Skip to main content

பொருட்பால் - அரசியல் - கல்லாமை - Ignorance -Du Défaut d'Instruction- 401- 410.


பொருட்பால் - அரசியல் - கல்லாமை-Ignorance-Du Défaut d'Instruction-401-410. 
 
அரங்குஇன்றி வட்டுஆடி அற்றே நிரம்பிய 
நூல்இன்றிக் கோட்டி கொளல். 401

நிரம்பிய நூல் அறிவு இல்லாமல் ஒருவன் அறிவுடையோர் சபையில் சென்று பேசுதல், அரங்கம் இல்லாமல் வட்டாடுதல் போன்றதற்கு ஒப்பாகும்.

எனது கருத்து:

இதைத்தான் ஆழம் அறிஞ்சு காலை விடவேணும் எண்டு சொல்லுவினம் . ஒரு இடத்திலை ஒருவிசையத்தை பத்திக் கதைக்கவேணுமெண்டால் அதுசம்பந்தமய் சரியா தெரியவேணும். ஆனால் இந்த குப்பையில கிடக்கிற குண்டுமணி போலை இருக்கிற அறிவாளியளை எந்தவகையிலை சேர்க்கிறது ?? அவை எந்தப் புத்தகத்தை படிச்சவை ??

Like those at draughts would play without the chequered square, Men void of ample lore would counsels of the learned share.

Discourir dans une réunion, sans avoir une instruction pleine et entière, c'est jouer aux dés sans damier.

கல்லாதான் சொற்கா முறுதல் முலைஇரண்டும்
இல்லாதாள் பெண்காமுற்றுஅற்று. 402

கல்லாதவன் தானும் அவையில் பேசவேண்டும் என்று விரும்புதல் , இரண்டு முலைகளும் இல்லாத ஒருத்தி பெண்மையை விரும்பியது போலாகும்

எனது கருத்து:

ஐயன் இதிலை நல்லாய் குளப்பிறர் . படிக்காதவன் படிச்ச இடத்திலை பேச ஆசைப்படுகிறது , மார்பகம் இல்லாத ஒருத்தி உடலுறவு கொள்ள ஆசைப்படுகிறதை போல எண்டு . ஏன் மார்பகம் இல்லாதவள் உடலுறவு கொள்ள முடியாதா ?? இது தாய்குலத்தை கேவலப்படுதிற மாதிரி இருக்கு . அதோடை பணம் எண்ட விசையம் தான் படிக்காதவனையும் படிச்சவனாக்குது ஐயன் .

Like those who doat on hoyden's undeveloped charms are they, Of learning void, who eagerly their power of words display.

Prendre plaisir à écouter les paroles d'un homme sans instruction, c'est ressembler à la femme qui, privée des deux seins, désire exercer les attributs de la femme (plaire aux hommes).

கல்லா தவரும் நனிநல்லர் கற்றார்முன்
சொல்லாது இருக்கப் பெறின்.403

கற்றவர் முன்னிலையில் ஒன்றையும் பேசாமல் அமைதியாக இருக்கப் பெற்றால் , கல்லாதவர்களும் நல்லவரேயாவர் .

எனது கருத்து:

இதை இப்பிடியும் சொல்லலாம் , பச்சோந்தி வேலை எண்டு . அதாவது எல்லாருக்கும் நல்லபிள்ளையாய் இருக்கிறது . ஒருத்தனுக்கு கடவுள் ஐஞ்சு புலனையும் குடுத்தது , தான் நினைச்சதை மற்றவனோடை பகிர வேணுமெண்டதுக்காக . ஒருத்தன் படிச்சவனோ இல்லையோ எண்டதை அவனை சுத்தியிருக்கிற சனம் சொல்லவேணும் .

Like those who doat on hoyden's undeveloped charms are they, Of learning void, who eagerly their power of words display.

Même, les hommes sans instruction se rendent meilleurs, en s'abstenant de parler, dans une assemblée d'hommes instruits.

கல்லாதான் ஒட்பம் கழியநன்று ஆயினும்
கொள்ளார் அறிவுடை யார். 404

படிக்காதவனுடைய அறிவு சில இடங்களில் மிகவும் நன்றாய் இருப்பினும் , கற்றறிந்த சான்றோர்கள் அதை நன்றென்று ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் .

