Skip to main content

அறத்துப்பால்- இல்லறவியல் அடக்கமுடைமை-The Possession of Self-restraint- La modestie 121 - 130.


அறத்துப்பால்- இல்லறவியல் அடக்கமுடைமை- The Possession of Self-restraint-La modestie-121-130.


அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆர்இருள் உய்த்து விடும். 121

அடக்கம் ஒருவனை உயர்த்தித் தேவருள் ஒருவனாகச் சேர்க்கும்.அடக்கம் இல்லாதிருத்தல் பேரிருள் ஆகிய நரகத்தில் சேர்த்து விடும் .

எனது கருத்து:

இந்த அதிகாரம் உண்மையிலேயே இன்றைய காலத்தில் சர்ச்சைக்குரிய விடையமாகும். இந்தக் குறளைப் பாத்தால் பண்பாட்டு ரீதியா பாத்தால் சரியே . இன்னுமொரு வழியால் பாத்தால் , சமரசம் செய்வதால் ஏற்படுகின்ற அடக்கம் ஏற்றுக்கொள்ளக்கூடியதா ?? இந்தவழியால பாத்தால் , உலகம் அமைதிப் பூங்காவாக அல்லவா இருக்கவண்டும் ??

Control of self does man conduct to bliss th' immortals share;Indulgence leads to deepest night, and leaves him there.

La modestie conduit à l’habitation des dêvas. La fatuité précipite dans le lieu inhabitable des ténèbres.

காக்க பொருளா அடக்கத்தை ; ஆக்கம்
அதனின்ஊஉங்கு இல்லை உயிர்க்கு. 122

அடக்கத்தை உறுதிப்பொருளாக் கொண்டு போற்றிக் காக்க வேண்டும். உயிருக்கு ஆக்கம்தரும் அடக்கத்திற்கு மேம்பட்ட செல்வம் வேறு இல்லை .

எனது கருத்து:

ஆறாவது அறிவு மனிதனாகப் பிறந்தவனுக்கு கிடைச்ச வரப்பிரசாதம் .அதில் ஒருவன் எவ்வளவு தான் அறிவால் வல்லவனாலும் அவையடக்கம் , நாவடக்கம் இல்லாவிட்டால் தூசிக்குச் சமன் . இந்த அடக்கம் தான் ஒருத்தற்ரை உண்மையான செல்வம் .

Guard thou as wealth the power of self-control; Than this no greater gain to living soul!

Il n’y a pas de bien plus précieux à la vie, que la modestie. Qu’on la converse comme un bien précieux à garder !

செறிவுஅறிந்து சீர்மை பயக்கும் அறிவுஅறிந்து
ஆற்றின் அடங்கப் பெறின். 123

அறியவேண்டியவற்றை அறிந்து நல்வழியில் அடங்கி ஒழுகப்பெற்றால் அந்த அடக்கம் நல்லோரால் அறியப்பட்டு அதனால் மேன்மை உண்டாகும் .

எனது கருத்து :

மற்றவர்கள் பாராட்டவேணும் என்பதற்காக ஒருவரை அறியவேண்டியதெல்லாம் அறிந்து அடக்கமாய் இருக்கவேணும் எண்டு ஐயன் சொன்னாலும் , ஒருவிடையத்தை அறியவேணுமெண்டால் கேள்வி கேக்கவேணும் . இதே பாராட்டப்போறாக்கள்தான் சொல்லுவினம் அடக்கமில்லாதவன் எண்டு .

if versed in wisdom's lore by virtue's law you self restrain.Your self-repression known will yield you glory's gain.

Quand quelqu’un acquiert la modestie, sachant que celle-ci est l’intelligence même. les grands (de ce monde) s’en aperçoivent et sa modestie lui donne la grandeur.

நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம்
மலையினும் மாணப் பெரிது. 124

எத்தகைய சூழ்நிலையிலும் அறநெறியிலிருந்து மாறுபடாமல் அடக்கமுடையவனாய் வாழ்பவனது உயர்வு மலையைவிட மேலானது .

