Skip to main content

பொருட்பால் -அரசியல் -இடன் அறிதல்-Knowing the Place- Du discernement du terrain-490 -500.


பொருட்பால்-அரசியல்-இடன் அறிதல்-Knowing the Place-Du discernement du terrain.தொடங்கற்க எவ்வினையும் ; எள்ளற்க முற்றும் 
இடம்கண்ட பின்அல் லது.491

பகைவரை வளைத்தற்குத் (முற்றுகையிடுவதற்கு) தகுந்த இடத்தைத் தெரிந்து கொண்டாலன்றி எத்தொழிலையும் தொடங்கக் கூடாது . அவர் வலிமையற்ற சிறியர் என்று இகழவும் கூடாது .

எனது கருத்து :

இந்த " இடம் " எண்டிற சாமான் எவ்வளவு தூரம் ஒருத்தனை கவிண்டுகொட்டுண வைக்கும் எண்டு சதாம் விசையத்திலை பாத்தன் . ஒழுங்காய் அமெரிக்காவுக்கு தண்ணி காட்டி கொண்டிருந்த சதாம் , சும்மா கிடக்காமல் பக்கத்திலை இருந்த குவைத்துக்குள்ளை காலை வைக்கைப்போய் , கடைசியிலை அந்தாளே பங்கருக்குள்ளை இருக்கவேண்டியதாய் போச்சுது .

Begin no work of war, depise no foe, Till place where you can wholly circumvent you know.

Ne rien commencer avant d'avoir trouvé le terrain où (l’ennemi) puisse être enveloppé ! Ne pas le dédaigner !

முரண்சேர்ந்த மொய்ம்பி ன்அவர்க்கும் 
அரண்சேர்ந்தாம் ஆக்கம் பலவும் தரும்.492

பகைவரைக்காட்டிலும் வலிமையுள்ள அரசர்க்கும் தக்க காவலையுடைய இடத்தை அடைதல் பல நலன்களை உண்டாக்கும் 

எனது கருத்து:

ஒருத்தர் கேம் கேட்டால் அதை வெட்டியாடிற தில் உங்களுக்கு இருந்தாலும் , இடம் பாத்து அடிச்சால் ஆள் அரக்காது . இல்லாட்டில் உங்களுக்கு ஏழரைச்சனிதான் . இதைத்தான் எங்கடை பெரிசுகள் பருவத்தே பயிர் செய் எண்டும் சொல்லியிரிக்கினம் .

Though skill in war combine with courage tried on battle-field, The added gain of fort doth great advantage yield.

A l'armée dont la force est dissimulée (à l'ennemi), l'appui d'une place fortifiée donne de nombreux avantages.

ஆற்றாரும் ஆற்றி அடுப இடனறிந்து 
போற்றார்கண் போற்றிச் செயின்.493

பகைவரை வெல்லுதற்கேற்ற இடத்தை அறிந்து தம்மைப் பாதுகாத்துக் கொண்டு, போர்த் தொழிலைச் செய்தால் , வலிமை இல்லாதவரும் வலிமையடைந்து வெற்றி பெறுவர் .

எனது கருத்து :

இதுக்கு செரியான உதாரணம் உலகத்திலை இருக்கிற விடுதலை இயக்கங்களின்ரை போராட்ட முறையான கெரில்லாத் தாக்குதல்தான் . குறைஞ்ச மனிதவளத்தோடை இடம்பாத்து அடிக்கிறது . அதிலை நாங்கள் மாஸ்ரர் டிக்கிறி செய்தனாங்கள் கண்டியளோ.

E'en weak ones mightily prevail, if place of strong defence, They find, protect themselves, and work their foes offence.

Même une faible armée acquiert la force de vaincre, si elle se fait protéger et combat l'ennemi sur unterrain reconnu propice.

எண்ணியார் எண்ணம் இழப்பர் இடனறிந்து 
துன்னியார் துன்னிச் செயின். 494

பாதுகாப்பாயுள்ள இடத்தைப் பொருந்தி நின்று போர் செய்வாராயின் , அவரை வெல்ல எண்ணியிருந்த பகைவர் தம் எண்ணத்தைக் கைவிடுவர் .