எனது கருத்து:

இதென்ன அனியாயம் ?? வாழ்க்கையிலை அனுபவத்தை மட்டுமே படிச்ச மேதையள் உலகத்தின்ரை சரித்திரத்தையே புரட்டி போட்டிருக்கினம் . இவையை படிச்சவை ஏற்றுக்கொள்ளேலையோ ஐயன் ?? உங்கடை ஒருபக்க சார்பான கருத்துகளை என்னாலை ஏத்துக்கொள்ளேலாது .

The wise receive them not, though good they seem to show.

La connaissance d'un homme sans instruction, si elle est parfois appréciable, n'est pas prisée par les hommes instruits.

கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து
சொல்லாடச் சோர்வு படும். 405

கல்லாதவன் தன்னைக் கற்றவன் போல மதித்துக் கொண்டு பேசினால் அவனுக்கு இயல்பாக உள்ள மதிப்பும் கெட்டுப் போகும் .

எனது கருத்து:

படிப்பறிவில்லாதவன் தான் பெரிய கொம்பன் மாதிரி படிச்சவனோடை கதைக்கேக்கை அவன்ரை வேசம் கலைஞ்சு போடும் எண்டு நீங்கள் சொன்னாலும் , படிச்சவனே இந்த பணம் பதவியளுக்காக படிக்காவனுக்கு சலாம் போடுறதை என்னெண்டு சொல்லிறது ஐயன் ??

As worthless shows the worth of man unlearned, When council meets, by words he speaks discerned.

L'estime dont s'abuse un illettré, se dissipe lors qu'il converse avec Un homme instruit.

உளர்என்னும் மாத்திரையர் அல்லால் பயவாக்
களர்அனையர் கல்லா தவர். 406

கற்கவேண்டிய நூல்களைக் கற்று அறிவு பெறாதவர் உயிரோடு வாழ்பவர் என்று கூறும்அளவினரேயல்லாமல் தமக்கோ பிறர்க்கோ பயன்படாத உவர் நிலத்துக்கு ஒப்பாவர் .

எனது கருத்து:

படிக்காதவை இந்த உலகத்திலை உயிரோடை இருக்கிறதும் ஒண்டுதான் இல்லாமல் இருக்கிறதும் ஒண்டுதான் . எப்படியெண்டால் இவைதரவளியள் ஒண்டுக்குமே உதவாத பலைவனத்துக்க சமனானவை எண்டு செரியா நொந்து போய் ஐயன் சொல்லியிருக்கிறார் .

'They are': so much is true of men untaught; But, like a barren field, they yield us nought!

Les illettrés sont bons pour être recensés, mais ils ressemblent (parce qu'ils ne sont utiles à personne) à la terre à soude, qui est improductive.

நுண்மாண் நுழைபுலம் இல்லான் எழில்நலம்
மண்மாண் புனைபாவை அற்று.407

நுட்பமான நூல்களைக் கல்லாதவன் பெற்ற உடலழகு , மண்ணால் மாட்சிமைப்படச் செய்யப்பட பதுமையின் அழகு போன்றதாம் .

எனது கருத்து:

சிலபேரை பாத்தியள் எண்டால் அந்தமாதிரி இருப்பினம் . அவையோடை கதைக்க வெளிக்கிட்டியள் எண்டால் கூவம்தான் ஓடும் . அவ்வளவு அறிவு . இப்பிடி இருக்கிறவையை வடிவான மண்பானையோடை ஐயன் ஒப்பிட்டாலும் , ஆள் பாதி ஆடை பாதி எண்ட சொலவடையும் என்ரை மண்டையுக்கை இடிக்கிது கண்டியளோ .

Who lack the power of subtle, large, and penetrating sense, Like puppet, decked with ornaments of clay, their beauty's vain pretence.

La grâce et la beauté de celui qui n'a pas des connaissances fines et dignes d'estime, ressemblent à celles d'une statue en plâtre, artistement façonnée.

நல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாதே
கல்லார்கண் பட்ட திரு. 408

கற்றவரிடமுள்ள வறுமையைக் காட்டிலும் , கல்லாதவரிடம் உள்ள செல்வம் மிகவும் துன்பம் தருவதாகும் .

