Skip to main content

பொருட்பால் - அரசியல் - காலம் அறிதல்-Knowing the fitting Time-Des la connaissance de l'Opportunité -481-490.


பொருட்பால்-அரசியல்-காலம் அறிதல்-Knowing the fitting Time-Des la connaissance de l'Opportunité. 


பகல்வெல்லும் கூகையைக் காக்கை; இகல்வெல்லும் 
வேந்தர்க்கு வேண்டும் பொழுது. 481

காகம் தன்னைக் காட்டிலும் வலிமையுடைய கோட்டானை அதற்கு கண் தெரியாத பகற்பொழுதில் போரிட்டு வெல்லும். அதுபோலப் பகைவருடன் போரிட்டு வெல்லக் கருதும் அரசர்க்கு ஏற்ற காலம் இன்றியமையாதது .

எனது கருத்து:

உலகத்திலை எங்கையாவது சண்டை நடக்குதெண்டால் ஏதோ ஒரு இரவலை முடிவு எடுத்து நடக்கிறது எண்டு நினைக்கப்படாது . கிட்டமுட்ட ஐஞ்சாறு வரியத்துக்கு முதலே எல்லாம் பிளான் பண்ணி பழம் நல்லாய் பழுக்க விட்டு ஒரே அடி , ஆள் அரக்காது . ஈராக்கிலை அமெரிக்கா பாஞ்ச மாதிரி .

A crow will conquer owl in broad daylight; The king that foes would crush, needs fitting time to fight.

Le corbeau triomphe du hibou pendant qu'il fait jour, ainsi il faut un temps opportun au Roi qui désire vaincre ses ennemis.

பருவத்தோடு ஒட்ட ஒழுகல் திருவினைத் 
தீராமை ஆர்க்கும் கயிறு. 482

அரசன் , காலத்தோடு பொருந்தத் தொழிலைச் செய்தல் செல்வத்தைத் தன்னிடமிருந்து நீங்காமல் கட்டி வைக்கும் கையிறு ஆகும் .

எனது கருத்து:

இதைத்தான் எங்கடை பெரிசுகள் பருவத்தே பயிர் செய் எண்டு சொல்லியிருக்கினம் . எந்த இடத்திலும் நேரம்பாத்து அடிக்காட்டில் சேதாரம் கூட கண்டியளோ .

The bond binds fortune fast is ordered effort made, Strictly observant still of favouring season's aid. 

Faire chaque chose en temps opportun est la corde qui retient chez soi. l'inconstante fortune.

அருவினை என்ப உளவோ கருவியான் 
காலம் அறிந்து செயின். 483

தகுந்த கருவிகளோடு காலம் அறிந்துசெயல்பட்டால் வெற்றியடைவதற்கு முடியாத செயல் என்று எதுவும் இல்லை

எனது கருத்து:

அப்பிடித்தான் எல்லாரும் நினைச்சு செய்யினம் . ஆனால் கடைசியிலை கவுண்டு கொட்டுண்டு அல்லோ போகினம் . ஏனெண்டால் தங்களுக்கை இருக்கிற கோரைப் புல்லுகளை நம்பிறதாலை தான் இந்த நிலமையள் கண்டியளோ . 

Can any work be hard in very fact, If men use fitting means in timely act? 

Y a-t-il quoi que ce soit d'impossible (au Roi) qui sait employer l'armement approprié et profiter du moment opportun ?

ஞாலம் கருதினும் கைகூடும் காலம் 
கருதி இடத்தால் செயின்.484

ஒருவன் தன்னைக் காலமறிந்து, ஏற்ற இடம் அறிந்து ஒரு செயலைச் செய்வானாயின் அவன் இவ்வுலகத்தையே ஆளக்கருதினாலும் அது கைகூடும் .

எனது கருத்து:

நீங்கள் இப்பிடி சொல்லுறியள் ஐயன் . உங்கடை கதையைப் பாத்தால் உலகத்திலை சந்தோசம் மட்டுமல்லோ இருக்கவேணும் ?? எல்லாரும் ஒண்டுக்கு பத்து தரம் யோசிச்சுத்தான் செய்யிறாங்கள் . ஆனால் இதுகளுக்கு மேலை ஒரு அப்பன் இருக்கிறான் , அதுதான் விதி எண்டு சொல்லிறன் . 

