Skip to main content

பொருட்பால் - அரசியல் - கேள்வி-Hearing- De l'audition-411 - 420.


பொருட்பால் - அரசியல் - கேள்வி-Hearing-De l'audition-411-420.

செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வம் 
செல்வத்து ளெல்லாந் தலை. 411

கேள்விச் செல்வமே மற்றையெல்லாச் செல்வங்களிலும் உயர்வானது . ஆதலால் ஒருவனுக்குச் செல்வங்களில் எல்லாவற்றிலும் சிறந்த செல்வம் காதால் கேட்டறியும் கேள்விச் செல்வமேயாகும் .

எனது கருத்து:

இண்டையான் நிலமையிலை இந்தசெல்வத்தை பாக்கிறது கஸ்ரம் . எல்லாத்துக்கும் ஆதாரம் கேக்கிற காலம் இப்ப . என்னைப் பொறுத்தவரையில ஒரு செய்தியை அனுபவப்பட்டவன் சொன்னால் கேக்கவேணும் . ஆனால் நானா நீயா அறிவிலை பெரிசு எண்ட ஈகோவால இந்த செல்வம் அல்லாடி, பெரிசாய் எடுபடுறேலை பாருங்கோ .

Wealth of wealth is wealth acquired be ear attent; Wealth mid all wealth supremely excellent. 

La richesse des richesses est celle de l'oreille. 
Elle est la première de toutes les richesses.

செவுக்குண வில்லாத போழ்து சிறிது 
வயிற்றுக்கும் ஈயப் படும். 412 

காதுகளுக்கு உணவாகிய கேள்வி அறிவு கிட்டாத சமயத்தில் , வயிற்றுக்கும் சிறிதளவு உணவு அளிக்க வேண்டும் . 

எனது கருத்து: 

இதை அவசியம் அத்தியாவசியம் எண்ட கோணத்திலை பாக்கவேணும் . உலகத்திலை உள்ள மனிசருக்கு பசி எண்ட உணர்வுதான் அத்தியவசியம் . அதுக்குப்பிறகுதான் கேள்வி எண்ட அவசியமான செவிக்கு உணவு .

When 'tis no longer time the listening ear to feed With trifling dole of food supply the body's need. 

Quand l'oreille n'écoute pas, (quand elle n'a pas d'aliment) il faut offrir un peu d'aliment à l'estomac. 

செவியுணவிற் கேள்வி யுடையார் அவியுணவின் 
ஆன்றாரோ டொப்பர் நிலத்து. 413 

செவியுணவாகிய கேள்வி அறிவு வாய்க்கப்பெற்றவர் இந்நில உலகில் வாழ்பவராயினும், அவிர்பாகமாகிய உணவையுடைய தேவர்களுக்குச் சமமாவர். 

எனது கருத்து: 

இந்த இடத்திலை ஒரு சமன்பாட்டை நிறுவிறார் ஐயன் . ஒருத்தன் குறைஞ்ச சாப்பாட்டோடை அறிவு ஞானம் கொண்டு சீவிச்சாலும் , அனுபவம் எண்ட கேள்வி ஞானம் கிடைச்சவனும் , இந்தப்படிச்சவனோடை சரிசமனாய் வைச்சு பார்க்கப்படுகறான் எண்டு சொல்லியிருக்கிறார் . 

Who feed their ear with learned teachings rare, Are like the happy gods oblations rich who share. 

Ceux qui ont l'aliment de l'oreille (écoutent) bien. qu'ils soient sur terre, 
sont égaux aux dieux aux quels, l'aliment est offert dans les sacrifices. 

கற்றில னாயினுங் கேட்க அஃதொருவற்கு 
ஒற்கத்தின் ஊற்றாந் துணை. 414 

ஒருவன் சிறந்த நூல்களைக் கல்லாதவனாயினும் அறிவுடையார் கூறுவனவற்றைக் கேட்டறிய வேண்டும் . அக்கேள்வியறிவு அவனுக்கு மனத்தளர்ச்சி ஏற்படும் போது ஊன்றுகோல் போல் துணைபுரியும்.

