Skip to main content

அறத்துப்பால்- இல்லறவியல்- புறம்கூறாமை -Not Backbiting - Ne pas calomnier - 181 - 190.


அறத்துப்பால்- இல்லறவியல்- புறம்கூறாமை- Not Backbiting-Ne pas calomnier-181-190. அறம்கூறான் அல்ல செயினும் ஒருவன்
புறம்கூறான் என்றல் இனிது. 181

அறநெறிகளைப் போற்றாதவனாகவும் , அறச்செயல்களை செய்யாதவனாகவும் இருந்தாலும்புறம் கூறாதவன் என்று வாழ்வது நல்லது .

எனது கருத்து:

நீங்கள் ஒருத்ரிலை உண்மையான அன்பு வைச்சிருக்கிறியள் எண்டால் , அவருக்கு ஒரு கஸ்ரம் எண்டால் உங்களை அறியாமல் கண்ணில தண்ணி வரவேணும் . அவைதான் உண்மையான மனுசர் .

Though virtuous words his lips speak not, and all his deeds are ill. If neighbour he defame not, there's good within him still.

Il est doux à celui qui ne pratique pas la vertu et qui commet même des péchés; de s’entendre dire: “ce n’est pas un calomniateur ” 

அறன்அழீஇ அல்லவை செய்தலின் தீதே
புறன்அழீஇப் பொய்த்து நகை. 182

ஒருவனைக்க காணாத இடத்தில் இகழ்ந்து பேசிக் , கண்ட இடத்து அன்புடையோர் போலப் பொய்யாக நடித்துச் சிரித்துப் பழகுதல் அறத்தை அழித்துப் பாவச் செயல்களைச் செய்தலினும் தீமையானது.

எனது கருத்து:

இதை இப்பிடியும் சொல்லலாம் " கண்டால் கட்டாடி காணாட்டில் வண்ணான் ". ஆனால் இப்பிடிப்பட்ட கோஸ்ரியள் தான் இப்ப எங்கைபாத்தாலும் இருக்கிதுகள் .

Than he who virtue scorns, and evil deeds performs, more vile,Is he that slanders friend, then meets him with false smile.

il est certes mauvais de dire du mal de la vertu et même de commettre des péchés; il est pire de calomnier quelqu’un, en son absence et de lui témolgner une fausse joie, en sa présence.

புறங்கூறிப் பொய்த்துஉயிர் வாழ்தலின் சாதல்
அறம்கூறும் ஆக்கத் தரும். 183

ஒருவனைக் காணாத போது இழ்ந்து பேசி அவனைக்க் கண்ட போது அவனிடம் அன்புடையவன் போலப் பொய்யாக நடித்து வாழ்வதைக் காட்டிலும் இறத்தலே அறநூல் வழியாகும் .

எனது கருத்து:

சத்தியமாய் உண்மை . ஆனால் என்னசெய்யிறது ? இப்பிடியான மொள்ளமாரியளுக்கும் முடிச்சவிக்கியளுக்கும் தான் காலம் கண்டியளோ .

'Tis greater gain of virtuous good for man to die, Than live to slander absent friend, and falsely praise when nigh.


Plutôt mourir que calomnier quelqu’un en son absence et le louer en sa présence. Une telle mort lui procurera les mérites dont parlent les traités de la morale.

கண்நின்று கண்ணறச் சொல்லினும் சொல்லற்க
முன்நின்று பின்நோக்காச் சொல். 184

நேரில் நின்று கருணையில்லாமல் கடுமையாகப் பேசினாலும் பேசலாம் . நேரில் இல்லாத போது பின்விளைவைக் கருதாமல் எந்தப்பழியையும் சொல்லக் கூடாது .

எனது கருத்து:

சிலபேரைப் பாத்தால் புறட்டணியம் படிக்காட்டில் அவைக்கு பத்தியப்படாது . ஆனா இப்பிடிப்பட்ட கோஸ்ரியளைப் பாத்து ஐயன் ரென்சன் ஆகி இப்பிடி சொல்லியிருக்கிறார் .

