Skip to main content

அறத்துப்பால்- இல்லறவியல்-செய்நன்றி அறிதல்-The Knowledge of Benefits Conferred: Gratitude-Reconnaissance des bienfaits - 101 - 110.


அறத்துப்பால்- இல்லறவியல்- செய்நன்றி அறிதல்-The Knowledge of Benefits Conferred: Gratitude- Reconnaissance des bienfaits-101-110. 


செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது. 101

தனக்கு ஓர் உதவியும் செய்யாதிருக்கும் போது ஒருவன் பிறருக்குச் செய்த உதவிக்கு இம்மண்ணுலகமும் விண்ணுலகமும் ஒப்பாதல் இயலாது .

எனது கருத்து :

முன்பின் தெரியாத ஒரு ஆள் எங்களுக்கு சின்ன உதவி செய்தாலும் , அந்த இடத்தில் அது எங்களுக்கு பெரிசாய் தெரியும் . அதின்ரை பெறுமதிக்கு இந்த மண்ணையும் விண்ணையும் கூட ஒப்பிட ஏலாது எண்டு ஐயன் இந்த முதல் குறளிலேயே தெளிவாச் சொல்லுறார் .

Assistance given by those who ne'er received our aid, Is debt by gift of heaven and earth but poorly paid.

Le Ciel et la terre ne peuvent être la juste récompense du bienfait (provenant) de celui qui n’en a pas reçu.

காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது. 102

தக்க காலத்தில் ஒருவன் செய்த உதவி சிறியதாக இருந்தாலும் , அதன் தன்மையை ஆராய்ந்தால் உலகத்தை விட மிகப் பெரியதாகும்.

எனது கருத்து:

எங்கேயோ பிறந்து வளர்ந்து இலட்சியத்தாலை ஒன்றிணைஞ்சு தேவைப்பட்ட காலத்தில எங்களை பாதுகாத்த ( உதவி ) எங்கள் மண்ணின் மைந்தர்களின் செயல் இந்தப்பூமியைவிடப் பெரிசுதான் !!!!!!!!

A timely benefit, -though thing of little worth, The gift itself, -in excellence transcends the earth.

Un service rendu à propos, quelque minime qu’il soit, est plus grand que l’univers (si on en considère l’opportunité).

பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
நன்மை கடலின் பெரிது. 103

பயனை எதிர்பாராமல் ஒருவர் செய்த உதவியாகிய அன்புடமையை ஆராய்ந்து பார்த்தால் அதன் நன்மை கடலிலும் பெரிதாகும்.

எனது கருத்து:

நாங்கள் ஒருத்தருக்கு செய்யிற உதவியால எங்களுக்கு என்ன லாபம் எண்டு யோசிக்காமல் செய்யற சின்ன உதவியோ பெரிய உதவியோ அதை செய்யற எங்கடை அன்பை அதிலை பாத்தால் அந்த உதவின்ரை நன்மை கடலை விடப் பெரிசு எண்டு ஐயன் சொல்லுறார் . ஒரு உதாரணத்துக்கு இந்த இக்கட்டான நேரத்தில நாங்கள் நேசக்கரத்தால செய்யிற உதவியள் .

Kindness shown by those who weigh not what the return may be: When you ponder right its merit, 'Tis vaster than the sea.

L’exellence d’un service rendu sans que le prix en ait été pesé, est si on la pèse, plus vaste que l’océan.

தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
கொள்வர் பயன்தெரி வார். 104

ஒருவன் தினையளவு சிறிய உதவியை தமக்குச் செய்தாலும் அதன் பயன் உணர்ந்த சான்றோர் அதனைப் பனையளவு பெரிதாக மதித்துப் போற்றுவர்.

எனது கருத்து:

ஒருத்தர் ஒரு சின்ன உதிவி செய்திருந்தாலும் அந்த உதவியின்ர பயனை ஆராய்கிறவர் அதை பனை அளவுக்கு மிகப்பெரிய உதவியாய் நினைப்பர் . இதிலையும் அதே இடத்துக்கு வாறன் . எங்களுக்கு ஒரு 50 யூறோ மாதத்தில சின்னக்காசு .அது நேசக்கரத்தால ஒரு குடும்பத்துக்கு தாயகத்துக்கு போனால் ,அது அவைக்கு பனையளவு உதவிதானே.