எனது கருத்து: 

கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவிபாடும் எண்டு எங்கடை பெரிசுகள் சொல்லுவினம் . ஒருத்தன் பெரிசாய் படிக்காட்டிலும் படிச்சவனின்ரை கதையளைக் கேட்டாலே அவனுக்கு அது அவன் கஸ்ரப்படுகிற நேரத்தில உதவி செய்யும் கண்டியளோ . 


Though learning none hath he, yet let him hear alway: In weakness this shall prove a staff and stay. 

Que ceux qui ne sont pas instruits» écoutent ; ce sera pour eux un soutien dans le malheur. 

இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே 
ஒழுக்க முடையார்வாய்ச் சொல்.415 

நல்லொழுக்கம் உடையவர்களின் வாய்ச்சொற்கள் வழுக்குதலையுடைய நிலத்தில் ஊன்றுகோல் போல் வாழ்க்கையில் துன்பம்ஏற்படும் போது நம்மக்கு உதவி செய்யும். 

எனது கருத்து:

இப்ப மழை பெஞ்சு சேறாய்போய் கிடக்கிற நிலத்துக்கை எப்பிடி நடப்பியள் ?? தையா தக்கா நடனம் போடுவியள் . அப்ப ஒருத்தர் கைபிடிக்கிற பொல்லு மாதிரி உங்களுக்கு கை தந்தால் எப்பிடியிருக்கும் உங்களுக்கு ?? அப்பிடித்தான் படிச்சவன் பெரியவன் சொல்லிற கதையளும் கஸ்ரமான நேரத்திலை கைகுடுக்கும் கண்டியளோ .

Like staff in hand of him in slippery ground who strays Are words from mouth of those who walk in righteous ways. 

Telles que le bâton qui empêche de glisser dans la boue, 
les paroles des hommes vertu eux servent de soutien. 

எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும் 
ஆன்ற பெருமை தரும். 416 

ஒருவன் மிகச்சிறிய அளவினதாயினும் நன்மைதரும் சான்றோர் வாய்ச்சொல்லைக் கேட்க்கவேண்டும் . அது சிறிதாயினும் அவனுக்கு நிறைந்த பெருமையைத் தரும் . 

எனது கருத்து:

இது எப்பிடி எண்டு எனக்கு விளங்கேலை . எங்களுக்கு 25 பேருக்கு கிட்ட நல்லதைதான் சொல்லீச்சினம் . எங்களுக்கு பெருமையா கிடைச்சுது ???

Ecoutez les bonnes paroles, si peu nombreuses soient-elles. Elles procurent une grande dignité, proportionnée à leur petit nombre.

பிழைத்துணர்ந்தும் பேதைமை சொல்லா ரிழைத்துணர்ந் 
தீண்டிய கேள்வி யவர். 417

நுட்பமாக ஆராய்ந்து தேடிய அறிவினோடு கேள்வியறிவும் உடையபவர்கள் , ஒரு பொருளைத் தவறாக உணர்ந்தாலும் அறிவீனமான சொற்களைக் கூறமாட்டார்கள் .

எனது கருத்து:

இதை எங்கட பெரிசுகள் " நிறைகுடம் தளும்பாது " எண்டு சொல்லுங்கள் . படிச்சவன் ,வாழ்கை அனுபவஞானம் உள்ளவன் தான் கேள்விப்பட்ட விசையம் பிழையாய் இருந்தாலும் , பொது இடங்களிலை லூசுக் கதையள் கதைக்க மாட்டான் . 

Not e'en through inadvertence speak they foolish word, With clear discerning mind who've learning's ample lessons heard. 

Ceux qui ont examiné et saisi le sens délicat ( des choses ) et qui en ont discuté avec les sages ne disent pas des paroles qui trahissent l'ignorance, même lorsqu'ils ont mal compris. 

கேட்பினுங் கேளாத் தகையவே கேள்வியால் 
தோட்கப் படாத செவி. 418 

சான்றோர் கூறும் நூற்பொருளைக் கேட்டலால் நலம் பெறாத காதுகள் , கேட்க்கும் இயல்பினவே ஆனாலும் செவிடான தன்மை உடையனவாகவே மதிக்கப்படும். 

