Skip to main content

அறத்துப்பால் - பாயிரவியல்- நீத்தார் பெருமை.The Greatness of Ascetics , Grandeur de ceux qui ont renoncé au monde 21 - 30 )



அறத்துப்பால் – பாயிரவியல்- நீத்தார் பெருமை-The Greatness of Ascetics - Grandeur de ceux qui ont renoncé au monde.


ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
வேண்டும் பணுவல் துணிவு. 21

ஒழுக்கத்தில் நிலையாக நின்று பற்று விட்டவரின் பெருமையைச் சிறந்ததாகப் போற்றிக் கூறுவதே நூல்களின் முடிவாகும்.

எனது பார்வை:

மனுசனாய் பிறந்தவன் சுயநலம் இல்லாமல் இருக்கறது தான் திறமான சீவியம் . அதைத்தான் வரலாறுகளும் நூல்களும் கியாதியாய் சொல்லும் கண்டியளோ .இப்ப நீங்களும் இப்பிடிச் சீவிச்சியளெண்டால் , உங்களைப்பற்றியுமெல்லே நாலைஞ்சு பேர் கதைச்சு கதைச்சு உங்களைப்றி யூனியிலேயே ஒரு பாடத்திட்டமாக்கிப் போடுவங்கள் எண்டால் பாருங்கோவன். இல்லாட்டில் ஒரே ஒரு புத்தகம் படத்தோடை உங்களைப் பற்றி வரும் ,அதுதான் கல்வெட்டு . வசதி எப்பிடி ?

The settled rule of every code requires, as highest good,Their greatness who, renouncing all, true to their rule have stood.

Les Ecritures exaltent au dessus de tout autre Bien la grandeur de ceux qui ont renoncé au monde et mènent une vie de discipline.

துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து
இறந்தாரை எண்ணிக்கொண் டற்று. 22

பற்றுக்களை விட்டவரின் பெருமையை அளந்து சொல்வது என்பது , உலகில் இதுவரை பிறந்து இறந்தவர்களை எண்ணிக் கணக்கிடுவது போன்றது அதாவது இயலாததாகும்.

எனது பார்வை:

உடனை சொல்லுங்கோ , உலகத்திலை இப்ப எவ்வளவு சனம் இருக்கு ? மண்டைகாயிற வேலையெல்லோ ? இதுக்குள்ளை செத்தவங்களின்ர தொகையைக் கணக்கெடுக்கேலுமே ? இப்ப எங்கடை நாட்டை எடுத்தியளெண்டால் , கணாமல் போனவங்கடை கணக்கு வேறை சொல்லி அடங்காது . இதுகளை எல்லாம் கட்டுக்குள்ளை கொண்டு வந்து கணக்கு எடுக்கிறது எண்டது , மினைக்கெட அம்பட்டன் பூனையைச் சிரைச்சானாம் எண்டமாரிப் போடும் . அதால , மற்றவைன்ர நலத்துக்காகச் சீவிச்சவையின்ர பெருமையளை அளந்து சொல்லிறது எண்டது ஒரு கஸ்ரமான வேலை பாருங்கோ .

As counting those that from the earth have passed away,'Tis vain attempt the might of holy men to say.

Tenter d’évaluer la grandeur de ceux qui ont renoncé au monde, c’est tenter de dénombrer les morts ici-bas.

இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார்
பெருமை பிறங்கிற்று உலகு. 23

இம்மை , மறுமை இரண்டின் கூறுகளை ஆராய்ந்து அறிந்து இவ்வுலகில் அறநெறியை மேற்கொண்டவரின் பெருமையே மிக உயர்ந்ததாகும் .

