Skip to main content

பொருட்பால் - அரசியல் - பொச்சாவாமை- Unforgetfulness-Ne pas s’oublier-531-540.


பொருட்பால் - அரசியல் - பொச்சாவாமை- Unforgetfulness-Ne pas s’oublier-531-540.இறந்த வெகுளியின் தீதே சிறந்த
உவகை மகிழ்ச்சியின் சோர்வு. 531

மிகுந்த உவகையால் மகிழ்ந்து இருக்கும்பொழுது மறதியால் வரும் சோர்வு, அளவு கடந்து கொள்ளும் சினத்தைக் காட்டிலும் தீமையானதாகும் .

எனதுகருத்து:

ஒருத்தன் எந்த நிலமையிலை இருந்தாலும் செய்யவேண்டிய வேலையளை மறக்காமல் அந்தந்த நேரத்திலை செய்யவேணும் . அப்படி மறந்தால் அதாலை வாற சேதாரங்கள் கூடவாய் இருக்கும் .

'Tis greater ill, it rapture of o'erweening gladness to the soul Bring self-forgetfulness than if transcendent wrath control .

L'oabli de soi-même qui provient d'une trop grande joie est plus nuisible (au Roi) que la colère violente.

பொச்சாப்புக் கொல்லும் புகழை அறிவினை
நிச்ச நிரப்புக்கொன் றுஆங்கு.532

நாள்தோறும் விடாமல் வரும் வறுமை, அறிவைக் கெடுப்பது போல , மறதி ஒருவனது புகழைக் கெடுத்து விடும் .

எனதுகருத்து:

ஒருத்தனுக்கு வாழ்க்கை முழுக்க ஏழையாய் இருந்தால் எப்பிடி பெரிய அளவிலை படிக்கேலாதோ , அப்பிடித்தான் அவன் மறந்து போற விசையங்களாலை அவனின்ரை புகழும் கெட்டு போகும் .

Perpetual, poverty is death to wisdom of the wise; When man forgets himself his glory dies!

Dé même que l'indigence excessive nuit à l'intelligence:
le faux sentiment de la sécurité tue la gloire.

பொச்சாப்பார்க்கு இல்லை புகழ்மை அதுஉலகத்து
எப்பால்நூ லோர்க்கும் துணிவு. 533

மறதி உடயவர்களுக்குப் புகழுடன் வாழும் தன்மை இல்லை . இது உலகத்தில் உள்ள எல்லா நூல்களிலும் ஒப்புக் கொள்ளப்பட்ட உண்மையாகும் . 

எனதுகருத்து:

நீங்கள் என்னதான் பெரியகொம்பனாய்இருந்தாலும் இந்த அறணைகுணம் உங்களிட்டை இருந்தால் நீங்கள் சீறோ தான் .

'To self-oblivious men no praise'; this rule Decisive wisdom sums of every school.

Ceux qui s'oublient n'obtiennent pas la gloire: telle est la conclusion non seulement de ceux qui ont traité de la morale mais aussi de tous les écrivains de l'univers.

அச்சம் உடையார்க்கு அரண்இல்லை ;ஆங்குஇல்லை
பொச்சாப்பு உடையார்க்கு நன்கு. 534

உள்ளத்தில் அச்சம் உடையவர்களுக்குப் புறத்தில் அரண் இருந்தும் பயன் இல்லை . அதேபோல மறதி உடையவர்களுக்கு நல்லநிலை வாய்க்கப் பெற்றிருந்தும் பயன் இல்லை .

எனதுகருத்து:

மனசில பயம் இருக்கிறவைக்கு நீங்கள் என்னதான் பாதுகாப்பு குடுத்தாலும் அதாலை ஒருவேலையும் இல்லை . அதைமாதிரித்தான் இந்த அறணைக்குணம் பிடிச்ச ஆக்களுக்கும் .

To cowards is no fort's defence'; e'en so The self-oblivious men no blessing know.

La forteresse ne profite guère à ceux qui ont peur intérieurement, de même l'abandance des richesses ne protite pas aux Sans-soucci.

