Skip to main content

பொருட்பால் - அரசியல் - சுற்றம் தழால்-Cherishing one's Kindred , S'attacher aux parents-520 -530.


பொருட்பால்-அரசியல்-சுற்றம் தழால்- Cherishing one's Kindred-S'attacher aux parents-520-530.


பற்றுஅற்ற கண்ணும் பழைமைபா ராட்டுதல்
சுற்றத்தார் கண்ணே உள. 521

ஒருவர் செல்வத்தை இழந்து வறியவனாய் வாழும் போதும் தமக்கும் அவனுக்கும் உள்ள உறவுகளைக் கொண்டாடும் இயல்புகள் சுற்றத்தாரிடமே உள்ளன .

எனது கருத்து :

இண்டையான் திகதியிலை இருக்கிற சுற்றங்கள் எல்லாம் ஒருத்தனின்ரை பறியிலை எவ்வளவு இருக்கு எண்டு பாத்து பழகிற ஆக்கள் . ஏன் பெத்த அம்மாவே காசு உள்ள மகனிட்டை ஒருமாதிரியும் , காசு இல்லாத மகனிட்டை ஒரு மாதிரியும் பழகிற கலிகாலம் . இதிலை நாங்கள் கஸ்ரப்பட்ட நேரம் எங்கடை சொந்தங்கள் எங்களைப் பத்தி நல்லாய் கதைப்பினம் எண்டு எதிர்பார்க்கிறது பிழையானவேலை கண்டியளோ .

When wealth is fled, old kindness still to show, Is kindly grace that only kinsmen know.

Témoigner l'ancien attachement, à celui qui est abandonné par la fortune ne se rencontre que chez les parents.

விருப்புஆறாச் சுற்றம் இயையின் அருப்புஆறா
ஆக்கம் பலவும் தரும். 522

அன்பு அழியாத நல்ல சுற்றம் ஒருவனுக்கு வாய்க்குமாயின் அஃது அவனுக்கு குறைவில்லாத செல்வங்கள் பலவற்றையும் தரும்.

எனது கருத்து :

இப்பிடியான சீவியம் முந்தி ஒருகாலத்திலை இருந்தது உண்மைதான் . ஆனால் இப்ப ஒருத்தன் கொஞ்சம் சறுக்கினாலும் ஆப்படிக்கத்தான் சனங்கள் ஒருத்தனைசுத்தி இருக்கினம் பாருங்கோ .

The gift of kin's unfailing love bestows Much gain of good, like flower that fadeless blows

Avoir une parenté dont l'affection n'est pas brisée, donne de nombreux biens de plus en plus productifs.

அளவளாவு இல்லாதான் வாழ்க்கை குளவளாக்
கோடுஇன்றி நீர்நிறைந் துஅற்று. 523

சுற்றத்தாருடன் மனம் கலந்து பழகாதவனுடைய வாழ்வு குளப்பரப்பு கரையில்லாமல் நீர் நிறைந்தாற்போல வீணே அழியும்.

எனது கருத்து :

சொந்தபந்தங்களோடை வேணும் விளையும் எண்டு பழகாதவனின்ரை சீவியம் , கரையில்லாத குளத்திலை தண்ணி இருக்கிறமாதிரி வேஸ்ற் எண்டு சொல்லுறியள் . நல்ல விசையம் , ஆனால் ஒரு பக்கம் மட்டும் அப்பிடி நடந்து என்ன பிரையோசனம் ?? கேணைப்பயல் எண்டு நினைக்கமாட்டினமோ ஐயன் ??

His joy of life who mingles not with kinsmen gathered round, Is lake where streams pour in, with no encircling bound.

La vie de celui qui ne chérit pas sincèrement ses parents, ressemble à un étang sans berges qui se remplit (d'eau.)

சுற்றத்தால் சுற்றப் படஒழுகல்; செல்வந்தான்
பெற்றத்தால் பெற்ற பயன். 524

ஒருவன் செல்வம் பெற்றதனால் அடையக்கூடிய நன்மை யாதெனில் தன்சுற்றத்தாரால் தான சூழப்படும் வகையில் தழுவி வாழ்தலாகும் .