எனது பார்வை:

இதைப்பாக்க எனக்கு இதுதான் ஞாபகம் வருகிது . எங்கடை யோகர் சுவாமிகளிட்டை ஆரும் போனால் அடிக்கடி ஒரு வசனம் , சும்மா இரு எண்டு சொல்லுறவர் . சில சனம் குளம்பிப் போய் சொல்லுவினம் உந்தாளுக்கு நட்டுக்கழண்டு போச்சுதெண்டு . அவர் ஏன் சும்மா இரு எண்டு சொன்னார் எண்டால் , ஆசைகளை விட்டு பற்று அற்ரு இருந்தாலே நல்லது கெட்டது , சந்தோசம் துக்கம் , வசதி ஏழ்மை , எண்டு எது வந்தாலுமே சந்தோசமாய் இருக்கலாம் எண்டுதான் . இது எங்கடையாக்களுக்கு விளங்கேல . நீங்களும் கண்டகடியளுக்கெல்லாம் ஆசைப்படமால் நல்ல பிள்ளையளாய் இருந்தால் , உங்களால மற்றவைக்கும் ஒரு பாதுகாப்பு . நீங்கள் இல்லாத இடத்திலை உங்களைப்பற்றி நாலுபேர் கெப்பராய் எல்லோ கதைப்பினம் .

Their greatness earth transcends, who, way of both worlds weighed,In this world take their stand, in virtue's robe arrayed.

La grandeur de ceux qui, après avoir pesé et compris l’essence des deux attributs (plaisir et douleur) de la vie, ont embrassé l’ascétisme l’emporte sur tout ici-bas.

உரன் எனும் தோட்டியான் ஓர் ஐந்தும் காப்பான்
வரன் என்னும் வைப்பிற்கோர் வித்து. 24

அறிவு என்னும் அங்குசத்தால் ஐம்பொறிகளாகிய யானைகளை அடக்கிக் காக்க வல்லவன் மேலான வீடுபேறு அடைவான்.

எனது பார்வை:

ஒரு பெரிய இவர்மாரிச் சொல்லிப்போட்டன் ஆசையை அடக்குங்கோ எண்டு . ஆசை மட்டும் எண்டில்லை உங்கடை ஐஞ்சு புலன்களையும் அடக்கி ஆளுறது தான் ஆசையை விடுறதுக்கு அரிவரிப்பாடம் . ஆனால் அது வில்லண்டம் பிடிச்ச கயிட்டம் பாருங்கோ . அதைத்தான் ரெண்டெழுத்து ஐய்யாவும் சொல்லுறார் ,யானை எண்ட பெரிய மிருகத்தை எப்பிடி அங்குசத்தால பாகன் அடக்கிறானோ ,அப்பிடி ஐம்புலனை அடக்கோணும் எண்டு . இந்த ஐம்புலனுகளை வைச்சுக்கொண்டு எங்கட சனம் செய்யிற அரையண்டங்களை நாங்களும் பாக்கிறம் தானே .

He, who with firmness, curb the five restrains, Is seed for soil of yonder happy plains.

Celui qui, grâce au croc de l’energie, protège les cinq (sens) est une semence pour le champ meilleur du Ciel.

ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
இந்திரனே சாலுங் கரி. 25

ஐம்பொறிகளின் வழியாக எழுகின்ற ஆசைகளை ஒழித்தவனுடைய வலிமைக்கு வானுலகத்தாரின் தலைவனாகிய இந்திரனே சான்று

எனது பார்வை:

மனிசினாய் பிறந்தவன் ஆகமிஞ்சி ஒரு அறுபது வயசு மட்டும் இருப்பான் . அதிலையும் அவன்ரை பகுத்தறிவு வேலைசெய்யிறது ஒரு இருபது வயசுக்கு மேலதான் . ஆக கூட்டிக்கழிச்சுப் பாத்தால் ஒரு நாப்பது வரியம்தான் அவன் வாழ்கையை அனுபவிக்கிறது . இதிலை போய் ஐம்புலன்களை அடக்கி இருங்கோ எண்டால் அவன் பாவைப்பிள்ளையெல்லோ ? ஆனால் இதில எனக்கு ஒரு விசயம் இடிக்குது ? வள்வளுவர் ஐய்யா ஏன் போய் இந்திரனுக்கு உவ்வளவு சேர்ட்டிபிக்கற் குடுக்கிறார் எண்டு ? இந்திரன் வில்லண்டம் பிடிச்ச ஆள் . நெடுக தன்ரை ஏரியாவில ரம்பை , மேனகை , ஊர்வசி திலோத்தமை , ஆக்கடை டான்ஸ்சுகளை பாத்துக்கொண்டு இருக்கிறவர் . அந்த இந்திரன் போய் எப்பிடி ஐம்புலனை அடக்கினவர் எண்டு இவர் சொல்லுறார் ?

