Skip to main content

அறத்துப்பால் - இல்லறவியல் - வாழ்க்கைத்துணைநலம் -The Goodness of the Help to Domestic Life- Bien fait de la Compagne - 51 - 60.அறத்துப்பால் - இல்லறவியல் - வாழ்க்கைத்துணைநலம்- The Goodness of the Help to Domestic Life- Bien fait de la Compagne 51-60. 


மனைக்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை. 51

இரக்க குணம் பொருந்தி , கணவனின் வருவாய்க்கு ஏற்றவாறு செலவு செய்து இல்லற வாழ்க்கையை நடத்துபவளே உண்மையான மனைவி ஆவாள் .

என்பார்வை:

விரலுக்கேத்த வீக்கம் எண்டு சொல்லுவினம் . சும்மா அடுத்த வீடு பீ எம் டபுள் யூ வாங்கினால் தானும் வாங்கவேணும் , மங்களம் பவியோன் வீடு வாங்கினால் தானும் வாங்கவேணும் , 50 பவுணில தாலி போடவேணும் எண்டு அவரை அரையண்டம் பண்ணாமல் , அவர் எடுக்கிற சம்பளத்தில கட்டுச்செட்டாய் குடும்பம் நடத்திறவா தான் அதிசிறந்த மனைவி .

As doth the house beseem, she shows her wifely dignity; As doth her husband's wealth befit, she spends: help - meet is she.

Est compagne, l'épouse qui, unit aux bonnes qualités et conduite inhérentes à la vie familiale, le talent de proportionner les dépenses aux revenus de son mari.

மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை
எனைமாட்சித் தாயினும் இல். 52

இல்வாழ்க்கைக்கு உரிய நற்பண்பு மனைவியிடம் இல்லையானால் ஒருவனுடைய வாழ்க்கை வேறு எவ்வளவு சிறப்புடையதானாலும் பயன் இல்லை.

என்பார்வை:

ஊதாரித்தனமான ,நல்ல குணமில்லாத தரும்பத்தினி ஒராளுக்கு கிடைச்சால் , அவருடைய இல்வாழ்கை சிறப்பில்லாமலும் , அவருடைய தலையிலை சனி நிரந்தரமாய் நிண்டு டிஸ்க்கோ ஆடுமாம் .

If household excellence be wanting in the wife, Howe'er with splendour lived, all worthless is the life.

Si l'épouse n'a pas les qualités et conduite d'une bonne ménagère, la vie familiale quelque prospère qu'elle puisse être, n'est pas heureuse.

இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்
இல்லவள் மாணாக் கடை?. 53

மனைவி நற்குணம் பொருந்தியிருந்தால் வளமான வாழ்வு அமையும். மாறுபட்ட குணம் பொருந்திய மனைவி அமைந்தால் வாழ்க்கை பயன்ற்தாகும் .

என்பார்வை:

ஒருவனக்கு நல்ல பண்புகளை உடைய மனைவி கிடைத்தால் அவனுக்கு வாழ்கையில் சொர்கவாசல் அகலத் திறந்திருக்கும் . இதுக்கு எதிர்மாறாக மனைவி கிடைத்தால் அவனனை நரகவாசல் இறுக்கி அணைக்கும் .

There is no lack within the house, where wife in worth excels, There is no luck within the house, where wife dishonoured dwells.

Si l’épouse est vertueuse, que manque-t-il au mari? Et si elle ne l’est pas, que reste-t-il au mari.

பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்
திண்மைஉண் டாகப் பெறின். 54

கற்பு நெறியுடைய பெண் ஒருவனுக்கு மனைவியாக வாய்த்தால் அதைவிடச் சிறந்த பெருமை அவனுக்கு வேறு இல்லை .

என்பார்வை:

இதிலை ஓரவஞ்சனை செய்யிறார் . கற்பு மனைவியிடம் இருந்தால் அது பெருமைக்குரிய விடையமாம் , அப்ப ஆம்பிளையள் ? என்னத்தைச்சொல்ல...............