முன்உறக் காவாது இழுக்கியான் தன்பிழை
பின்ஊறு இரங்கி விடும். 535

துன்பம் வருவதற்கு முன்பு தன்னைக் காத்துக் கொள்ளாமல் மறதியாக இருந்தவன் , பின்பு துன்பம் வரும்பொழுது தன் பிழையை நினைத்து வருந்துவான் .

எனதுகருத்து:

சிலபேரைப் பாத்தியள் எண்டால் ஆரம்பத்தில பிரச்சனையளை தீக்கிறவேலையளை விட்டுப்போட்டு , அதுமுத்தி வெடிச்சு தலைக்குமேலை போனாப்பிறகு செரியா ஃபீல் பண்ணுவினம் கண்டியளோ .

To him who nought foresees, recks not of anything, The after woe shall sure repentance bring.

L'insouciant qui ne se prémunit pas contre les malheurs,
déplorera sa négligence, une foie le désastre venu.

இழுக்காமை யார்மாட்டும் என்றும் வழுக்காமை
வாயின் அதுஒப்பது இல். 536

மறதியில்லாத இயல்பு எவரிடத்திலும் , எக்காலத்திலும் பொருந்தியிருக்குமானால் , அதற்கு ஒப்பான நன்மை வேறு இல்லை .

எனதுகருத்து:

உங்களிட்டை இந்த அறணைக்குணம் இல்லையெண்டால் நீங்கள் முன்னுக்குவர கனக்க மினைக்கெடத் தேவையில்லை தானாகவே முன்னுக்கு வந்திடுவிங்கள் பாருங்கோ

Towards all unswerving, ever watchfulness of soul retain, Where this is found there is no greater gain.

D n'y a pas de bien pouvant égaler le non relâchement dans la vigilance, incessante en tout temps et contre tous les hommes. 

அரியஎன்று ஆகாத இல்லைபொச் சாவாக்
கருவியான் போற்றிச் செயின். 537

மறவாமை என்னும் கருவி கொண்டு கடமைகளைச் சரிவரச் செய்து வந்தால் ,செய்வதற்கு அருமையானவையென்று கைவிடும் செயல்கள் எவையும் இல்லை .

எனதுகருத்து:

இதிலை என்னாலை பெரியளவு உங்களோடை ஒத்துவரேலாமல் இருக்கு ஐயன் . ஒருத்தன் என்ன திறமைசாலியாய் இருந்தாலும் அவன் செய்த நல்லது கெட்டதுகளை வைச்சுத்தான் அவனுக்கு பொறுத்தநேரங்களிலை ஞாபகம் வாறதும் மறந்து போறதும் . கர்ணன் எவ்வளவு பெரிய வீரன் கடைசி நேரத்தில அவன் பரசுராமர் முனிவரின்ரை சாபத்தாலை பிரம்மஸ்திரத்தை விடுகிற மந்திரம் மறந்துபோனதை எப்பிடி எடுக்கிறது ??

Though things are arduous deemed, there's nought may not be won, When work with mind's unslumbering energy and thought is done.

Rien d'impossible à celui qui agit avec prudence et sans s'oublier.

புகழ்ந்தவை போற்றிச் செயல்வேண்டும் செய்யாது
இகழ்ந்தார்க்கு எழுமையும் இல். 538

அறநூலார் புகழ்ந்து கூறிய செயல்களை விடாமல் செய்ய வேண்டும் .அவ்வாறு செய்யாமல் மறந்தவர்க்கு ஏழு பிறப்பிலும் நன்மையில்லை .

எனதுகருத்து:

இதென்ன கதை ஐயன் ?? பெரியாக்கள் சொல்லுற விசயங்கள் எல்லாம் சரி எண்டு சொல்ல ஏலாது . ஏன் , எப்பிடி , எதுக்கு எண்ட கேள்வியள் மனிசரிட்டை வந்ததாலைதான் நாங்கள் இவ்வளவு தூரம் முன்னேறியிருக்கிறம் .

