Skip to main content

அறத்துப்பால்-துறவறவியல்-நிலையாமை- Instability-De l’instabilité- 331-340.


அறத்துப்பால்-துறவறவியல்-நிலையாமை- Instability-De l’instabilité-331-340.நில்லாத வற்றை நிலையின என்று உணரும்
புல்லறி வாண்மை கடை. 331

நிலையில்லாதவற்றை நிலையானவை என்று எண்ணி மயங்குகின்ற புல்லறிவாண்மை ( அற்ப அறிவு )துறந்தார்க்கு இழிவாகும் .

எனது கருத்து :

ஒரு உயிரை உடம்புக்குளை கடவுள் விடேக்கை அதுக்கு ஒரு கால அளவை வைச்சுத்தான் விடுறார் . கொஞ்சக்காலத்தில அந்த உடம்பு இல்லாமல் போடும் . இது எங்களுக்கும் சரி இளையராசாவுக்கும் சரி ஒண்டுதான் . இதுகள் தெரியாமல் இந்த சனங்களுக்கை எவ்வளவு புடுங்குபாடுகள் குத்துபாடுகள் ?? இந்த அற்ப குணத்தாலை மனசிலை வளராத கூட்டங்களாய் இந்த சனங்கள் இருக்கிதுகள் .

Lowest and meanest lore, that bids men trust secure, In things that pass away, as things that shall endure!

C’est la dernière des sottises, que de croire que ce qui est instable est stable.

கூத்துஆட்டு அவைக்குழாத்து அற்றே பெருஞ்செல்வம்
போக்கும் அதுவிளிந் துஅற்று. 332

பெருஞ் செல்வம் வந்து சேர்தல் கூத்தாடுமிடத்தில் கூட்டம் வந்து கூடுவதைப் போன்றது அது நீங்கிப் போதலும் கூத்து முடிந்ததும் கூட்டம் கலைவதைப் போன்றது

எனது கருத்து :

இதைத்தான் எங்கடை பெரிசுகள் வலு சிம்பிளாய் சொன்னவை. குளங்குட்டையிலை தண்ணியும் மீனும் இருக்கும் வரைக்கும் தான் கொக்குகளும் இல்லாதபொல்லாத சொந்தங்களும் கொண்டாடும் எண்டும் , இது ரெண்டும் வத்திப்போனால் கொக்குகள் குளத்தை ஏன் நாயே எண்டும் கேக்காதுகள் எண்டு .........

As crowds round dancers fill the hall, is wealth's increase; Its loss, as throngs dispersing, when the dances cease.

La grande opulence vient, comme vient nombreuse la foule pour assister à une représentation théâtrale; elle s’en va comme la foule qui se dissipe, quand la représentation a pris fin.

அற்கா இயல்பிற்றுச் செல்வம் அதுபெற்றால்
அற்குப ஆங்கே செயல். 333

செல்வம் நிலைக்காத இயல்புடையது . அத்தகைய செல்வத்தைப் பெற்றால் நிலையான அறங்களை அப்போதே செய்ய வேண்டும் .

எனது கருத்து :

காசு இண்டைக்கு வரும் நாளைக்குப் போகும் . காசின்னரை குணமே அதுதான் .உங்களுக்காக ஆரும் நாலு சொட்டு கண்ணீர் விடமேணுமெண்டால் , காசு இருக்கேக்கை ஒரெப்பன்.............. கனக்கவேண்டாம் கபே குடிக்கிற காசு 2 யூறோ சேத்தால் மாசம் 60 யூறோ . இந்த நேசக்கரம் போலை இருக்கிற உண்மையான ஆக்களிட்டை குடுத்தியள் எண்டால் , அங்கை ரெண்டு மாசத்துக்கு வயிறு முட்ட போராலை பாதிச்ச சனங்கள் சாப்பிடுங்கள் அல்லது படிக்கிங்கள் எல்லோ .

Unenduring is all wealth; if you wealth enjoy, Enduring works in working wealth straightway employ.

L’opulence est, de sa nature, instable. L’obtient-t-on? Il faut s’empresser de faire de suite, les actes de charité qui s’accomplissent par son moyen. 

நாள்என ஒன்றுபோல் காட்டி உயிர்ஈரும்
வாளது உணர்வார்ப் பெறின். 334

வாழ்வை ஆராய்ந்து உண்மை உணர்வினைப் பெற்றவர்க்கு, " நாள் " என்பது கால அளவைப் போலத் தன்னைக் காட்டி உயிரின் வாழ்நாளைச் சிறிது சிறிதாக அறுக்கும் வாள் என்பது விளங்கும் .