If woman might of chastity retain, What choicer treasure doth the world contain?

Quel bien meilleur pour un homme, qu’une épouse, infailliblement chaste?

தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை. 55

கடவுளை வணங்காமல் கணவனையே தெய்வமாக எண்ணி , காலையில் எழுந்து அவனைத் தொழுது வருபவள் ' பெய் ' என்றால் மழையும் பெய்யும்

என்பார்வை:

உண்மையில் இது பெண் அடிமைத்தனத்தின் வெளிப்பாடே ஒழிய வேறு ஒன்றும் இல்லை . இப்பிடிப்பட்ட மனைவியள் இல்லாததால்தானோ செயற்கைமழை பொழியப்பண்ணீனம் ?

No God adoring, low she bends before her lord; Then rising, serves: the rain falls instant at her word!

Que l’épouse qui, sans adorer Dieu, adore seulement son mari, dise à son réveil: ‘‘qu’il pleuve’’, il pleuvra. 

தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண். 56

கற்பு நெறியில் தன்னைக் காத்துக் கொண்டு, தன் கணவனையும் காப்பாற்றி , தகுதியமைத்த புகழையும் காத்துச் சோர்வு அடையாமல் வாழ்பவளே சிறந்த பெண்ணாவாள் .

என்பார்வை:

உடலாலும் உள்ளத்தாலும் தன்னைக் காத்து, தன் கணவனின் நலன்களில் கவனம் வைத்து, குடும்பத்திற்கு நலம் தரும் புகழைக் காத்து, அறத்தைக் கடைப்பிடிப்பதில் சோர்வடையாமல் இருப்பவளே மனைவி என்றாலும் , ஆம்பிளையளும் இப்பிடி நடந்தாலே அந்தக் குடும்பத்தில் மகிழ்ச்சி என்னும் தென்றல் வீசும் . இல்லாட்டில் புயல் தான் கண்டியளோ..............

Who guards herself, for husband's comfort cares, her household's fame,In perfect wise with sleepless soul preserves, -give her a woman's name.

Celle qui se garde jalousement, qui prend soin de son mari et qui contribue à leur reputation commune, voilà la femme! 

சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர்
நிறைகாக்கும் காப்பே தலை. 57

மகளிரைக் காவல் வைத்துக் காக்கும் முறை என்ன பயனைச் செய்யும் ? அவர்கள் நிறை என்னும் பண்பால் தம்மைத் தாம் காக்கும் காப்பே சாலச் சிறந்தது.

என்பார்வை:

இப்பிடியெல்லாம் மனைவிமார் அப்படி இருக்கவேணும் , இப்பிடி இருக்கவேணும் என்றெல்லாம் சொல்விட்டு அந்த சட்டங்களை இயற்றின ஆம்பிளையளுக்கும் ஒரு அடி கொடுக்கிறார் . இங்கைதான் ஐயன் நிக்கிறார் .

Of what avail is watch and ward? Honour's woman's safest guard.

A quoi sert la garde des femmes dans le gynécée? La vigilance gardienne de la chasteté de l’épouse est la meilleure.

பெற்றாற் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்
புத்தேளிர் வாழும் உலகு. 58

பெண்கள் கணவரைப் போற்றித் தம் கடமைகளையும் செம்மையாகச் செய்வாரானால் பெருஞ் சிறப்புடைய மேல் உலக வாழ்வைப் பெறுவர்.

என்பார்வை:

அப்ப இந்த உலகிலை ஒண்டுமே கிடையாதா..?இப்பிடிச் சொன்னால் ஒருத்தியும் திருந்தமாட்டாட்டினம்..இப்பா எல்லாம் கெதீல நடக்கவேணும் எண்டு விரும்புகிற உலகம்..தேவர் உலகம் போகும் வரைக்கும் இந்த மனிசிமார் வெயிற் பண்ணுவினமோ எண்டது ஐமிச்சம்தான்..திருவள்ளுவர் இப்ப இருந்திருந்தால் இதை மாத்தி புருசன் வீட்டில் மேன்மை பெறுவார்கள் எண்டு பாடியிருப்பார்...