எனது கருத்து:

இதை எங்கடை பெரிசுகள் " குரங்கின்ரை கையிலை பூமாலையை குடுத்திருக்கிறாங்கள் " எண்டு சொல்லுவினம் . ஒருபடிச்சவினிட்டை இருக்கிற கஸ்ரத்தைவிட இந்த கைநாட்டுகளிட்டை இருக்கிற செல்வம் செரியான டேஞ்சர் மாற்றர் கண்டியளோ .

To men unlearned, from fortune's favour greater-evil springs
Than poverty to men of goodly wisdom brings.

La richesse des illettrés engendre plus de souffrances que la pauvreté des hommes instruits.

மேற்பிறந்தார் ஆயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும்
கற்றார் அனைத்துஇலர் பாடு. 409

மேற்குடியில் பிறந்த கல்லாதவர் , தாழ்ந்த குடியிற் பிறந்த கற்றவரைப் போலப் பெருமை உடையவர் ஆகார்.

எனது கருத்து:

லொஜிக் பிழைக்குதே ஐயன்? மேற்குடியிலை பிறந்தவனுக்கு படிப்பில்லாட்டிலும் அவனின்ரை சொத்துப்பத்துகளாலை படிப்பை விலைக்கு வாங்கி, தான் ஏதோ கொம்பன் எண்டகணக்காய் சுத்தித்திரிவான். ஆனால் கண்டியளோ சாதி குறைஞ்சவனிட்டை பெரிசாய்சொத்துப்பத்து இருக்காது. அவனின்ரை படிப்பை ஆர்தான்  மதிக்கினம்? இதைத்தான் எங்கடை பெரிசுகள் சொல்லுவினம் "ஏழை சொல் சபையேறாது"எண்டு.

Lower are men unlearned, though noble be their race, Than low-born men adorned with learning's grace.

Les illétrés, bien qu'ils soient d'une haute extraction, sont moins estimés que les hommes instruits de basse origine.

விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல்
கற்றாரோடு ஏனை யவர். 410

கற்றவரே மக்கள் என மதிக்கப்படுவார் , கல்லாதவர் மிருகத்திற்குச் சமம் ஆவர்.

எனது கருத்து:

நாங்கள் சிலபேரை கோபத்திலை மிருகங்கள் எண்டு பேசுவம் . ஏனெண்டால் , ஆறாவது அறிவான பகுத்தறிவு எண்ட படிப்பால வாற அறிவு இருந்தும் , பகுத்தறிவில்லாத மிருகங்களைப் போல நடக்கிறதாலைதான் . இதைத்தான் ஐயனும் சொல்லியிருக்கிறார் .

Learning's irradiating grace who gain, Others excel, as men the bestial train.

Les illettrés ressemblent aux animaux, comparés avec les gens instruits qui sont des hommes.
Comments

Popular posts from this blog

அறத்துப்பால்- துறவறவியல்- கொல்லாமை-Not killing- Ne pas tuer- 321-330.

அறத்துப்பால்-துறவறவியல்-கொல்லாமை-Not killing-Ne pas tuer-321-330.


அறவினை யாதெனில் கொல்லாமை கோறல் பிறவினை எல்லாம் தரும். 321
அறச்செயல் எதுவென்றால் எந்த ஓர் உயிரையும் கொல்லாத செயலே . அவ்வாறு கொல்லுதல் பிறதீவினைகளை எல்லாம் தானே கொண்டுவரும்.
எனது கருத்து:
நியாயமான சீவியம் எண்டால் மற்றவனைப் போடுத்தள்ளாமல் இருக்கிறதுதான் அப்பிடி போட்டுத்தள்ள வெளிக்கிட்டால் பாருங்கோ சொந்தச் செலவிலை சூனியம் செய்யவேண்டிவரும் உதாரணத்திக்கு ஏன் வெளியாலை போவான் நம்மடை மகிந்து
What is the work of virtue? 'Not to kill'; For 'killing' leads to every work of ill. 
Qu’est ce que l’acte vertueux? C’est ne pas tuer; tuer engendre tous les péchés. 
பகுத்து உண்டு பல்லுயிர் ஓம்புதல், நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை. 322
கிடைத்ததைப் பகுத்துக்கொடுத்து தானும் உண்டு , பல உயிர்களையும் காப்பாற்றுதல் , அற நூலோர் தொகுத்துக்கூறிய அறங்கள் எல்லாவற்றிற்கும் தலையாய அறமாகும் .
எனது கருத்து:
மனுசனாப் பிறந்தால் கடைசி ஒருத்தனுக்காவது பிரையோசனமாய் இருக்கவேணும் கண்டியளோ . சிலபேற்றை வீட்டை போனியள் எண்டால் முழங்கையிலை பிடிச்ச…

