Skip to main content

அறத்துப்பால்-துறவறவியல்- மெய் உணர்தல்-Knowledge of the True- Perception du vrai -351- 360.


அறத்துப்பால்-துறவறவியல்-மெய் உணர்தல்- Knowledge of the True-Perception du vrai-351-360. 
பொருள்அல்ல வற்றைப் பொருள்என்று உணரும்
மருள்ஆம் மாணாப் பிறப்பு. 351

மெய்ப்பொருள் அல்லாதவற்றை மெய்ப்பொருள் என்று தவறாக உணர்கின்ற மயக்க உணர்வால் சிறப்பில்லாத துன்பப் பிறவி உண்டாகும் .

எனது கருத்து :

சிலபேரைப் பாத்தியள் எண்டால் கிழமையிலை ரெண்டு மூண்டுதரமாவது குதிரைக்கு காசு கட்டிக்கொண்டும் , லொட்டோ சுறண்டியும் வெட்டிக்கொண்டும் நிப்பினம் . இவையளை ஏன் இப்பிடி காசை சிலவளிக்கிறியள் ?? எண்டு கேட்டால் , " விட்ட காசை இப்ப எடுக்கிறன் பார் " எண்டு சொல்லுவினம் . ஆனால் வாழ்கையிலை விட்டதை எடுக்கமாட்டினம் . இவைக்கு குதிரையை ஓட்டிறது மனுசன் எண்டும் , லொட்டோ மெசின்தான் நிகழ்தகவு லை முடிவு செய்யும் எண்டு தெரியாமல் இல்லை . இப்பிடிப் பட்ட காயளை எளிய பிறப்புகள் எண்டு சொல்லலாம் .

Of things devoid of truth as real things men deem;- Cause of degraded birth the fond delusive dream! 

L’illusion qui fait prendre la chimère pour la réalité, engendre la naissance sans gloire.

இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி
மாசறு காட்சி யவர்க்கு. 352

மயக்கம் நீங்கி குற்றமற்ற மெய்யுணர்வை உடையவர்க்கு அவ்வுணர்வு அறியாமையை நீக்கி , இன்பத்தைக் கொடுக்கும்.

எனது கருத்து :

சிலபேரைப் பாத்தியள் எண்டால் கிளிப்பிள்ளை மாதிரி மனுசிக்காறி வீட்டிலை இருக்க , வெளீல குரங்கு மாதிரி ஒரு தொடுப்பு வைச்சிருப்பினம் . அந்தக் தொடுப்பாலை இவை படாத பாடெல்லாம் பட்டு , நொந்து நூடில்சாகி மனுசிக்காறியிட்டை வரேக்கை , முதல் துன்பப் பட்டுபோனவருக்கு திரும்பவும் சொர்க்கத்தை கண்டமாதிரி இருக்கும் .

Darkness departs, and rapture springs to men who see, The mystic vision pure, from all delusion free. 

La délivrance de l’illusion, jointe à la vision sereine,
fait éviter l’enfer et procure le salut. 

ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின்
வானம் நணியது உடைத்து. 353

ஐயத்திலிருந்து நீங்கி மெய்யணர்வு பெற்றவர்க்கு , அடைந்துள்ள இவ்வுலகைவிட அடைய வேண்டிய மேலுலகம் அண்மையில் உள்ளதாகும்.

எனது கருத்து :

சில ஐமிச்சம் ஐயாத்துரையளை பாத்திருப்பியள் . இவையள் கெட்ட கிரிமியள் பாருங்கோ . தாங்களும் ஒரு விசயத்தை செய்யாயினம் மற்றவனையும் செய்யவிடாமல் தங்கடை கதையளாலை குழப்பிக்கொண்டு இருப்பினம் . இவையள் இப்பிடி இருந்தால் , ஆருக்கு வானத்த வளைக்கிற ஊக்கம் வரும் ??

When doubts disperse, and mists of error roll Away, nearer is heav'n than earth to sage's soul.

Le ciel est plus prêt d’être gagné que la terre, par celui qui passe du doute à la connaissance du Vrai. 

ஐயுணர்வு எய்தியக் கண்ணும் பயம்இன்றே
மெய்யுணர்வு இல்லா தவர்க்கு. 354

மெய்யுணர்வு இல்லாதவர்க்கு ஐம்புலன்களின் உணர்வுகளையெல்லாம் முழுமையாகப் பெற்றுள்ள போதிலும் பயன் இல்லை.

