Skip to main content

அறத்துப்பால்- துறவறவியல்- கொல்லாமை-Not killing- Ne pas tuer- 321-330.அறத்துப்பால்-துறவறவியல்-கொல்லாமை-Not killing-Ne pas tuer-321-330.அறவினை யாதெனில் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாம் தரும். 321

அறச்செயல் எதுவென்றால் எந்த ஓர் உயிரையும் கொல்லாத செயலே . அவ்வாறு கொல்லுதல் பிறதீவினைகளை எல்லாம் தானே கொண்டுவரும்.

எனது கருத்து:

நியாயமான சீவியம் எண்டால் மற்றவனைப் போடுத்தள்ளாமல் இருக்கிறதுதான் அப்பிடி போட்டுத்தள்ள வெளிக்கிட்டால் பாருங்கோ சொந்தச் செலவிலை சூனியம் செய்யவேண்டிவரும் உதாரணத்திக்கு ஏன் வெளியாலை போவான் நம்மடை மகிந்து

What is the work of virtue? 'Not to kill'; For 'killing' leads to every work of ill. 

Qu’est ce que l’acte vertueux? C’est ne pas tuer; tuer engendre tous les péchés. 

பகுத்து உண்டு பல்லுயிர் ஓம்புதல், நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை. 322

கிடைத்ததைப் பகுத்துக்கொடுத்து தானும் உண்டு , பல உயிர்களையும் காப்பாற்றுதல் , அற நூலோர் தொகுத்துக்கூறிய அறங்கள் எல்லாவற்றிற்கும் தலையாய அறமாகும் .

எனது கருத்து:

மனுசனாப் பிறந்தால் கடைசி ஒருத்தனுக்காவது பிரையோசனமாய் இருக்கவேணும் கண்டியளோ . சிலபேற்றை வீட்டை போனியள் எண்டால் முழங்கையிலை பிடிச்சு இழுப்பினம் சாப்பிட . ஆனால் குசினீக்கை அடுப்பு எரியாது . தாங்களும் ஆனவாயில சாப்பிடாமல் , அப்பப்ப வெந்ததும் வேகாததையும் சாப்பிட்டுக் கொண்டிருப்பினம் . இவையள் தரவளியாலை ஆருக்கு என்ன பிரையோசனம் ?? தனக்கு கிடைக்கிறதை மற்றவனுக்கும் குடுத்து தானும் அனுபவிச்சு போய் சேருறதுதான் உண்மையான சீவியம் பாருங்கோ.

Let those that need partake your meal; guard every-thing that lives; This the chief and sum of lore that hoarded wisdom gives.

Partager la nourriture entre tous les êtres, se nourrir soi-même, conserver aussi tout ce qui a vie, c’est la principale des vertus indiquées par tous les moralistes.

ஒன்றாக நல்லது கொல்லாமை; மற்றஅதன்
பின்சாரப் பொய்யாமை நன்று. 323

ஆராயப்புகின், உயிர்களைக் கொல்லாதிருத்தல் ஒப்பற்ற அறமாகும் , உண்மை பேசுவது இரண்டாவது அறமாகக் கருதப்படும்.

எனது கருத்து:

நீங்கள் வாழ்க்கையில என்ன கூத்தும் ஆடுங்கோ . ஆனால் , உயிருகளை கொல்லாமல் , எடுத்ததுக்கெல்லாம் பொய்பேசாமல் இருக்கோ எண்டு ஐயன் சொன்னாலும் , இன்னுமொரு இடத்திலை ஏதாவது நல்லவிசையம் நடக்குமெண்டால் பொய் சொல்லலாம் எண்டு சொல்லி சனங்களை குழப்பிறார் இந்த ஐயன் . கொஞ்சம் யோசிக்க வேண்டித்தான் கிடக்கு .

Alone, first of goods things, is 'not to slay'; The second is, no untrue word to say.

Ne pas tuer est bon par lui-même; ne pas mentir n’est bon que pour venirensuite. 

நல்லாறு எனப்படுவது யாதுஎனின், யாதுஒன்றும்
கொல்லாமை சூழும் நெறி. 324

நல்லொழுக்கம் எனப்படுவது யாதெனில், எந்த ஓர் உயிரையும் கொல்லாத ஆற்றலையும் போற்றும் நெறியாகும்.

