Skip to main content

பொருட்பால் - அரசியல் - தெரிந்து தெளிதல்-Selection and Confidence- S’éclairer après expérimentation -501 -510.


பொருட்பால்-அரசியல்-தெரிந்து தெளிதல்-Selection and Confidence-S’éclairer après expérimentation-501-510.


அறம்பொருள் இன்பம் உயிர்அச்சம் நான்கின் 
திறம்தெரிந்து தேறப் படும். 501

ஒருவனை அறம் , பொருள் , இன்பம் , உயிர் பொருட்டால் அஞ்சும் அச்சம் ஆகிய நான்கு வகையிலும் ஆராய்ந்து தக்கவனாயின் அவனை நம்புதல் வேண்டும் .

எனது கருத்து:

இந்தக்குறளை படிக்கேக்கை எனக்கு ஒரு விசயம் ஞாபகத்துக்கு வருகுது . அறம், பொருள், இன்பம், உயிர்காக அஞ்சும் அச்சம் இந்த நாலையும் வெண்ட ஒரு படையணி எங்களிட்டை இருந்தது . உலகத்தையே திரும்பி பாக்க வைச்சம் . ஏன் நாங்கள் தோத்துபோனம் ??? எனக்கு இண்டுமட்டும் விழங்கேலை !!!!!!!!

How treats he virtue, wealth and pleasure? How, when life's at stake, Comports himself? This four-fold test of man will full assurance make. 

Que celui qui a satisfait aux quatre épreuves suivantes: l'amour de la vertu, l'or. la luxure et la crainte pour la vie, soit choisi (par le Roi).

குடிப்பிறந்து குற்றத்தின் நீங்கி வடுப்பரியும் 
நாண்உடையான் சுட்டே தெளிவு. 502

நல்ல குடியில் பிறந்து , குற்றங்களில் இருந்து நீங்கிப் பழிச்செயலைச் செய்ய அஞ்சி நாணுகின்றவனையே நம்பி வேலையைக் கொடுக்கலாம் .

எனது கருத்து:

இந்தக்காலத்திலை இப்பிடி ஒருத்தரையும் நான் காணேலை . பதவிக்கு தெரிவு செய்யிறதே நல்ல முசுப்பாத்தியாய் போச்சு . பந்தம் பிடிக்கிறவையும் சிங்சக் அடிக்கிறவையும் தான் இண்டைக்கு பதவியளிலை இருக்கினம் கண்டியளோ .

Of noble race, of faultless worth, of generous pride That shrinks from shame or stain; in him may king confide.

Que le choix s'arrête sur celui qui sst de bonne naissance, dégagé de vices, plein de retenue et qui craint le déshonneur.

அரியகற்று ஆசுஅற்றார் கண்ணும் தெரியுங்கால் 
இண்மை அரிதே வெளிறு. 503

அறிவுக்குரிய நூல்கள் பலவற்றைப் படித்துக் குற்றங்கள் இல்லாமல் இருப்பவரிடத்திலும் ஆராய்ந்து பார்த்தால் சில அறியாமைகள் இருக்கும் 

எனது கருத்து:

இதை இப்படியும் சொல்லலாம் " படிச்ச கோமாளியள் " எண்டு . சிலபேரைபாத்தியள் எண்டால் பெரியபட்டங்களெல்லாம் பின்னாலை கொழுவி , எந்தநேரமும் தங்களைபற்றி கதைக்காட்டிக்கு அவைக்கு திண்ட சாப்பாடு செமிக்காது . ஆனால் அவையின்ரை நடவடிக்கையளை வடிவாய் பாத்தியள் எண்டால் , எலிமெண்டறி பிள்ளையள் அளவுக்கு படு கேவலமாய் இருக்கும் .

Though deeply learned, unflecked by fault, 'tis rare to see, When closely scanned, a man from all unwisdom free.

Même parmi ceux qui ont une rare instruction, et qui sont dégagés de tous les défauts, (ci dessus spécifiés), il est rare de ne pas trouver de sots, si l'on se livre à un examen minutieux.

குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள் 
மிகைநாடி மிக்க கொளல். 504

ஒருவருடைய குணம் குற்றம் ஆகிய இரண்டையும் ஆராய்ந்து , அவற்றுள் மிக்கது எதுவோ அதனால் அவரை நல்லவர் என்றோ தீயவர் என்றோ கொள்ள வேண்டும். 

