Skip to main content

பொருட்பால் - அரசியல் - செங்கோன்மை ,540 -550)


பொருட்பால்-அரசியல்- செங்கோன்மை- The Right Sceptre -Manière de Gouverner-540-550. 


ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும்
தேர்ந்துசெய் வஃதே முறை. 541

நடுநிலை தவறாமல் யாரிடத்துதும் இரக்கம் காட்டாமல் குற்றத்தின் கடுமையை ஆராய்ந்து அதற்குத் தகுந்த தண்டனை விதிப்பதே அரசனுக்கு முறையாகும் .

எனது கருத்து :

இந்தக் கலி காலத்திலை இது எங்கை ஐயா நடக்குது நடு நிலைமை எண்டுறதே தங்கடை வசதிக்கு எத்த மாதிரி சொல்லுறதுதானே இப்ப நடக்குது இல்லாட்டில் ஒரு இடத்திலை தங்கடைநாட்டுக்கு விடுதலை போராடுறவங்களை பாத்து சுதந்திரப் போராளி எண்டு சொலுற அதே ஆள்தான் தனக்கு பிடிக்காத இன்னொருத்தனை பாத்து பயங்கரவாதி எண்டு சொல்லுறான். 

Search out, to no one favour show; with heart that justice loves
Consult, then act; this is the rule that right approves.

Connaître les infractions, les examiner sans parti pris, n'incliner ni d'un côté ni de l'autre désirer et tenir le juste milieu, délibérer avec les hommes de Loi, puis prononcer la son tence: voilà rendre la justice.

வான்நோக்கி வாழும் உலகுஎல்லாம் மன்னவன்
கோல்நோக்கி வாழும் குடி. 542

உலகத்து உயிர்கள் எல்லாம் மழையை எதிர்பார்த்து வாழும் அதேபோல குடிமக்கள் எல்லாம் அரசனுடைய சொங்கோலை நோக்கி வாழ்வார்கள்

எனது கருத்து :

மழை பெய்யிற நேரம் ஒருத்தரையும் பிரிச்சு பாத்து பெய்யிறேலை . நாட்டை ஆளுறவையும் குடிமக்களுக்கு நேர்மையான ஆட்சியைத் தரவேணும் எண்டு சொல்லுறியள் . நல்ல விசையம் . ஆனால் இப்ப இருக்கிற அரசர் எல்லாம் தங்கடை குடும்பம் பிள்ளை குட்டியளை நிமித்துறதிலை தான் தங்கடை நேரத்தை செலவளிக்கினமே ஒழிய நாட்டு சனங்கள் எக்கேடு கெட்டாலும் அவைக்கு பிரச்சனை இல்லை . அனால் இந்த தேர்தல் நேரத்திலை மட்டும் சனங்கள் எல்லாம் நீங்கள் சொன்ன மழை மாதிரி இருக்கவேணும் எண்டு இந்த அரசர்மார் நினைப்பினம் கண்டியளோ .

All earth looks up to heav'n whence raindrops fall;
All subjects look to king that ruleth all

Tous les êtres vivent, ayant le regard tourné vers les nuages chargés de pluie; ainsi tous les sujets vivent, ayant le regard tourné vers le sceptre du Roi.

அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
நின்றது மன்னவன் கோல். 543 


அந்தணரது மறை நூல்களுக்கும் உலகில் அறம் நிலைப்பதற்கும் அடிப்படையாய் நின்று உலகத்தைக் காப்பது அரசனுடையை செங்கோலாகும் 

எனது கருத்து :

" அரசன் எவ்வழியோ குடிமக்களும் அவ்வழி " எண்டு சொல்லுவினம் . ஒரு நாட்டிலை நிர்வாகதின்ரை தலைமை பொறுப்பிலை இருக்கிறவன் நியாயம் நீதியாய் நிர்வாகத்தை கொண்டு போனால் தான் அந்த நாட்டு சனங்களின்ரை வாழ்கை முறையும் ஒழுங்காய் இருக்கும் . ஆனால் இப்ப உள்ள நிலமையிலை கன அரசுகளிலை பேய் ஆட்சிதான் நடந்து கொண்டிருக்கு . அதுக்கு ஒரு நல்ல உதாரணம் எங்கடை சிறிலங்கா அரசு.

Learning and virtue of the sages spring, From all-controlling sceptre of the king.

Le sceptre du Prince est le support de la Religion étudiée par les bhrames et aussi de la vertu qu'elle enseigne.

குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன்
அடிதழீஇ நிற்கும் உலகு. 544

உலகம் குடிமக்களை அணைத்து நல்லாட்சி நடத்தும் தலைவனின் அடியைப் பின்பற்றி நடக்கும் .

எனது கருத்து :

இப்ப இருக்கிற உலகம் எங்கை தனக்கு லாபம் இருக்கோ அங்கைதான் முன்னுக்கு நிக்கும் அறம் நீதி நேர்மை எல்லாம் அதுக்குத் தெரியாது பெற்றொலுக்காக சதாமை போட்டதும் இந்த உலகம் தான் அபின் பயிர் செய்கையிலை முன்னணியிலை நிக்கிற அப்கானிஸ்தானை சுடுகாடாக்கினதும் இந்த உலகம் தான் உலகத்திலை நடந்த இரண்டாவது பெரிய இனப்படுகொலைக்குப் பின்னாலை நிண்டதும் இதே உலகம் தான் 

Whose heart embraces subjects all, lord over mighty land
Who rules, the world his feet embracing stands .

Le monde embrasse les pieds du Roi qui gouverne son vaste Etat, en protégeant ses sujets et en leur rendant la justice, et qui s'y tient.

இயல்புளிக் கோல்ஓச்சும் மன்னவன் நாட்ட
பெயலும் விளையுளும் தொக்கு. 545


நீதிநெறியில் அரசாளும் மன்னனுடைய நாட்டில் பருவமழையும் நிறைந்த விளைவும் ஒருங்கு கூடியிருக்கும் .

எனது கருத்து :

எனக்கு நீங்கள் சொல்லிற விசையம் விளங்கேலை இயற்கையாய் நடக்கிற மழைக்கும் விளைச்சலுக்கும் நீதி தப்பின அரசனுக்கும் என்ன சம்பந்தம் ?? அப்பிடி பாத்தால் இண்டைக்கு இலங்கை பாலைவனமாய் எல்லோ இருக்கவேணும் ஐயன் ??


Where king, who righteous laws regards, the sceptre wields, There fall the showers, there rich abundance crowns the fields .

Les pluies de saison et les riches moissons fertilisent ensemble l'Etat du Prince qui tient le sceptre (gouverne) selon les prescriptions de la Loi.
 
வேலன்று வென்றி தருவது மன்னவன்
கோலதூஉங் கோடா தெனின். 546

அரசனுக்கு வெற்றி தருவது அவனுடைய வேல் அன்று செங்கலேயாகும் அதுவும் அச்செங்கோல் வளைவிட்டால்த்தான் வெற்றி தரும் .

எனது கருத்து :

ஆயுதங்கள் வைச்சிருக்கிறதாலை தான் இண்டைக்கு ஐஞ்சு பேர் உலக பொலிஸ்காறர் . இவையள் வைச்சது தான் சட்டம் .அதுக்கு பிறகுதான் இந்த ஆறம் , நல்ல ஆட்சி சமாச்சாரங்கள். இண்டைக்கு ஆயுதம் இல்லாத அரசரை கால் தூசிக்கும் மதிக்கிறாங்கள் இல்லை ஐயன் .

Not lance gives kings the victory, But sceptre swayed with equity.

Ce qui procure la victoire au Prince sur le champ de bataille, ce n'est pas sa flèche, c'est plutôt son sceptre, pourvu qu'il se tienne droit et ne penche d'aucun côté.

இறைகாக்கும் வையகம் எல்லாம் அவனை
முறைகாக்கும் முட்டாச் செயின். 547

அரசன் உலகத்தையெல்லாம் காப்பாற்றுவான் நீதி தவறாமல் ஆட்சி செய்வானாயின் அரசனை அந்த ஆட்சி முறையே காப்பாற்றும்

எனது கருத்து :

அரசன் நீதி தவறி ஆட்சி செய்தாலும் இண்டைக்கு அந்த அரசனை காப்பாத்துறத்துக்கு ஆக்கள் இருக்கினம் கண்டியளோ . ஏனெண்டால் ஒரு கள்ளனை மற்றக் கள்ளன் காப்பாற்றுவான் எண்டது இப்பத்தையான் புதுக்குறள் ஐயன்.


The king all the whole realm of earth protects; And justice guards the king who right respects.

Le Roi protège tous ses sujets et c'est son sceptre qui le protège lui-même, si celui-ci ne sa heurte à aucun obstacle.

