கு முன் அழிந்து போகும்.

எனது கருத்து :

நாளைக்கு நாளைக்கு எண்டு இருக்கிறவைக்கு அவைக்கு முன்னாலையே அவையின்ரை குடும்பம் சீரழிஞ்சு போடும். உண்மையைத்தான் சொல்லுறியள்.

Who fosters indolence within his breast, the silly elf! The house from which he springs shall perish ere himself.

La famille de l'insensé qui entretient la paresse digne d'être détruite, s'éteint avant luimême.

குடிமடிந்து குற்றம் பெருகும் மடிமடிந்து 
மாண்ட உகற்றுஇ லவர்க்கு. 604

சோம்பலில் சிக்கி ,முயற்ச்சியில்லாமல் வாழ்கின்றவனின் குடும்பம் பெருமையிளக்கும்;குற்றமும் பெருகும் .

எனது கருத்து : 

எப்பவும் ஒரு துரும்பையும் எடுத்து போடாதவையின்ரை சீவியம் கந்தறுந்த சீவியம் தான். ஒருத்தரும் ஏனெண்டு எட்டிப் பாக்கமாட்டாங்கள் .

His family decays, and faults unheeded thrive, Who, sunk in sloth, for noble objects doth not strive.

Ceux qui croupissent dans la paresse et qui n'ont pas l'énergie salvatrice voient non seulement leur famille s'éteindre, mais sont aussi adonnés à une multitude de vices.

நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும் 
கெடுநீரார் காமக் கலன். 605 

சோம்பலும் ,காலம் நீடித்து செய்யும் குணமும் ,மறதியும் உறக்கமும்,ஆகிய இந்த நான்கு குணங்களும் அழியும் இயல்புடையார் விரும்பி ஏறும் மரக்கலங்களாகும்.

எனது கருத்து :

ஒருத்தன் கெட்டழியிறதுக்கு அவனின்ரை கூட்டுகள் பிழை எண்டு சொல்லுவினம் அனால் இவர் பஞ்சியும் மறதியும் நேரகாலத்துக்கு ஒரு வேலையளையும் செய்யாமல் நித்திரை கொண்டு கொண்டிருந்தால் கூட்டுகள் எப்பிடி பொறுப்பெடுக்கேலும் ??

Delay, oblivion, sloth, and sleep: these four Are pleasure-boat to bear the doomed to ruin's shore.

La paresse, la lenteur, l'oubli et le sommeil: tous ces quatre (vices) sont le vaisseau sur le quel désirent s'embarque; ceux qui sont destinés à périr.

படிஉடையார் பற்று அமைந்தக் கண்ணும் மடியுடையார் 
மாண்பயன் எய்தல் அரிது. 606

நிலம் முழுதாளும் அரசர்களின் செல்வம் எல்லாம் தாமே வந்தது அடைந்தபோதும் ,சோம்பலுடையவர் அச்செல்வத்தால் சிறந்த நன்மையை அடைதல் இயலாது.

எனது கருத்து :

இடிக்குதே ஐயா இப்பத்தையான் அரசர்மாரெல்லாம் பத்து தலைமுறைக்கெல்லாம் சொத்துப்பத்துகள் செத்துக்கொண்டுதான் அரசியலை விடுறாங்கள் அவங்கள் சோம்பேறியாய் இருந்தாலும் ஒரு பிரச்சனையும் இல்லை .ஏனெண்டால் அவங்களிட்டை காசு இருக்கு ஐயா பெருமை தன்ரை பாட்டிலை வந்து சேரும்.

Though lords of earth unearned possessions gain, The slothful ones no yield of good obtain.

Bien que la richesse de ceux qui ont régné sur toute la terre, se soit accumulée d'elle-même chez eux, les paresseux n'en retirent aucun grand profit.

இடிபுரிந்து எள்ளுஞ்சொல் கேட்பர் மடிபுரிந்து 
மாண்ட உஞற்று இலவர். 607

சோம்பேறியாக முயற்சி ஏதும் இல்லாமல் வாழ்பவன் பிறருடைய ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளாவான்.

எனது கருத்து :

இதிலை சரியாய் தான் நிக்கிறியள் .சோம்பலாய் இருக்கிறவை எல்லாத்துக்கும் ஒரு கதை வைச்சிருப்பினம். ரோற்றலி அவைக்கு எருமைத்தோல் கண்டியளோ. 