எனது கருத்து :

நீங்கள் சிலபேரைப் பாத்திருப்பியள் ,ஒவ்வரு வரியமும் தங்கடை பிறந்தநாளை ஏதோ கோயில் திருவிழா கணக்காய் செய்து கொண்டிருப்பினம் . உண்மையில அவைக்கு விளங்கிறேலே , தங்கடை ஆயுள் காலத்தில ஒருவரியம் போட்டுதெண்டு . ஆனால் பிறந்தநாளை சம்பெயின் உடைச்சு கொண்டாடிவினம் . எவ்வளவு விளப்பம் கெட்ட சனங்கள் பாத்தியளே ?? உண்மையிலை தன்னைப் பற்றி அறிஞ்சவன் இதுகளையெல்லாம் செய்யமாட்டான் கண்டியளோ .

As 'day' it vaunts itself; well understood, 'tis knife', That daily cuts away a portion from thy life.

Le temps a l’apparence d’être mesuré par la jour. En réalité, pour ceux qui le connaissent, il est une scie, dont les dents coupent continuellement la vie. 

நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை
மேற்சென்று செய்யப் படும். 335

மேல்மூச்சு நாக்குத் , தழுதழுத்தல் போன்ற மரண உபாதைகள் வருவதற்கு முன்னே வேகமாக நற்கதிபெற நல்லறம் செய்யவேண்டும்.

எனது கருத்து :

மனிசனாப் பிறந்தால் குறைஞ்சது ஒருத்தனுக்காவது பிரையோசனமாய் இருக்கவேணும் . சிலபேரை பாத்தியள் எண்டால் தானும் படுக்காமல் மற்றவனையும் படுக்கவிடாமல் புத்துக்கு மண்ணெடுத்துக் கொண்டிருப்பினம் . இவையளாலை ஆருக்கு என்னபிரையோசனம் ??? எதுக்கும் ரிக்கற் எடுக்கிறதுக்கு முதல் ஒரு துரும்பையாவது எடுத்து போடுங்கோ . போறவழிக்குப் புண்ணியமாய் போகும் .

Before the tongue lie powerless, 'mid the gasp of gurgling breath, Arouse thyself, and do good deeds beyond the power of death.

Les bonnes couvres, sont à être faites en hâte, avant que la langue soit paralysée et que le hoquet survienne. 

நெருநல் உளன்ஒருவன் இன்றுஇல்லை என்னும்
பெருமை உடைத்துஇவ் வுலகு. 336

நேற்று இருந்தவன் ஒருவன் இன்று இல்லாமல் இறந்து போனான் என்று சொல்லப்படும் நிலையாமையாகிய தன்மையை உடையது இவ்வுலகம் .

எனது கருத்து :

இண்டைக்கு மகிந்துவும் மகிந்துவின்ரை கூட்டாளியளும் தம்பியையும் , தம்பியின்ரை கூட்டத்தையும் முடிச்சிட்டம் எண்டு விழா எடுத்து அப்பாவிச் சனங்களுக்கு முன்னாலை நெஞ்சை நிமித்தாலாம் . ஆனால் பாருங்கோ நாளைக்கு இதே மகிந்து கூட்டத்துக்கு சங்கூத ஒருதன் வருவான் . வாழ்க்கையிலை எதுவுமே நிலையில்லை . ஆனால் அதுக்குள்ளை எத்தினை ஆட்டம் போடிறாங்கள் இந்த மோடையங்கள் ??

Existing yesterday, today to nothing hurled!- Such greatness owns this transitory world.

Ce monde est instable, tel que le font ressortir ces paroles:
‘‘ il fut hier, il n’est plus aujourd’hui’’.

ஒருபொழுதும் வாழ்வது அறியார் கருதுப
கோடியும் அல்ல பல. 337

அறிவற்றவர் ஒருவேளியாவது வாழ்க்கையின் தன்மையை ஆராய்ந்து அறிவதில்லை. ஆனால் வீணில் எண்ணும் அளவோ ஒரு கோடியும் அல்ல; மிக்க பலவாகும் .