In presence though unkindly words you speak, say not In absence words whose ill result exceeds your thought.

Parle à quelqu’un, en fixant ses yeux et sans ménagement, mais garde-toi d’en dire du mal, en son absense.

அறம்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறம்சொல்லும்
புன்மையால் காணப் படும். 185

புறங்கூறுபவன் அறத்தை நல்லதென்று அடுத்தவரிடத்தில் கூறினாலும் அவன் அதை மனதாரச் சொல்லவில்லை என்பதை அறிந்து கொள்ளலாம் .

எனது கருத்து:

சிலபேர் வெளியல தாங்கள் வெள்ளை மாதிரிக்க கதச்சுக்கொண்டு மற்றவனுக்கு ஆப்படிக்கிறது தான் குடிசைத் தொழில் . இப்பிடியான வேலையளை வைச்சே எவ்வளவு கேவலமான ஆக்கள் எண்டு அவையளை மதிக்கலாம் .

The slanderous meanness that an absent friend defames, 'This man in words owns virtue, not in heart,' 

Bien que le calomniateur célèbre la vertu, son penchant à la calomnie révèle qu’il ne parle pas sincèrement.

பிறன்பழி கூறுவான் தன்பழி உள்ளும்
திறன்தெரிந்து கூறப் படும். 186

பிறரது குற்றத்தை அவனைக் காணாதவிடத்துச் சொல்லுபவன் , பிறரால் அவனுடைய குற்றங்கள் எடுத்துரைக்கப்பட்டு , பழிக்கப்படுவான் .

எனது கருத்து:

இது ஒரு செயின் சிஸ்ரம் கண்டியளோ எல்லாரும் கூடி ஒருத்தனைப்பற்றி ,அவன் இல்லாத நேரம் பாத்து கொசிப் அடிப்பினம் . அதிலை ஒண்டிரண்டு கலைஞ்சு போக , போனவையப் பற்றி மற்றவை கொசிப் அடிப்பினம் . உண்மையில இதுகளைத் திருத்தேலாது .

Who on his neighbours' sins delights to dwell, The story of his sins, culled out with care, the world will tell.

Parmi les défauts de celui qui calomnie, les plus honteux seront découverts et divulgués.

பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி
நட்பாடல் தேற்றா தவர். 187

பிறர் , மகிழுமாறு இன்பாகப் பேசி அவரோடு நட்புச் செய்தலை அறியாதவர்கள் , நண்பராய் இருப்பவரைப் பற்றியும் புறங்கூறிப் பிரித்து விடுவர் .

எனது கருத்து:

சில பேர் இருப்பினம் அவைக்கு வேலையே ஆப்படிக்கிறது தான் . நல்லாய் இருக்கிற நண்பர்களோடை இவையும் நட்பு எண்டு சேரந்து எல்லாரையும் பிரிக்கிறதுதான் வேலை . இப்பிடிச் செய்யாட்டிக்கு இவைக்கு நித்திரையே வராது எண்டால் பாருங்கோவன் .இப்பிடிப்பட்ட ஆக்களைக் கண்டால் உடனையே காய் வெட்டிப்போடவேணும் .

With friendly art who know not pleasant words to say, Speak words that sever hearts, and drive choice friends away.

Ceux qui ne savent pas, par des paroles captivantes, se faire des amis, calomnient même les parents et les forcent à se séparer d’eux.

துன்னியார் குற்றமும் தூற்றும் மரபினார்
என்னைகொல் ஏதுஇலார் மாட்டு. 188

தம்மோடு நெருங்கிய சுற்றத்தாரது குற்றத்தையும் அவரைக் காணாத இடத்துத் தூற்றும் இயல்பினையுடையோர் அயலாரிடத்து யாது தான் செய்யார் ?

எனது கருத்து:

நெருங்கிப் பழகிற ஆக்களையே அவையள் இல்லாத நேரம் பாத்து வெறும் வாய் மெல்லுகிற ஆக்கள் , தங்கடை அயலட்டையை சும்மாவிடுவினமோ ? சொல்லுங்கோ இவையள் கெட்ட கிரிமியள் தானே ?