Their might who have destroyed 'the five', shall soothly tellIndra, the lord of those in heaven's wide realms that dwell.

La puissance de celui qui détruit en lui les cinq (passions produites par les sens) q été attestée par Indra lui-même, Roi des vastes régions célestes.

செயற்கரிய செய்வார் பெரியர் ; சிறியர்
செயற்கரிய செய்கலா தார். 26

செய்வதற்கு அருமையானவற்றைச் செய்பவரே பெரியோர் ; செய்பவற்கு அரிய செயல்களைச் செய்ய முடியாதவர் சிறியோர்.

எனது பார்வை:

இது உண்மைலையே எல்லாருக்கும் ஒரு தேவையான பாடம் பாருங்கோ . சும்மா சாப்பிட்டம் , படுத்தம் , யாழிலை திண்ணைல வந்து ரெண்டு லோ எடுத்தம் எண்டு இருக்காமல் . எவன் தன்னைச் சுத்தி இருக்கிற ஆக்கள் தன்னாலை பிரையோசனப்படவேணும் எண்டு நினைச்சு தன்ரை அலுவலுகளைக் கொண்டு போறானோ அவன் பாருங்கோ சரித்திரத்தில ( பெரியவனாய் ) நிலையா நிக்கிறான் கண்டியளோ . இதுக்கு எதிர்மாறாய் நிக்கிறதுகள் , என்னத்தைச் சொல்ல ஐஞ்சுசதத்துக்கும் உதவாத ( சிறியோர் ) கோஸ்ரியள் . இனிமேலாவது பிள்ளையள் ஒரெப்பன் துரும்பையாவது எடுத்துப்போடப் பாருங்கோ என்ன ?

Things hard in the doing will great men do;Things hard in the doing the mean eschew.

Les grands d’entre les hommes font seuls, ce qu’il est difficile de faire (le domptage des sens) ; les faibles en sont incapables. 

சுவைஒளி ஊறுஓசை நாற்றம் என்று ஐந்தின்
வகைதெரிவான் கட்டே உலகு. 27

சுவை , ஒளி , ஊறு , ஓசை , நாற்றம் , என்று கூறப்படுகின்ற ஐந்தின் வகைகளையும் ஆராய்ந்து அறிய வல்லவனுடைய அறிவில் தான் உலகம் உள்ளது .

எனது பார்வை:

அப்பிடி ஆராவது இருந்தால் சொல்லுங்கோப்பா . அப்ப இந்த விஞ்ஞானியள் எல்லாம் இந்த ஐம்புலனுகளை பகுத்தறியாதவையே ? இவையளால எவ்வளவு வில்லண்டம் உலகத்துக்கு . ஒரு சின்னப்பெடியனைக் கண்டுபிடிச்சதும் ஒரு விஞ்ஞானிதானே . எவ்வளவு சனம் அப்பவே செத்திது . இப்ப ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு அணுகுண்டுக்கு மேல குந்திக்கொண்டிருக்கினம் . எனக்கிண்டா ஒண்டுமாய் தெரியேல .

Taste, light, touch, sound, and smell: who knows the way Of all the five,- the world submissive owns his sway.

Le monde appartient à celui qui examine et connaît la nature des cinq (sensations) qui sont appelés : la saveur, la lumière, l’attouchement, le son et l’odeur.

நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும். 28*

பயன் நிறைந்த மொழிகளையே பேசும் பற்றற்ர துறவியரின் ( சான்றோரின் ) பெருமையை அவருடைய ஆணையாக வழங்கும் மந்திரங்களே உலகிற்கு உணர்த்திவிடும்.