எண்பதத்தான் ஓரா முறைசெய்யா மன்னவன்
தண்பதத்தான் தானே கெடும். 448

மக்கள் தங்கள் குறைகளைச் சொல்வதற்கு நேரில் காணமுடியாதவனாகவும் , சரியாக ஆராயாமல் தீர்ப்பு வழங்குபவனாகவும் உள்ள ஆட்சியாளன் , பகைவரின்றியே தானே தாழ்ந்த நிலையடைந்து கெடுவான் .

எனது கருத்து :

அப்படி ஆர் அழிந்சிருக்கினம் சொல்லுங்கோ . நீங்கள் சொல்லுறபடி பாத்தால் இண்டைக்கு இலங்கையிலை இருக்கிற அரசர்மார் உயிரோடை இருக்கேலாது . ஆனால் இருக்கினமே... எப்பிடி ஐயன் ??

Hard of access, nought searching out, with partial hand
The king who rules, shall sink and perish from the land.

Le Prince dont. les justiciables n'ont pas l'oreille et qui ne rend pas la justice après information et délibération, règne honteusement et se perd lui-même.

குடிபுறம் காத்துஓம்பிக் குற்றம் கடிதல்
வடுஅன்று வேந்தன் தொழில். 449 

குடிமக்களைப் பிறர் வருத்தாமல் காத்து தானும் வருத்தாமல் காப்பாற்றி அவர்களுடைய குற்றங்களைத் தண்டனையால் ஒழித்தல் அரசனுடைய தொழிலாகும் ; அது பழியன்று .

எனது கருத்து :

ஏன் ஐயன் அளாப்பி எழுதுறியள் ?? நீங்கள் சொல்லுறபடி பாத்தால் இலங்கையிலை இருக்கிற அரசர்மார் எல்லாம் தங்கக் கம்பியள் எண்டு சொல்லுறியள் . இந்த அரசர்மார் போர்குற்றங்கள் செய்யாத சுத்தவானுகள் , இவைதரவழி கோட்டுவாசல் படியே மிதிக்க கூடாது எண்டு சொல்லுறியள் . நீங்கள் நல்லாய் இருப்பியள் .

Abroad to guard, at home to punish, brings No just reproach; 'tis work assigned to kings.

Protéger ses sujets contre leurs ennemis et ne pas les opprimer, punir les coupables: c'est la fonction du Roi et ce n'est pas exercer la vengeance.

கொலையின் கொடியாரை வேந்துஒறுத்தல் பைங்கூழ்
களைகட் டுஅதனொடு நேர். 550

கொடியவரைக் கொலைத் தண்டனையால் தண்டித்தும் மற்றவர்களை அருளோடு காத்தும் முறை செய்தல் பசுமையான பயிரில் களையெடுப்பது போன்ற சிறந்த செயலாகும் .

எனது கருத்து :

இதே பிளேட்டை மக்கள் அரசனுக்கு திருப்பி விட்டால் ??? நீங்களே யோசியுங்கோ .........

By punishment of death the cruel to restrain, Is as when farmer frees from weeds the tender grain.

Le fait par le Roi de punir de mort les criminels est identique au fait du cultivateur qui arrache les mauvaises herbes pour fortifier ses cultures.
Comments

Popular posts from this blog

அறத்துப்பால்- துறவறவியல்- கொல்லாமை-Not killing- Ne pas tuer- 321-330.

அறத்துப்பால்-துறவறவியல்-கொல்லாமை-Not killing-Ne pas tuer-321-330.


அறவினை யாதெனில் கொல்லாமை கோறல் பிறவினை எல்லாம் தரும். 321
அறச்செயல் எதுவென்றால் எந்த ஓர் உயிரையும் கொல்லாத செயலே . அவ்வாறு கொல்லுதல் பிறதீவினைகளை எல்லாம் தானே கொண்டுவரும்.
எனது கருத்து:
நியாயமான சீவியம் எண்டால் மற்றவனைப் போடுத்தள்ளாமல் இருக்கிறதுதான் அப்பிடி போட்டுத்தள்ள வெளிக்கிட்டால் பாருங்கோ சொந்தச் செலவிலை சூனியம் செய்யவேண்டிவரும் உதாரணத்திக்கு ஏன் வெளியாலை போவான் நம்மடை மகிந்து
What is the work of virtue? 'Not to kill'; For 'killing' leads to every work of ill. 
Qu’est ce que l’acte vertueux? C’est ne pas tuer; tuer engendre tous les péchés. 
பகுத்து உண்டு பல்லுயிர் ஓம்புதல், நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை. 322
கிடைத்ததைப் பகுத்துக்கொடுத்து தானும் உண்டு , பல உயிர்களையும் காப்பாற்றுதல் , அற நூலோர் தொகுத்துக்கூறிய அறங்கள் எல்லாவற்றிற்கும் தலையாய அறமாகும் .
எனது கருத்து:
மனுசனாப் பிறந்தால் கடைசி ஒருத்தனுக்காவது பிரையோசனமாய் இருக்கவேணும் கண்டியளோ . சிலபேற்றை வீட்டை போனியள் எண்டால் முழங்கையிலை பிடிச்ச…