The pendant world's dominion may be won, In fitting time and place by action done. 

Le désir d'avoir l'hégémonie du monde se réalise, si l'on choisit le moment opportun et le terrain propice.

காலம் கருதி இருப்பர் கலங்காது 
ஞாலம் கருது பவர். 485

உலகம் முழுவதையும் கைக்கொள்ளக் கருதுபவர் வலிமையுடையவராயினும் அவ்வலிமையைப் பெரிதாகக் கருதாமல் தக்க காலத்தையே எதிர்பாத்துக் காத்திருப்பர் .

எனது கருத்து:

இந்த குறளை நான் படிக்கிற நேரம் , " ஓடுமீன் ஓட உறுமீன் வரும்வரைக்கும் வாடியிருக்குமாம் கொக்கு " எண்ட சொலவடைதான் ஞாபகம் வருகுது . இதை ஏன் சொல்லுறன் எண்டால் , கொக்குக்கு மீன் பிடிக்கத் தெரியாமல் எண்டில்லை அதின்ரை கண் எப்பவும் உறுமீனிலைதான் இருக்கும் .

Who think the pendant world itself to subjugate, With mind unruffled for the fitting time must wait.

Le Roi qui désire régner immanquablement sur tout l'univers attend avec patience le moment opportun.

ஊக்கம் உடையான் ஒடுக்கம், பொருதகர் 
தாக்கற்குப் பேரும் தகைத்து.486

முயற்சியுடையவன் அடங்கியிருப்பது , சண்டையில் ஆட்டுக்கடா , தாக்குவதற்கு வேகம் பெறுவதற்காக பின்னால் செல்வதைப் போன்றது.

எனது கருத்து:

பொறுத்த நேரத்திலை ஒருத்தன் ஏன் பம்முறான் எண்டதை விசையம் விளங்காத சில பேர் நினைப்பினம் , பெடி பயத்திலை விட்டிட்டு போறான் எண்டு . ஆனால் புலி எப்பவும் பம்மி பொறுத்து இருந்துதான் பாயும் எண்டிறதை புத்திசாலியள் விளங்கிக் கொள்ளுவங்கள் .

The men of mighty power their hidden energies repress, As fighting ram recoils to rush on foe with heavier stress. 

Attendre le moment propice, quand on a une armée forte, ressemble au mouvement du bélier, qui recule pour prendre l'élan.

பொள்என ஆங்கே புறம்வேரார் காலம்பார்த்து 
உள்வேர்ப்பர் ஒள்ளி யவர். 487

அறிவுடைய அரசர் , பகைவர் குற்றம் செய்தவுடன் வெளிப்படையாகக் கோபம் கொள்ளமாட்டார் . அவரை வெல்லும் தக்க காலம் வரும் வரை மனதுக்குள்ளேயே சினத்தை அடக்கிக் கொண்டிருப்பர்.

எனது கருத்து:

ஒருத்தர் உங்களுக்கு பிழை விடுகிற நேரம் , எடுத்ததுக்கெல்லாம் அவரிலை நீங்கள் கோபப்பட்டியள் எண்டால் உங்கடை கோபத்துக்கே மரியாதை இல்லாமல் போடும் . நீங்கள் இடம் , பொருள் , ஏவல் பாத்து உங்கடை கோபத்தை அவரிலை காட்டுங்கோ அந்தாள் சீவியத்திலை உங்களை மறவாது .

The glorious once of wrath enkindled make no outward show,  At once; they bide their time, while hidden fires within them glow.

le Roi intelligent ne manifeste pas sa colère au moment même où il est insulté, mais l'entretient dans son coeur, en attendant le moment propice.