எனது கருத்து :

ஒருத்தரை அடிக்கமுதல் அவற்றை வேலையளை புலன்ஆய்வு செய்து முற்றுகை இட்டால் ஆள் சரண்டர் ஆகவேண்டியதுதான் .

The foes who thought to triumph, find their thoughts were vain, If hosts advance, seize vantage ground, and thence the fight maintain.

Les Rois) qui ont choisi leur position et attaquent, couverts par une place fortifiée, font perdre à l'ennemi, l'espoir de vaincre.

நெடும்புனலுள் வெல்லும் முதலை; 
அடும்புனலின் நீங்கின் அதனைப் பிற.495

முதலை ஆழமுள்ள நீர்நிலையில் பிற உயிர்களை வெற்றி கொள்ளும் .அந்நீர் நிலையை விட்டு அது நீங்குமாயின் அம்முதலையையை பிற உயிர்கள் வென்று விடும்.

எனது கருத்து:

உண்மைதான் கண்டியளோ . உலகத்திலை இருக்கிற சர்வாதிகாரியளுக்கு அவையின்ரை அடிபொடியள்தான் பலம் . எங்கை ஒருநாள் சனத்தோடை சனமாய் நிக்கச்சொல்லுங்கோ , அடிச்சே கொண்டுபோடுவங்கள் , கொலனல் கடாபிக்கு நடந்தமாதிரி .

The crocodile prevails in its own flow of water wide, If this it leaves, 'tis slain by anything beside.

Dans une eau profonde, le crocodile triomphe de tous (les êtres vivants); s'il s'en écarte (tous les êtres vivants) ont raison de lui.

கடல்ஓடாக் கால்வல் நெடுந்தேர்; கடல்ஓடும் 
நாவாயும் ஓடா நிலத்து. 496

நிலத்தில் இயங்கும் வலிமையான சக்கரங்களையுடைய தேர்கள் கடலில் ஓடமாட்டா; கடலில் ஓடும் கப்பல்கள் பூமியில் ஓடமாட்டா .

எனது கருத்து :

புகழ் எண்ட போதையிலை கற்பனையான விசயத்தை உண்மை எண்டும் , உண்மையான விசயத்தை கற்பனை எண்டும் முடிவுகட்டி , காரியத்திலை இறங்கி கவிண்டு கொட்டுண்டு போன ஆக்களை நான் கன இடத்திலை பாத்திருக்கிறன் .

The lofty car, with mighty wheel, sails not o'er watery main,The boat that skims the sea, runs not on earth's hard plain.

Les grands chars qui ont des roues puissantes pour rouler sur terre pleine ne peuvent rouler sur l'océan, de même les vaisseaux qui parcourent la mer ne peuvent voyager sur terre.

அஞ்சாமை அல்லால் துணைவேண்டா, எஞ்சாமை எண்ணி இடத்தால் செயின். 497

குறைவற ஆராய்ந்து, தமக்கு ஏற்ற இடத்தோடு பொருந்தச் செய்வாராயின் அரசர்க்குத் தமது மனத்திண்மையே அன்றி வேறு துணை வேண்டுவதில்லை .

எனது கருத்து :

இது ஒருவகையிலை ஒருத்தரை பப்பாவிலை ஏத்திறமாதிரி . ஏனெண்டால் ஒருத்தரை விழுத்த அஞ்சாமை எண்டிற பயப்பிடாத குணம் மட்டும் காணாது . கடைசிவரை உயிரைகொடுக்கிற படைத்தளபதியள் வேணும் . அவையளை எதிரி விலைக்கு வாங்கீட்டால் கதை கந்தல் கண்டியளோ .

Save their own fearless might they need no other aid, If in right place they fight, all due provision made.

Celui qui engage la bataille, après avoir arrêté son plan sur tous les moyens de combattre l'ennemi et avoir bien choisi ses positions, n'a pas besoin de secours autre que sa propre valeur.

சிறுபடையான் செல்லிடம் சேரின் உறுபடையான் 
ஊக்கம் அழிந்து விடும். 498

பகைவன் சிறுபடையுடையவனாயினும் தக்க இடத்தில் பொருந்தியிருந்தால் பெரும்படையுடைய அரசன் தன் முயற்சியில்தோல்வியடைவான் .

