Skip to main content

அறத்துப்பால்-இல்லறவியல்- இனியவைகூறல்-The Utterance of Pleasant Words- Douceur de language- 91 - 100.


அறத்துப்பால்- இல்லறவியல் இனியவைகூறல்- The Utterance of Pleasant Words- Douceur de language- 91- 100. 


இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம்
செம்பொருள் கண்டார்வாய்ச் சொல். 91

செம்மையான பொருளை அறிந்தவர்களின் வாய்ச்சொற்கள் , இனிய சொற்களாய் , அன்பு கலந்ததாய் , வஞ்சம் இல்லாததாய் இருக்கும் .

எனது கருத்து :

இனிய சொல்லு எண்டால் என்ன ? ஒருத்தர் கதைக்கிற கதை , வஞ்கமில்லாததாயும் , உண்மையானதாகவும் , அன்பாய் , பண்பாய் இருந்தால் , அதுதான் இனியசொல்லு எண்டு வடிவாய் ஐயன் விளக்கம் தாறார் ஆனால் , இப்பிடியெல்லாம் கதைச்சுத் தானே எங்களைக் கவுட்டுக் கொட்டினவங்கள் .

Pleasant words are words with all pervading love that burn; Words from his guileless mouth who can the very truth discern.

Les paroles douces sont celles des hommes qui abordent affablement et qui pratiquent la vertu de parler sans dissimulation.

அகன்அமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்து
இன்சொலன் ஆகப் பெறின். 92

முகமலர்ந்து இன்சொல் உடையவனாய் இருக்கப் பெற்றால் , மனம் மகிழ்ந்து பொருள் கொடுக்கும் ஈகையை விட நல்லதாகும் .

எனது கருத்து :

நீங்கள் எந்தநேரமும் சிரிச்சமுகத்தோடை அன்பாய் பண்பாய் கதைப்பிங்கள் எண்டால் ( ஒருத்தர் உங்களிட்டைக் கடன் கேட்டாலும் ) , மனங்குளிர்ந்து ஒரு சமானைக் குடுக்கிறவரைவிட நீங்கள் மேலான ஆளாம் .

A pleasant word with beaming smile's preferred, Even to gifts with liberal heart conferred.

Il vaut mieux recevoir, le visage souriant et avec des paroles obligeantes, que donner généreusement à quelqu’un (tout ce qu’il lui faut.)

முகத்தான் அமர்ந்து இனிதுநோக்கி அகத்தானாம்
இன்சொ லினதே அறம். 93

முகம் மலர்ந்து இனிமையுடன் நோக்கி உள்ளங் கலந்த இனிய சொற்களைக் கூறுவதே அறமாகும்

எனது கருத்து :

எங்களைப் பாத்து , முகத்தாலை விரும்பி , இனிமையாப்பாத்து ,உள்ளத்தாலை தான் , நோர்வேயில இருந்து ஒருத்தர் வந்து சாமாதானம் பேசுவம் எண்டு சொன்னார் . கடைசீல என்ன நடந்திது ? இதை எப்படி அறமாக எடுக்கமுடியும்???????????

With brightly beaming smile, and kindly light of loving eye, And heart sincere, to utter pleasant words is charity.

La vertu consiste à avoir (lorsque la rencontre se fait) l’air avenant, le regard gracieux, puis à dire du fond du cœur, des paroles agréables.

துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும்
இன்புறூஉம் இன்சொ லவர்க்கு. 94

யாவரிடத்திலும் இன்பத்தை மிகுவிக்கின்ற இன்சொல்லை உடையவருக்குத் துன்பத்தை மிகுவிக்கின்ற வறுமை இல்லாது ஒழியும்.

எனது கருத்து :

அப்ப ஏன் பாரதியாருக்கு வறுமை வந்தது?? எல்லோரையும் இன்புறுவிக்கிற தமிழ்க் கவிதையைத் தானே தந்தான் . இந்தக் குறளில எனக்கு உடன்பாடில்லை .

