Skip to main content

Posts

Showing posts from 2012

பொருட்பால் - அரசியல் - இறைமாட்சி-The Greatness of a King -Des qualités du Roi-380-381.

பொருட்பால் - அரசியல் - இறைமாட்சி- The Greatness of a King-Des qualités du Roi-380-390. 

படைகுடி கூழ்அமைச்சு நட்பு அரண் ஆறும் உடையான் அரசருள் ஏறு. 381
படையும், செல்வமும், கூழும்,( குடிமக்கள் )அமைச்சும் , நட்பும் , அரணும் ,(கோட்டை) என்று சொல்லப்பட்ட ஆறு உறுப்புகளையும் உடையவன் அரசருள் ஆண்சிங்கம் போன்றவன்.
என்கருத்து:
வீரம் மிக்க படை, நாட்டுப்பற்று மிக்க மக்கள், எடுக்கக் குறையாத செல்வம், நாட்டின் நலம் அறிந்து செயல்படும் அமைச்சர், துன்பத்தில் உதவும் அண்டை மாநில நட்பு, அழிக்கமுடியாத காவல் இந்த ஆறு விசையதிலையும் ஒரு அரசு முழுமையாய் இருந்தால் தான் அது ஒழுங்கான அரசு எண்டு ஐயன் சொன்னாலும் , இந்த அரசுகளுக்கு கோமாளியள் அல்லோ ஐயா அரசர்மாராய் வாறாங்கள் . அரசரும் மண்டையுக்கை சரக்கு இருக்கிற அரசர் வந்தால்தானே அரசும் ஒழுங்காய் இருக்கும் .
An army, people, wealth, a minister, friends, fort: six things- Who owns them all, a lion lives amid the kings.
C’est un lion parmi les Rois, que celui qui est doté des six choses suivantes : armée, territoire peuplé, richesse, ministre, alliance et fortresse.
அஞ்சா…

அறத்துப்பால்-துறவறவியல்-அவா அறுத்தல் -The Extirpation of Desire-L'extirpation du désir- 360 - 370.

அறத்துப்பால்-துறவறவியல்-அவா அறுத்தல் The Extirpation of Desire-L'extirpation du désir-360-370.

அவாஎன்ப எல்லா உயிர்க்கும் எஞ் ஞான்றும் தவாஅப் பிறப்புஈனும் வித்து. 361
எல்லா உயிர்களுக்கும் எக்காலத்திலும் தொடர்ந்து வருகின்ற பிறவி என்னும் துன்பத்தைத் தருகின்ற வித்து அவா என்று கூறுவர் .
என்கருத்து :
வயசானவை உயிர் போறநேரத்திலை சேடம் இழுத்துக் கொண்டு இருப்பினம் . எங்கடை பெரிசுகள் சொல்லுவினம் ஏதாவது முடியாத ஆசையள் இருக்கும் பாலை ஊத்திவிடுங்கோ எண்டு . மனிசனிலை இருக்குற ஆசையள் எண்ட விதை தானாம் திரும்பவும் ஒருத்தரை பிறக்கப்பண்ணும் எண்டு படிச்ச பெரியாக்கள் சொல்லுவினம்.
The wise declare, through all the days, to every living thing. That ceaseless round of birth from seed of strong desire doth spring.
La cause génératrice de la naissance, pour tous les êtres, en tous les temps, est le désir.
வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை ; மற்றது வேண்டாமை வேண்ட வரும். 362
ஒருவன் ஏதாவது ஒன்றை விரும்புவதானால் பிறவாமையை விரும்பவேண்டும் . அது ஆசை அற்ற நிலையை (விரும்பாமை) விரும்பினால்த்தான் உண்டாகும் .
என்கருத்து :

அறத்துப்பால்-துறவறவியல்- மெய் உணர்தல்-Knowledge of the True- Perception du vrai -351- 360.

அறத்துப்பால்-துறவறவியல்-மெய் உணர்தல்- Knowledge of the True-Perception du vrai-351-360. பொருள்அல்ல வற்றைப் பொருள்என்று உணரும் மருள்ஆம் மாணாப் பிறப்பு. 351
மெய்ப்பொருள் அல்லாதவற்றை மெய்ப்பொருள் என்று தவறாக உணர்கின்ற மயக்க உணர்வால் சிறப்பில்லாத துன்பப் பிறவி உண்டாகும் .
எனது கருத்து :
சிலபேரைப் பாத்தியள் எண்டால் கிழமையிலை ரெண்டு மூண்டுதரமாவது குதிரைக்கு காசு கட்டிக்கொண்டும் , லொட்டோ சுறண்டியும் வெட்டிக்கொண்டும் நிப்பினம் . இவையளை ஏன் இப்பிடி காசை சிலவளிக்கிறியள் ?? எண்டு கேட்டால் , " விட்ட காசை இப்ப எடுக்கிறன் பார் " எண்டு சொல்லுவினம் . ஆனால் வாழ்கையிலை விட்டதை எடுக்கமாட்டினம் . இவைக்கு குதிரையை ஓட்டிறது மனுசன் எண்டும் , லொட்டோ மெசின்தான் நிகழ்தகவு லை முடிவு செய்யும் எண்டு தெரியாமல் இல்லை . இப்பிடிப் பட்ட காயளை எளிய பிறப்புகள் எண்டு சொல்லலாம் .
Of things devoid of truth as real things men deem;- Cause of degraded birth the fond delusive dream! 
L’illusion qui fait prendre la chimère pour la réalité, engendre la naissance sans gloire.
இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி மா…

அறத்துப்பால்- துறவறவியல்- துறவு-Renunciation-Du renouncement-341-350.