எனது கருத்து :

ஒருத்தன் தன்ரை மனசை அடக்கி வெண்டிருக்காலாம் . ஆனால் , அவனாலை எது உண்மை எது பொய் எண்டு பகுத்தறிய தெரியாட்டில் , அவன் மனசை அடக்கியும் வேலையில்லை கண்டியளோ .

Five-fold perception gained, what benefits accrue To them whose spirits lack perception of the true? 

Celui qui ne connaît pas le Vrai ne profite pas de maîtrise des cinq sens.

எப்பொருள் எத்தன்மைத்து ஆயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு. 355

எப்பொருள் எத்தன்மையாகத் தோன்றினாலும் , அத்தோற்றத்தை மட்டும் கண்டு மயங்காமல் அப்பொருளின் மெய்யான இயல்பைத் தெளிவாகக் காண்பதே அறிவாகும் .

எனது கருத்து :

என்னத்தைச் சொல்ல அகலிகையாலேயே தன்ரை புருசனை அடையாளம் காணேலாமல் போச்சிது . ஏன் கனக்க வேண்டாம் , எரிக்சொல்கெய்மிலை இருந்து எத்தினைபேர் வன்னிக்கு படை எடுத்தீச்சினம் . அவையளை நம்பினதாலைதானே எங்களுக்கு இத்தினை சீத்துவக் கேடுகளும் . இப்பிடி இனியும் இருக்காமல் நாங்கள் எதிலையும் அலேர்ட்டா இருக்கவேணும் பாருங்கோ .

Whatever thing, of whatsoever kind it be, 'Tis wisdom's part in each the very thing to see.

Connaître, c’est percevoir le Vrai dans chaque chose,
quelle qu’elle soit et de quelque nature qu’elle soit.

கற்றுஈண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்
மற்றுஈண்டு வாரா நெறி. 356

கற்க வேண்டியவற்றைக் கற்று மெய்ப் பொருளையும் அறிந்தவர் மீண்டும் இப்பிறப்பிற்கு வராத வழியை அடைவர் .

எனது கருத்து :

உண்மையிலை நல்லா படிச்சு எந்த ஒரு விசயத்தையும் பகுத்தறிஞ்சு நடக்கிறவை திரும்ப பிறக்காமல் இருக்கிறதுக்கு ஏத்தமாதிரி நடப்பினம் எண்டு ஐயன் சொன்னாலும் , இந்தக்காலத்திலை மனிசனாய் பிறந்தவன் பலம் பலகீனம் எண்ட ரெண்டு விசயத்தையும் கொண்டவனாய் இருக்கேக்கை ,எப்பிடி அவன் திரும்பி பிறக்காமல் இருக்க நடப்பான் ??

Who learn, and here the knowledge of the true obtain, Shall find the path that hither cometh not again.

Celui qui acquiert en ce monde, la connaissance du Vrai par l’instruction, obtient le moyen de ne pas y renaître.

ஓர்த்து உள்ளம் உள்ளது உணரின் ஒருதலையாப்
பேர்த்துள்ள வேண்டா பிறப்பு. 357

கேட்ட பொருளை ஆராய்ந்து உண்மை அறிந்தவனுக்கு மறுபிறவு உண்டென்று ஒரு பொழுதும் எண்ண வேண்டாம் .

எனது கருத்து :

இண்டைக்கு எல்லாரும் படிக்கினம் . பெரிய அறிவாளியா வருகீனம் . படிக்காதவையின்ரை வீதம் குறையுது .இப்பிடி எல்லாருமே உண்மையை உணர்ந்திருக்கினம் , அவை மறுபிறப்பு இல்லை எண்டு நினைப்பினம் எண்டு ஐயன் சொன்னால் , அப்ப ஏன் உலகத்திலை சனத்தொகை கூடுது ??

The mind that knows with certitude what is, and ponders well, Its thoughts on birth again to other life need not to dwell.

Ne croyez pas à la renaissance de celui dont l’esprit s’est recueilli et qui par, méditation et examen, a connu l’Etre qui existe.

பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும்
செம்பொருள் காண்பது அறிவு. 358

பிறவித் துயரைத் தரும் அஞ்ஞானம் அகல , முத்தி என்னும் சிறந்த நிலைக்குக் காரணமான செம்பொருளைக் காண்பதே மெய்யுணர்வு ஆகும் .

