Skip to main content

அறத்துப்பால்-துறவறவியல்-புலான்மறுத்தல்-The Renunciation of Flesh-Abstinence de chair- 251- 260.


அறத்துப்பால்-துறவறவியல்-புலான்மறுத்தல்- The Renunciation of Flesh-Abstinence de chair-251- 260. 
தன்ஊன் பெருக்கற்குத் தான்பிறிது ஊன்உண்பான்
எங்ஙனம் ஆளும் அருள்.251

தன் உடலைப் பெரிதாய் வளர்ப்பதற்காகத் தான் பிறிதோர் உயிரின் தசையைத் தின்கின்றவன் எவ்வாறு இரக்கமுள்ளவனாக இருக்கமுடியும் ?

எனது கருத்து:

உயிர்வதையை எல்லாரும் சொல்லியிருக்கினம் .ஆனால் ஆர்தான் கேக்கினம் ? எங்கடைசனம் வேள்வியிலையே கொடிகட்டிபறந்ததுகள் ? ஆனால் அதிலை சாகிற உயிருகளுக்கு வாய்மட்டும் இருந்தால் அதுகள் என்னபாடுபடுங்கள் எண்டு யோசிக்கிறேலை . கேவலம் தாங்கடை தசை வளர்றதுக்காக வாய்பேசாத பிராணியளை பிடிச்சுக் கொண்டு சாப்பிடுகிற சனத்திட்டை இரக்ககுணம் ஏதாவது வரும் எண்டு நினைக்கிறியளே ? அரக்ககுணம்தான் வரும் .

How can the wont of 'kindly grace' to him be known, Who other creatures' flesh consumes to feed his own?

Comment celui qui mange la chair d’un autre être animé, pour engraisser la sienne, peut-il se laisser gagner par la miséricorde. 

பொருளாட்சி போற்றாதார்க்கு இல்லை அருளாட்சி 
ஆங்கில்லை ஊன்தின் பவர்க்கு. 252

பொருளுடையவராக இருக்கும் தகுதி அப்பொருளைக் காப்பாற்றவருக்கு இல்லை . அவ்வாறே அருள் உடையவராகும் தகுதி ஊனைத்தின்பவருக்கு இல்லை.

எனது கருத்து:

பொருள்பண்டம் சேக்கிறது பெரிய வேலையில்லை .அதை வைச்சுக் காப்பாத்திறதுதான் கெட்டித்தனம் . அப்பிடைப்பட்டவையைத் தான் உடையார் எண்டு சொல்லுவினம் . அதைமாதிரி இறைச்சி தின்னிற ஆக்களிட்டை இரக்கம் எண்ட சிறப்பே இருக்காது .

No use of wealth have they who guard not their estate; No use of grace have they with flesh who hunger sate.

Les bienfaits de la richesse n’existent pas pour ceux qui ne la cultivent pas; ainsi que les bienfaits de la miséricorde n’existence pus pour ceux qui mangent la chair.

படைகொண்டார் நெஞ்சம்போல் நன்றுஊக்காது ஒன்றன்
உடல்சுவை உண்டார் மனம். 253

ஓர் உயிரின் உடலைச் சுவையாக உண்டவரின் மனம் கொலைக் கருவியைக் கையில் கொண்டவரின் நெஞ்சம் போல் இரக்கமற்றுக் காணப்படும் .

எனது கருத்து:

ஆயுதங்களை வைச்சிருக்கிறவையிட்டைப் போய் என்ரை உயிரைக் காப்பாத்துங்கோ எண்டு சொன்னால் இரங்குவினமோ ? அதுமாதிரித்தான் இறைச்சி சாப்பிடுறைவையிட்டையும் இரக்கத்தை எதிர்பாக்கேலாது .

Like heart of them that murderous weapons bear, his mind, Who eats of savoury meat, no joy in good can find.

Le cœur de celui qui mange avec goûte la chair d’un autre être animé ne se tourne pas vers la miséricorde, tout comme le cœur de celui qui a en main une arme meurtrière.

அருள்அல்லது யாதுஎனிற் கொல்லாமை கோறல்
பொருள்அல்லது அவ்வூன் தினல்.254

கொல்லாமையே அருள் ஆகும் . ஓர் உயிரைக் கொல்லுதல் அருள் இல்லாத தன்மையாகும் . அதன் ஊனைத் தின்னுதல் அறன் இல்லாத செயலாகும் .