எனது கருத்து:

நாங்கள் சிலபேரை பாத்து கேப்பம் " உனக்கு மண்டையுக்கை ஏதாவது இருக்கோ??" எண்டு . ஏனெண்டால் அவன் மூளை இருந்தும் அதை பாவிக்காமல் இருக்கிறதாலை இப்பிடி கேப்பம் . அதைமாதிரித்தான் காது இருந்தும் கேள்வியறவு இல்லாட்டில் அவனை செகிடன் எண்டு சொல்லிறம் .

Where teaching hath not oped the learner's ear, The man may listen, but he scarce can hear. 

L'oreille où n'a pas pénétré l'enseignement entend des sons mais est insensible en réalité. 

நுணங்கிய கேள்விய ரல்லார் வணங்கிய 
வாயின ராதல் அரிது. 419 

நுட்பமான கேள்வியறிவில்லாதவர் பிறரிடம் பணிவுடன் கூடிய சொற்களைக் கூறுதல் இயலாது. 

எனது கருத்து:

இப்ப அரைவாசி தண்ணி இருக்கிற செம்பு எந்த நேரமும் சளக்குப் புளக்கு எண்டு சத்தம் போட்டு , மற்றவனின்ரை பிறசறை ஏத்திக் கொண்டு இருக்கும் . ஆனல் இந்த நுட்பம் எண்ட தண்ணி நிரம்பின செம்பு ஆடாமல் அசையாமல் அமைதியாய் இருக்கும் . இதைத்தான் பெரிசுகள் சொல்லுவினம் நிறைகுடம் தளும்பாது எண்டு கண்டியளோ .

'Tis hard for mouth to utter gentle, modest word, When ears discourse of lore refined have never heard. 

Ceux qui n'ont pas l'oreille délicate ne peuvent avoir le langage respectueux

செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள் 
அவியினும் வாழினும் என். 420

காதுகளால் கேட்டறியும் சுவைகளைக் கேட்டு உணர்ந்து கொள்ளாமல் , வாயால் சுவைத்து உண்ணப்படும் சுவைகளையே அறிந்த மக்கள் இறந்தாலும் வாழ்ந்தாலும் உலகிற்கு நன்மை ஒன்றும் இல்லை .

எனது கருத்து:

கேள்விஞானமும் வாழ்க்கை அனுபவமும் இல்லாமல் , வெறுமன வண்டி வளர்க்கிறதுதுக்கு மட்டும் சீவிக்கிற சனங்களாலை சிவசத்தியமாய் ஒரு பிரையோசனமும் இல்லை . இப்பிடியான ஆக்கள் இருக்கிறதும் ஒண்டுதான் செத்துபோறதும் ஒண்டுதான் . 

His mouth can taste, but ear no taste of joy can give! What matter if he die, or prosperous live? 

Qu'importe que ceux qui ne connaissent pas les délices de l'oreille mais seulement le goût du palais, meurent ou vivent ? 
Let each man good things learn, for e'en as he Shall learn, he gains increase of perfect dignity. 


Comments

Popular posts from this blog

அறத்துப்பால்- துறவறவியல்- கொல்லாமை-Not killing- Ne pas tuer- 321-330.

அறத்துப்பால்-துறவறவியல்-கொல்லாமை-Not killing-Ne pas tuer-321-330.


அறவினை யாதெனில் கொல்லாமை கோறல் பிறவினை எல்லாம் தரும். 321
அறச்செயல் எதுவென்றால் எந்த ஓர் உயிரையும் கொல்லாத செயலே . அவ்வாறு கொல்லுதல் பிறதீவினைகளை எல்லாம் தானே கொண்டுவரும்.
எனது கருத்து:
நியாயமான சீவியம் எண்டால் மற்றவனைப் போடுத்தள்ளாமல் இருக்கிறதுதான் அப்பிடி போட்டுத்தள்ள வெளிக்கிட்டால் பாருங்கோ சொந்தச் செலவிலை சூனியம் செய்யவேண்டிவரும் உதாரணத்திக்கு ஏன் வெளியாலை போவான் நம்மடை மகிந்து
What is the work of virtue? 'Not to kill'; For 'killing' leads to every work of ill. 
Qu’est ce que l’acte vertueux? C’est ne pas tuer; tuer engendre tous les péchés. 
பகுத்து உண்டு பல்லுயிர் ஓம்புதல், நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை. 322
கிடைத்ததைப் பகுத்துக்கொடுத்து தானும் உண்டு , பல உயிர்களையும் காப்பாற்றுதல் , அற நூலோர் தொகுத்துக்கூறிய அறங்கள் எல்லாவற்றிற்கும் தலையாய அறமாகும் .
எனது கருத்து:
மனுசனாப் பிறந்தால் கடைசி ஒருத்தனுக்காவது பிரையோசனமாய் இருக்கவேணும் கண்டியளோ . சிலபேற்றை வீட்டை போனியள் எண்டால் முழங்கையிலை பிடிச்ச…