எனது கருத்து :

சிலபேரைப் பாத்தியள் எண்டால் எந்தநேரமும் தாங்கள் செத்துப்போடுவம் எண்டு புசத்திக்கொண்டு திரிவினம் . ஆனால் உயிரோடைதான் இருப்பினம் . இவையள் தரவளியாலை பக்கத்திலை இருக்கிறவனுக்குத்தான் அரையண்டம் . அறிவுடமை எண்டாலே இப்பிடியான மனநிலையளை கடந்து ஒரு தெளிவான முடிவுக்கு வாறதுதான் எண்டு ஐயன் இதிலை ஒரு டெபினிசன் தாறார் .

When folly, cause of births, departs; and soul can view The truth of things, man's dignity- 'tis wisdom true.

La vraie connaissance consiste à percevoir l’Etre pur, cause du ciel et à détruire l’ignorance, cause de la renaissance.

சார்பு உணர்ந்து சார்பு கெடஒழுகின் மற்றுஅழித்துச்
சார்தரா சார்தரு நோய். 359

எல்லாப் பொருளுக்கும் சார்பான செம்பொருளை உணர்ந்து , ஆசைகள் கெடுமாறு ஒழுகினால் , சார்வதற்கு உரிய துன்பங்கள் மீண்டும் வரமாட்டா.

எனது கருத்து :

பிரைச்சனையே இங்கைதானே !!! ஒருக்கால் வீட்டிலை கஸ்ரம் எண்டு களவெடுப்பம் . எங்களுக்கு தெரியும் இதாலை வில்லண்டம் வரும் எண்டு ஆனால் கைருசிப்படும் . எல்லாப் பிரைச்சனையளுக்கும் ருசிப்பட்டகை ஒருக்கால் உன்னும் . இப்பிடி இருக்காமல் ஆசையளை விட்டாலே அரைவாசிப் பிரைச்சனையள் இல்லாமல் போடும் .

The true 'support' who knows- rejects 'supports' he sought before-Sorrow that clings all destroys, shall cling to him no more.

Les douleurs inhérentes à l’homme sont détruites et n’atteindront plus à nouveau, celui qui perçoit le Refuge de tous créatures et vit libre de tout attachement.

காமம் வெகுளி மயக்கம் இவைமூன்றன்
நாமம் கெடக்கெடும் நோய். 360

விருப்பு , வெறுப்பு , அறியாமை ஆகிய இக்குற்றங்கள் மூன்றினுடைய பாதிப்பு இல்லாமல் ஒழுகினால் துன்பங்கள் வராமல் கெடும் ( ஒழிந்து நீங்கும் ) .

எனது கருத்து :

இந்தக்காலத்திலை ஆர் ஐயா இப்பிடி சீவிக்கிறாங்கள் ?? அப்பிடி எல்லாரும் நடந்தால் உலகம் எவ்வளவு நல்லாய் இருக்கும் ?? ஏன் மகிந்து குறூப்எங்கடை சனத்தை வேரோடை அழிச்சுது ?? இதுக்கு பிழை எண்டு தெரிஞ்சும் , இருபத்தியேழு நாடுகளுக்கு கிட்ட கூட்டாளியாய் நிண்டாங்கள் . சும்மா பகிடி விடாதையுங்கோ ஐயன் .

When lust and wrath and error's triple tyranny is o'er, Their very names for aye extinct, then pain shall be no more.

Que les trois (vices): désir, colère et illusion soient détruits;
leurs conséquences néfastes disparaissent.Comments

Popular posts from this blog

இல்லறவியல் ஒழுக்கமுடைமை-The Possession of Decorum - La moralité .131 - 140.

அறத்துப்பால். இல்லறவியல் ஒழுக்கமுடைமை- The Possession of Decorum- La moralité-131-140.


ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும். 131
ஒழுக்கம் எப்போதும் மேன்மையைத் தருவதால் , அந்த ஒழுக்கமே உயிரினும் மேலானதாகப் போற்றப்படுகின்றது .
எனது கருத்து:
ஒருத்தருக்கு ஒழுக்கம் அக ஒழுக்கம் புற ஒழுக்கம் எண்டு ரெண்டு வகையாலுமே இருக்கவேணும் இருந்தால் மட்டும் காணாது அதை அவற்றை உயிரைவிட உயர்வாய் பேணிப் பாதுக்கவேணும் அதைத்தான் இந்தக் குறளும் சொல்லுது
Decorum' gives especial excellence; with greater care 'Decorum' should men guard than life, which all men share.
Puisque la moralité honore tous les hommes, il faut la conserver de préférence à la vie.
பரிந்துஓம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்துஓம்பித் தேரினும் அஃதே துணை. 132
வருந்தியேனும் ஒழுக்கத்தைப் போற்றிக் காக்கவேண்டும் . பலவற்றை ஆராய்ந்து பாரத்தாலும் ஒழுக்கமே உயிரிற்குத் துணையாகும் .
எனது கருத்து:
எப்பிடித்தான் பாத்தாலும் ஒழுக்கமாய் இருக்கிறதுதான் நல்லது ஆனால் அது அவ்வளவு லேசான விசையமில்லை அதுக்கு ஒருத்தர் கனக்க விலையள் குடுக்க …