எனது கருத்து:

ஒருத்தரிட்டை இரக்கம் இருக்குது எண்டிறதை அவர் ஒரு உயிரை கொல்லாமல் இருக்கிறதை வைச்சுத்தான் கணிக்கிறது . அதிலும் பாவமான வேலை இறைச்சியைத் தின்னுறது .

'What's grace, or lack of grace'? 'To kill' is this, that 'not to kill';To eat dead flesh can never worthy end fulfil.

Qu’est ce que la miséricorde? C’est ne pas vers tuer. Qu’est ce qui n’est pas miséricorde? C’est tuer. Donc, manger la chair qui provient du meurtre n’est pas vertueux

உண்ணாமை உள்ளது உயிர்நிலை; ஊன்உண்ண
அண்ணாத்தல் செய்யாது அளறு. 255

புலால் உண்ணும்பழக்கும் பெருகிக்கொண்டே போனால் பிராணிகள் உயிரோடு வாழும் நிலையே அரிதாகிவிடும் .ஊன் உண்டால் நரகம் அவனை வெளியே விடாது .

எனது கருத்து:

இதில எனக்கு சரியா உடன்பாடு இல்லாமல் கிடக்கு இயற்கை ஒரு சமனிலையை வைச்சிருக்கு . புலாலை உண்ணாமல் விட்டால் எல்லாம் குளம்பி போடுமல்லோ ?

If flesh you eat not, life's abodes unharmed remain; Who eats, hell swallows him, and renders not again.

La vie des êtres dépend donc de la vertu, appelée abstinence de la chair. Si quelqu’un en mange, l’enfer (qui l’a devoré), n’ouvrira plus la bouche pour le prix.

தின்னல்பொருட்டால் கொல்லாது உலகெனின் யாரும்
விலைப்பொருட்டால் ஊன்தருவார் இல்.256

புலாலைத் தின்னும் பொருட்டாக உயிர்களை உலகத்தார் கொல்லாதிருத்தால், விலையின் பொருட்டு ஊன் விற்பவர் இல்லாமல் போவார்.

எனது கருத்து:

எந்தச்சாமியும் தனக்கு அதைத்தா இதைத்தா எண்டு சனத்தைக் கேக்கேல . சனம்தான் விசர்பத்தி கோயில்வளிய கூத்தாடுதுகள் .அதில இந்த வேள்வியும் ஒண்டு .எவ்வளவு வாய்பேசாத உயிருகளை கொல்லினம் . இவையை நிப்பாட்டினால் ,வெட்டின பிராணியளின்ரை இறைச்சிகளை விக்கிறதுக்கும் ஆக்கள் இருக்கமாட்டினம் .

'We eat the slain,' you say, by us no living creatures die;Who'd kill and sell, I pray, if none came there the flesh to buy?

Si le monde ne tue pas pour manger la chair, il n’y aura personne qui en vende, pour en toucher le prix.

உண்ணாமை வேண்டும் புலாஅல்; பிறிதுஒன்றன்
புண்அது உணர்வார்ப் பெறின். 257

ஆராய்ந்து பார்த்தால் புலால் என்பது உயிரினங்களின் புண் என்பது நன்கு புலனாகும். இதை உணர்ந்து புலாலை உண்ணலாகாது .

எனது கருத்து:

ஒருத்தற்றை கையிலை கொஞ்சம் ஆழமாய் வெட்டுங்கோ . தசை பிஞ்சு தொங்கும் .அதை புண் எண்டிறம் . மருந்து கட்டிறம் புண் ஆற . இதைப்போலைதான் ஒரு வாய்பேசாத உயிரை வெட்டி சாப்பிட வெளிக்கிட்டால் அதுவும் புண்தான் . ஆராவது புண்ணை சாப்பிடுவானோ ?? அதாலை கொஞ்சம் யோசியுங்கோ .

With other beings' ulcerous wounds their hunger they appease;If this they felt, desire to eat must surely cease.

La viande est la plaie d’un autre être. Ceux qui en connaissent l’impureté doivent s’en abstenir.

செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் உண்ணார்
உயிரின் தலைப்பிரிந்த ஊன். 258

குற்றத்திலிருந்து நீங்கிய அறிவுடையோர், உயிர் வழிவந்த உடலை ஒருபோதும் உண்ணமாட்டார்கள் .