அறத்துப்பால்- துறவறவியல்- துறவு-Renunciation-Du renouncement-341-350.

யாதனின் யாதனின் நீங்கியான் நோதல் அதனின் அதனின் இலன். 341
ஒருவன் எந்தப் பொருளிலிருந்து பற்று நீங்கியவனாக இருக்கின்றானோ ,அந்தப் பொருளால் அவன் துன்பம் அடைவதில்லை
எனது கருத்து :
ஒருத்தனுக்குப் பிடிச்ச சனியள் மூண்டு மண் , பொன் , பெண் . இந்த மூண்டு சனியும் ஒருத்தனை உண்டு இல்லை எண்டு ஆக்கிப்போடும் . இதுகளிலை பற்றை வைக்காமல் விட்டால் அவனுக்கு துன்பம் வராது எண்டு ஐயன் சொன்னாலும் , இந்தக்காலத்திலை முற்றுந்துறந்த துறவியளாலேயே இந்தப் பெண் எண்ட பற்றை விடேலாமல் கிடக்கு......... நம்ம காஞ்சி பெரியவாளும் , பிரேம்ஸ்சும் , நித்தியும் படுகிற பாடுகளைப் பாக்கிறியள் தானே ???
From whatever, aye, whatever, man gets free, From what, aye, from that, no more of pain hath he!
Si l’on renonce à un objet quelconque, celui-ci ne cause aucune douleur au renonçant.
வேண்டின்உண் டாகத் துறக்க துறந்தபின் ஈண்டுஇயற் பால பல. 342
துன்பம் இல்லாத வாழ்க்கையை விரும்பினால் , ஆசைகளையெல்லாம் விட்டுவிடவேண்டும் . அப்படி விட்டுவிட்டபின் இவ்வுலகில் அடையக்கூடிய இன்பங்க…

அறத்துப்பால்-துறவறவியல்-நிலையாமை- Instability-De l’instabilité- 331-340.

அறத்துப்பால்-துறவறவியல்-நிலையாமை- Instability-De l’instabilité-331-340.


நில்லாத வற்றை நிலையின என்று உணரும் புல்லறி வாண்மை கடை. 331
நிலையில்லாதவற்றை நிலையானவை என்று எண்ணி மயங்குகின்ற புல்லறிவாண்மை ( அற்ப அறிவு )துறந்தார்க்கு இழிவாகும் .
எனது கருத்து :
ஒரு உயிரை உடம்புக்குளை கடவுள் விடேக்கை அதுக்கு ஒரு கால அளவை வைச்சுத்தான் விடுறார் . கொஞ்சக்காலத்தில அந்த உடம்பு இல்லாமல் போடும் . இது எங்களுக்கும் சரி இளையராசாவுக்கும் சரி ஒண்டுதான் . இதுகள் தெரியாமல் இந்த சனங்களுக்கை எவ்வளவு புடுங்குபாடுகள் குத்துபாடுகள் ?? இந்த அற்ப குணத்தாலை மனசிலை வளராத கூட்டங்களாய் இந்த சனங்கள் இருக்கிதுகள் .
Lowest and meanest lore, that bids men trust secure, In things that pass away, as things that shall endure!
C’est la dernière des sottises, que de croire que ce qui est instable est stable.
கூத்துஆட்டு அவைக்குழாத்து அற்றே பெருஞ்செல்வம் போக்கும் அதுவிளிந் துஅற்று. 332
பெருஞ் செல்வம் வந்து சேர்தல் கூத்தாடுமிடத்தில் கூட்டம் வந்து கூடுவதைப் போன்றது அது நீங்கிப் போதலும் கூத்து முடிந்ததும் கூட்டம் கலைவதைப் போன்றது
எனத…

அறத்துப்பால்- துறவறவியல்- கொல்லாமை-Not killing- Ne pas tuer- 321-330.

அறத்துப்பால்-துறவறவியல்-கொல்லாமை-Not killing-Ne pas tuer-321-330.