Each benefit to those of actions' fruit who rightly deem, Though small as millet-seed, as palm-tree vast will seem.

Le bienfait reçu ne serait-il gros que comme un grain de mil, le considèrent comme aussi gros que le fruit du palmier, ceux qui en connaissent la valeur.

உதவி வரைத்தன்று உதவி உதவி
செயப்பட்டார் சால்பின் வரைத்து. 105

கைமாறாகச் செய்யும் உதவி முன் செய்த உதவியின் அளவை உடையது அன்று உதவி செய்யப்பட்டவரின் பண்புக்கு ஏற்ற அளவை உடையதாகும்.

எனது கருத்து:

நாங்கள் ஒருத்தருக்குச் செய்யிற உதவி எண்டது , எங்கடை உதவீன்ர அளவை வைச்சு மதிக்கிறேல . எங்களிட்டை உதவியைப் பெற்றவரின்ரை பண்பாட்டிலதான் அதின் பெறுமதி தெரியும் .

The kindly aid's extent is of its worth no measure true; Its worth is as the worth of him to whom the act you do.

La reconnaissance ne doit pas être à la mesure du bienfait reçu mais doit être proportionnée à la dignité de l’obligé.

மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க
துன்பத்துள் துப்பாயார் நட்பு. 106

குற்றமற்ற நல்லவரின் நட்பை மறத்தல் கூடாது .துன்பம் நேரந்த காலத்தில் தனக்கு உதவியாக இருந்தவர்களின் நட்பை எந்நாளும் கைவிடுதல் கூடாது.

எனது கருத்து:

நடுறோட்டில கையறுந்த நிலமையில நிக்கேக்கை கை குடுத்தவன்ரை நட்பை ஒருக்காலும் மறக்கக்கூடாது . அதேநேரம் ,அறிவு ஒழக்கம் போன்ற விசையங்களில திறமான ஆக்களின்ர நட்பையும் விடக்கூடாது .

Kindness of men of stainless soul remember evermore! Forsake thou never friends who were thy stay in sorrow sore!

que l’on n’abandonne pas l’amitié de ceux qui ont secouru dans le temps du malheur ! Que l’on n’oublie pas la qualité secourable des hommes sans péché ! 

எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தம்கண்
விழுமம் துடைத்தவர் நட்பு. 107

தம்முடைய துன்பத்தைப் போக்கியவரின் நட்பை ஏழேழ் பிறவிகளிலும் மறவாது நினைத்துப் போற்றுவர் பெரியோர்.

எனது கருத்து:

இக்கட்டான நேரத்தில உதவி செய்தவைன்ர நட்பை தங்கள் வாழ்நாள் முமுழுக்க மறக்காமல் இருக்கவேணும் . அவைதான் உண்மையில பெரிய ஆக்கள்.

Through all seven worlds, in seven-fold birth, Remains in mem'ry of the wise. Friendship of those who wiped on earth, The tears of sorrow from their eyes.

On doit se souvenir dans sept naissances, l’amitié de ceux qui ont guéri ses douleurs.

நன்றி மறப்பது நன்று அன்று நன்று அல்லது
அன்றே மறப்பது நன்று. 108

பிறர்செய்த நன்மையை மறப்பது அறமாகாது . அவர் செய்த தீமையை உடனே மறந்து விடுவதே அறமாகும் .

எனது கருத்து:

ஒருத்தர் எங்களுக்கு செய்யிற உதவியளை மறந்து , கண்டதே காட்சி கொண்டதே கோலம் எண்டு இருக்கிறது நல்ல பழக்கம் இல்லை . அவர் எங்களுக்கு தெரிஞ்சோ தெரியாமலோ ஒரு கஸ்ரத்தை தந்தாரெண்டால் அதை உடன மறக்கிறது நல்ல பழக்கம் .