எனது கருத்து:

உங்கடை உடம்பிலை வெட்டுக்காயம் வரேக்கை இல்லாத கடவுளையெல்லாம் கூப்பிட்டு வலியில கத்திறியள் . அதே மாதிரித்தான் வய்பேசாத சீவனுகளை உங்கடை சாப்பிட்டுக்காக வெட்டேக்கை என்ன பாடுபடுங்கள் ??ஒழுங்கான படிச்ச பண்பான ஆக்கள் ஒருக்காலும் இந்த வேலையளைச் செய்து இறைச்சியை சாப்பிடமாட்டினம் .

Whose souls the vision pure and passionless perceive, Eat not the bodies men of life bereave.

Les sages qui se sont délivrés de l’Illusion et de l’Ignorance ne mangent pas la viande, d’où s’est échappée la vie d’un être. 

அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத்து உண்ணாமை நன்று.259

பலவேள்விகளைச் செய்வதால் கிடைக்கும் பலனை விட, புலால் உண்ணுதலைக் கைவிடுவதால் வரும் பலன் மிகவும்உயர்ந்ததாகும் .

எனது கருத்து:

ஆயிரம் அறுபத்தெட்டு வேள்வியள் செய்து சாமியைக் கும்பிடுறதை விட , ஒரு உயிரைக் கொண்டு அதின்ரை இறைச்சியை சாப்பிடாமல் இருக்கிறதே திறமான விசையம் கண்டியளோ .

Than thousand rich oblations, with libations rare, Better the flesh of slaughtered beings not to share.

Ne pas manger la chair d’un être dont on a enlevé la vie vaut mieux que faire mille sacrifices en ‘répandant du beurre clarifié sur le feu.

கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிரும் தொழும்.260

கொலை செய்யாமலும், புலால் உண்ணாமலும் வாழும் உயர்ந்த பண்பாளனை எல்லா உயிர்களும் கைகூப்பி வணங்கும்.

எனது கருத்து:

ஐயன் அந்தக்காலத்தில இருந்த நிலமையில சரியாத்தான் சொல்லியிருக்கிறார் . ஆனால் இண்டைக்கு நிலைமை அப்பிடியே கிடக்கு ?? எத்தின சாமிமார் ? அவையின்ரை வண்டவாளங்களெல்லாம் ஒவ்வண்டாய் வருகிது . இவையளும் தாங்கள் தான் கடவுளின்ர அவதாரம் எண்டெல்லாம் புலுடா விடுகியினம் . இவையளையும் இந்த உயிருகள் எல்லாம் கை எடுத்து கும்பிடுதா எண்டு ஒரு கேள்வி எனுக்குள்ள வருகிது .

Who slays nought,- flesh rejects- his feet before All living things with clasped hands adore.

Tout être animé vénère, les mains jointes, celui qui ne tue pas et qui a renoncé à la chair.

Comments

Popular posts from this blog

அறத்துப்பால்- துறவறவியல்- கொல்லாமை-Not killing- Ne pas tuer- 321-330.

அறத்துப்பால்-துறவறவியல்-கொல்லாமை-Not killing-Ne pas tuer-321-330.


அறவினை யாதெனில் கொல்லாமை கோறல் பிறவினை எல்லாம் தரும். 321
அறச்செயல் எதுவென்றால் எந்த ஓர் உயிரையும் கொல்லாத செயலே . அவ்வாறு கொல்லுதல் பிறதீவினைகளை எல்லாம் தானே கொண்டுவரும்.
எனது கருத்து:
நியாயமான சீவியம் எண்டால் மற்றவனைப் போடுத்தள்ளாமல் இருக்கிறதுதான் அப்பிடி போட்டுத்தள்ள வெளிக்கிட்டால் பாருங்கோ சொந்தச் செலவிலை சூனியம் செய்யவேண்டிவரும் உதாரணத்திக்கு ஏன் வெளியாலை போவான் நம்மடை மகிந்து
What is the work of virtue? 'Not to kill'; For 'killing' leads to every work of ill. 
Qu’est ce que l’acte vertueux? C’est ne pas tuer; tuer engendre tous les péchés. 
பகுத்து உண்டு பல்லுயிர் ஓம்புதல், நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை. 322
கிடைத்ததைப் பகுத்துக்கொடுத்து தானும் உண்டு , பல உயிர்களையும் காப்பாற்றுதல் , அற நூலோர் தொகுத்துக்கூறிய அறங்கள் எல்லாவற்றிற்கும் தலையாய அறமாகும் .
எனது கருத்து:
மனுசனாப் பிறந்தால் கடைசி ஒருத்தனுக்காவது பிரையோசனமாய் இருக்கவேணும் கண்டியளோ . சிலபேற்றை வீட்டை போனியள் எண்டால் முழங்கையிலை பிடிச்ச…