Let things that merit praise thy watchful soul employ; Who these despise attain through sevenfold births no joy.

Il faut faire les actes recommandés par les Sages.  Sinon on n'aura pas de bonheur dans ses sept naissances.

இகழ்ச்சியின் கெட்டாரை உள்ளுக ; தாந்தம்
மகிழ்ச்சியின் மைந்துஉறும் போழ்து. 539

மகிழ்ச்சியில் கர்வம் கொள்கின்றபொழுது அம்மகிழ்ச்சியினால் கடமை மறந்து அழிந்தவர்களை நினைத்துப் பார்க்கவேண்டும் .

எனதுகருத்து:

அப்பிடி ஒரு மனநிலமை இருந்தால் ஏன்ஐயன் உலகத்திலை இவ்வளவு பிரச்சனையள் ?? அதிகாரமும் பதவியும் சும்மா கிடக்கிறவனையும் கொம்பு சீவிவிடும் . நாட்டை முன்னேத்தாமல் , தன்ரை நாட்டு மக்களையே போரிலை வெண்டு போட்டன் எண்டு சொல்லுற மகிந்தா இதுக்கு நல்ல உதாரணம் கண்டியளோ ....

Think on the men whom scornful mind hath brought to nought, When exultation overwhelms thy wildered thought.

Lorsqu'on s'oublie dans une trop grande joie, qu'on se rappelle ceux que leur insouciance a perdus.

உள்ளியது எய்தல் எளிதுமன் மற்றுந்தான்
உள்ளியது உள்ளப் பெறின். 540

ஒருவன் எண்ணியதை விடாமல் எண்ணி சோர்வில்லாமல் இருக்கப்பெற்றால் , அவன் நினைத்ததை அடைதல் எளிதாகும்.

எனதுகருத்து:

நீங்கள் சொல்லிறது சரியெண்டாலும் , இண்டையான் நிலமையிலை சிலபேரை பாத்தியள் எண்டால் அவையின்ரை கதையள் கூடவாய் இருக்கும் .ஆனால் செய்கையளை தேடித்தான் பிடிக்கவேணும் . இவையள் தரவளியை நம்பிற கூட்டங்கள்தான் கூடவாய்க் கிடக்கு .

'T'is easy what thou hast in mind to gain, If what thou hast in mind thy mind retain.

Il est aisé d'obtenir ce que l'on a désiré, si l'on a constamment présent à la mémoire l'objet désiré.

Comments

Popular posts from this blog

அறத்துப்பால்- துறவறவியல்- கொல்லாமை-Not killing- Ne pas tuer- 321-330.

அறத்துப்பால்-துறவறவியல்-கொல்லாமை-Not killing-Ne pas tuer-321-330.


அறவினை யாதெனில் கொல்லாமை கோறல் பிறவினை எல்லாம் தரும். 321
அறச்செயல் எதுவென்றால் எந்த ஓர் உயிரையும் கொல்லாத செயலே . அவ்வாறு கொல்லுதல் பிறதீவினைகளை எல்லாம் தானே கொண்டுவரும்.
எனது கருத்து:
நியாயமான சீவியம் எண்டால் மற்றவனைப் போடுத்தள்ளாமல் இருக்கிறதுதான் அப்பிடி போட்டுத்தள்ள வெளிக்கிட்டால் பாருங்கோ சொந்தச் செலவிலை சூனியம் செய்யவேண்டிவரும் உதாரணத்திக்கு ஏன் வெளியாலை போவான் நம்மடை மகிந்து
What is the work of virtue? 'Not to kill'; For 'killing' leads to every work of ill. 
Qu’est ce que l’acte vertueux? C’est ne pas tuer; tuer engendre tous les péchés. 
பகுத்து உண்டு பல்லுயிர் ஓம்புதல், நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை. 322
கிடைத்ததைப் பகுத்துக்கொடுத்து தானும் உண்டு , பல உயிர்களையும் காப்பாற்றுதல் , அற நூலோர் தொகுத்துக்கூறிய அறங்கள் எல்லாவற்றிற்கும் தலையாய அறமாகும் .
எனது கருத்து:
மனுசனாப் பிறந்தால் கடைசி ஒருத்தனுக்காவது பிரையோசனமாய் இருக்கவேணும் கண்டியளோ . சிலபேற்றை வீட்டை போனியள் எண்டால் முழங்கையிலை பிடிச்ச…

இல்லறவியல் ஒழுக்கமுடைமை-The Possession of Decorum - La moralité .131 - 140.