எனது கருத்து :

ஒருத்தன் என்னதான் வாழ்க்கையிலை சம்பாதிச்சு வைச்சாலும் , சொந்தபந்தங்கள் ஒன்றாய் கூடிச் சீவிக்கிற சீவியம்தான் அவன் எடுத்த பெரிய கொடை எண்டு சொல்லுறியள் . ஆனால் எங்களுக்குத்தான் அந்தக் குடுப்பினை இல்லாமல் போட்டுது .

The profit gained by wealth's increase, Is living compassed round by relatives in peace.

Celui qui donne et dit des paroles suaves sera entouré de parents empressés.

கொடுத்தலும் இன்சொலும் ஆற்றின் அடுக்கிய
சுற்றத்தால் சுற்றப் படும். 525

உதவி செய்தும் இனிமையாகப் பேசியும் வாழ்பவனை உறவினர் சூழ்ந்து இருப்பர் .

எனது கருத்து :

இப்பிடிபட்ட சுற்றம் தேவையோ ஐயன் ?? என்னை பொறுத்தவரையிலை ஒருவித எதிர்பார்பும் இல்லாத , கஸ்ரத்திலையும் கைகொடுக்கிற சொந்தபந்தங்கள்தான் நிலைக்கும் . மிச்மெல்லாம் குளத்திலை தண்ணி வத்தின உடனை பறந்துபோற பறவையள் மாதிரித்தான் இருக்கும் .

Who knows the use of pleasant words, and liberal gifts can give, Connections, heaps of them, surrounding him shall live.

L'utilité de la fortune acquise par quelqu'un est de vivre entouré de ses parents.

பெரும்கொடையான் பேணான் வெகுளி அவனின்
மருங்குஉடையார் மாநிலத்து இல். 526

ஒருவன் கொடைக்குணம் உடையவனாகவும் , கோபம் இல்லாதவனுமாக இருந்தால் , அவனைப்போலச் சுற்றத்தாரைப் பெற்றிருப்பவர் இப்பெரிய உலகில் வேறு எவரும் இலர்.

எனது கருத்து :

ஒருத்தன் உதவி செய்யிறவனாயும் , எல்லாரோடையும் குற்றம் குறை இல்லாமல் பழகிறவனாய் இருந்தால் அவனை சொந்தபந்தமாய் வைச்சிருக்க குடுத்துவைச்சிருக்கவேணும் எண்டு சொல்லுறிங்கள் . அப்ப மற்றவையும் இப்பிடி அவனோடை நடப்பினமோ ??

Than one who gifts bestows and wrath restrains, Through the wide world none larger following gains.

Il n'y a pas en ce vaste monde, d'homme qui ait des parents plus nombreux, que celui qui fait des largesses et qui n'aime pas la colère.

காக்கை கரவா கரைந்துஉண்ணும் ஆக்கமும்
அன்னநீ ரார்க்கே உள. 527

காக்கைகள் தமக்கு இரை கிடைத்தால் மறைக்காமல் தன் இனத்தையும் அழைத்து அவற்றோடு சேர்ந்துண்ணும். பல்வகை ஆக்கங்களும் அக்காக்கையைப் போன்ற இயல்புடையார்க்கே உள்ளனவாம்.

எனது கருத்து :

தனிய சாப்பாடிலை மட்டும் காகத்தை போலை இல்லாமல் , ஒற்றுமையிலையும் காகத்தைப்போலை இருந்தால்தான் அவன்ரை தேட்டங்கள் கூடிக்கொண்டு போகும் .

The crows conceal not, call their friends to come, then eat; Increase of good such worthy ones shall meet.

Le corbeau ne cache pas la proie qu'il a trouvée à ses congénères, mais il les appelle et la partage avec eux. Ainsi la fortune n'écheoit qu'aux gens de cette qualité.

பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின்
அதுநோக்கி வாழ்வார் பலர். 528

அரசன் எல்லோரையும் ஒரு தன்மையாகக் கருதாமல் அவரவர் தகுதியறிந்து மதித்து ஒழுகுவாயின் அம்மதிப்பைக் கருதி அவனை விடாது வாழும் சுற்றத்தார் பலராவர்.