எனது கருத்து:

சரி நல்ல விசையம்தான் சொல்லியிருக்கிறார் . ஆனால் எந்த உயிரை கொல்லகூடாது எண்டு ஐயன் சொல்லேலை . இப்ப ஐஞ்சறவான சீவனுகளை கொல்லாமல் விட்டால அதுகள் கால்வைக்க இடமில்லாமல் பெருகி, போடுங்களல்லோ ( இயற்கைசமநிலை ) ?? இதை ஏன் ஐயன் கணக்கில எடுக்கேலை ??

You ask, What is the good and perfect way? Tis path of him who studies nought to slay.

Quel est le meilleur chemin (pour aller au ciel)? Cest celui que l’on suite en ne tuant quelque être que ce soit.

நிலைஅஞ்சி நீத்தாருள் எல்லாம் கொலைஅஞ்சிக்
கொல்லாமை சூழ்வான் தலை. 325

கொல்லாமை என்னும் அறத்தைப் பேணிக் காப்பவன் இல்லறத்தை விட்டுத் துறவறத்தை ஏற்றுக் கொண்டவர்களைவிட உயர்ந்தவன் ஆவான்.

எனது கருத்து:

காவியை விட ஒரு உயிரை வதைச்சு கொல்லாமல் இருக்கிறவன் உலகத்திலை திறமான ஆள் எண்டு ஐயன் சொல்லுறார் ஐயன் .ஆனால் எனக்குள்ளை ஒரு கேள்வி வருகிது . காவி எண்ட உயர்ந்த நிலையை அடைஞ்சும் , கொலை செய்த கோஸ்ரியளை எந்த வகைக்குள்ளை அடக்கிறது ?? உதாராணமாய் காஞ்சி காமகோடி பீடாதிபதி சங்கராச்சாரியார் .

Of those who 'being' dread, and all renounce, the chief are they, Who dreading crime of slaughter, study nought to slay.

Le plus élevé de tous ceux qui ont renoncé au monde, par crainte d’une autre vie, est incontestablement celui qui n’oublie pas la vertu de ne pas tuer, par horreur du meutre. 

கொல்லாமை மேற்கொண் டொழுகுவான் வாழ்நாள்மேல் செல்லாது உயிருண்ணுங் கூற்று. 326

கொல்லாமை என்னும் அறவழியில் நிலையாய் வாழும் ஒருவனுடைய வாழ்நாள் மேல் உயிரை உண்ணும் காலனும் செல்லமாட்டான்.

எனது கருத்து:

இதிலை எனக்கு பெரிய குழப்பம் இருக்கு . கொல்லாமை எண்டிறது மனி உயிர் மட்டுமோ இல்லை ஐஞ்சறிவுள்ள உயிருகளையும் சேர்த்தோ ?? சரி....... ஐஞ்சறிவுள்ள உயிருகளும் எண்டால் இந்தக்காலத்தில ஒரு சுத்தவானும் இல்லை .ஆனால் , கொலாமையை அறமாய் கொண்டவனுக்கு காலன் வர பஞ்சிப்படுவான் எண்டால் , மனிசக் கொலையையே குலத்தொழிலாய் கொண்ட மகிந்து குறூப்புக்கும் காலன் கிட்ட வரப் பஞ்சிப்படுகிறானே பாருங்கோ .

Ev'n death that life devours, their happy days shall spare, Who law, 'Thou shall not kill', uphold with reverent care.

Yaman (dieu de la mort) qui dévore toutes les vies n’a pas de pouvoir sur les jours de celui qui observe la vettu de ne tuer.

தன்னுயிர் நீப்பினும் செய்யற்க, தான்பிறிது
இன்உயிர் நீக்கும் வினை. 327

உயிரினங்கள் மூலம் தனக்கு மரணபயம் வந்தாலும் , தன்னைக் காத்துக்கொள்வதற்காக உயிர்களைக் கொல்லலாகாது.