செறுநரைக் காணின் சுமக்க இறுவரை 
காணின் கிழக்குஆம் தலை. 488

பகைவரைக் கண்டால் பொறுத்திருக்க வேண்டும் அப்பகைவர் அழியும் காலம் வந்தால் அவரது தலை கீழே போகும் 

எனது கருத்து:

ஒருத்தன் உங்களுக்கு கேம் கேட்டால் நீங்களும் ஏட்டிக்கு போட்டியாய் நிக்காமல் பொறுத்துப்போங்கோ . முடிவுகாலம் எண்ட ஒண்டு , காலம் எண்ட அப்பனாலை வரேக்கை உங்களிட்டை கேம் கேட்டவர் அடரஸ்சே இல்லாமல் போவார் .

If foes' detested form they see, with patience let them bear; When fateful hour at last they spy,- the head lies there.

si tu rencontres l'ennemi, supporte-le ; le jour de sa fin venu, sa tête tombe par terre. 

எய்தற்கு அரியது இயைந்தக்கால் அந்நிலையே 
செய்தற்கு அரிய செயல். 489

பகைவரை வெல்லக் கருதும் அரசர் , நல்ல காலம் வந்து சேர்ந்த போதே செய்வதற்கு அரியசெயல்களைச் செய்து முடித்துக் கொள்ள வேண்டும் .

எனது கருத்து:

ஓரு வேலையை செய்யுறதுக்கு காலநேரம் எல்லாம் சரிவந்தால் பேந்துபின்னை எண்டு நில்லாமல் சட்டுப்புட்டு எண்டு செய்யவேணும் கண்டியளோ .

When hardest gain of opportunity at last is won, With promptitude let hardest deed be done.

Le temps propice arrivé, il faut en profiter pour tenter même l'impossible.

கொக்குஒக்க கூம்பும் பருவத்து; மற்றுஅதன் 
குத்துஒக்க சீர்த்த இடத்து. 490

காலத்தை எதிர்பார்க்க வேண்டிய பருவத்தில் கொக்கைப் போலக் காத்து இருந்து காலம் வாய்த்தபோது கொக்கு மீனைக் கொத்தினாற் போலத் தவறாமல் செய்யவேண்டிய செயலைச் செய்து முடிக்க வேண்டும். 

எனது கருத்து:

உறுமீன் வாறவரைக்கும் கொக்கர் எப்பிடி இருக்கிறாரோ அப்பிடி இருந்து ஒரே அடி........... மாற்றர் குளோஸ் . ஆனால் எங்கடை விசையத்திலை மட்டும் ஏன் பிழைச்சது ???? எனக்கு இண்டுமட்டும் விழங்கேலை . உங்களுக்கு ஏதாவது விளங்கீச்சுதோ ???? 

As heron stands with folded wing, so wait in waiting hour; As heron snaps its prey, when fortune smiles, put forth your power.

Pendant le temps défavorable, il faut imiter l'inaction patiente du héron et agir au moment opportun, avec la rapidité de son coup de bec.Comments

Popular posts from this blog

அறத்துப்பால்- துறவறவியல்- கொல்லாமை-Not killing- Ne pas tuer- 321-330.

அறத்துப்பால்-துறவறவியல்-கொல்லாமை-Not killing-Ne pas tuer-321-330.


அறவினை யாதெனில் கொல்லாமை கோறல் பிறவினை எல்லாம் தரும். 321
அறச்செயல் எதுவென்றால் எந்த ஓர் உயிரையும் கொல்லாத செயலே . அவ்வாறு கொல்லுதல் பிறதீவினைகளை எல்லாம் தானே கொண்டுவரும்.
எனது கருத்து:
நியாயமான சீவியம் எண்டால் மற்றவனைப் போடுத்தள்ளாமல் இருக்கிறதுதான் அப்பிடி போட்டுத்தள்ள வெளிக்கிட்டால் பாருங்கோ சொந்தச் செலவிலை சூனியம் செய்யவேண்டிவரும் உதாரணத்திக்கு ஏன் வெளியாலை போவான் நம்மடை மகிந்து
What is the work of virtue? 'Not to kill'; For 'killing' leads to every work of ill. 
Qu’est ce que l’acte vertueux? C’est ne pas tuer; tuer engendre tous les péchés. 
பகுத்து உண்டு பல்லுயிர் ஓம்புதல், நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை. 322
கிடைத்ததைப் பகுத்துக்கொடுத்து தானும் உண்டு , பல உயிர்களையும் காப்பாற்றுதல் , அற நூலோர் தொகுத்துக்கூறிய அறங்கள் எல்லாவற்றிற்கும் தலையாய அறமாகும் .
எனது கருத்து:
மனுசனாப் பிறந்தால் கடைசி ஒருத்தனுக்காவது பிரையோசனமாய் இருக்கவேணும் கண்டியளோ . சிலபேற்றை வீட்டை போனியள் எண்டால் முழங்கையிலை பிடிச்ச…

