பொருட்பால்-அமைச்சியல்-சொல்வன்மை-Power in Speech-Puissance de la parole-641-650.


பொருட்பால்-அமைச்சியல்-சொல்வன்மை-Power in Speech-Puissance de la parole-641-650.







நாநலம் என்னும் நலன்உடைமை அந்நலம் 
யாநலத்து உள்ளதூஉம் அன்று.641

ஒருவனுக்கு இன்றியமையாத குணங்களுள் சிறந்தது நாவன்மையாம் .அந்த நலம் ஏனைய நலன்களையும் விட மேலான சிறப்புடையது .

எனது கருத்து :

நாக்கை அடக்கினவன் இந்த உலகத்தையே அடக்கியாளுவான் எண்டு எங்கடை பெரிசுகள் தெரியாமலே சொல்லி இருக்கினம். அதாலை குறைச்சு பேசி கூட செய்யிறவனைத்தான் சனத்துக்கு கூட பிடிக்கும் .

A tongue that rightly speaks the right is greatest gain,It stands alone midst goodly things that men obtain.

Qu'ils-les Ministres possèdent ce qui est appelé le don de la langue.
Ce bien ne fait partie d'aucun autre bien.

ஆக்கமுங் கேடும் அதனால் வருதலால் 
காத்துஓம்பல் சொல்லின்கண் சோர்வு. 642

ஒருவருக்கு நன்மையும் அழிவும் தம் சொற்களால் ஏற்படும். ஆதலால் அத்தகைய சொற்களை சொல்லுமாறு சோர்வு நேராதவாறு போற்றிக் காக்க வேண்டும்.

எனது கருத்து :

நாக்கு எண்டது கெட்ட சாமான். அதிலை சனி பிடிச்சால் எந்தகொம்பனாய் இருந்தாலும் கவிண்டு கொண்டிண்ட வேண்டியதுதான். இப்ப சுமந்திரன் வாயை குடுத்து புண்ணாக்கிற மாதிரி.

Since gain and loss in life on speech depend,From careless slip in speech thyself defend. 

Parce que la Fortune et la misère proviennent d'elle-la langue qu'ils se gardent des fautes de la langue.

கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும் 
வேட்ப மொழிவதாம் சொல். 643

கேட்பவர் உள்ளத்தை கவரும் தன்மை கொண்டதாகவும்,கேளாதவரும் கேட்பதற்கு விருப்பப்படும் வகையிலும் சொல்லப்படுவதே சிறந்த சொல்வன்மை ஆகும் .

எனது கருத்து :

வள வளா கொள கொளா இல்லாமல் சொல்ல வந்ததை மனசிலை தைக்கிறமாதிரி எதிராளியையும் திரும்பி பாக்க வைக்கிற மாதிரி பேசுறவனை சுத்தி எந்தநேரமும் சனம் இருக்கத்தான் செய்யும். இதெல்லாம் இப்பத்தையான் அரசியல் வாதியளிட்டை கூட இருக்கு ஆனால் செயல் எண்டு பாத்தால் ஒண்டும் இல்லை .

'Tis speech that spell-bound holds the listening ear,While those who have not heard desire to hear. 

Le vrai discours est celui qui a la qualité d'affermir ceux qui ont écouté et approuvé, de faire revenir de leur opinion, ceux qui n'ont pas écouté ou approuvé.

திறன்அறிந்து சொல்லுக சொல்லை; அறனும் 
பொருளும் அதனின்ஊங்கு இல். 644 

சொல்லின் திறத்தை அறிந்து சொல்லைச் சொல்ல வேண்டும் அப்படிச் சொல்வதைவிட மேலான அறமும் பொருளும் இல்லை .

எனது கருத்து :

ஒண்டை கதைக்க முதல் அதைப்பத்தி தறோவாய் கிளியர் பண்ணி போட்டுத்தான் கதைக்க வேணும். அப்பத்தான் ஒருத்தரும் திருப்பி கதைக்க மாட்டாங்கள். ஆனால் இப்ப இந்த அரசியல் வாதியள் நேற்று என்ன சொன்னது எண்டதை அடுத்தநாள் மறந்து போறாங்கள். 

Speak words adapted well to various hearers' state; No higher virtue lives, no gain more surely great. 

Qu'ils parlent, en connaissance de leur talent et de la capacité d'appropriation des auditeurs. Il n'y a pas de vertu ni de richesse, supérieures à de tel discours.

சொல்லுக சொல்லைப் பிறிதுஓர்சொல், அச்சொல்லை 
வெல்லும்சொல் இன்மை அறிந்து. 645 

ஒருவர் தாம் சொல்லும் சொல்லை வெல்லக்கூடிய மற்றொரு சொல் இல்லாத வகையில் ஆராய்ந்து அறிந்து அச்சொல்லை சொல்ல வேண்டும் .அதுவே சிறந்த சொல்வன்மையாகும் .

எனது கருத்து :

ஒரு சொல்லுக்கு வேறை சொல்லு வராமல் கதைக்க வேணும் எண்டு சொல்லுறியள். ஆனால் தமிழ் அப்பிடியே கிடக்கு? ஒரு சொல்லுக்கு எத்தினை அர்த்தங்கள் கிடக்கு ஐயன் .

Speak out your speech, when once 'tis past dispute,That none can utter speech that shall your speech refute. 

Qu'ils parlent, mais qu'au préalable, ils recherchent et sachent, s'il n'y a pas un autre discours pouvant détruire les effets du leur.

வேட்பத்தாம் சொல்லி, பிறர்சொல் பயன்கோடல் 
மாட்சியின் மாசு அற்றார் கோள். 646 

பிறர் விரும்பும்படியாகத் தாம் சொல்லி, பிறர் சொல்லும்போது அச்சொல்லின் பயனை ஆராய்ந்து கொள்ளுதல் குற்றமற்றவரது கொள்கையாகும் .