எனது கருத்து :

தன்னரை நேர்மையான வழியைக் கடைசிவரையும் விட்டு விலத்தாமல் அடக்கத்துடன் ஒருத்தர் இருந்தால் , அவரைப்பத்தின மற்றாக்களின்ரை மனத்தோற்றம் மலையைவிட பெரிசு . உதாரணமாய் எங்கடை தம்பி பிரபாகரன் . ஆனால் , இப்பிடிப்பட்டாக்களை உலகத்துக்குப் பிடிக்காது .

In his station, all unswerving, if man self subdue, Greater he than mountain proudly rising to the view.

La grandeur de l’homme qui, se maintenant dans la vie familiale, est modeste, est plus imposante que celle da montagne.

எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவர்உள்ளும்
செல்வர்க்கே செல்வம் தகைத்து. 125

பணிவோடு நடத்தல் எல்லோர்க்கும் நல்லதாகும் . அந்தப் பணிவு செல்வருக்கு மற்றொரு செல்வம் போன்றதாகும் .

எனது கருத்து :

காசுபணத்துக்கும் அடக்கத்துக்கு எட்டாப்பொருத்தம் . அது ஒரேநேர்கோட்டில வாறது மகாகஸ்ரம் . ஆனால் , பணக்காறனுக்கு அடக்கமும் இருந்தால் அது அவனுக்கு இரட்டிப்பு பணக்காறனாக்கும் எண்டு ஐயன் சொல்லுறார் .

To all humility is goodly grace; but chief to them With fortune blessed, -'tis fortune's diadem.

La modestie est bonne à tous; mais elle est de plus, une richesse pour les riches.

ஒருமையுள் ஆமைபோல் ஐந்துஅடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப்பு உடைத்து. 126

ஒரு பிறப்பில், ஒருவன் ஆமை தன் ஐந்து உறுப்புகளையும் ஓட்டினுள் அடக்கிக் கொள்வதைப் போல பாவம் சேராமல் ஐம்பொறிகளையும் அடக்கி ஆளவல்லவனாயின் அது அவனுக்கு ஏழு பிறப்புகளுக்கும் காவலாய் உதவும் .

எனது கருத்து :

இதை ஐய்யன் எழுத்தில சொன்னாலும் இப்படி இருக்கிறதைவிட அப்படி ஒரு பிறப்பே தேள்வையில்லை . ஆறாவது அறிவின்ரை வேலையே ஐம்பொறிகளை உள்வாங்கிறது தான் .

Like tortoise, who the five restrains In one, through seven world bliss obtains.

Si quelqu’un a, dans une vie, la puissance de dompter ses cinq sens, comme la tortue, cette puissance sera sa gardienne dans ses sept autres naissances.

யாகாவார் ஆயினும் நாகாக்க; காவாக்கால்
சோகாப்பர் சொல்இழுக்குப் பட்டு. 127

ஒருவர் எவற்றை அடக்காவிட்டாலும் நாக்கு ஒன்றையாவது தீய சொற்களைப் பயிலாமல் அடக்கியாளவேண்டும் அங்கனம் அடக்கியாளாவிட்டால் பேசும்போது சொற்குற்றத்துக்கு ஆளாகிப் பெரிதும் துன்பப்படுவர்

எனது கருத்து :

தம்பி பிராபாகரன் அடிக்கடி ஒரு வசனம் சொல்லுவர் தான் சொல்லுக்கு குடுக்கிற முக்கியத்துவத்தைவிட செயலுக்குத்தான் கனக்க குடுக்கிறன் எண்டு இதின்ர அர்த்தம் இந்தகுறளுக்குச் சரியாப் பொருந்தும் .

Whate'er they fail to guard, o'er lips men guard should keep;If not, through fault of tongue, they bitter tears shall weep.

Ne peut-on maîtriser tous les sens? Que l’on garde au moins sa langue. Sinon, on souffrira tous les malheurs causés par l’intempérance du langage.

ஒன்றானும் தீச்சொல் பொருள்பயன் உண்டாயின்
நன்றாகாது ஆகி விடும். 128

தீய சொல்லைச் சொல்லி பிறர் மனதைப் புண்படுத்துபவன் செய்யும் நல்ல காரியங்கள் கூட மாறுபட்ட பயனைத் தரும் .