'Tis never good to let the thought of good things done thee pass away; Of things not good, 'tis good to rid thy memory that very day.

Il n’est pas bon d’oublier un bienfait reçu; mais il est bon d’oublier aussitôt le contraire d’un bienfait.

கொன்று அன்னா இன்னா செயினும் அவர்செய்த
ஒன்றுநன்று உள்ளக் கெடும். 109

முன்பு உதவி செய்தவர் பின்பு கொன்றாற் போன்ற துன்பத்தைச் செய்தாரானாலும் , அவர் முன்பு செய்த ஒரு நன்மையை நினைத்தால் அத்துன்பம் மறைந்து போகும் .

எனது கருத்து:

இந்தக்குறளில் எனக்கு உடன்பாடில்லை . ஏனென்றால் ஒருத்தர் எல்லாத்தையும் செய்துபோட்டு நான் உனக்கு உதவி செய்திருக்கிறன் , அதால இப்ப நான் செய்யிற தீமை சரி எண்டிறது எந்தவகையில ஞாயம் ???? அப்ப இந்திய அமைதிகாக்கும் படைகள் செய்ததெல்லாம் சரியா ?????

Effaced straightway is deadliest injury, By thought of one kind act in days gone by.

Le souvenir d’un ancien bienfait efface une injure même mortelle.

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வு உண்டாம்;உய்வுஇல்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு. 110

எந்த அறத்தை அழித்தவர்க்கும் தப்பிப் பிழைக்க வழி உண்டு . ஆனால் ஒருவர் செய்த நன்றியை மறந்தவர்க்கு உயர்வே கிடையாது .

எனது கருத்து:

இந்தக்குறளில எனக்கு கனக்க விசையங்கள் வருகிது . ஒரு சின்ன விசையம் சொல்லுறன் . மகிந்து எங்கடை பரம்பரையையே இந்தியாவின்ரை உதவியோடை அழிச்சு தன்ர பாவங்களை கழுவிப்போட்டு , இப்ப சப்பட்டையோட தேனிலவு கொண்டாடிறார் . இந்தப் பாவத்தை எங்கை கொண்டு போய் கழுவப்போறார் ஜெனிவாவிலையோ ?????

Who every good have killed, may yet destruction flee; Who 'benefit' has killed, that man shall ne'er 'scape free!

Il y a rémission pour les immolateurs de toutes les vertus, mais il n’y en a pas pour celui qui immole le bienfait







Comments

Popular posts from this blog

இல்லறவியல் ஒழுக்கமுடைமை-The Possession of Decorum - La moralité .131 - 140.

அறத்துப்பால். இல்லறவியல் ஒழுக்கமுடைமை- The Possession of Decorum- La moralité-131-140.






ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும். 131
ஒழுக்கம் எப்போதும் மேன்மையைத் தருவதால் , அந்த ஒழுக்கமே உயிரினும் மேலானதாகப் போற்றப்படுகின்றது .
எனது கருத்து:
ஒருத்தருக்கு ஒழுக்கம் அக ஒழுக்கம் புற ஒழுக்கம் எண்டு ரெண்டு வகையாலுமே இருக்கவேணும் இருந்தால் மட்டும் காணாது அதை அவற்றை உயிரைவிட உயர்வாய் பேணிப் பாதுக்கவேணும் அதைத்தான் இந்தக் குறளும் சொல்லுது
Decorum' gives especial excellence; with greater care 'Decorum' should men guard than life, which all men share.
Puisque la moralité honore tous les hommes, il faut la conserver de préférence à la vie.
பரிந்துஓம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்துஓம்பித் தேரினும் அஃதே துணை. 132
வருந்தியேனும் ஒழுக்கத்தைப் போற்றிக் காக்கவேண்டும் . பலவற்றை ஆராய்ந்து பாரத்தாலும் ஒழுக்கமே உயிரிற்குத் துணையாகும் .
எனது கருத்து:
எப்பிடித்தான் பாத்தாலும் ஒழுக்கமாய் இருக்கிறதுதான் நல்லது ஆனால் அது அவ்வளவு லேசான விசையமில்லை அதுக்கு ஒருத்தர் கனக்க விலையள் குடுக்க …

அறத்துப்பால்- துறவறவியல்- கொல்லாமை-Not killing- Ne pas tuer- 321-330.