எனது பார்வை:

இதில எனக்கு ஐமிச்சம் இல்லை . ஏனெண்டால் , உலகத்தின்ர சரித்திரத்தை பிரட்டிப்போட்ட ஆக்களைப் வடிவாய் பாத்தால் , இந்தப்பூனையும் பால் குடிக்குமோ எண்டமாரி வலு சாதாரணமய் ( பற்றற்று ) இருப்பினம் . ஆனால் அவைன்ரை செய்கை எண்ட உராய்வு தான் சரித்திரத்தை சுத்த வைச்சிருக்கு .

The might of men whose word is never vain, The 'secret word' shall to the earth proclaim.

La grandeur des ascètes dont les paroles sont riches de sens est mise en évidence par l’efficacité même des prières récitées en leur honneur. 

குணம்என்னும் குன்றேறி நின்றார் வெகுளி
கணமேயும் காத்தல் அரிது. 29

நல்ல பண்புகளாகிய குன்றின் மேல் ஏறி நிற்கும் சான்றோரின் சினத்தை ஒருகணமேனும் சமாளித்தல் முடியாததாகும் .

எனது பார்வை:

பெரிசுகள் சும்மாவே சொன்னவை சாது மிரண்டால் காடு கொள்ளாது எண்டு ஐம்பத்தெட்டு கலம்பகத்தை பாத்து கேள்வப்பட்ட ஒரு சிறிய சாது தொடராய் மிரண்டதால தானே ஒருபெரிய தேசியப்போராட்டதை கொண்டெழுப்பினது

The wrath 'tis hard e'en for an instant to endure, Of those who virtue's hill have scaled, and stand secure.

Il est impossible de résister même une seconde, à la colère des réligieux qui se tiennent sur la colline des qualités, (renoncement,vraie connaissance et absence du désir). 

அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான். 30

எல்லா உயிர்களிடத்திலும் செம்மையான அருளை மேற்கொண்டு ஒழுகும் அறிவோரே அந்தணர் என்பவராவர்.

எனது பார்வை:

இதில ஐயா சத்தியமாய் சாதி பாக்கேல எல்லாச் சீவனிலையும் அன்பும் பரிவையும் கொண்டு ஒழுக்கமாய் இருக்கிற எல்லாக்கோஸ்ரியளுமே அந்தணர் தான் எண்டு ஒரு நிறுவல் போடுறார் பாருங்கோ அங்கைதான் ஐயா நிக்கறார்

Towards all that breathe, with seemly graciousness adorned they live;And thus to virtue's sons the name of 'Anthanar' men give.

Ceux qui sont appelés andanars, à cause de leur conduite, pleine de vraie compassion pour tout ce qui a vie, ne sont autres que les ascètes.

Comments

Popular posts from this blog

அறத்துப்பால்- துறவறவியல்- கொல்லாமை-Not killing- Ne pas tuer- 321-330.

அறத்துப்பால்-துறவறவியல்-கொல்லாமை-Not killing-Ne pas tuer-321-330.






அறவினை யாதெனில் கொல்லாமை கோறல் பிறவினை எல்லாம் தரும். 321
அறச்செயல் எதுவென்றால் எந்த ஓர் உயிரையும் கொல்லாத செயலே . அவ்வாறு கொல்லுதல் பிறதீவினைகளை எல்லாம் தானே கொண்டுவரும்.
எனது கருத்து:
நியாயமான சீவியம் எண்டால் மற்றவனைப் போடுத்தள்ளாமல் இருக்கிறதுதான் அப்பிடி போட்டுத்தள்ள வெளிக்கிட்டால் பாருங்கோ சொந்தச் செலவிலை சூனியம் செய்யவேண்டிவரும் உதாரணத்திக்கு ஏன் வெளியாலை போவான் நம்மடை மகிந்து
What is the work of virtue? 'Not to kill'; For 'killing' leads to every work of ill. 
Qu’est ce que l’acte vertueux? C’est ne pas tuer; tuer engendre tous les péchés. 
பகுத்து உண்டு பல்லுயிர் ஓம்புதல், நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை. 322
கிடைத்ததைப் பகுத்துக்கொடுத்து தானும் உண்டு , பல உயிர்களையும் காப்பாற்றுதல் , அற நூலோர் தொகுத்துக்கூறிய அறங்கள் எல்லாவற்றிற்கும் தலையாய அறமாகும் .
எனது கருத்து:
மனுசனாப் பிறந்தால் கடைசி ஒருத்தனுக்காவது பிரையோசனமாய் இருக்கவேணும் கண்டியளோ . சிலபேற்றை வீட்டை போனியள் எண்டால் முழங்கையிலை பிடிச்ச…

இல்லறவியல் ஒழுக்கமுடைமை-The Possession of Decorum - La moralité .131 - 140.