The men of pleasant speech that gladness breathe around, Through indigence shall never sorrow's prey be found.

La misère qui engendre les souffrances n’atteint jamais ceux dont les paroles douces rejouissent tout le monde.

பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு
அணி; அல்ல மற்றுப் பிற. 95

வணக்கம் உடையவனாகவும், இன்சொல் கூறுவோனாகவும் ஆதலே ஒருவனுக்கு அணிகலனாகும். பிறவெல்லாம் உண்மையான அணிகலன்கள் ஆகாது.

எனது கருத்து :

நீங்கள் உங்களுக்கு கீழை வேலை செய்யிற ஆக்களிட்டையும் , அன்பாய் பண்பாய் கதைச்சியளெண்டால் அவை உங்களுக்கு தாற மரியாதையும் அன்பும் சொல்லிவேலையில்லை . அதுதான் உங்கடை உண்மையான உள் உடுப்புகள் ( அணிகலன்கள் ).

Humility with pleasant speech to man on earth, Is choice adornment; all besides is nothing worth.

Respecter, parler avec douceur: voilà la parure de l’homme; il n’en est pas d’autre.

அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை
நாடி இனிய சொலின். 96

ஒருவன் தனக்கும் பிறர்க்கும் நன்மை தரும் சொற்களை ஆராய்ந்து இனிமையாகப் பேச வல்லவனாயின் அவனுக்குப் பாவங்கள் நீங்கிப் புண்ணியம் பெருகும் .

எனது கருத்து :

ஒருத்தர் நல்ல விசையங்களை மனசால கதைச்சுக்கொண்டு வந்தால் , அவருக்கும் நாட்டுக்கும் நல்லவிசயங்கள் நடக்கும் . அக்கிரமங்கள் குறையும் என்று ஐயன் சொன்னாலும் , இப்ப உள்ள நிலமையிலை காசுக்கும் சண்டியனுக்கும் தானே மரியாதை !!!!!!!!

Who seeks out good, words from his lips of sweetness flow; In him the power of vice declines, and virtues grow.

Les péchés diminuent et la vertu augments chez celui qui, cherchant les mots qui fassent du bien aux autres, parle avec douceur.

நயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று
பண்பின் தலைப்பிரியாச் சொல். 97

பிறர்க்கு நல்ல பயனைத் தந்து ,நல்ல பண்பிலிருந்து ஒரு சிறிதும் விலகாத சொற்கள், சொல்பவனுக்கு இன்பமும் தந்து நன்மையும் பயக்கும் .

எனது கருத்து :

நல்ல பண்பாய்க் கதைச்சு ( காந்தீயம் ) அதில இருந்து விலத்தாமல் அதால நல்ல பயனையும் மற்றவைக்குத் தந்த காந்திக்கு கடைசீல அது இன்பத்தையும் பயனையும் தந்திதா எண்ட கேள்வியும் எனக்கு வருகின்றது

The words of sterling sense, to rule of right that strict adhere, To virtuous action prompting, blessings yield in every sphere.

Les paroles serviables et douces procurent la justice et la vertu. 

சிறுமையுள் நீங்கிய இன்சொல் மறுமையும்
இம்மையும் இன்பம் தரும். 98

துன்பத்தைத் தரும் சிறுமையிலிருந்து நீங்கிய இனிய சொற்கள் மறுமையிலும் இம்மையிலும் சொல்பவனுக்கு இன்பத்தைத் தரும் .

எனது கருத்து :

சிலபேரைப் பாத்தால் நல்ல வசதியாய் இருப்பினம் ஆனால் எப்பவும் சின்னத்தனமான கதையள் கதைப்பினம் இந்தக்கதையள் இவைக்கு இருக்கேக்கையும் புகழ் சேர்க்காது இல்லாட்டிலும் புகழ் சேர்க்காது பகைவர்களைத்தான் கூடக் குடுக்கும்

Sweet kindly words, from meanness free, delight of heart, In world to come and in this world impart.