எனது கருத்து :

இந்தக் குறள் இந்தக்காலத்திலை எடுபடாது . எப்பிடியெண்டால் நாங்கள் சிங்களத்தோடை ஒப்பீட்டளவிலை சிறிய படைதான் . ஏன் வெல்லாமல் போனம் ?? ஏனெண்டால் இண்டைக்கு உலகம் எண்டது கிராமமாய் போச்சுது .

If lord of army vast the safe retreat assail Of him whose host is small, his mightiest efforts fail.

Celui qui a une puissante armée, s'il va combattre chez lui un roi, qui n'a qu'une faible armée, perd sa réputation, grâce à celui-ci.

சிறைநலனும் சீரும் இலர்எனினும் மாந்தர்
உறைநிலத்தோடு ஒட்டல் அரிது. 499

அரணின் வலிமையும் ஆற்றலும் இல்லாதவராயினும் அம்மாந்தரை அவர்கள் வாழுகின்ற இடத்தில் சென்று தாக்குதல் இயலாது .

எனது கருத்து:

சிவசத்தியமாய் ஐயன் என்ன சொல்ல வாறியள் ??? போரியலிலை அரிச்சுவடியே சிங்கத்தின்ரை குகைக்குள்ளை போய் ஹாய் மச்சான் எண்டு கேக்கிறதுதானே போர் ?? நிண்ட இடத்திலை நிண்டு கொண்டு எப்பிடி ஐயன் போர் செய்யிறது?

Though fort be none, and store of wealth they lack, 'Tis hard a people's homesteads to attack!

Il est difficile d'attaquer chez elles, des troupes ennemies, même si elles n'ont pas la force de résister et une fortresse indestructible.

கால்ஆழ் களரில் நரிஆடும் ; கண்ணஞ்சா 
வேல்ஆள் முகத்த களிறு. 500

வேல் வீரர்களைக் கண்டு அஞ்சமால் எதிர் நின்று தாக்கியழித்த யானையாயினும், கால் அழுந்தி விடும் சேற்று நிலத்தில் அது சிக்கிக்கொண்டால் அதனை நரியும் கொன்று விடும் .

எனது கருத்து :

யானை ஏலாமல் படுத்திருந்தால் சுண்டெலியும் யானைக்கு கிட்டப் போய் ரெண்டு கடி கடிச்சு , ஹவ் யூ மச்சான் எண்டு கேக்குமாம் .

The jackal slays, in miry paths of foot-betraying fen, The elephant of fearless eye and tusks transfixing armed men.

L'éléphant fougueux qui n'obéit pas à son connac et fait intrépidement face à une multitude armée de javelles, est à la merci d'un chacal, s'il s'enfonce dans un terrain bourbeux.

Comments

Popular posts from this blog

அறத்துப்பால்- துறவறவியல்- கொல்லாமை-Not killing- Ne pas tuer- 321-330.

அறத்துப்பால்-துறவறவியல்-கொல்லாமை-Not killing-Ne pas tuer-321-330.


அறவினை யாதெனில் கொல்லாமை கோறல் பிறவினை எல்லாம் தரும். 321
அறச்செயல் எதுவென்றால் எந்த ஓர் உயிரையும் கொல்லாத செயலே . அவ்வாறு கொல்லுதல் பிறதீவினைகளை எல்லாம் தானே கொண்டுவரும்.
எனது கருத்து:
நியாயமான சீவியம் எண்டால் மற்றவனைப் போடுத்தள்ளாமல் இருக்கிறதுதான் அப்பிடி போட்டுத்தள்ள வெளிக்கிட்டால் பாருங்கோ சொந்தச் செலவிலை சூனியம் செய்யவேண்டிவரும் உதாரணத்திக்கு ஏன் வெளியாலை போவான் நம்மடை மகிந்து
What is the work of virtue? 'Not to kill'; For 'killing' leads to every work of ill. 
Qu’est ce que l’acte vertueux? C’est ne pas tuer; tuer engendre tous les péchés. 
பகுத்து உண்டு பல்லுயிர் ஓம்புதல், நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை. 322
கிடைத்ததைப் பகுத்துக்கொடுத்து தானும் உண்டு , பல உயிர்களையும் காப்பாற்றுதல் , அற நூலோர் தொகுத்துக்கூறிய அறங்கள் எல்லாவற்றிற்கும் தலையாய அறமாகும் .
எனது கருத்து:
மனுசனாப் பிறந்தால் கடைசி ஒருத்தனுக்காவது பிரையோசனமாய் இருக்கவேணும் கண்டியளோ . சிலபேற்றை வீட்டை போனியள் எண்டால் முழங்கையிலை பிடிச்ச…