அறத்துப்பால். இல்லறவியல் ஒழுக்கமுடைமை- The Possession of Decorum- La moralité-131-140.


ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும். 131
ஒழுக்கம் எப்போதும் மேன்மையைத் தருவதால் , அந்த ஒழுக்கமே உயிரினும் மேலானதாகப் போற்றப்படுகின்றது .
எனது கருத்து:
ஒருத்தருக்கு ஒழுக்கம் அக ஒழுக்கம் புற ஒழுக்கம் எண்டு ரெண்டு வகையாலுமே இருக்கவேணும் இருந்தால் மட்டும் காணாது அதை அவற்றை உயிரைவிட உயர்வாய் பேணிப் பாதுக்கவேணும் அதைத்தான் இந்தக் குறளும் சொல்லுது
Decorum' gives especial excellence; with greater care 'Decorum' should men guard than life, which all men share.
Puisque la moralité honore tous les hommes, il faut la conserver de préférence à la vie.
பரிந்துஓம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்துஓம்பித் தேரினும் அஃதே துணை. 132
வருந்தியேனும் ஒழுக்கத்தைப் போற்றிக் காக்கவேண்டும் . பலவற்றை ஆராய்ந்து பாரத்தாலும் ஒழுக்கமே உயிரிற்குத் துணையாகும் .
எனது கருத்து:
எப்பிடித்தான் பாத்தாலும் ஒழுக்கமாய் இருக்கிறதுதான் நல்லது ஆனால் அது அவ்வளவு லேசான விசையமில்லை அதுக்கு ஒருத்தர் கனக்க விலையள் குடுக்க …

அறத்துப்பால்-துறவறவியல்-நிலையாமை- Instability-De l’instabilité- 331-340.

அறத்துப்பால்-துறவறவியல்-நிலையாமை- Instability-De l’instabilité-331-340.


நில்லாத வற்றை நிலையின என்று உணரும் புல்லறி வாண்மை கடை. 331
நிலையில்லாதவற்றை நிலையானவை என்று எண்ணி மயங்குகின்ற புல்லறிவாண்மை ( அற்ப அறிவு )துறந்தார்க்கு இழிவாகும் .
எனது கருத்து :
ஒரு உயிரை உடம்புக்குளை கடவுள் விடேக்கை அதுக்கு ஒரு கால அளவை வைச்சுத்தான் விடுறார் . கொஞ்சக்காலத்தில அந்த உடம்பு இல்லாமல் போடும் . இது எங்களுக்கும் சரி இளையராசாவுக்கும் சரி ஒண்டுதான் . இதுகள் தெரியாமல் இந்த சனங்களுக்கை எவ்வளவு புடுங்குபாடுகள் குத்துபாடுகள் ?? இந்த அற்ப குணத்தாலை மனசிலை வளராத கூட்டங்களாய் இந்த சனங்கள் இருக்கிதுகள் .
Lowest and meanest lore, that bids men trust secure, In things that pass away, as things that shall endure!
C’est la dernière des sottises, que de croire que ce qui est instable est stable.
கூத்துஆட்டு அவைக்குழாத்து அற்றே பெருஞ்செல்வம் போக்கும் அதுவிளிந் துஅற்று. 332
பெருஞ் செல்வம் வந்து சேர்தல் கூத்தாடுமிடத்தில் கூட்டம் வந்து கூடுவதைப் போன்றது அது நீங்கிப் போதலும் கூத்து முடிந்ததும் கூட்டம் கலைவதைப் போன்றது
எனத…