இல்லறவியல் ஒழுக்கமுடைமை-The Possession of Decorum - La moralité .131 - 140.

அறத்துப்பால். இல்லறவியல் ஒழுக்கமுடைமை- The Possession of Decorum- La moralité-131-140.


ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும். 131
ஒழுக்கம் எப்போதும் மேன்மையைத் தருவதால் , அந்த ஒழுக்கமே உயிரினும் மேலானதாகப் போற்றப்படுகின்றது .
எனது கருத்து:
ஒருத்தருக்கு ஒழுக்கம் அக ஒழுக்கம் புற ஒழுக்கம் எண்டு ரெண்டு வகையாலுமே இருக்கவேணும் இருந்தால் மட்டும் காணாது அதை அவற்றை உயிரைவிட உயர்வாய் பேணிப் பாதுக்கவேணும் அதைத்தான் இந்தக் குறளும் சொல்லுது
Decorum' gives especial excellence; with greater care 'Decorum' should men guard than life, which all men share.
Puisque la moralité honore tous les hommes, il faut la conserver de préférence à la vie.
பரிந்துஓம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்துஓம்பித் தேரினும் அஃதே துணை. 132
வருந்தியேனும் ஒழுக்கத்தைப் போற்றிக் காக்கவேண்டும் . பலவற்றை ஆராய்ந்து பாரத்தாலும் ஒழுக்கமே உயிரிற்குத் துணையாகும் .
எனது கருத்து:
எப்பிடித்தான் பாத்தாலும் ஒழுக்கமாய் இருக்கிறதுதான் நல்லது ஆனால் அது அவ்வளவு லேசான விசையமில்லை அதுக்கு ஒருத்தர் கனக்க விலையள் குடுக்க …

அறத்துப்பால்-துறவறவியல்-நிலையாமை- Instability-De l’instabilité- 331-340.

அறத்துப்பால்-துறவறவியல்-நிலையாமை- Instability-De l’instabilité-331-340.


நில்லாத வற்றை நிலையின என்று உணரும் புல்லறி வாண்மை கடை. 331
நிலையில்லாதவற்றை நிலையானவை என்று எண்ணி மயங்குகின்ற புல்லறிவாண்மை ( அற்ப அறிவு )துறந்தார்க்கு இழிவாகும் .
எனது கருத்து :
ஒரு உயிரை உடம்புக்குளை கடவுள் விடேக்கை அதுக்கு ஒரு கால அளவை வைச்சுத்தான் விடுறார் . கொஞ்சக்காலத்தில அந்த உடம்பு இல்லாமல் போடும் . இது எங்களுக்கும் சரி இளையராசாவுக்கும் சரி ஒண்டுதான் . இதுகள் தெரியாமல் இந்த சனங்களுக்கை எவ்வளவு புடுங்குபாடுகள் குத்துபாடுகள் ?? இந்த அற்ப குணத்தாலை மனசிலை வளராத கூட்டங்களாய் இந்த சனங்கள் இருக்கிதுகள் .
Lowest and meanest lore, that bids men trust secure, In things that pass away, as things that shall endure!
C’est la dernière des sottises, que de croire que ce qui est instable est stable.
கூத்துஆட்டு அவைக்குழாத்து அற்றே பெருஞ்செல்வம் போக்கும் அதுவிளிந் துஅற்று. 332
பெருஞ் செல்வம் வந்து சேர்தல் கூத்தாடுமிடத்தில் கூட்டம் வந்து கூடுவதைப் போன்றது அது நீங்கிப் போதலும் கூத்து முடிந்ததும் கூட்டம் கலைவதைப் போன்றது
எனத…