If wife be wholly true to him who gained her as his bride, Great glory gains she in the world where gods bliss abide.

Les épouses qui honorent leur mari seront fort honorées dans le ciel habité par les Dévas.

புகழ்புரிந்த இல்லிலோர்க்கு இல்லை இகழ்வார்முன்
ஏறுபோல் பீடு நடை. 59

கற்பில்லாத மனைவியைப் பெற்ற ஒருவனால் செருக்குடன் காளை போன்று நடை போட்டு, பகைவர்கள் முன்னால் செல்ல முடியாது.

என்பார்வை:

நல்ல பண்புகளால் அந்தக்குடும்பத்துக்குப் பெருமை சேர்க்காத மனைவி கிடைச்சால் , சிங்கம் சிங்கிளாய்ப் பூனையாகத்தான் நடக்கவேணும் .

Who have not spouses that in virtue's praise delight, They lion-like can never walk in scorner's sight.

A ceux dont les épouse ne désirent pas la bonne renommée, fait défaut la démarche haute du lion, devant leurs détracteurs. 

மங்கலம் என்ப மனைமாட்சி மற்று அதன்
நன்கலம் நன்மக்கட் பேறு. 60

மனைவியின் நற்பண்பே இல்வாழ்கைக்கு மங்கலம் என்று கூறுவர். நல்ல மக்களைப் பெறுதல் அதற்கு நல்ல அணிகலன் ஆகும் .

என்பார்வை:

எல்லாம் கிடைத்தும் நல்ல மக்கள் அந்த குடும்பத்துக் கிடைக்காட்டி , 70 பவுணில தாலிக்கோடி போடாதமாதிரி இருக்கும் .

The house's 'blessing', men pronounce the house-wife excellent; The gain of blessed children is its goodly ornament.

Avoir une épouse vertueuse est, dit-on, un bien; avoir de bous enfants est l’ornement de ce bien.

Comments

Popular posts from this blog

அறத்துப்பால்- துறவறவியல்- கொல்லாமை-Not killing- Ne pas tuer- 321-330.

அறத்துப்பால்-துறவறவியல்-கொல்லாமை-Not killing-Ne pas tuer-321-330.


அறவினை யாதெனில் கொல்லாமை கோறல் பிறவினை எல்லாம் தரும். 321
அறச்செயல் எதுவென்றால் எந்த ஓர் உயிரையும் கொல்லாத செயலே . அவ்வாறு கொல்லுதல் பிறதீவினைகளை எல்லாம் தானே கொண்டுவரும்.
எனது கருத்து:
நியாயமான சீவியம் எண்டால் மற்றவனைப் போடுத்தள்ளாமல் இருக்கிறதுதான் அப்பிடி போட்டுத்தள்ள வெளிக்கிட்டால் பாருங்கோ சொந்தச் செலவிலை சூனியம் செய்யவேண்டிவரும் உதாரணத்திக்கு ஏன் வெளியாலை போவான் நம்மடை மகிந்து
What is the work of virtue? 'Not to kill'; For 'killing' leads to every work of ill. 
Qu’est ce que l’acte vertueux? C’est ne pas tuer; tuer engendre tous les péchés. 
பகுத்து உண்டு பல்லுயிர் ஓம்புதல், நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை. 322
கிடைத்ததைப் பகுத்துக்கொடுத்து தானும் உண்டு , பல உயிர்களையும் காப்பாற்றுதல் , அற நூலோர் தொகுத்துக்கூறிய அறங்கள் எல்லாவற்றிற்கும் தலையாய அறமாகும் .
எனது கருத்து:
மனுசனாப் பிறந்தால் கடைசி ஒருத்தனுக்காவது பிரையோசனமாய் இருக்கவேணும் கண்டியளோ . சிலபேற்றை வீட்டை போனியள் எண்டால் முழங்கையிலை பிடிச்ச…

இல்லறவியல் ஒழுக்கமுடைமை-The Possession of Decorum - La moralité .131 - 140.