அறத்துப்பால். இல்லறவியல் ஒழுக்கமுடைமை- The Possession of Decorum- La moralité-131-140.






ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும். 131
ஒழுக்கம் எப்போதும் மேன்மையைத் தருவதால் , அந்த ஒழுக்கமே உயிரினும் மேலானதாகப் போற்றப்படுகின்றது .
எனது கருத்து:
ஒருத்தருக்கு ஒழுக்கம் அக ஒழுக்கம் புற ஒழுக்கம் எண்டு ரெண்டு வகையாலுமே இருக்கவேணும் இருந்தால் மட்டும் காணாது அதை அவற்றை உயிரைவிட உயர்வாய் பேணிப் பாதுக்கவேணும் அதைத்தான் இந்தக் குறளும் சொல்லுது
Decorum' gives especial excellence; with greater care 'Decorum' should men guard than life, which all men share.
Puisque la moralité honore tous les hommes, il faut la conserver de préférence à la vie.
பரிந்துஓம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்துஓம்பித் தேரினும் அஃதே துணை. 132
வருந்தியேனும் ஒழுக்கத்தைப் போற்றிக் காக்கவேண்டும் . பலவற்றை ஆராய்ந்து பாரத்தாலும் ஒழுக்கமே உயிரிற்குத் துணையாகும் .
எனது கருத்து:
எப்பிடித்தான் பாத்தாலும் ஒழுக்கமாய் இருக்கிறதுதான் நல்லது ஆனால் அது அவ்வளவு லேசான விசையமில்லை அதுக்கு ஒருத்தர் கனக்க விலையள் குடுக்க …

அறத்துப்பால்-துறவறவியல்-நிலையாமை- Instability-De l’instabilité- 331-340.

அறத்துப்பால்-துறவறவியல்-நிலையாமை- Instability-De l’instabilité-331-340.






நில்லாத வற்றை நிலையின என்று உணரும் புல்லறி வாண்மை கடை. 331
நிலையில்லாதவற்றை நிலையானவை என்று எண்ணி மயங்குகின்ற புல்லறிவாண்மை ( அற்ப அறிவு )துறந்தார்க்கு இழிவாகும் .
எனது கருத்து :
ஒரு உயிரை உடம்புக்குளை கடவுள் விடேக்கை அதுக்கு ஒரு கால அளவை வைச்சுத்தான் விடுறார் . கொஞ்சக்காலத்தில அந்த உடம்பு இல்லாமல் போடும் . இது எங்களுக்கும் சரி இளையராசாவுக்கும் சரி ஒண்டுதான் . இதுகள் தெரியாமல் இந்த சனங்களுக்கை எவ்வளவு புடுங்குபாடுகள் குத்துபாடுகள் ?? இந்த அற்ப குணத்தாலை மனசிலை வளராத கூட்டங்களாய் இந்த சனங்கள் இருக்கிதுகள் .
Lowest and meanest lore, that bids men trust secure, In things that pass away, as things that shall endure!
C’est la dernière des sottises, que de croire que ce qui est instable est stable.
கூத்துஆட்டு அவைக்குழாத்து அற்றே பெருஞ்செல்வம் போக்கும் அதுவிளிந் துஅற்று. 332
பெருஞ் செல்வம் வந்து சேர்தல் கூத்தாடுமிடத்தில் கூட்டம் வந்து கூடுவதைப் போன்றது அது நீங்கிப் போதலும் கூத்து முடிந்ததும் கூட்டம் கலைவதைப் போன்றது
எனத…