Les paroles douces et à l’abri de toute bassesse, procurent le bonheur en ce monde et dans l’autre. 

இன்சொல் இனிதுஈன்றல் காண்பான் எவன்கொலோ
வன்சொல் வழங்கு வது. 99

இனிய சொல் இன்பம் உண்டாக்குவதை அறிந்தவன் கடுஞ்சொற்களைச் சொல்வது என்ன பயன் கருதியோ தெரியவில்லையே!

எனது கருத்து :

சிலபேரை பாத்தால் எந்தநேரமும் " நாயே , பேயே " எண்டுதான் சொல்லிக்கொண்டிருப்பினம் . ஆக்களைப்பாத்தால் நல்ல படிச்சவையாய் இருப்பினம். ஆனால் வாய்குள்ளால வாறது கூவமாய்த் தான் இருக்கும் . முக்கியமாய் எங்கடை வாத்திமார் , வீட்டில மனிசிமாரோடை ஏத்தம் எண்டால் அண்டைக்கு வகுப்புப் பெடியள்பாடு கதைகந்தல் தான் . இவையெல்லாம் நல்லாய் படிச்சிருந்தும் , ஏன் கடுமையான வார்த்தையளைப் பாவிச்சவை ? எண்டு இண்டைக்கும் எனக்கு விளங்கேலை .

Who sees the pleasure kindly speech affords, Why makes he use of harsh, repellant words?

Quel est l’avantage escompté par celui qui voit les douces paroles causer du charme et qui emploie cependant des paroles dures?

இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந் துஅற்று. 100

இனிய சொற்கள் இருக்கும் போது ஒருவன் கடுமையான சொற்களைக் கூறுதல், இனிய கனிகள் இருக்கும்போது காய்களைத் தின்பதைப் போன்றது .

எனது கருத்து :

இதுக்குச் சுருக்கமாய் சொன்னால் , பிலாப்பழத்தைச் சாப்பிடவைச்சுக்கொண்டு அலரிக்காயைச் சாப்பிடிற மாதிரி .

When pleasant words are easy, bitter words to use, Is, leaving sweet ripe fruit, the sour unripe to choose.

Se servir de paroles dures, alors que l’on sait employer des paroles douces, c’est manger des fruits verts, quand on en a de mûrs.

Comments

Popular posts from this blog

இல்லறவியல் ஒழுக்கமுடைமை-The Possession of Decorum - La moralité .131 - 140.

அறத்துப்பால். இல்லறவியல் ஒழுக்கமுடைமை- The Possession of Decorum- La moralité-131-140.


ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும். 131
ஒழுக்கம் எப்போதும் மேன்மையைத் தருவதால் , அந்த ஒழுக்கமே உயிரினும் மேலானதாகப் போற்றப்படுகின்றது .
எனது கருத்து:
ஒருத்தருக்கு ஒழுக்கம் அக ஒழுக்கம் புற ஒழுக்கம் எண்டு ரெண்டு வகையாலுமே இருக்கவேணும் இருந்தால் மட்டும் காணாது அதை அவற்றை உயிரைவிட உயர்வாய் பேணிப் பாதுக்கவேணும் அதைத்தான் இந்தக் குறளும் சொல்லுது
Decorum' gives especial excellence; with greater care 'Decorum' should men guard than life, which all men share.
Puisque la moralité honore tous les hommes, il faut la conserver de préférence à la vie.
பரிந்துஓம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்துஓம்பித் தேரினும் அஃதே துணை. 132
வருந்தியேனும் ஒழுக்கத்தைப் போற்றிக் காக்கவேண்டும் . பலவற்றை ஆராய்ந்து பாரத்தாலும் ஒழுக்கமே உயிரிற்குத் துணையாகும் .
எனது கருத்து:
எப்பிடித்தான் பாத்தாலும் ஒழுக்கமாய் இருக்கிறதுதான் நல்லது ஆனால் அது அவ்வளவு லேசான விசையமில்லை அதுக்கு ஒருத்தர் கனக்க விலையள் குடுக்க …

அறத்துப்பால்- துறவறவியல்- கொல்லாமை-Not killing- Ne pas tuer- 321-330.

