Skip to main content

Posts

Showing posts from January, 2013

பொருட்பால் - அரசியல் - கல்வி -Learning -De l’Instruction- 391 -400.

பொருட்பால் - அரசியல் - கல்வி -Learning -De l’Instruction.




கற்க கசடுஅறக் கற்பவை கற்றபின்  நிற்க அதற்குத் தக. 391
ஒருவன் கற்றற்குரிய நூல்களை ஐயம் திரிபு ஆகிய குற்றங்கள் நீங்கக் கற்கவேண்டும் அங்கனம் கற்றபிறகு அவை கூறிய ஒழுக்க நெறியில் வழுவாது ஒழுக வேண்டும் 
எனது கருத்து :
ஐயா ஒருத்தன் எல்லா காலத்திலையும் படிக்கிறான் . ஒரு காலத்திலை பூமி தட்டை எண்டு அவன் படிச்ச கல்வி சொல்லீச்சுது . கொஞ்சக்காலம் போக இல்லை பூமி உறுண்டை எண்டு அதே கல்வி சொல்லீச்சுது . அப்பிடி பாத்தால் கல்வி கற்றல் எண்டதே மாறுகின்ற விசையம்தானே ?? இந்த கல்வியில் " ஏன் " " எப்பிடி" எண்ட கேள்வியள் வந்ததாலைதானே இண்டைக்கு இவ்வளவு தூரத்துக்கு முன்னேறினம் .
So learn that you may full and faultless learning gain, Then in obedience meet to lessons learnt remain. 
Etudiez (les ouvrages). Etudiez-les de maniêre à détruire les doutes injustes. A près les avoir étudiés, conformez votre conduite à leur doctrine. 
எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்  கண்ணென்ப வாழும் உயிர்க்கு.. 392 
எண் என்று சொல்லப்படுவனவும் , எழுத்து…

பொருட்பால் - அரசியல் - கல்லாமை - Ignorance -Du Défaut d'Instruction- 401- 410.

பொருட்பால் - அரசியல் - கல்லாமை-Ignorance-Du Défaut d'Instruction-401-410. 











அரங்குஇன்றி வட்டுஆடி அற்றே நிரம்பிய  நூல்இன்றிக் கோட்டி கொளல். 401
நிரம்பிய நூல் அறிவு இல்லாமல் ஒருவன் அறிவுடையோர் சபையில் சென்று பேசுதல், அரங்கம் இல்லாமல் வட்டாடுதல் போன்றதற்கு ஒப்பாகும்.
எனது கருத்து:
இதைத்தான் ஆழம் அறிஞ்சு காலை விடவேணும் எண்டு சொல்லுவினம் . ஒரு இடத்திலை ஒருவிசையத்தை பத்திக் கதைக்கவேணுமெண்டால் அதுசம்பந்தமய் சரியா தெரியவேணும். ஆனால் இந்த குப்பையில கிடக்கிற குண்டுமணி போலை இருக்கிற அறிவாளியளை எந்தவகையிலை சேர்க்கிறது ?? அவை எந்தப் புத்தகத்தை படிச்சவை ??
Like those at draughts would play without the chequered square, Men void of ample lore would counsels of the learned share.
Discourir dans une réunion, sans avoir une instruction pleine et entière, c'est jouer aux dés sans damier.
கல்லாதான் சொற்கா முறுதல் முலைஇரண்டும் இல்லாதாள் பெண்காமுற்றுஅற்று. 402
கல்லாதவன் தானும் அவையில் பேசவேண்டும் என்று விரும்புதல் , இரண்டு முலைகளும் இல்லாத ஒருத்தி பெண்மையை விரும்பியது போலாகும்
எனது கருத்து:
ஐயன் இதி…