எனது கருத்து:

இப்படியான ஆக்கள் இந்தக்காலத்திலை இல்லை எண்டே சொல்லலாம் கண்டியளோ . ஒருத்தன் கொஞ்சத் நல்லாய் பிரதிபலிக்கமாய் இருக்கிறது எங்கடையாக்களுக்கு ஒத்து வராது பாருங்கோ . ஒருத்தன் கொஞ்சம் சறுக்கினால் காணும் அவன்ரை நல்ல பக்கத்தை விட்டுட்டு இல்லாதது பொல்லாதது எல்லாம் சொல்லி அவனை ஒருவழி பண்ணி போடுவங்கள் எங்கடையாக்கள் . இதாலை நல்லவன் நல்லது செய்ய யோசிப்பான் . அதாலை இந்தக் குறள் இப்ப உள்ள நிலமையிலை சரிப்பட்டவராது எண்டுதான் நான் நினைக்கிறன் .

Weigh well the good of each, his failings closely scan, As these or those prevail, so estimate the man.

Peser les qualités et les défauts d'un homme Choisir d'après ce qui l'emporte.

பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம் 
கருமமே கட்டளைக் கல். 505

ஒருவருடைய பெருமையை அறிவதற்கும் சிறுமையை அறிவதற்கும் அவர் செய்யும் செயலே தக்க உரைகல்லாகும். 

எனது கருத்து:

இதிலை ஐயன் சொல்லவாறதிலை எனக்கு உடன்பாடில்லை பாருங்கோ . ஒருத்தன் நல்லவனோ கெட்டவனோ எண்டு அறியிறது சந்தர்ப்பமும் சூழ்நிலையும் , அவனை மற்றவை பாக்கிற கண்ணோட்டத்தை பொறுத்தே ஒழிய ,தனிய செயலை மட்டும் தான் இல்லை பாருங்கோ . தனிய செயலை மட்டும் தான் பாக்கிறதெண்டால் சேணங் கட்டின குதிரையாய் தான் இருக்கேலும் .

Of greatness and of meanness too,The deeds of each are touchstone true.

Ce sont les propres actes d'un homme qui sont la pierre de touche de sa bonne et de sa mauvaise réputation.

அற்றாரைத் தேறுதல் ஓம்புக; மற்றுஅவர்
பற்றுஇலர் நாணார் பழி.506

சுற்றம் இல்லாதவரை அரசன் நம்பித் தெளியக்கூடாது. அவர் உலகில் பற்று இல்லாதவராகையால் பழிக்கு அஞ்சமாட்டார் .

எனது கருத்து:

இந்தக் குறளை பாக்கிற நேரம் எனக்கு தமிழகத்திலை இப்ப இருக்கிற அரசியல் நிலமையள்தான் ஞாபகம் வருகிது . ஒரு கட்சியிலை இந்தக் குறளுக்கு கருத்துரை எழுதின முக , தலைவர் . மற்றப்பக்கம் உறவுகள் சுற்றங்கள் அற்ற ஜெ தலைவி . இதிலை யாருடைய செயல்களால் தமிழகம் நிமிர்ந்தது ???? ஒருசெயலை செய்வதற்கு எப்பவுமே சுற்றம் உறவுகள் தடையாகத் தான் இருக்கும் எண்டு நினைக்கிறன் . அதோடை பழிக்கு அஞ்சினால் எப்படி ஒரு செயலை செய்யிறது ???? 

Beware of trusting men who have no kith of kin; No bonds restrain such men, no shame deters from sin.

Renoncer à choisir ceux qui n'ont pas de parents: ils n'ont aucune attache avec le monde, donc ils ne craignent pas le déshonneur.

காதன்மை கந்தா அறிவுஅறியார்த் தேறுதல்
பேதைமை எல்லாந் தரும்.507

அன்புடமை ஒன்றையே பற்றுக் கோடாக கொண்டு அறியவேண்டுவனவற்றை அறியாதாரை நம்புதல் அரசனுக்குத் துன்பத்தையே விளைவிக்கும் .

எனது கருத்து:

இதுக்கு என்னத்தைச் சொல்ல . ஒரு பதவியை எடுக்கிறதுக்கு எவை திறமை அடிப்படையிலை வருகினம் ??? எல்லாம் காசுகளை பின்னாலை தள்ளியும் , றெக்கமண்டேசனுகளாலையும் தானே வருகினம் பாருங்கோ . அப்பிடி பதவிக்கு வாறவையளாலை பதவிக்கு பெருமை இல்லை கண்டியளோ , அவமானம் தான் மிச்சம் .

By fond affection led who trusts in men of unwise soul,Yields all his being up to folly's blind control.