எனது கருத்து :

ஒருநாட்டிலை இருக்கிற குடிமக்கள் எல்லாரும் சமன் எண்டாலும் , அவையவையின்ரை தகுதி தராதரத்துக்கு ஏத்தமாதிரி அந்த அரசு பழகினால் , அந்த அரைசை சுத்தி சுற்றத்தார் அரணாக நிப்பினம் எண்டு சொன்னாலும் , இப்பிடி அரசன் பழகினால் அந்த நாட்டு மக்கள் ஒற்றுமையா இருப்பினமோ ??? எண்ட கேள்வியும் வருகிது .

Where king regards not all alike, but each in his degree, 'Neath such discerning rule many dwell happily.

Si, au lieu de traiter tous indistinctement, le Roi traite les parents selon leur mérite, nombreux seront ceux qui escompteront ce privilège et vivront de ses bienfaits.

தமர்ஆகித் தன்துறந்தார் சுற்றம் அமராமைக்
காரணம் இன்றி வரும். 529

உறவினராயிருந்தவர் ஏதோ காரணத்தால் விலகிச் சென்றிருந்தால் அப்பிரிவுக் காரணம் நீங்கியபின் மீண்டும் உறவினராக வந்து சேருவர் .

எனது கருத்து :

சிலபேர் இருக்கினம் முட்டையிலை மயிர்புடுங்கிக் கொண்டு உன்ரை ஒட்டும் வேண்டாம் உறவும் வேண்டாம் எண்டு போடுவினம் . நாங்கள் ஒருக்காலும் அவையிட்டை போய் கெஞ்சி அவையளை பெரியமனசர் ஆக்கக் கூடாது . ஒருகாலத்திலை அவையே தங்கடை பிழையளை உணந்து திரும்பி வருவினம் .

Who once were his, and then forsook him, as before Will come around, when cause of disagreement is no more.

Un parent séparé redevient parent, par la suppression de la cause de la séparation.

உழைப்பிரிந்து காரணத்தின் வந்தானை வேந்தன்
இழைத்துஇருந்து எண்ணிக் கொளல். 530

அரசன் தன்னிடமிருந்து பிரிந்து சென்று திரும்பி வந்த சுற்றத்தானை அவன் வந்த காரணத்தை நிறைவேற்றி அவன் குணங்களை ஆராயத் தக்கவனாயின் அவனைச் சுற்றமாகத் தழுவிக்கொள்ள வேண்டும் .

எனது கருத்து :

தங்கடை பிழையளை உணர்ந்து ஒருத்தர் திரும்பி வாறநேரம் , சென்ரிமென்ரலாய் வெளுத்ததெல்லாம் பால் எண்டு இருக்காமல் , அவையளுக்கு தேவையான உதவியளைசெய்து குடுத்து , அவையளை நீளமான கயித்திலை விட்டுத்தான் சேத்துக்கொள்ளவேணும் .

Who causeless went away, then to return, for any cause, ask leave; The king should sift their motives well, consider, and receive!

Si un parent séparé sans motif revient par l'espoir d'obtenir un avantage, que le Roi examine 'objet de son désir et se l'attache an lui donnant satisfaction.


Comments

Popular posts from this blog

அறத்துப்பால்- துறவறவியல்- கொல்லாமை-Not killing- Ne pas tuer- 321-330.

அறத்துப்பால்-துறவறவியல்-கொல்லாமை-Not killing-Ne pas tuer-321-330.


அறவினை யாதெனில் கொல்லாமை கோறல் பிறவினை எல்லாம் தரும். 321
அறச்செயல் எதுவென்றால் எந்த ஓர் உயிரையும் கொல்லாத செயலே . அவ்வாறு கொல்லுதல் பிறதீவினைகளை எல்லாம் தானே கொண்டுவரும்.
எனது கருத்து:
நியாயமான சீவியம் எண்டால் மற்றவனைப் போடுத்தள்ளாமல் இருக்கிறதுதான் அப்பிடி போட்டுத்தள்ள வெளிக்கிட்டால் பாருங்கோ சொந்தச் செலவிலை சூனியம் செய்யவேண்டிவரும் உதாரணத்திக்கு ஏன் வெளியாலை போவான் நம்மடை மகிந்து
What is the work of virtue? 'Not to kill'; For 'killing' leads to every work of ill. 
Qu’est ce que l’acte vertueux? C’est ne pas tuer; tuer engendre tous les péchés. 
பகுத்து உண்டு பல்லுயிர் ஓம்புதல், நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை. 322
கிடைத்ததைப் பகுத்துக்கொடுத்து தானும் உண்டு , பல உயிர்களையும் காப்பாற்றுதல் , அற நூலோர் தொகுத்துக்கூறிய அறங்கள் எல்லாவற்றிற்கும் தலையாய அறமாகும் .
எனது கருத்து:
மனுசனாப் பிறந்தால் கடைசி ஒருத்தனுக்காவது பிரையோசனமாய் இருக்கவேணும் கண்டியளோ . சிலபேற்றை வீட்டை போனியள் எண்டால் முழங்கையிலை பிடிச்ச…