எனது கருத்து:

இதுக்கு நான் அறிஞ்சவரையில எங்கடை தேசியவிடுதலை போராட்டத்தை தான் சொல்லுவன் . தம்பி பிராபாகரனுக்கு மகிந்து குறூப்பை முடிக்கிறது சிம்பிள் வேலை . ஆனால் அதை அவர் செய்யேலை . கடைசீல தன்ரை உயிர் போகேக்கைகூட அதை அவர் செய்யேலை . இந்த குறளுக்கு ஒரு உதாரணமாய் போய் சேந்திட்டார் பாருங்கோ . அனால் மகிந்து குறூப்தான் அடங்கினதாய் தெரியேலை .

Though thine own life for that spared life the price must pay, Take not from aught that lives gift of sweet life away.

Ne jamais commettre le crime de ravir la vie précieuse d’un autre être, même si cela doit coûter sa propre vie.
 
நன்றுஆகும் ஆக்கம் பெரிதுஎனினும் சான்றோர்க்குக்
கொன்றாகும் ஆக்கம் கடை. 328

உயிர்களைக் கொல்வதால் செல்வம் சேர ஒருவேளை வாய்ப்பு இருக்கலாம் அவ்வாறு வரும் செல்வத்தை நல்லோர்கள் சிறந்ததாகக் கருதமாட்டார்கள்

எனது கருத்து:

உயிர்வதை ஒரு நல்ல விசையமில்லை . எங்கடைசனம் கோயிலுகள் வளிய பெரிய வேள்வியள் வைப்பினம் . வாய்பேசாத சீவனுகளை வெட்டித்தள்ளுவினம் . கேட்டால் வைரவருக்கு குளித்தி , ஊருக்குநல்லது அது இதுவெண்டு கதையளப்பினம் . ஒழுங்கான படிச்ச மனச்சாட்சி உள்ளவங்கள் இதுகளை கேடுகெட்ட வேலையாத்தான் நினைப்பாங்கள் பாருங்கோ .

Though great the gain of good should seem, the wise Will any gain by staughter won despise.

Le profit (spirituel) provenant de l’immolation d’une victime dans un sacrifice est grand et a été recommandé à ceux qui mènent la vie familiale; cependant les Sages pénitents méprisent le profit provenant d’un meutre. 

கொலைவினையர் ஆகிய மாக்கள் புலைவினையர்
புன்மை தெரிவார் அகத்து. 329

கொலைத் தொழிலைச் செய்யும் மனிதர்கள் அதன் இழிவை ஆராய்ந்தவரிட்தில் தாழ்ந்த தொழிலாகவே கருதுவார்

எனது கருத்து:

சைவமும் சொல்லுது உயிருகளை கொல்லாதையுங்கோடாப்பா , அன்பே சிவம் எண்டு . பௌத்தமும் இதைத்தான் சொல்லுது . ஆனால் இந்த மகிந்து செய்யாத கொலையளோ ?? கொலையள் அவங்களுக்கு குலத்தொழிலாய் போனாலும் , இண்டைக்கு உலகம் அவங்களைத்தானே உயத்திப் பிடிக்குது . அப்ப ஆரில பிழை ?? ஐயனிலயோ அல்லது உலகத்திலையோ ???

Whose trade is 'killing', always vile they show, To minds of them who what is vileness know.

Ceux qui font métier de tuer sont aux yeux de ceux qui en connaissent la vileté, de vils professionnels.

உயிர் உடம்பின் நீக்கியார் என்ப,
செயிர் உடம்பின் செல்லாத்தீ வாழ்க்கை யவர். 330

பிணி வறுமை போன்ற துயரத்திற்கு இலக்கானவர்களைக்க கண்டு இவர்கள் முற்பிறவியில் உயிர்களைக் கொன்றிருக்க வேண்டும் என்று அறிஞர்கள் கூறுவர்

எனது கருத்து:

எனக்கு முற்பிறவியளிலை நம்பிக்கையில்லை . உலகத்தில இருக்கிற சர்வாதிகாரியள் , அரச குடும்பங்கள் செய்யாத கொலையளோ ??ஏன் அவையிட்டை இந்த வறுமையோ வருத்தங்களோ அண்டுதில்லை ??நல்லாய்த்தானே இருக்கினம் ...... உதாரணத்துக்கு டயானாவையும் டோடியையும் கொண்ட எலிசபெத்தோ அல்லது அவாவின்ரை பெடியோ என்ன கெட்டழிஞ்சு போட்டினமே ??? ஐயன் ஏன் இப்பிடி எழுதிறார் ???