Choisir ceux qui ne savent pas ce qu'il faut savoir, uniquement à cause de l'affection qu'il a pour eux, conduit ( le Roi ) à faire toutes les sottises

தேராண் பிறனைத் தெளிந்தான் வழிமுறை
தீரா இடும்பை தரும். 508

தான் அறியாத ஒருவனை ஆராய்ந்து பாராமல் நம்பிய அரசனுக்கு அத்தெளிவு பின்வரும் தலைமுறையிலும் நீங்காத துன்பத்தைக் கொடுக்கும் 

எனது கருத்து:

இது எல்லாம் இப்பசரிவராது ஐயன் . கேடுகெட் ட காசும் காலமும் சேர்ரந்தால் ஒரு கோமாளியை கூட பதவியிலை வைக்கலாம் . உங்கடை காலத்திலை சனங்கள் நல்லதுகளாய் இருக்கலாம் ஆனால் இப்ப அப்பிடியில்லை . சனங்கள் இப்படியான கோமாளியளின்ரை துன்பங்களுக்கு பழகிப் போயிட்டுதுகள்

Who trusts an untried stranger, brings disgrace,Remediless, on all his race.

Le choix de quelqu'un qui est étranger à soi sous tous les rapports, crée même à la postérité des maux irréparables.

தேறற்க யாரையும் ; தேராது தேர்ந்தபின்
தேறுக தேறும் பொருள். 509

அரசன் எவரையும் ஆராய்ந்து பாராமல் தெளிதல் கூடாது .ஆராய்ந்து தெளிந்த பின்னர் அவர்பால் ஒப்படைக்கும் பணிகளை நம்பித் தெளிதல் வேண்டும் .

எனது கருத்து:

எப்பவும் வெளுத்ததெல்லாம் பால் எண்டு இருக்காமல் நாலுவளத்தாலையும் யோசிச்சு ஒருத்தரை வேலைக்கு எடுக்கவேணும் எண்டும் , பேந்து அவையிலை ஐமிச்சப்படக்கூடாது எண்டும் சொல்லுறியள் . நல்லவிசையம்தான் . ஆனால் ஐயன் இப்ப நம்பினவனுகே ஆப்படிக்கிற காலம் கண்டியளோ . என்னதான் இருந்தாலும் ஒரு கண் எப்பவும் முழிப்பாய் இருக்கவேணும் பாருங்கோ .

Trust no man whom you have not fully tried, When tested, in his prudence proved confide

Né jamais choisir avant d'avoir éprouvé. Ne choisir que celui qui a satisfait à l'épreuve.

தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்
தீரா இடும்பை தரும். 510

ஒருவனை ஆராயாமல் நம்புதலும் , ஆராய்ந்து நம்பிக்கை வைத்தவனிடம் சந்தேகப்படுதலும் நீங்காத துன்பத்தைக் கொடுக்கும் .

எனது கருத்து:

என்னைபொறுத்தவரையிலை ஒருத்தரை என்னதான் ஆராய்ஞ்சு பதவிக்கு எடுத்தாலும் , அவருக்குமேலை அவருக்குத் தெரியாமல் ஒருகண் இருக்கத்தான் வேணும் பாருங்கோ .இல்லாட்டில் நாங்கள் இருக்கமாட்டம் .

Trust where you have not tried, doubt of a friend to feel, Once trusted, wounds inflict that nought can heal.

Choisir sans épreuve préalable et suspecter celui qui a été choisi, après épreuve : tous les deux conduisent à des malheurs irréparables.
Comments

Popular posts from this blog

அறத்துப்பால்- துறவறவியல்- கொல்லாமை-Not killing- Ne pas tuer- 321-330.

அறத்துப்பால்-துறவறவியல்-கொல்லாமை-Not killing-Ne pas tuer-321-330.