Whose nature bids them faults of closest friends proclaim What mercy will they show to other men's good name?

Que ne feront-ils aux étrangers ceux qui publient malicieusement les torts des proches?

அறன்நோக்கி ஆற்றும்கொல் வையம் புறம்நோக்கிப்
புன்சொல் உரைப்பான் பொறை. 189

பிறரைப் பழித்துக் கூறுவோனது உடற்கமைய பூமியானது அறம் என்று நினைத்துச் சுமக்கிறது போலும் !

எனது கருத்து:

இப்புடிப்பட்ட கிரிமியளின்ரை உடம்புப் பாரத்தையும் இந்தப்பூமி , தான் தாங்கித்தரிக்கிறதும் ஒரு அறமெண்டு தாங்குதாம் எண்டு இதில ஐயன் செரியா நொந்துபோய் சொல்லியிருக்கிறார் .

'Tis charity, I ween, that makes the earth sustain their load. Who, neighbours' absence watching, tales or slander tell abroad.

La terre supporte par charité, le fardeau de l’homme qui guette le départ de quelqu’un pour le calomnier. 

ஏதிலார் குற்றம்போல் தம்குற்றம் காண்கின்பின்
தீதுஉண்டோ மன்னும் உயிர்க்கு. 190

புறங்கூறுவோர் அயலாரது குற்றத்தைக் காண்பது போல் , தமது புறங்கூறும் குற்றத்தையும் காண்பாராயின் அவர்க்குத் துன்பம் உண்டாகாது .

எனது கருத்து:

மற்றவையைப் பாத்து கையை நீட்டிற நேரம் அதிலை ஒரு விரல் எங்களைப் பாக்கிது. இதைத் தெரிஞ்சு கொண்டால் மத்தவையைப்பத்தி புறட்டணியம் படிக்கமால் நல்ல பிள்ளையளாய் இருக்கலாம் எண்டு ஐயன் ஒரு பக்குவத்தை கடைசியா இந்தக் குறளிலை சொல்லியிருக்கிறார் . 

If each his own, as neighbours' faults would scan, Could any evil hap to living man?

Y a-t-il douleur pour celui qui reconnaît ses torts, de la même manière qu’il découvre ceux du prochain.Comments

Popular posts from this blog

அறத்துப்பால்- துறவறவியல்- கொல்லாமை-Not killing- Ne pas tuer- 321-330.

அறத்துப்பால்-துறவறவியல்-கொல்லாமை-Not killing-Ne pas tuer-321-330.


அறவினை யாதெனில் கொல்லாமை கோறல் பிறவினை எல்லாம் தரும். 321
அறச்செயல் எதுவென்றால் எந்த ஓர் உயிரையும் கொல்லாத செயலே . அவ்வாறு கொல்லுதல் பிறதீவினைகளை எல்லாம் தானே கொண்டுவரும்.
எனது கருத்து:
நியாயமான சீவியம் எண்டால் மற்றவனைப் போடுத்தள்ளாமல் இருக்கிறதுதான் அப்பிடி போட்டுத்தள்ள வெளிக்கிட்டால் பாருங்கோ சொந்தச் செலவிலை சூனியம் செய்யவேண்டிவரும் உதாரணத்திக்கு ஏன் வெளியாலை போவான் நம்மடை மகிந்து
What is the work of virtue? 'Not to kill'; For 'killing' leads to every work of ill. 
Qu’est ce que l’acte vertueux? C’est ne pas tuer; tuer engendre tous les péchés. 
பகுத்து உண்டு பல்லுயிர் ஓம்புதல், நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை. 322
கிடைத்ததைப் பகுத்துக்கொடுத்து தானும் உண்டு , பல உயிர்களையும் காப்பாற்றுதல் , அற நூலோர் தொகுத்துக்கூறிய அறங்கள் எல்லாவற்றிற்கும் தலையாய அறமாகும் .
எனது கருத்து:
மனுசனாப் பிறந்தால் கடைசி ஒருத்தனுக்காவது பிரையோசனமாய் இருக்கவேணும் கண்டியளோ . சிலபேற்றை வீட்டை போனியள் எண்டால் முழங்கையிலை பிடிச்ச…

இல்லறவியல் ஒழுக்கமுடைமை-The Possession of Decorum - La moralité .131 - 140.

