Skip to main content

Posts

Showing posts from February, 2013

பொருட்பால் - அரசியல் - குற்றம் கடிதல்- The Correction of Faults - De la repression des défauts -431-440.

பொருட்பால்-அரசியல்-குற்றம் கடிதல்-The Correction of Faults-De la repression des défauts-431 -440. 
செருக்கும் சினமும் சிறுமையும் இல்லார்  பெருக்கம் பெருமித நீர்த்து. 431 
ஆணவமும் ( மதமும் ) , வெகுளியும் , அற்பத்தன்மையும் ஆகிய குற்றங்கள் இல்லாத அரசரது செல்வம் மேம்பாட்டுத் தன்மையை உடையது .
எனது கருத்து:
ஒருத்தர் எப்பிடியும் செல்வாக்காய் இருக்கலாம் . ஆனால் அவருக்கு மண்டைக்கனம் , தொட்டதுக்கெல்லாம் சுடுதண்ணி ஊத்தின நாய் மாதிரி கோபப்படுகிறது , பொம்பிளை விசயங்களிலை அப்பிடி இப்பிடி இருக்கிறது , இவ்வளவும் இருந்தால் அவற்றை செல்வாக்கு செல்லாக்காசாய் போடும் பாருங்கோ .
Who arrogance, and wrath, and littleness of low desire restrain,  To sure increase of lofty dignity attain. 
la prospérité (du Roi) qui n'a pas d'arrogance, de colère et de luxure, va en florissant.
இவறலும் மாண்புஇறந்த மானமும் மாணா  உவகையும் ஏதம் இறைக்கு. 432
ஈயாத லோபமும் , மாட்சியில்லாத மானவுணர்வும் , தகுதியில்லாத மகிழ்ச்சியும் அரசனுக்குக் குற்றமாகும் . 
எனது கருத்து: 
நீங்கள் சிலபேரை பாத்தியள் எண்டால் , தனக்கு சகுனப்பிழைய…

பொருட்பால் - அரசியல் - அறிவுடைமை-The Possession of Knowledge -De l'entendement- 421 -430.

பொருட்பால்-அரசியல்-அறிவுடைமை-The Possession of Knowledge-De l'entendement-421-430. அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும்  உள்ளழிக்க லாகா அரண். 421
அறிவு என்பது அழிவு வராமல் காக்கும் கருவியாகும் , மற்றும் பகைவரால் அழிக்கமுடியாத உள் அரணும் ( கோட்டை ) ஆகும்.
எனது கருத்து :
இதிலை வாழ்க்கைப் படிப்பும் ஏட்டுப்படிப்பும் ஒருத்தனுக்கு சேந்து இருந்தால் தான் , தன்னை சுத்தி இருக்கிற நல்லது கெட்டதுகளை அறியேலும் . தனிய ஏட்டுப் படிப்பு இருந்தால் அவன் படிச்ச கோமாளி . அவனுக்கு வலு சிம்பிளாய் ஆப்பு அடிக்கலாம் .
True wisdom wards off woes, A circling fortress high; Its inner strength man's eager foes Unshaken will defy. 
L'entendement est l'arme qui protège contre la ruine, la forteresse que les ennemis ne peuvent prendre d'assaut.
சென்ற இடத்தால் செலவிடா தீதொரீஇ  நன்றின்பால் உய்ப்ப தறிவு. 422 
மனத்தை அதுபோன போக்கில் போகவிடாமல் தடுத்து , தீமைகளிலிருந்து விலக்கி , நன்மையில் செல்ல விடுவதே அறிவாகும் . 
எனது கருத்து : 
இதை எங்கடை பெரிசுகள் " மதி இழந்தாலும் மந்தி கொப்பிழக்காது &qu…

பொருட்பால் - அரசியல் - கேள்வி-Hearing- De l'audition-411 - 420.

பொருட்பால் - அரசியல் - கேள்வி-Hearing-De l'audition-411-420.
செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வம்  செல்வத்து ளெல்லாந் தலை. 411
கேள்விச் செல்வமே மற்றையெல்லாச் செல்வங்களிலும் உயர்வானது . ஆதலால் ஒருவனுக்குச் செல்வங்களில் எல்லாவற்றிலும் சிறந்த செல்வம் காதால் கேட்டறியும் கேள்விச் செல்வமேயாகும் .
எனது கருத்து:
இண்டையான் நிலமையிலை இந்தசெல்வத்தை பாக்கிறது கஸ்ரம் . எல்லாத்துக்கும் ஆதாரம் கேக்கிற காலம் இப்ப . என்னைப் பொறுத்தவரையில ஒரு செய்தியை அனுபவப்பட்டவன் சொன்னால் கேக்கவேணும் . ஆனால் நானா நீயா அறிவிலை பெரிசு எண்ட ஈகோவால இந்த செல்வம் அல்லாடி, பெரிசாய் எடுபடுறேலை பாருங்கோ .
Wealth of wealth is wealth acquired be ear attent; Wealth mid all wealth supremely excellent. 
La richesse des richesses est celle de l'oreille.  Elle est la première de toutes les richesses.
செவுக்குண வில்லாத போழ்து சிறிது  வயிற்றுக்கும் ஈயப் படும். 412 
காதுகளுக்கு உணவாகிய கேள்வி அறிவு கிட்டாத சமயத்தில் , வயிற்றுக்கும் சிறிதளவு உணவு அளிக்க வேண்டும் . 
எனது கருத்து: 
இதை அவசியம் அத்தியாவசியம் எண்ட கோணத்தி…