இல்லறவியல் ஒழுக்கமுடைமை-The Possession of Decorum - La moralité .131 - 140.

அறத்துப்பால். இல்லறவியல் ஒழுக்கமுடைமை- The Possession of Decorum- La moralité-131-140.


ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும். 131
ஒழுக்கம் எப்போதும் மேன்மையைத் தருவதால் , அந்த ஒழுக்கமே உயிரினும் மேலானதாகப் போற்றப்படுகின்றது .
எனது கருத்து:
ஒருத்தருக்கு ஒழுக்கம் அக ஒழுக்கம் புற ஒழுக்கம் எண்டு ரெண்டு வகையாலுமே இருக்கவேணும் இருந்தால் மட்டும் காணாது அதை அவற்றை உயிரைவிட உயர்வாய் பேணிப் பாதுக்கவேணும் அதைத்தான் இந்தக் குறளும் சொல்லுது
Decorum' gives especial excellence; with greater care 'Decorum' should men guard than life, which all men share.
Puisque la moralité honore tous les hommes, il faut la conserver de préférence à la vie.
பரிந்துஓம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்துஓம்பித் தேரினும் அஃதே துணை. 132
வருந்தியேனும் ஒழுக்கத்தைப் போற்றிக் காக்கவேண்டும் . பலவற்றை ஆராய்ந்து பாரத்தாலும் ஒழுக்கமே உயிரிற்குத் துணையாகும் .
எனது கருத்து:
எப்பிடித்தான் பாத்தாலும் ஒழுக்கமாய் இருக்கிறதுதான் நல்லது ஆனால் அது அவ்வளவு லேசான விசையமில்லை அதுக்கு ஒருத்தர் கனக்க விலையள் குடுக்க …

அறத்துப்பால்-துறவறவியல்-நிலையாமை- Instability-De l’instabilité- 331-340.

அறத்துப்பால்-துறவறவியல்-நிலையாமை- Instability-De l’instabilité-331-340.


நில்லாத வற்றை நிலையின என்று உணரும் புல்லறி வாண்மை கடை. 331
நிலையில்லாதவற்றை நிலையானவை என்று எண்ணி மயங்குகின்ற புல்லறிவாண்மை ( அற்ப அறிவு )துறந்தார்க்கு இழிவாகும் .
எனது கருத்து :
ஒரு உயிரை உடம்புக்குளை கடவுள் விடேக்கை அதுக்கு ஒரு கால அளவை வைச்சுத்தான் விடுறார் . கொஞ்சக்காலத்தில அந்த உடம்பு இல்லாமல் போடும் . இது எங்களுக்கும் சரி இளையராசாவுக்கும் சரி ஒண்டுதான் . இதுகள் தெரியாமல் இந்த சனங்களுக்கை எவ்வளவு புடுங்குபாடுகள் குத்துபாடுகள் ?? இந்த அற்ப குணத்தாலை மனசிலை வளராத கூட்டங்களாய் இந்த சனங்கள் இருக்கிதுகள் .
Lowest and meanest lore, that bids men trust secure, In things that pass away, as things that shall endure!
C’est la dernière des sottises, que de croire que ce qui est instable est stable.
கூத்துஆட்டு அவைக்குழாத்து அற்றே பெருஞ்செல்வம் போக்கும் அதுவிளிந் துஅற்று. 332
பெருஞ் செல்வம் வந்து சேர்தல் கூத்தாடுமிடத்தில் கூட்டம் வந்து கூடுவதைப் போன்றது அது நீங்கிப் போதலும் கூத்து முடிந்ததும் கூட்டம் கலைவதைப் போன்றது
எனத…