அறவினை யாதெனில் கொல்லாமை கோறல் பிறவினை எல்லாம் தரும். 321
அறச்செயல் எதுவென்றால் எந்த ஓர் உயிரையும் கொல்லாத செயலே . அவ்வாறு கொல்லுதல் பிறதீவினைகளை எல்லாம் தானே கொண்டுவரும்.
எனது கருத்து:
நியாயமான சீவியம் எண்டால் மற்றவனைப் போடுத்தள்ளாமல் இருக்கிறதுதான் அப்பிடி போட்டுத்தள்ள வெளிக்கிட்டால் பாருங்கோ சொந்தச் செலவிலை சூனியம் செய்யவேண்டிவரும் உதாரணத்திக்கு ஏன் வெளியாலை போவான் நம்மடை மகிந்து
What is the work of virtue? 'Not to kill'; For 'killing' leads to every work of ill. 
Qu’est ce que l’acte vertueux? C’est ne pas tuer; tuer engendre tous les péchés. 
பகுத்து உண்டு பல்லுயிர் ஓம்புதல், நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை. 322
கிடைத்ததைப் பகுத்துக்கொடுத்து தானும் உண்டு , பல உயிர்களையும் காப்பாற்றுதல் , அற நூலோர் தொகுத்துக்கூறிய அறங்கள் எல்லாவற்றிற்கும் தலையாய அறமாகும் .
எனது கருத்து:
மனுசனாப் பிறந்தால் கடைசி ஒருத்தனுக்காவது பிரையோசனமாய் இருக்கவேணும் கண்டியளோ . சிலபேற்றை வீட்டை போனியள் எண்டால் முழங்கையிலை பிடிச்ச…

இல்லறவியல் ஒழுக்கமுடைமை-The Possession of Decorum - La moralité .131 - 140.

அறத்துப்பால். இல்லறவியல் ஒழுக்கமுடைமை- The Possession of Decorum- La moralité-131-140.


ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும். 131
ஒழுக்கம் எப்போதும் மேன்மையைத் தருவதால் , அந்த ஒழுக்கமே உயிரினும் மேலானதாகப் போற்றப்படுகின்றது .
எனது கருத்து:
ஒருத்தருக்கு ஒழுக்கம் அக ஒழுக்கம் புற ஒழுக்கம் எண்டு ரெண்டு வகையாலுமே இருக்கவேணும் இருந்தால் மட்டும் காணாது அதை அவற்றை உயிரைவிட உயர்வாய் பேணிப் பாதுக்கவேணும் அதைத்தான் இந்தக் குறளும் சொல்லுது
Decorum' gives especial excellence; with greater care 'Decorum' should men guard than life, which all men share.
Puisque la moralité honore tous les hommes, il faut la conserver de préférence à la vie.
பரிந்துஓம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்துஓம்பித் தேரினும் அஃதே துணை. 132
வருந்தியேனும் ஒழுக்கத்தைப் போற்றிக் காக்கவேண்டும் . பலவற்றை ஆராய்ந்து பாரத்தாலும் ஒழுக்கமே உயிரிற்குத் துணையாகும் .
எனது கருத்து:
எப்பிடித்தான் பாத்தாலும் ஒழுக்கமாய் இருக்கிறதுதான் நல்லது ஆனால் அது அவ்வளவு லேசான விசையமில்லை அதுக்கு ஒருத்தர் கனக்க விலையள் குடுக்க …

அறத்துப்பால்-துறவறவியல்-நிலையாமை- Instability-De l’instabilité- 331-340.

அறத்துப்பால்-துறவறவியல்-நிலையாமை- Instability-De l’instabilité-331-340.


நில்லாத வற்றை நிலையின என்று உணரும் புல்லறி வாண்மை கடை. 331
நிலையில்லாதவற்றை நிலையானவை என்று எண்ணி மயங்குகின்ற புல்லறிவாண்மை ( அற்ப அறிவு )துறந்தார்க்கு இழிவாகும் .
எனது கருத்து :
ஒரு உயிரை உடம்புக்குளை கடவுள் விடேக்கை அதுக்கு ஒரு கால அளவை வைச்சுத்தான் விடுறார் . கொஞ்சக்காலத்தில அந்த உடம்பு இல்லாமல் போடும் . இது எங்களுக்கும் சரி இளையராசாவுக்கும் சரி ஒண்டுதான் . இதுகள் தெரியாமல் இந்த சனங்களுக்கை எவ்வளவு புடுங்குபாடுகள் குத்துபாடுகள் ?? இந்த அற்ப குணத்தாலை மனசிலை வளராத கூட்டங்களாய் இந்த சனங்கள் இருக்கிதுகள் .
Lowest and meanest lore, that bids men trust secure, In things that pass away, as things that shall endure!
C’est la dernière des sottises, que de croire que ce qui est instable est stable.
கூத்துஆட்டு அவைக்குழாத்து அற்றே பெருஞ்செல்வம் போக்கும் அதுவிளிந் துஅற்று. 332
பெருஞ் செல்வம் வந்து சேர்தல் கூத்தாடுமிடத்தில் கூட்டம் வந்து கூடுவதைப் போன்றது அது நீங்கிப் போதலும் கூத்து முடிந்ததும் கூட்டம் கலைவதைப் போன்றது
எனத…