எனது கருத்து :

ஒருத்தர் வாயாலை ஒருக்கா லூசுக்கதை கதைச்சு அது மற்றவையைப் பாதிச்சுது எண்டால் , பேந்து அவர் எனதான் நல்லவிதமாய் சொன்னாலும் அது கெட்டதாய் தான் தெரியும் .

Though some small gain of good it seem to bring, The evil word is parent still of evil thing.

Si par une seule parole blessante, quelqu’un cause de la peine à un autre, il perd tout le bénéfice de ses autres vertus.

தீயினாற் சுட்டபுண் உள்ஆறும் ஆறாதே
நாவினால் சுட்ட வடு. 129

தீயினால் சுட்ட புண் புறத்தே வடு இருந்தாலும் உள்ளே ஆறிவிடும் . ஆனால் நாவினால் சுட்ட வடுவானது ஒருபோதும் மறையாது

எனது கருத்து:

என்னைக்கேட்டால் உலகத்திலை கெட்ட ஆயுதம் நாக்குத் தான் . அது வாய்க்குள்ளை இருக்கிறவரைக்கும்தான் அதுக்கு பெறுமதி . தப்பித்தவறி கோபத்திலை என்ன கதைக்கிறிங்கள் எண்டு தெரியாமல் கதைச்சு மற்றவன்ரை மனசைக் காயப்படுத்தினியள் எண்டால் , அது அவன்ரை மனசிலை ஆறாரணமாய்ப் பதிஞ்சுபோயிருக்கும் . எப்பவும் இடம் , பொருள் , ஏவல் பாத்து கதைக்கவேணும் .

In flesh by fire inflamed, nature may thoroughly heal the sore;In soul by tongue inflamed, the ulcer healeth never more.

L’ulcère de la brûlure du feu guérite radicalement mais la plaie d’une brûlure de la langue ne guérit pas.

கதம்காத்துக் கற்றுஅடங்கல் ஆற்றுவான் செவ்வி
அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து. 130

சினத்தைக் காத்து , கல்வி கற்று , அடங்கி வாழும் சிறப்பைப் பெற்றுள்ளவனை அறம் அவன் வழியில் சென்று காத்திருக்கும்.

எனது கருத்து:

நல்ல கல்விமானாய் , கோபங்கொள்ளாமல் , அடக்கமாய் வாழுறவைக்கு அறம் அவைன்ரை வழியிலை காத்திருக்கும் எண்டு ஐயன் சொன்னாலும் , இதுகளையே உயிர்மூச்சாய் கொண்ட எங்கடை இனத்துக்கு எந்தவழியிலை அறம் வந்து காப்பாத்தி விட்டது ?

Who learns restraint, and guards his soul from wrath, Virtue, a timely aid, attends his path.

Voici un homme qui continent sa colère et est versé dans les arts et les sciences. La vertu guette le moment d’entrer dans son cœur.

Comments

Popular posts from this blog

இல்லறவியல் ஒழுக்கமுடைமை-The Possession of Decorum - La moralité .131 - 140.

அறத்துப்பால். இல்லறவியல் ஒழுக்கமுடைமை- The Possession of Decorum- La moralité-131-140.


ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும். 131
ஒழுக்கம் எப்போதும் மேன்மையைத் தருவதால் , அந்த ஒழுக்கமே உயிரினும் மேலானதாகப் போற்றப்படுகின்றது .
எனது கருத்து:
ஒருத்தருக்கு ஒழுக்கம் அக ஒழுக்கம் புற ஒழுக்கம் எண்டு ரெண்டு வகையாலுமே இருக்கவேணும் இருந்தால் மட்டும் காணாது அதை அவற்றை உயிரைவிட உயர்வாய் பேணிப் பாதுக்கவேணும் அதைத்தான் இந்தக் குறளும் சொல்லுது
Decorum' gives especial excellence; with greater care 'Decorum' should men guard than life, which all men share.
Puisque la moralité honore tous les hommes, il faut la conserver de préférence à la vie.
பரிந்துஓம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்துஓம்பித் தேரினும் அஃதே துணை. 132
வருந்தியேனும் ஒழுக்கத்தைப் போற்றிக் காக்கவேண்டும் . பலவற்றை ஆராய்ந்து பாரத்தாலும் ஒழுக்கமே உயிரிற்குத் துணையாகும் .
எனது கருத்து:
எப்பிடித்தான் பாத்தாலும் ஒழுக்கமாய் இருக்கிறதுதான் நல்லது ஆனால் அது அவ்வளவு லேசான விசையமில்லை அதுக்கு ஒருத்தர் கனக்க விலையள் குடுக்க …

அறத்துப்பால்- துறவறவியல்- கொல்லாமை-Not killing- Ne pas tuer- 321-330.