இல்லறவியல் ஒழுக்கமுடைமை-The Possession of Decorum - La moralité .131 - 140.

அறத்துப்பால். இல்லறவியல் ஒழுக்கமுடைமை- The Possession of Decorum- La moralité-131-140.


ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும். 131
ஒழுக்கம் எப்போதும் மேன்மையைத் தருவதால் , அந்த ஒழுக்கமே உயிரினும் மேலானதாகப் போற்றப்படுகின்றது .
எனது கருத்து:
ஒருத்தருக்கு ஒழுக்கம் அக ஒழுக்கம் புற ஒழுக்கம் எண்டு ரெண்டு வகையாலுமே இருக்கவேணும் இருந்தால் மட்டும் காணாது அதை அவற்றை உயிரைவிட உயர்வாய் பேணிப் பாதுக்கவேணும் அதைத்தான் இந்தக் குறளும் சொல்லுது
Decorum' gives especial excellence; with greater care 'Decorum' should men guard than life, which all men share.
Puisque la moralité honore tous les hommes, il faut la conserver de préférence à la vie.
பரிந்துஓம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்துஓம்பித் தேரினும் அஃதே துணை. 132
வருந்தியேனும் ஒழுக்கத்தைப் போற்றிக் காக்கவேண்டும் . பலவற்றை ஆராய்ந்து பாரத்தாலும் ஒழுக்கமே உயிரிற்குத் துணையாகும் .
எனது கருத்து:
எப்பிடித்தான் பாத்தாலும் ஒழுக்கமாய் இருக்கிறதுதான் நல்லது ஆனால் அது அவ்வளவு லேசான விசையமில்லை அதுக்கு ஒருத்தர் கனக்க விலையள் குடுக்க …

அறத்துப்பால்-துறவறவியல்-நிலையாமை- Instability-De l’instabilité- 331-340.

அறத்துப்பால்-துறவறவியல்-நிலையாமை- Instability-De l’instabilité-331-340.


நில்லாத வற்றை நிலையின என்று உணரும் புல்லறி வாண்மை கடை. 331
நிலையில்லாதவற்றை நிலையானவை என்று எண்ணி மயங்குகின்ற புல்லறிவாண்மை ( அற்ப அறிவு )துறந்தார்க்கு இழிவாகும் .
எனது கருத்து :
ஒரு உயிரை உடம்புக்குளை கடவுள் விடேக்கை அதுக்கு ஒரு கால அளவை வைச்சுத்தான் விடுறார் . கொஞ்சக்காலத்தில அந்த உடம்பு இல்லாமல் போடும் . இது எங்களுக்கும் சரி இளையராசாவுக்கும் சரி ஒண்டுதான் . இதுகள் தெரியாமல் இந்த சனங்களுக்கை எவ்வளவு புடுங்குபாடுகள் குத்துபாடுகள் ?? இந்த அற்ப குணத்தாலை மனசிலை வளராத கூட்டங்களாய் இந்த சனங்கள் இருக்கிதுகள் .
Lowest and meanest lore, that bids men trust secure, In things that pass away, as things that shall endure!
C’est la dernière des sottises, que de croire que ce qui est instable est stable.
கூத்துஆட்டு அவைக்குழாத்து அற்றே பெருஞ்செல்வம் போக்கும் அதுவிளிந் துஅற்று. 332
பெருஞ் செல்வம் வந்து சேர்தல் கூத்தாடுமிடத்தில் கூட்டம் வந்து கூடுவதைப் போன்றது அது நீங்கிப் போதலும் கூத்து முடிந்ததும் கூட்டம் கலைவதைப் போன்றது
எனத…