Who hug their sloth, nor noble works attempt, Shall bear reproofs and words of just contempt.

Ceux qui ne font aucun glorieux effort, parce qu'ils aiment la paresse, entendent d'abord les réprimandes puis les insultes de leurs amis.

மடிமை குடிமைக்கண் தங்கின்தன் ஒன்னார்க்கு 
அடிமை புகுத்தி விடும். 608 

நல்ல குடியில் பிறந்தவனிடம் சோம்பல் வந்து சேர்ந்து கொண்டால் ,அவன் குடும்பமே பகைவருக்கு அடிமையாகிவிடும் .

எனது கருத்து :

நாலு காசு உழைக்க வக்கில்லாதவனை சுத்தி கடன்காறங்கள் நிப்பங்கள். ரோற்றலி அவனின்ரை நிம்மதியே போடும். 

If sloth a dwelling find mid noble family, Bondsmen to them that hate them shall they be.

Si la paresse gagne un (Roi qui est) père de famille, elle le rend propre à être asservi par ses ennemis.

குடி ஆண்மை யுள்வந்த குற்றம் ஒருவன் 
மடிஆண்மை மாற்றக் கெடும். 609

ஒருவனுடைய குடியிலும்,அண்மையிலும் ஏற்பட்ட குற்றங்கள் அவன் சோம்பலை ஆளும் தன்மையைக் கைவிடுவதால் நீங்கும்.

எனது கருத்து :

எப்ப ஒருத்தன் நாலு காசு பாக்கிறானோ அப்ப அவனை சுத்தி கூட்டம் கூடும் எண்டு சொல்லுறியள். அப்ப இந்த கூட்டங்கள் எல்லாம் அவனின்ரை காசுக்குத்தானே வந்தது ??அவனுக்கு இல்லைத்தானே?

Who changes slothful habits saves Himself from all that household rule depraves.

Parce que quelqu'un renonce à la paresse, il détruit les malheurs abattus sur sa famille et le préjudice causé à sa virilité.

மடிஇலா மன்னவன் எய்தும் அடிஅளந்தான் 
தாஅயது எல்லாம் ஒருங்கு. 610

ஆள்கிறவனுக்குச் சோம்பல் இல்லையென்றால் திருமாலின் திருவடிகளால் அளக்கப்பெற்ற இந்த உலகம் முழுவதையும் அவன் அடைவான் .

எனது கருத்து :

ஒருத்தன் என்னதான் வாழ்க்கையிலை முயற்சியோடை தலைகீழாய் நிண்டாலும் காலநேரம் சரியில்லாட்டில் அவனாலை ஒண்டுமே செய்யேலாது.

The king whose life from sluggishness is rid, Shall rule o'er all by foot of mighty god bestrid.

Sous le sceptre du Prince qui n'est pas paresseux, se range tout l'univers qui a été mesuré par Dieu de ses pas.


Comments

Popular posts from this blog

அறத்துப்பால்- துறவறவியல்- கொல்லாமை-Not killing- Ne pas tuer- 321-330.

அறத்துப்பால்-துறவறவியல்-கொல்லாமை-Not killing-Ne pas tuer-321-330.


அறவினை யாதெனில் கொல்லாமை கோறல் பிறவினை எல்லாம் தரும். 321
அறச்செயல் எதுவென்றால் எந்த ஓர் உயிரையும் கொல்லாத செயலே . அவ்வாறு கொல்லுதல் பிறதீவினைகளை எல்லாம் தானே கொண்டுவரும்.
எனது கருத்து:
நியாயமான சீவியம் எண்டால் மற்றவனைப் போடுத்தள்ளாமல் இருக்கிறதுதான் அப்பிடி போட்டுத்தள்ள வெளிக்கிட்டால் பாருங்கோ சொந்தச் செலவிலை சூனியம் செய்யவேண்டிவரும் உதாரணத்திக்கு ஏன் வெளியாலை போவான் நம்மடை மகிந்து
What is the work of virtue? 'Not to kill'; For 'killing' leads to every work of ill. 
Qu’est ce que l’acte vertueux? C’est ne pas tuer; tuer engendre tous les péchés. 
பகுத்து உண்டு பல்லுயிர் ஓம்புதல், நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை. 322
கிடைத்ததைப் பகுத்துக்கொடுத்து தானும் உண்டு , பல உயிர்களையும் காப்பாற்றுதல் , அற நூலோர் தொகுத்துக்கூறிய அறங்கள் எல்லாவற்றிற்கும் தலையாய அறமாகும் .
எனது கருத்து:
மனுசனாப் பிறந்தால் கடைசி ஒருத்தனுக்காவது பிரையோசனமாய் இருக்கவேணும் கண்டியளோ . சிலபேற்றை வீட்டை போனியள் எண்டால் முழங்கையிலை பிடிச்ச…