எனது கருத்து :

இந்த உடம்பும் உயிரும் ரெயில் பயணியள் மாதிரி . இறங்கிற இடம் வந்தவுடனை பயணி எண்ட உடம்பு உயிர் எண்ட ரயிலை விட்டு போய் கொண்டே இருக்கும் . இதுகள் தெரியாமல் சனங்கள் ஆயிரம் மனக்கோட்டையள் கட்டிக்கொண்டு இருப்பினம் எண்டு ஐயன் சொன்னாலும் , வேறை வழியாலையும் நாங்கள் யோசிக்கவேணும் கண்டியளோ . வாழ்க்கை நிலையில்லாதது எண்டு ஒவ்வருத்தனும் மூலையுக்கை குந்திக் கொண்டிருந்தால் , காட்டுக்கை மிருகத்தோடை மிருகமாய் இருந்த மனுசன் இண்டைக்கு சாம்சுங் கலக்ஸியோடையும் , சாம்சுங் ரபிலற்றோடையும் திரிவனோ ???????

Who know not if their happy lives shall last the day, In fancies infinite beguile the hours away!

On se sait pas si on vivra au moins un jour, on forme des projets,
plus nombreux que dix millions.

குடம்பை தனித்து ஒழியப் புள்பறந் துஅற்றே
உடம்பொடு உயிர்இடை நட்பு. 338

உடம்புக்கும் உயிருக்கும் உள்ள உறவு கூட்டுக்கும் பறவைக்கும் உள்ள தொடர்பு போன்றது . கூட்டைத் தனியே விட்டுவிட்டுப் பறவை எந்த நேரத்திலும் பறந்து போய்விடும் .

எனது கருத்து :

இந்த குருவியள் எல்லாம் தாங்கள் முட்டை​ போட்டு குஞ்சு பொரிச்சு ஒரெப்பன் வளரும் வரைக்கும் தான் கூடு ஒண்டை கட்டி அதுக்குள்ளை இருப்பினம் . குஞ்சுகள் கொஞ்சம் வளர இந்தக் குருவியள் எங்கையாவது பறந்து போடுங்கள் . இதே மாதிரித்தான் எங்கடை உடம்பும் உயிருக்கும் பந்தங்கள் கண்டியளோ . ஆனால் இதுக்குள்ளை எத்தினை ஆட்டங்களை எங்கடை சனங்கள் ஆடுதுகள் ??

Birds fly away, and leave the nest deserted bare; Such is the short-lived friendship soul and body share.

L’oisillon parvenu à maturité abandonne l’œuf dont il est sorti et s’envole: telle est l’amitié de l’âme pour le corps.

உறங்கு வதுபோலும் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு. 339

உலகில் மனிதன் இறப்பது தூங்குவதற்கு ஒப்பாகும் . மறுபடியும் அவன் பிறவி எடுப்பது என்பது தூங்கி விழித்தெழுந்த நிலையோடு ஒத்திருக்கும் .

எனது கருத்து :

ஒருத்தனுக்கு சா நித்திரையைப் போலை வரும் . தப்பி தவறி அவன் பிறக்க வேண்டி வந்தால் , அது அவனுக்கு நித்ரையாலை எழும்பிற மாதிரி . இதை கிட்டமுட்ட ஒவ்வருநாளும்தான் நாங்கள் செய்யிறம் . ஆனால் இருந்தாப்போலை அப்பிடியே நித்திரையா போடுவம் . இதுகள் தெரியாமல் எங்கடை சனங்கள் இடைப்பட்ட 16 மணித்தியாலத்தில எத்தினை கூத்துகளை ஆடுதுகள் ?? தான்தான் பணக்காறன் எண்டும் , சாதிமான் எண்டும் , அறிவாளியெண்டும் , தனக்குத்தான் எல்லாம் தெரியும் மற்றவன் கைநாட்டுகள் எண்டும் , இவையள் ஆடிற ஆட்டம் சொல்லி வேலையில்லை கண்டியளோ .........

Death is sinking into slumbers deep; Birth again is waking out of sleep.

La mort ressemble au sommeil. La naissance ressemble au réveil.

புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள்
துச்சில் இருந்த உயிர்க்கு. 340

நோய்களுக்கு இடமாகிய உடம்பில் ஒரு மூலையில் குடியிருந்த உயிர்க்கு நிலையாகத் தங்கியிருப்பதற்குரிய வீடு இதுவரையில் அமையவில்லை

எனது கருத்து :

நாங்கள் எவ்வளவோ நல்லதுகளையும் கெட்டதுகளையும் செய்யிறம் . நாங்கள் ஏதோ சாகாவரம் எடுத்த ஆக்கள் மாதிரி . ஆனால் உண்மை அப்பிடி இல்லை கண்டியளோ . எங்கடை உயிருக்கு ஒழுங்கான வீடுவாசல் கிடையாது . ஒழுங்கான மனிசரெண்டால் இதுகளை மனசிலை வைச்சு மற்றவனுக்கு இடைஞ்சல் இல்லாமல் சீவிக்கிற வழியை பாக்கவேணும் பாருங்கோ .

he soul in fragile shed as lodger courts repose:- Is it because no home's conclusive rest it knows?

La vie n’a pas de gîte permanent dans le corps, habité par toutes les maladies; elle ne l’habite qu’à titre de locataire.
Comments

Popular posts from this blog

இல்லறவியல் ஒழுக்கமுடைமை-The Possession of Decorum - La moralité .131 - 140.

அறத்துப்பால். இல்லறவியல் ஒழுக்கமுடைமை- The Possession of Decorum- La moralité-131-140.


ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும். 131
ஒழுக்கம் எப்போதும் மேன்மையைத் தருவதால் , அந்த ஒழுக்கமே உயிரினும் மேலானதாகப் போற்றப்படுகின்றது .
எனது கருத்து:
ஒருத்தருக்கு ஒழுக்கம் அக ஒழுக்கம் புற ஒழுக்கம் எண்டு ரெண்டு வகையாலுமே இருக்கவேணும் இருந்தால் மட்டும் காணாது அதை அவற்றை உயிரைவிட உயர்வாய் பேணிப் பாதுக்கவேணும் அதைத்தான் இந்தக் குறளும் சொல்லுது
Decorum' gives especial excellence; with greater care 'Decorum' should men guard than life, which all men share.
Puisque la moralité honore tous les hommes, il faut la conserver de préférence à la vie.
பரிந்துஓம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்துஓம்பித் தேரினும் அஃதே துணை. 132
வருந்தியேனும் ஒழுக்கத்தைப் போற்றிக் காக்கவேண்டும் . பலவற்றை ஆராய்ந்து பாரத்தாலும் ஒழுக்கமே உயிரிற்குத் துணையாகும் .
எனது கருத்து:
எப்பிடித்தான் பாத்தாலும் ஒழுக்கமாய் இருக்கிறதுதான் நல்லது ஆனால் அது அவ்வளவு லேசான விசையமில்லை அதுக்கு ஒருத்தர் கனக்க விலையள் குடுக்க …

அறத்துப்பால்- துறவறவியல்- கொல்லாமை-Not killing- Ne pas tuer- 321-330.

அறத்துப்பால்-துறவறவியல்-கொல்லாமை-Not killing-Ne pas tuer-321-330.


அறவினை யாதெனில் கொல்லாமை கோறல் பிறவினை எல்லாம் தரும். 321
அறச்செயல் எதுவென்றால் எந்த ஓர் உயிரையும் கொல்லாத செயலே . அவ்வாறு கொல்லுதல் பிறதீவினைகளை எல்லாம் தானே கொண்டுவரும்.
எனது கருத்து:
நியாயமான சீவியம் எண்டால் மற்றவனைப் போடுத்தள்ளாமல் இருக்கிறதுதான் அப்பிடி போட்டுத்தள்ள வெளிக்கிட்டால் பாருங்கோ சொந்தச் செலவிலை சூனியம் செய்யவேண்டிவரும் உதாரணத்திக்கு ஏன் வெளியாலை போவான் நம்மடை மகிந்து
What is the work of virtue? 'Not to kill'; For 'killing' leads to every work of ill. 
Qu’est ce que l’acte vertueux? C’est ne pas tuer; tuer engendre tous les péchés. 
பகுத்து உண்டு பல்லுயிர் ஓம்புதல், நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை. 322
கிடைத்ததைப் பகுத்துக்கொடுத்து தானும் உண்டு , பல உயிர்களையும் காப்பாற்றுதல் , அற நூலோர் தொகுத்துக்கூறிய அறங்கள் எல்லாவற்றிற்கும் தலையாய அறமாகும் .
எனது கருத்து:
மனுசனாப் பிறந்தால் கடைசி ஒருத்தனுக்காவது பிரையோசனமாய் இருக்கவேணும் கண்டியளோ . சிலபேற்றை வீட்டை போனியள் எண்டால் முழங்கையிலை பிடிச்ச…