அறத்துப்பால்- துறவறவியல்- கொல்லாமை-Not killing- Ne pas tuer- 321-330.

அறத்துப்பால்-துறவறவியல்-கொல்லாமை-Not killing-Ne pas tuer-321-330.


அறவினை யாதெனில் கொல்லாமை கோறல் பிறவினை எல்லாம் தரும். 321
அறச்செயல் எதுவென்றால் எந்த ஓர் உயிரையும் கொல்லாத செயலே . அவ்வாறு கொல்லுதல் பிறதீவினைகளை எல்லாம் தானே கொண்டுவரும்.
எனது கருத்து:
நியாயமான சீவியம் எண்டால் மற்றவனைப் போடுத்தள்ளாமல் இருக்கிறதுதான் அப்பிடி போட்டுத்தள்ள வெளிக்கிட்டால் பாருங்கோ சொந்தச் செலவிலை சூனியம் செய்யவேண்டிவரும் உதாரணத்திக்கு ஏன் வெளியாலை போவான் நம்மடை மகிந்து
What is the work of virtue? 'Not to kill'; For 'killing' leads to every work of ill. 
Qu’est ce que l’acte vertueux? C’est ne pas tuer; tuer engendre tous les péchés. 
பகுத்து உண்டு பல்லுயிர் ஓம்புதல், நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை. 322
கிடைத்ததைப் பகுத்துக்கொடுத்து தானும் உண்டு , பல உயிர்களையும் காப்பாற்றுதல் , அற நூலோர் தொகுத்துக்கூறிய அறங்கள் எல்லாவற்றிற்கும் தலையாய அறமாகும் .
எனது கருத்து:
மனுசனாப் பிறந்தால் கடைசி ஒருத்தனுக்காவது பிரையோசனமாய் இருக்கவேணும் கண்டியளோ . சிலபேற்றை வீட்டை போனியள் எண்டால் முழங்கையிலை பிடிச்ச…

அறத்துப்பால்-துறவறவியல்-நிலையாமை- Instability-De l’instabilité- 331-340.

அறத்துப்பால்-துறவறவியல்-நிலையாமை- Instability-De l’instabilité-331-340.


நில்லாத வற்றை நிலையின என்று உணரும் புல்லறி வாண்மை கடை. 331
நிலையில்லாதவற்றை நிலையானவை என்று எண்ணி மயங்குகின்ற புல்லறிவாண்மை ( அற்ப அறிவு )துறந்தார்க்கு இழிவாகும் .
எனது கருத்து :
ஒரு உயிரை உடம்புக்குளை கடவுள் விடேக்கை அதுக்கு ஒரு கால அளவை வைச்சுத்தான் விடுறார் . கொஞ்சக்காலத்தில அந்த உடம்பு இல்லாமல் போடும் . இது எங்களுக்கும் சரி இளையராசாவுக்கும் சரி ஒண்டுதான் . இதுகள் தெரியாமல் இந்த சனங்களுக்கை எவ்வளவு புடுங்குபாடுகள் குத்துபாடுகள் ?? இந்த அற்ப குணத்தாலை மனசிலை வளராத கூட்டங்களாய் இந்த சனங்கள் இருக்கிதுகள் .
Lowest and meanest lore, that bids men trust secure, In things that pass away, as things that shall endure!
C’est la dernière des sottises, que de croire que ce qui est instable est stable.
கூத்துஆட்டு அவைக்குழாத்து அற்றே பெருஞ்செல்வம் போக்கும் அதுவிளிந் துஅற்று. 332
பெருஞ் செல்வம் வந்து சேர்தல் கூத்தாடுமிடத்தில் கூட்டம் வந்து கூடுவதைப் போன்றது அது நீங்கிப் போதலும் கூத்து முடிந்ததும் கூட்டம் கலைவதைப் போன்றது
எனத…