இல்லறவியல் ஒழுக்கமுடைமை-The Possession of Decorum - La moralité .131 - 140.

அறத்துப்பால். இல்லறவியல் ஒழுக்கமுடைமை- The Possession of Decorum- La moralité-131-140.


ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும். 131
ஒழுக்கம் எப்போதும் மேன்மையைத் தருவதால் , அந்த ஒழுக்கமே உயிரினும் மேலானதாகப் போற்றப்படுகின்றது .
எனது கருத்து:
ஒருத்தருக்கு ஒழுக்கம் அக ஒழுக்கம் புற ஒழுக்கம் எண்டு ரெண்டு வகையாலுமே இருக்கவேணும் இருந்தால் மட்டும் காணாது அதை அவற்றை உயிரைவிட உயர்வாய் பேணிப் பாதுக்கவேணும் அதைத்தான் இந்தக் குறளும் சொல்லுது
Decorum' gives especial excellence; with greater care 'Decorum' should men guard than life, which all men share.
Puisque la moralité honore tous les hommes, il faut la conserver de préférence à la vie.
பரிந்துஓம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்துஓம்பித் தேரினும் அஃதே துணை. 132
வருந்தியேனும் ஒழுக்கத்தைப் போற்றிக் காக்கவேண்டும் . பலவற்றை ஆராய்ந்து பாரத்தாலும் ஒழுக்கமே உயிரிற்குத் துணையாகும் .
எனது கருத்து:
எப்பிடித்தான் பாத்தாலும் ஒழுக்கமாய் இருக்கிறதுதான் நல்லது ஆனால் அது அவ்வளவு லேசான விசையமில்லை அதுக்கு ஒருத்தர் கனக்க விலையள் குடுக்க …

அறத்துப்பால்-துறவறவியல்-நிலையாமை- Instability-De l’instabilité- 331-340.

அறத்துப்பால்-துறவறவியல்-நிலையாமை- Instability-De l’instabilité-331-340.


நில்லாத வற்றை நிலையின என்று உணரும் புல்லறி வாண்மை கடை. 331
நிலையில்லாதவற்றை நிலையானவை என்று எண்ணி மயங்குகின்ற புல்லறிவாண்மை ( அற்ப அறிவு )துறந்தார்க்கு இழிவாகும் .
எனது கருத்து :
ஒரு உயிரை உடம்புக்குளை கடவுள் விடேக்கை அதுக்கு ஒரு கால அளவை வைச்சுத்தான் விடுறார் . கொஞ்சக்காலத்தில அந்த உடம்பு இல்லாமல் போடும் . இது எங்களுக்கும் சரி இளையராசாவுக்கும் சரி ஒண்டுதான் . இதுகள் தெரியாமல் இந்த சனங்களுக்கை எவ்வளவு புடுங்குபாடுகள் குத்துபாடுகள் ?? இந்த அற்ப குணத்தாலை மனசிலை வளராத கூட்டங்களாய் இந்த சனங்கள் இருக்கிதுகள் .
Lowest and meanest lore, that bids men trust secure, In things that pass away, as things that shall endure!
C’est la dernière des sottises, que de croire que ce qui est instable est stable.
கூத்துஆட்டு அவைக்குழாத்து அற்றே பெருஞ்செல்வம் போக்கும் அதுவிளிந் துஅற்று. 332
பெருஞ் செல்வம் வந்து சேர்தல் கூத்தாடுமிடத்தில் கூட்டம் வந்து கூடுவதைப் போன்றது அது நீங்கிப் போதலும் கூத்து முடிந்ததும் கூட்டம் கலைவதைப் போன்றது
எனத…