இல்லறவியல் ஒழுக்கமுடைமை-The Possession of Decorum - La moralité .131 - 140.

அறத்துப்பால். இல்லறவியல் ஒழுக்கமுடைமை- The Possession of Decorum- La moralité-131-140.


ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும். 131
ஒழுக்கம் எப்போதும் மேன்மையைத் தருவதால் , அந்த ஒழுக்கமே உயிரினும் மேலானதாகப் போற்றப்படுகின்றது .
எனது கருத்து:
ஒருத்தருக்கு ஒழுக்கம் அக ஒழுக்கம் புற ஒழுக்கம் எண்டு ரெண்டு வகையாலுமே இருக்கவேணும் இருந்தால் மட்டும் காணாது அதை அவற்றை உயிரைவிட உயர்வாய் பேணிப் பாதுக்கவேணும் அதைத்தான் இந்தக் குறளும் சொல்லுது
Decorum' gives especial excellence; with greater care 'Decorum' should men guard than life, which all men share.
Puisque la moralité honore tous les hommes, il faut la conserver de préférence à la vie.
பரிந்துஓம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்துஓம்பித் தேரினும் அஃதே துணை. 132
வருந்தியேனும் ஒழுக்கத்தைப் போற்றிக் காக்கவேண்டும் . பலவற்றை ஆராய்ந்து பாரத்தாலும் ஒழுக்கமே உயிரிற்குத் துணையாகும் .
எனது கருத்து:
எப்பிடித்தான் பாத்தாலும் ஒழுக்கமாய் இருக்கிறதுதான் நல்லது ஆனால் அது அவ்வளவு லேசான விசையமில்லை அதுக்கு ஒருத்தர் கனக்க விலையள் குடுக்க …

அறத்துப்பால்-துறவறவியல்-நிலையாமை- Instability-De l’instabilité- 331-340.

அறத்துப்பால்-துறவறவியல்-நிலையாமை- Instability-De l’instabilité-331-340.


நில்லாத வற்றை நிலையின என்று உணரும் புல்லறி வாண்மை கடை. 331
நிலையில்லாதவற்றை நிலையானவை என்று எண்ணி மயங்குகின்ற புல்லறிவாண்மை ( அற்ப அறிவு )துறந்தார்க்கு இழிவாகும் .
எனது கருத்து :
ஒரு உயிரை உடம்புக்குளை கடவுள் விடேக்கை அதுக்கு ஒரு கால அளவை வைச்சுத்தான் விடுறார் . கொஞ்சக்காலத்தில அந்த உடம்பு இல்லாமல் போடும் . இது எங்களுக்கும் சரி இளையராசாவுக்கும் சரி ஒண்டுதான் . இதுகள் தெரியாமல் இந்த சனங்களுக்கை எவ்வளவு புடுங்குபாடுகள் குத்துபாடுகள் ?? இந்த அற்ப குணத்தாலை மனசிலை வளராத கூட்டங்களாய் இந்த சனங்கள் இருக்கிதுகள் .
Lowest and meanest lore, that bids men trust secure, In things that pass away, as things that shall endure!
C’est la dernière des sottises, que de croire que ce qui est instable est stable.
கூத்துஆட்டு அவைக்குழாத்து அற்றே பெருஞ்செல்வம் போக்கும் அதுவிளிந் துஅற்று. 332
பெருஞ் செல்வம் வந்து சேர்தல் கூத்தாடுமிடத்தில் கூட்டம் வந்து கூடுவதைப் போன்றது அது நீங்கிப் போதலும் கூத்து முடிந்ததும் கூட்டம் கலைவதைப் போன்றது
எனத…