அறத்துப்பால். இல்லறவியல் ஒழுக்கமுடைமை- The Possession of Decorum- La moralité-131-140.


ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும். 131
ஒழுக்கம் எப்போதும் மேன்மையைத் தருவதால் , அந்த ஒழுக்கமே உயிரினும் மேலானதாகப் போற்றப்படுகின்றது .
எனது கருத்து:
ஒருத்தருக்கு ஒழுக்கம் அக ஒழுக்கம் புற ஒழுக்கம் எண்டு ரெண்டு வகையாலுமே இருக்கவேணும் இருந்தால் மட்டும் காணாது அதை அவற்றை உயிரைவிட உயர்வாய் பேணிப் பாதுக்கவேணும் அதைத்தான் இந்தக் குறளும் சொல்லுது
Decorum' gives especial excellence; with greater care 'Decorum' should men guard than life, which all men share.
Puisque la moralité honore tous les hommes, il faut la conserver de préférence à la vie.
பரிந்துஓம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்துஓம்பித் தேரினும் அஃதே துணை. 132
வருந்தியேனும் ஒழுக்கத்தைப் போற்றிக் காக்கவேண்டும் . பலவற்றை ஆராய்ந்து பாரத்தாலும் ஒழுக்கமே உயிரிற்குத் துணையாகும் .
எனது கருத்து:
எப்பிடித்தான் பாத்தாலும் ஒழுக்கமாய் இருக்கிறதுதான் நல்லது ஆனால் அது அவ்வளவு லேசான விசையமில்லை அதுக்கு ஒருத்தர் கனக்க விலையள் குடுக்க …

அறத்துப்பால்-துறவறவியல்-நிலையாமை- Instability-De l’instabilité- 331-340.

அறத்துப்பால்-துறவறவியல்-நிலையாமை- Instability-De l’instabilité-331-340.


நில்லாத வற்றை நிலையின என்று உணரும் புல்லறி வாண்மை கடை. 331
நிலையில்லாதவற்றை நிலையானவை என்று எண்ணி மயங்குகின்ற புல்லறிவாண்மை ( அற்ப அறிவு )துறந்தார்க்கு இழிவாகும் .
எனது கருத்து :
ஒரு உயிரை உடம்புக்குளை கடவுள் விடேக்கை அதுக்கு ஒரு கால அளவை வைச்சுத்தான் விடுறார் . கொஞ்சக்காலத்தில அந்த உடம்பு இல்லாமல் போடும் . இது எங்களுக்கும் சரி இளையராசாவுக்கும் சரி ஒண்டுதான் . இதுகள் தெரியாமல் இந்த சனங்களுக்கை எவ்வளவு புடுங்குபாடுகள் குத்துபாடுகள் ?? இந்த அற்ப குணத்தாலை மனசிலை வளராத கூட்டங்களாய் இந்த சனங்கள் இருக்கிதுகள் .
Lowest and meanest lore, that bids men trust secure, In things that pass away, as things that shall endure!
C’est la dernière des sottises, que de croire que ce qui est instable est stable.
கூத்துஆட்டு அவைக்குழாத்து அற்றே பெருஞ்செல்வம் போக்கும் அதுவிளிந் துஅற்று. 332
பெருஞ் செல்வம் வந்து சேர்தல் கூத்தாடுமிடத்தில் கூட்டம் வந்து கூடுவதைப் போன்றது அது நீங்கிப் போதலும் கூத்து முடிந்ததும் கூட்டம் கலைவதைப் போன்றது
எனத…