அறவினை யாதெனில் கொல்லாமை கோறல் பிறவினை எல்லாம் தரும். 321
அறச்செயல் எதுவென்றால் எந்த ஓர் உயிரையும் கொல்லாத செயலே . அவ்வாறு கொல்லுதல் பிறதீவினைகளை எல்லாம் தானே கொண்டுவரும்.
எனது கருத்து:
நியாயமான சீவியம் எண்டால் மற்றவனைப் போடுத்தள்ளாமல் இருக்கிறதுதான் அப்பிடி போட்டுத்தள்ள வெளிக்கிட்டால் பாருங்கோ சொந்தச் செலவிலை சூனியம் செய்யவேண்டிவரும் உதாரணத்திக்கு ஏன் வெளியாலை போவான் நம்மடை மகிந்து
What is the work of virtue? 'Not to kill'; For 'killing' leads to every work of ill. 
Qu’est ce que l’acte vertueux? C’est ne pas tuer; tuer engendre tous les péchés. 
பகுத்து உண்டு பல்லுயிர் ஓம்புதல், நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை. 322
கிடைத்ததைப் பகுத்துக்கொடுத்து தானும் உண்டு , பல உயிர்களையும் காப்பாற்றுதல் , அற நூலோர் தொகுத்துக்கூறிய அறங்கள் எல்லாவற்றிற்கும் தலையாய அறமாகும் .
எனது கருத்து:
மனுசனாப் பிறந்தால் கடைசி ஒருத்தனுக்காவது பிரையோசனமாய் இருக்கவேணும் கண்டியளோ . சிலபேற்றை வீட்டை போனியள் எண்டால் முழங்கையிலை பிடிச்ச…

அறத்துப்பால்-துறவறவியல்- இன்னா செய்யாமை- Not doing Evil-Ne pas faire de mal-311-320.

அறத்துப்பால்-துறவறவியல்-இன்னா செய்யாமை-Not doing Evil-Ne pas faire de mal-311-320.


சிறப்புஈனும் செல்வம் பெறினும் பிறர்க்குஇன்னா செய்யாமை மாசற்றார் கோள். 311
சிறப்பத் தருகின்ற பெருஞ்செல்வத்தைப் பெறுவதாக இருந்தாலும், பிறர்க்குத்துன்பம் செய்யாதிருத்தலே மாசற்றவரின் கொள்கையாகும்
எனது கருத்து :
நீங்கள் சொல்லுறது சரிதான் ஆனால் இப்ப உள்ள நிலமையில இப்பிடிபட்ட ஆக்களை தேடிப் பிடிக்கிறது கஸ்ரம் . செல்வந்தனாய் வருகினமோ இல்லையோ தனக்கு சகுனப்பிழையெண்டாலும் பறவாயில்லை மற்றவனுக்கு மூக்கு உடைஞ்சால் சரி எண்ட நிமையள்தான் இப்ப இருக்கிற சனத்திட்டை .
Though ill to neighbour wrought should glorious pride of wealth secure, No ill to do is fixed decree of men in spirit pure.
Certes, on peut acquérir la richesse qui procure les honneurs en faisant du mal au prochain. Ne jamais faire de mal au prochain est la qualité des hommes sans tâche.
கறுத்துஇன்னா செய்தவக் கண்ணும் மறுத்துஇன்னா செய்யாமை மாசற்றார் கோள். 312
பகையினால் தீங்கு இழைப்பவனுக்கும் திரும்பத் துன்பம் செய்யாதிருத்தல் , நல்லோர்களின் பண்பாகும் .
எனது கருத…

அறத்துப்பால்- துறவறவியல்-வெகுளாமை-The not being Angry- Ne pas s’emporter-301-310.

அறத்துப்பால்து-துறவறவியல்-வெகுளாமை- The not being Angry -Ne pas s’emporter-301-310.


செல்இடத்துக் காப்பான் சினம்காப்பான் அல்இடத்துக் காக்கின்என் காவாக்கால் என்.301
மெலியார் இடத்து சினம் வராமல் காப்பவனே அருள் காப்பவன் . பலிக்காத இடத்தில் காத்தால் என்ன? காக்காவிட்டால் என்ன?
எனது கருத்து:
ஒருத்தனை விட குறைஞ்ச தகுதி தராதரத்தில இருக்கிறவையிட்டை கோபப் படமால் இருக்கிறவன் தான் கண்டியளோ உண்மையில கோபத்தை அடக்கிறவன் . பருப்பு அவியாத இடத்தில் கோபப்பட்டாலும் ஒண்டுதான் கோபப்படாட்டிலும் ஒண்டுதான் .
Where thou hast power thy angry will to work, thy wrath restrain;Where power is none, what matter if thou check or give it rein?
Se garder de la colère, là où elle peut produire effet est méritoire. Qu’importe de prendre ou de perde patience, là où la colère doit échouer?
செல்லா இடத்துச் சினந்தீது செல்இடத்தும் இல்அதனின் தீய பிற.302
வலியாரிடத்தில் சினம் கொள்வது தீமையில் முடியும் . மெலியவரிடத்தில் சினம் கொள்வது இம்மையில் பழியும் மறுமையில் பாவமும் பயக்கும்
எனது கருத்து:
உங்கடை பருப்பு அவியாத இடத்திலை உங்கடை க…