இல்லறவியல் ஒழுக்கமுடைமை-The Possession of Decorum - La moralité .131 - 140.

அறத்துப்பால். இல்லறவியல் ஒழுக்கமுடைமை- The Possession of Decorum- La moralité-131-140.


ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும். 131
ஒழுக்கம் எப்போதும் மேன்மையைத் தருவதால் , அந்த ஒழுக்கமே உயிரினும் மேலானதாகப் போற்றப்படுகின்றது .
எனது கருத்து:
ஒருத்தருக்கு ஒழுக்கம் அக ஒழுக்கம் புற ஒழுக்கம் எண்டு ரெண்டு வகையாலுமே இருக்கவேணும் இருந்தால் மட்டும் காணாது அதை அவற்றை உயிரைவிட உயர்வாய் பேணிப் பாதுக்கவேணும் அதைத்தான் இந்தக் குறளும் சொல்லுது
Decorum' gives especial excellence; with greater care 'Decorum' should men guard than life, which all men share.
Puisque la moralité honore tous les hommes, il faut la conserver de préférence à la vie.
பரிந்துஓம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்துஓம்பித் தேரினும் அஃதே துணை. 132
வருந்தியேனும் ஒழுக்கத்தைப் போற்றிக் காக்கவேண்டும் . பலவற்றை ஆராய்ந்து பாரத்தாலும் ஒழுக்கமே உயிரிற்குத் துணையாகும் .
எனது கருத்து:
எப்பிடித்தான் பாத்தாலும் ஒழுக்கமாய் இருக்கிறதுதான் நல்லது ஆனால் அது அவ்வளவு லேசான விசையமில்லை அதுக்கு ஒருத்தர் கனக்க விலையள் குடுக்க …

அறத்துப்பால்-துறவறவியல்-நிலையாமை- Instability-De l’instabilité- 331-340.

அறத்துப்பால்-துறவறவியல்-நிலையாமை- Instability-De l’instabilité-331-340.


நில்லாத வற்றை நிலையின என்று உணரும் புல்லறி வாண்மை கடை. 331
நிலையில்லாதவற்றை நிலையானவை என்று எண்ணி மயங்குகின்ற புல்லறிவாண்மை ( அற்ப அறிவு )துறந்தார்க்கு இழிவாகும் .
எனது கருத்து :
ஒரு உயிரை உடம்புக்குளை கடவுள் விடேக்கை அதுக்கு ஒரு கால அளவை வைச்சுத்தான் விடுறார் . கொஞ்சக்காலத்தில அந்த உடம்பு இல்லாமல் போடும் . இது எங்களுக்கும் சரி இளையராசாவுக்கும் சரி ஒண்டுதான் . இதுகள் தெரியாமல் இந்த சனங்களுக்கை எவ்வளவு புடுங்குபாடுகள் குத்துபாடுகள் ?? இந்த அற்ப குணத்தாலை மனசிலை வளராத கூட்டங்களாய் இந்த சனங்கள் இருக்கிதுகள் .
Lowest and meanest lore, that bids men trust secure, In things that pass away, as things that shall endure!
C’est la dernière des sottises, que de croire que ce qui est instable est stable.
கூத்துஆட்டு அவைக்குழாத்து அற்றே பெருஞ்செல்வம் போக்கும் அதுவிளிந் துஅற்று. 332
பெருஞ் செல்வம் வந்து சேர்தல் கூத்தாடுமிடத்தில் கூட்டம் வந்து கூடுவதைப் போன்றது அது நீங்கிப் போதலும் கூத்து முடிந்ததும் கூட்டம் கலைவதைப் போன்றது
எனத…