எனது கருத்து :

இங்கைதானே பிரச்சனையே தொடங்குது. எல்லாரும் தாங்கள் சொல்லுறதுதான் சரி அதை மற்றவனும் கேக்கவேணும் எண்டுதான் நினைக்கினமே ஒழிய மற்றவன் என்ன சொல்ல வாறான் எண்டதை கேக்கிறதுக்கு றெடி இல்லை. இதுக்கு வேறை கலந்துரையாடல் எண்டு பேரும் வைப்பாங்கள் ஐயன் .

Charming each hearer's ear, of others' words to seize the sense, Is method wise of men of spotless excellence. 

Parler de manière à se faire désirer par l'auditoire et saisir le vrai sens des répliques d'autrui: tel est le rôle du ministre impeccable.

சொலல்வல்லன் சோர்வுஇலன், அஞ்சான் அவனை 
இகல்வெல்லல் யார்க்கும் அரிது. 647 

சொல்வன்மை உடையவனாயும் ,சொற் சோர்வு இல்லாதவனாயும் சபைக்கு அஞ்சாவனாயும் உள்ள ஒருவனை வெல்லுதல் எவருக்கும் முடியாது .

எனது கருத்து :

நீங்கள் சொல்லுறது சரிதான் .வாய் இருந்தால் வங்காளம் போகலாம் எண்ட பழமொழியும் இருக்குத்தான். ஆனால் அதுக்கும் ஒரு மறுத்தான் இருக்கு கண்டியளோ .அதுதான் வாயாலை வெல்லாட்டி பின்னாலை இருந்து முதுகிலை குத்திறது, சேறடிக்கிறது, துரோகி பட்டம் குடுக்கிறது எண்டு கனக்க விசயங்களை எங்கடை பெடியள் இப்ப வைச்சிருக்கிறாங்கள் ஐயன் உது இப்ப செல்லாது .

Mighty in word, of unforgetful mind, of fearless speech,'Tis hard for hostile power such man to overreach. 

Il est difficile de vaincre par la ruse celui qui a la puissance de la parole, que rien ne trouble et qui brave l'auditoire.

விரைந்து தொழில்கேட்கும் ஞாலம்; நிரந்துஇனிது 
சொல்லுதல் வல்லார்ப் பெறின். 648 

சொல்லும் காரியங்களை வரிசைப்படக் கோத்து இனிமையாக எடுத்துக் கூற வல்லவரைப் பெற்றால் ,இவ்வுலகம் விரைந்து அவற்றை ஏற்றுக்கொள்ளும் .

எனது கருத்து :

சிலபேரை பாத்தியள் எண்டால் அவையின்ரை தோற்ரம் கிட்ட வரவிடாமல் வெருட்டும். ஆனால் அவையின்ரை கதையை கேட்டு நடக்கிறதுக்கு சனம் லைன் கட்டி நிக்கும். இதைத்தான் ஊரிலை சொல்லுவாங்கள் "முகராசி " எண்டு ஐயன். 

Swiftly the listening world will gather round, When men of mighty speech the weighty theme propound. 

Le Monde s'empresse d'approuver ceux qui ont le talent de coordonner leurs idées et d'employer un langage persuasif.

பலசொல்லக் காமுறுவர் மன்றமாசு அற்ற
சிலசொல்லல் தேற்றா தவர். 649 

குற்றம் இல்லாத சொற்களாகச் சிலவற்றைப் பேசத் தெரியாதவரே , நீண்ட நேரம் பல சொற்களைப் பேச ஆசைப்படுவர் .

எனது கருத்து :

இவையள் தரவளியை நீங்கள் அரசியல் மேடையிலை இல்லாட்டில் வேறை மேடையிலையும் பாக்கலாம். கதைக்கிறதுக்கு ஒண்டும் இருக்காது ஆனால் தும்பு முட்டாஸ் சுத்தி காது கன்னம் எல்லாம் ரத்தம் வரப்பண்ணுவாங்கள். 

Who have not skill ten faultless words to utter plain,Their tongues will itch with thousand words man's ears to pain. 

Seuls, ceux qui ne savent pas exprimer en peu de mots impeccables, des idées claires, désirent parler prolixement.

இணர்ஊழ்த்தும் நாறா மலர்அனையர் கற்றது 
உணர விரித்துரையா தார். 650 

தாம் கற்ற நூற்பொருளைப் பிறரும் அறியும்படியாக விளக்கிச் சொல்லத் தெரியாதவர் ,கொத்தாக மலர்ந்திருந்தும் மணம் பரப்பாத மலரைப் போன்றவர்களாவர் . 

எனது கருத்து :

சிலபேரை பாத்தியள் எண்டால் பேருக்கு பின்னாலை ஒரு ஏழெட்டு பட்டங்கள் அடுக்கி வைச்சிருப்பினம். எங்கை அவையை மேடையிலை எத்தி விடுங்கோ. வேர்த்து கொட்டி சொல்ல வந்ததை ஒழுங்கு முறையாய் சொல்லத்தெரியாமல் முழுசுவினம். இவையளுக்கு இருக்கிறது கொமினிக்கேசன் பிரச்சனை கண்டியளோ. இவையளாலை ஒரு பிரயோசனமும் இல்லை.

Like scentless flower in blooming garland bound Are men who can't their lore acquired to other's ears expound. 

Ceux qui ne peuvent pas développer les connaissances qu'ils ont acquises par leurs études, de manière à les faire comprendre, ressemblent à la fleur épanouie mais qui n'a pas de parfum.


Comments