அறத்துப்பால்-துறவறவியல்-கொல்லாமை-Not killing-Ne pas tuer-321-330.


அறவினை யாதெனில் கொல்லாமை கோறல் பிறவினை எல்லாம் தரும். 321
அறச்செயல் எதுவென்றால் எந்த ஓர் உயிரையும் கொல்லாத செயலே . அவ்வாறு கொல்லுதல் பிறதீவினைகளை எல்லாம் தானே கொண்டுவரும்.
எனது கருத்து:
நியாயமான சீவியம் எண்டால் மற்றவனைப் போடுத்தள்ளாமல் இருக்கிறதுதான் அப்பிடி போட்டுத்தள்ள வெளிக்கிட்டால் பாருங்கோ சொந்தச் செலவிலை சூனியம் செய்யவேண்டிவரும் உதாரணத்திக்கு ஏன் வெளியாலை போவான் நம்மடை மகிந்து
What is the work of virtue? 'Not to kill'; For 'killing' leads to every work of ill. 
Qu’est ce que l’acte vertueux? C’est ne pas tuer; tuer engendre tous les péchés. 
பகுத்து உண்டு பல்லுயிர் ஓம்புதல், நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை. 322
கிடைத்ததைப் பகுத்துக்கொடுத்து தானும் உண்டு , பல உயிர்களையும் காப்பாற்றுதல் , அற நூலோர் தொகுத்துக்கூறிய அறங்கள் எல்லாவற்றிற்கும் தலையாய அறமாகும் .
எனது கருத்து:
மனுசனாப் பிறந்தால் கடைசி ஒருத்தனுக்காவது பிரையோசனமாய் இருக்கவேணும் கண்டியளோ . சிலபேற்றை வீட்டை போனியள் எண்டால் முழங்கையிலை பிடிச்ச…

அறத்துப்பால்-துறவறவியல்-நிலையாமை- Instability-De l’instabilité- 331-340.

அறத்துப்பால்-துறவறவியல்-நிலையாமை- Instability-De l’instabilité-331-340.


நில்லாத வற்றை நிலையின என்று உணரும் புல்லறி வாண்மை கடை. 331
நிலையில்லாதவற்றை நிலையானவை என்று எண்ணி மயங்குகின்ற புல்லறிவாண்மை ( அற்ப அறிவு )துறந்தார்க்கு இழிவாகும் .
எனது கருத்து :
ஒரு உயிரை உடம்புக்குளை கடவுள் விடேக்கை அதுக்கு ஒரு கால அளவை வைச்சுத்தான் விடுறார் . கொஞ்சக்காலத்தில அந்த உடம்பு இல்லாமல் போடும் . இது எங்களுக்கும் சரி இளையராசாவுக்கும் சரி ஒண்டுதான் . இதுகள் தெரியாமல் இந்த சனங்களுக்கை எவ்வளவு புடுங்குபாடுகள் குத்துபாடுகள் ?? இந்த அற்ப குணத்தாலை மனசிலை வளராத கூட்டங்களாய் இந்த சனங்கள் இருக்கிதுகள் .
Lowest and meanest lore, that bids men trust secure, In things that pass away, as things that shall endure!
C’est la dernière des sottises, que de croire que ce qui est instable est stable.
கூத்துஆட்டு அவைக்குழாத்து அற்றே பெருஞ்செல்வம் போக்கும் அதுவிளிந் துஅற்று. 332
பெருஞ் செல்வம் வந்து சேர்தல் கூத்தாடுமிடத்தில் கூட்டம் வந்து கூடுவதைப் போன்றது அது நீங்கிப் போதலும் கூத்து முடிந்ததும் கூட்டம் கலைவதைப் போன்றது
எனத…