அறத்துப்பால்-துறவறவியல்-கொல்லாமை-Not killing-Ne pas tuer-321-330.


அறவினை யாதெனில் கொல்லாமை கோறல் பிறவினை எல்லாம் தரும். 321
அறச்செயல் எதுவென்றால் எந்த ஓர் உயிரையும் கொல்லாத செயலே . அவ்வாறு கொல்லுதல் பிறதீவினைகளை எல்லாம் தானே கொண்டுவரும்.
எனது கருத்து:
நியாயமான சீவியம் எண்டால் மற்றவனைப் போடுத்தள்ளாமல் இருக்கிறதுதான் அப்பிடி போட்டுத்தள்ள வெளிக்கிட்டால் பாருங்கோ சொந்தச் செலவிலை சூனியம் செய்யவேண்டிவரும் உதாரணத்திக்கு ஏன் வெளியாலை போவான் நம்மடை மகிந்து
What is the work of virtue? 'Not to kill'; For 'killing' leads to every work of ill. 
Qu’est ce que l’acte vertueux? C’est ne pas tuer; tuer engendre tous les péchés. 
பகுத்து உண்டு பல்லுயிர் ஓம்புதல், நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை. 322
கிடைத்ததைப் பகுத்துக்கொடுத்து தானும் உண்டு , பல உயிர்களையும் காப்பாற்றுதல் , அற நூலோர் தொகுத்துக்கூறிய அறங்கள் எல்லாவற்றிற்கும் தலையாய அறமாகும் .
எனது கருத்து:
மனுசனாப் பிறந்தால் கடைசி ஒருத்தனுக்காவது பிரையோசனமாய் இருக்கவேணும் கண்டியளோ . சிலபேற்றை வீட்டை போனியள் எண்டால் முழங்கையிலை பிடிச்ச…

அறத்துப்பால்-துறவறவியல்-நிலையாமை- Instability-De l’instabilité- 331-340.

அறத்துப்பால்-துறவறவியல்-நிலையாமை- Instability-De l’instabilité-331-340.


நில்லாத வற்றை நிலையின என்று உணரும் புல்லறி வாண்மை கடை. 331
நிலையில்லாதவற்றை நிலையானவை என்று எண்ணி மயங்குகின்ற புல்லறிவாண்மை ( அற்ப அறிவு )துறந்தார்க்கு இழிவாகும் .
எனது கருத்து :
ஒரு உயிரை உடம்புக்குளை கடவுள் விடேக்கை அதுக்கு ஒரு கால அளவை வைச்சுத்தான் விடுறார் . கொஞ்சக்காலத்தில அந்த உடம்பு இல்லாமல் போடும் . இது எங்களுக்கும் சரி இளையராசாவுக்கும் சரி ஒண்டுதான் . இதுகள் தெரியாமல் இந்த சனங்களுக்கை எவ்வளவு புடுங்குபாடுகள் குத்துபாடுகள் ?? இந்த அற்ப குணத்தாலை மனசிலை வளராத கூட்டங்களாய் இந்த சனங்கள் இருக்கிதுகள் .
Lowest and meanest lore, that bids men trust secure, In things that pass away, as things that shall endure!
C’est la dernière des sottises, que de croire que ce qui est instable est stable.
கூத்துஆட்டு அவைக்குழாத்து அற்றே பெருஞ்செல்வம் போக்கும் அதுவிளிந் துஅற்று. 332
பெருஞ் செல்வம் வந்து சேர்தல் கூத்தாடுமிடத்தில் கூட்டம் வந்து கூடுவதைப் போன்றது அது நீங்கிப் போதலும் கூத்து முடிந்ததும் கூட்டம் கலைவதைப் போன்றது
எனத…