இல்லறவியல் ஒழுக்கமுடைமை-The Possession of Decorum - La moralité .131 - 140.

அறத்துப்பால். இல்லறவியல் ஒழுக்கமுடைமை- The Possession of Decorum- La moralité-131-140.


ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும். 131
ஒழுக்கம் எப்போதும் மேன்மையைத் தருவதால் , அந்த ஒழுக்கமே உயிரினும் மேலானதாகப் போற்றப்படுகின்றது .
எனது கருத்து:
ஒருத்தருக்கு ஒழுக்கம் அக ஒழுக்கம் புற ஒழுக்கம் எண்டு ரெண்டு வகையாலுமே இருக்கவேணும் இருந்தால் மட்டும் காணாது அதை அவற்றை உயிரைவிட உயர்வாய் பேணிப் பாதுக்கவேணும் அதைத்தான் இந்தக் குறளும் சொல்லுது
Decorum' gives especial excellence; with greater care 'Decorum' should men guard than life, which all men share.
Puisque la moralité honore tous les hommes, il faut la conserver de préférence à la vie.
பரிந்துஓம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்துஓம்பித் தேரினும் அஃதே துணை. 132
வருந்தியேனும் ஒழுக்கத்தைப் போற்றிக் காக்கவேண்டும் . பலவற்றை ஆராய்ந்து பாரத்தாலும் ஒழுக்கமே உயிரிற்குத் துணையாகும் .
எனது கருத்து:
எப்பிடித்தான் பாத்தாலும் ஒழுக்கமாய் இருக்கிறதுதான் நல்லது ஆனால் அது அவ்வளவு லேசான விசையமில்லை அதுக்கு ஒருத்தர் கனக்க விலையள் குடுக்க …

அறத்துப்பால்-துறவறவியல்-நிலையாமை- Instability-De l’instabilité- 331-340.

அறத்துப்பால்-துறவறவியல்-நிலையாமை- Instability-De l’instabilité-331-340.


நில்லாத வற்றை நிலையின என்று உணரும் புல்லறி வாண்மை கடை. 331
நிலையில்லாதவற்றை நிலையானவை என்று எண்ணி மயங்குகின்ற புல்லறிவாண்மை ( அற்ப அறிவு )துறந்தார்க்கு இழிவாகும் .
எனது கருத்து :
ஒரு உயிரை உடம்புக்குளை கடவுள் விடேக்கை அதுக்கு ஒரு கால அளவை வைச்சுத்தான் விடுறார் . கொஞ்சக்காலத்தில அந்த உடம்பு இல்லாமல் போடும் . இது எங்களுக்கும் சரி இளையராசாவுக்கும் சரி ஒண்டுதான் . இதுகள் தெரியாமல் இந்த சனங்களுக்கை எவ்வளவு புடுங்குபாடுகள் குத்துபாடுகள் ?? இந்த அற்ப குணத்தாலை மனசிலை வளராத கூட்டங்களாய் இந்த சனங்கள் இருக்கிதுகள் .
Lowest and meanest lore, that bids men trust secure, In things that pass away, as things that shall endure!
C’est la dernière des sottises, que de croire que ce qui est instable est stable.
கூத்துஆட்டு அவைக்குழாத்து அற்றே பெருஞ்செல்வம் போக்கும் அதுவிளிந் துஅற்று. 332
பெருஞ் செல்வம் வந்து சேர்தல் கூத்தாடுமிடத்தில் கூட்டம் வந்து கூடுவதைப் போன்றது அது நீங்கிப் போதலும் கூத்து முடிந்ததும் கூட்டம் கலைவதைப் போன்றது
எனத…