அறத்துப்பால்-துறவறவியல்-கொல்லாமை-Not killing-Ne pas tuer-321-330.






அறவினை யாதெனில் கொல்லாமை கோறல் பிறவினை எல்லாம் தரும். 321
அறச்செயல் எதுவென்றால் எந்த ஓர் உயிரையும் கொல்லாத செயலே . அவ்வாறு கொல்லுதல் பிறதீவினைகளை எல்லாம் தானே கொண்டுவரும்.
எனது கருத்து:
நியாயமான சீவியம் எண்டால் மற்றவனைப் போடுத்தள்ளாமல் இருக்கிறதுதான் அப்பிடி போட்டுத்தள்ள வெளிக்கிட்டால் பாருங்கோ சொந்தச் செலவிலை சூனியம் செய்யவேண்டிவரும் உதாரணத்திக்கு ஏன் வெளியாலை போவான் நம்மடை மகிந்து
What is the work of virtue? 'Not to kill'; For 'killing' leads to every work of ill. 
Qu’est ce que l’acte vertueux? C’est ne pas tuer; tuer engendre tous les péchés. 
பகுத்து உண்டு பல்லுயிர் ஓம்புதல், நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை. 322
கிடைத்ததைப் பகுத்துக்கொடுத்து தானும் உண்டு , பல உயிர்களையும் காப்பாற்றுதல் , அற நூலோர் தொகுத்துக்கூறிய அறங்கள் எல்லாவற்றிற்கும் தலையாய அறமாகும் .
எனது கருத்து:
மனுசனாப் பிறந்தால் கடைசி ஒருத்தனுக்காவது பிரையோசனமாய் இருக்கவேணும் கண்டியளோ . சிலபேற்றை வீட்டை போனியள் எண்டால் முழங்கையிலை பிடிச்ச…

அறத்துப்பால்-துறவறவியல்-நிலையாமை- Instability-De l’instabilité- 331-340.

அறத்துப்பால்-துறவறவியல்-நிலையாமை- Instability-De l’instabilité-331-340.






நில்லாத வற்றை நிலையின என்று உணரும் புல்லறி வாண்மை கடை. 331
நிலையில்லாதவற்றை நிலையானவை என்று எண்ணி மயங்குகின்ற புல்லறிவாண்மை ( அற்ப அறிவு )துறந்தார்க்கு இழிவாகும் .
எனது கருத்து :
ஒரு உயிரை உடம்புக்குளை கடவுள் விடேக்கை அதுக்கு ஒரு கால அளவை வைச்சுத்தான் விடுறார் . கொஞ்சக்காலத்தில அந்த உடம்பு இல்லாமல் போடும் . இது எங்களுக்கும் சரி இளையராசாவுக்கும் சரி ஒண்டுதான் . இதுகள் தெரியாமல் இந்த சனங்களுக்கை எவ்வளவு புடுங்குபாடுகள் குத்துபாடுகள் ?? இந்த அற்ப குணத்தாலை மனசிலை வளராத கூட்டங்களாய் இந்த சனங்கள் இருக்கிதுகள் .
Lowest and meanest lore, that bids men trust secure, In things that pass away, as things that shall endure!
C’est la dernière des sottises, que de croire que ce qui est instable est stable.
கூத்துஆட்டு அவைக்குழாத்து அற்றே பெருஞ்செல்வம் போக்கும் அதுவிளிந் துஅற்று. 332
பெருஞ் செல்வம் வந்து சேர்தல் கூத்தாடுமிடத்தில் கூட்டம் வந்து கூடுவதைப் போன்றது அது நீங்கிப் போதலும் கூத்து முடிந்ததும் கூட்டம் கலைவதைப் போன்றது
எனத…