அறத்துப்பால். இல்லறவியல் ஒழுக்கமுடைமை- The Possession of Decorum- La moralité-131-140.


ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும். 131
ஒழுக்கம் எப்போதும் மேன்மையைத் தருவதால் , அந்த ஒழுக்கமே உயிரினும் மேலானதாகப் போற்றப்படுகின்றது .
எனது கருத்து:
ஒருத்தருக்கு ஒழுக்கம் அக ஒழுக்கம் புற ஒழுக்கம் எண்டு ரெண்டு வகையாலுமே இருக்கவேணும் இருந்தால் மட்டும் காணாது அதை அவற்றை உயிரைவிட உயர்வாய் பேணிப் பாதுக்கவேணும் அதைத்தான் இந்தக் குறளும் சொல்லுது
Decorum' gives especial excellence; with greater care 'Decorum' should men guard than life, which all men share.
Puisque la moralité honore tous les hommes, il faut la conserver de préférence à la vie.
பரிந்துஓம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்துஓம்பித் தேரினும் அஃதே துணை. 132
வருந்தியேனும் ஒழுக்கத்தைப் போற்றிக் காக்கவேண்டும் . பலவற்றை ஆராய்ந்து பாரத்தாலும் ஒழுக்கமே உயிரிற்குத் துணையாகும் .
எனது கருத்து:
எப்பிடித்தான் பாத்தாலும் ஒழுக்கமாய் இருக்கிறதுதான் நல்லது ஆனால் அது அவ்வளவு லேசான விசையமில்லை அதுக்கு ஒருத்தர் கனக்க விலையள் குடுக்க …

அறத்துப்பால்-துறவறவியல்-நிலையாமை- Instability-De l’instabilité- 331-340.

அறத்துப்பால்-துறவறவியல்-நிலையாமை- Instability-De l’instabilité-331-340.


நில்லாத வற்றை நிலையின என்று உணரும் புல்லறி வாண்மை கடை. 331
நிலையில்லாதவற்றை நிலையானவை என்று எண்ணி மயங்குகின்ற புல்லறிவாண்மை ( அற்ப அறிவு )துறந்தார்க்கு இழிவாகும் .
எனது கருத்து :
ஒரு உயிரை உடம்புக்குளை கடவுள் விடேக்கை அதுக்கு ஒரு கால அளவை வைச்சுத்தான் விடுறார் . கொஞ்சக்காலத்தில அந்த உடம்பு இல்லாமல் போடும் . இது எங்களுக்கும் சரி இளையராசாவுக்கும் சரி ஒண்டுதான் . இதுகள் தெரியாமல் இந்த சனங்களுக்கை எவ்வளவு புடுங்குபாடுகள் குத்துபாடுகள் ?? இந்த அற்ப குணத்தாலை மனசிலை வளராத கூட்டங்களாய் இந்த சனங்கள் இருக்கிதுகள் .
Lowest and meanest lore, that bids men trust secure, In things that pass away, as things that shall endure!
C’est la dernière des sottises, que de croire que ce qui est instable est stable.
கூத்துஆட்டு அவைக்குழாத்து அற்றே பெருஞ்செல்வம் போக்கும் அதுவிளிந் துஅற்று. 332
பெருஞ் செல்வம் வந்து சேர்தல் கூத்தாடுமிடத்தில் கூட்டம் வந்து கூடுவதைப் போன்றது அது நீங்கிப் போதலும் கூத்து முடிந்ததும் கூட்டம் கலைவதைப் போன்றது
எனத…