Who lead a loathed life in bodies sorely pained, Are men, the wise declare, by guilt of slaughter stained.

Ceux qui connaissant les conséquences des actes humains disent que ceux dont le corps est couvert d’ulcères et qui vivent misérablement de vils métiers, sont ceux qui ont arraché, dans le passé, la vie des être.Comments

Popular posts from this blog

இல்லறவியல் ஒழுக்கமுடைமை-The Possession of Decorum - La moralité .131 - 140.

அறத்துப்பால். இல்லறவியல் ஒழுக்கமுடைமை- The Possession of Decorum- La moralité-131-140.


ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும். 131
ஒழுக்கம் எப்போதும் மேன்மையைத் தருவதால் , அந்த ஒழுக்கமே உயிரினும் மேலானதாகப் போற்றப்படுகின்றது .
எனது கருத்து:
ஒருத்தருக்கு ஒழுக்கம் அக ஒழுக்கம் புற ஒழுக்கம் எண்டு ரெண்டு வகையாலுமே இருக்கவேணும் இருந்தால் மட்டும் காணாது அதை அவற்றை உயிரைவிட உயர்வாய் பேணிப் பாதுக்கவேணும் அதைத்தான் இந்தக் குறளும் சொல்லுது
Decorum' gives especial excellence; with greater care 'Decorum' should men guard than life, which all men share.
Puisque la moralité honore tous les hommes, il faut la conserver de préférence à la vie.
பரிந்துஓம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்துஓம்பித் தேரினும் அஃதே துணை. 132
வருந்தியேனும் ஒழுக்கத்தைப் போற்றிக் காக்கவேண்டும் . பலவற்றை ஆராய்ந்து பாரத்தாலும் ஒழுக்கமே உயிரிற்குத் துணையாகும் .
எனது கருத்து:
எப்பிடித்தான் பாத்தாலும் ஒழுக்கமாய் இருக்கிறதுதான் நல்லது ஆனால் அது அவ்வளவு லேசான விசையமில்லை அதுக்கு ஒருத்தர் கனக்க விலையள் குடுக்க …

அறத்துப்பால்-துறவறவியல்-நிலையாமை- Instability-De l’instabilité- 331-340.

அறத்துப்பால்-துறவறவியல்-நிலையாமை- Instability-De l’instabilité-331-340.


நில்லாத வற்றை நிலையின என்று உணரும் புல்லறி வாண்மை கடை. 331
நிலையில்லாதவற்றை நிலையானவை என்று எண்ணி மயங்குகின்ற புல்லறிவாண்மை ( அற்ப அறிவு )துறந்தார்க்கு இழிவாகும் .
எனது கருத்து :
ஒரு உயிரை உடம்புக்குளை கடவுள் விடேக்கை அதுக்கு ஒரு கால அளவை வைச்சுத்தான் விடுறார் . கொஞ்சக்காலத்தில அந்த உடம்பு இல்லாமல் போடும் . இது எங்களுக்கும் சரி இளையராசாவுக்கும் சரி ஒண்டுதான் . இதுகள் தெரியாமல் இந்த சனங்களுக்கை எவ்வளவு புடுங்குபாடுகள் குத்துபாடுகள் ?? இந்த அற்ப குணத்தாலை மனசிலை வளராத கூட்டங்களாய் இந்த சனங்கள் இருக்கிதுகள் .
Lowest and meanest lore, that bids men trust secure, In things that pass away, as things that shall endure!
C’est la dernière des sottises, que de croire que ce qui est instable est stable.
கூத்துஆட்டு அவைக்குழாத்து அற்றே பெருஞ்செல்வம் போக்கும் அதுவிளிந் துஅற்று. 332
பெருஞ் செல்வம் வந்து சேர்தல் கூத்தாடுமிடத்தில் கூட்டம் வந்து கூடுவதைப் போன்றது அது நீங்கிப் போதலும் கூத்து முடிந்ததும் கூட்டம் கலைவதைப் போன்றது
எனத…