இல்லறவியல் ஒழுக்கமுடைமை-The Possession of Decorum - La moralité .131 - 140.

அறத்துப்பால். இல்லறவியல் ஒழுக்கமுடைமை- The Possession of Decorum- La moralité-131-140.


ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும். 131
ஒழுக்கம் எப்போதும் மேன்மையைத் தருவதால் , அந்த ஒழுக்கமே உயிரினும் மேலானதாகப் போற்றப்படுகின்றது .
எனது கருத்து:
ஒருத்தருக்கு ஒழுக்கம் அக ஒழுக்கம் புற ஒழுக்கம் எண்டு ரெண்டு வகையாலுமே இருக்கவேணும் இருந்தால் மட்டும் காணாது அதை அவற்றை உயிரைவிட உயர்வாய் பேணிப் பாதுக்கவேணும் அதைத்தான் இந்தக் குறளும் சொல்லுது
Decorum' gives especial excellence; with greater care 'Decorum' should men guard than life, which all men share.
Puisque la moralité honore tous les hommes, il faut la conserver de préférence à la vie.
பரிந்துஓம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்துஓம்பித் தேரினும் அஃதே துணை. 132
வருந்தியேனும் ஒழுக்கத்தைப் போற்றிக் காக்கவேண்டும் . பலவற்றை ஆராய்ந்து பாரத்தாலும் ஒழுக்கமே உயிரிற்குத் துணையாகும் .
எனது கருத்து:
எப்பிடித்தான் பாத்தாலும் ஒழுக்கமாய் இருக்கிறதுதான் நல்லது ஆனால் அது அவ்வளவு லேசான விசையமில்லை அதுக்கு ஒருத்தர் கனக்க விலையள் குடுக்க …

அறத்துப்பால்-துறவறவியல்-நிலையாமை- Instability-De l’instabilité- 331-340.

அறத்துப்பால்-துறவறவியல்-நிலையாமை- Instability-De l’instabilité-331-340.


நில்லாத வற்றை நிலையின என்று உணரும் புல்லறி வாண்மை கடை. 331
நிலையில்லாதவற்றை நிலையானவை என்று எண்ணி மயங்குகின்ற புல்லறிவாண்மை ( அற்ப அறிவு )துறந்தார்க்கு இழிவாகும் .
எனது கருத்து :
ஒரு உயிரை உடம்புக்குளை கடவுள் விடேக்கை அதுக்கு ஒரு கால அளவை வைச்சுத்தான் விடுறார் . கொஞ்சக்காலத்தில அந்த உடம்பு இல்லாமல் போடும் . இது எங்களுக்கும் சரி இளையராசாவுக்கும் சரி ஒண்டுதான் . இதுகள் தெரியாமல் இந்த சனங்களுக்கை எவ்வளவு புடுங்குபாடுகள் குத்துபாடுகள் ?? இந்த அற்ப குணத்தாலை மனசிலை வளராத கூட்டங்களாய் இந்த சனங்கள் இருக்கிதுகள் .
Lowest and meanest lore, that bids men trust secure, In things that pass away, as things that shall endure!
C’est la dernière des sottises, que de croire que ce qui est instable est stable.
கூத்துஆட்டு அவைக்குழாத்து அற்றே பெருஞ்செல்வம் போக்கும் அதுவிளிந் துஅற்று. 332
பெருஞ் செல்வம் வந்து சேர்தல் கூத்தாடுமிடத்தில் கூட்டம் வந்து கூடுவதைப் போன்றது அது நீங்கிப் போதலும் கூத்து முடிந்ததும் கூட்டம் கலைவதைப் போன்றது
எனத…