Skip to main content

தமிழரின் வாழ்வியல் கருவூலம்


வணக்கம் வாசகர்களே 

ஓர் நீண்ட புதியதொடர் மூலம் சந்திப்பதில் மகிழ்சி அடைகின்றேன்.பல வருடங்களுக்கு முன் எமது மூதாதையர்கள் தூரநோக்குடன் விதைத்த விதைகளின் விளைச்சலை இன்று நாம் அறுவடை செய்கின்றோம் . ஒப்பீட்டளவில் அவர்களுடைய செயற்பாடுகளுடன் நாம் எமது வருங்கால சந்ததிக்குச் செய்வது குறைவாகவே உள்ளது . யாழ் கருத்துக்களத்தினூடாக ஒரு சிறிய நகர்வாக , எமது ஐயன் வள்ளுவனார் ஏறத்தாள இரண்டாயிரம் வருடங்களுக்கு முன் எமக்கு விதைத்த விதையின் விளைச்சலைக் குறிப்பாக இளைய சமூகத்திற்கு , உலகின் பெருமளவு வழக்கில் உள்ள ஆங்கில பிரெஞ் மொழிபயர்ப்புடன் நகர்த்துகின்றேன் . மொழிபெயர்ப்புக்கு அறிவுசால் பெரியார்களின் ஒத்துழைப்பையும் நாடுகின்றேன் . தமிழ் மொழியின் ஆழ அகலம் பார்க்க விரும்புபவர்கள் முதலில் படிக்கவேண்டிய பாலபாடம் திருக்குறளும் , சிவபுராணமும் ஆகும் . மனித வாழ்வின் பல்வேறு நடப்புகளைத் தெள்ழு தமிழில் இவை தொட்டு செல்கின்றன என்பது எனது தாழ்மையான கருத்தாகும் . என்னைப் பொறுத்தவரையில் இத் தொடரின் வெற்றியானது ,உங்களின் ஒத்துழைப்பாலும் , இளைய சமூகமானது எமது மொழியின் ஆழுமைகளைத் தமது வேற்றுமொழி நண்பர்களுக்கு சொல்லும் பொழுதிலேயே அது பூரணப்படுத்தப்படும் .
கோமகன்

Comments

Popular posts from this blog

இல்லறவியல் ஒழுக்கமுடைமை-The Possession of Decorum - La moralité .131 - 140.

அறத்துப்பால். இல்லறவியல் ஒழுக்கமுடைமை- The Possession of Decorum- La moralité-131-140.


ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும். 131
ஒழுக்கம் எப்போதும் மேன்மையைத் தருவதால் , அந்த ஒழுக்கமே உயிரினும் மேலானதாகப் போற்றப்படுகின்றது .
எனது கருத்து:
ஒருத்தருக்கு ஒழுக்கம் அக ஒழுக்கம் புற ஒழுக்கம் எண்டு ரெண்டு வகையாலுமே இருக்கவேணும் இருந்தால் மட்டும் காணாது அதை அவற்றை உயிரைவிட உயர்வாய் பேணிப் பாதுக்கவேணும் அதைத்தான் இந்தக் குறளும் சொல்லுது
Decorum' gives especial excellence; with greater care 'Decorum' should men guard than life, which all men share.
Puisque la moralité honore tous les hommes, il faut la conserver de préférence à la vie.
பரிந்துஓம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்துஓம்பித் தேரினும் அஃதே துணை. 132
வருந்தியேனும் ஒழுக்கத்தைப் போற்றிக் காக்கவேண்டும் . பலவற்றை ஆராய்ந்து பாரத்தாலும் ஒழுக்கமே உயிரிற்குத் துணையாகும் .
எனது கருத்து:
எப்பிடித்தான் பாத்தாலும் ஒழுக்கமாய் இருக்கிறதுதான் நல்லது ஆனால் அது அவ்வளவு லேசான விசையமில்லை அதுக்கு ஒருத்தர் கனக்க விலையள் குடுக்க …

அறத்துப்பால்- துறவறவியல்- கொல்லாமை-Not killing- Ne pas tuer- 321-330.

அறத்துப்பால்-துறவறவியல்-கொல்லாமை-Not killing-Ne pas tuer-321-330.


அறவினை யாதெனில் கொல்லாமை கோறல் பிறவினை எல்லாம் தரும். 321
அறச்செயல் எதுவென்றால் எந்த ஓர் உயிரையும் கொல்லாத செயலே . அவ்வாறு கொல்லுதல் பிறதீவினைகளை எல்லாம் தானே கொண்டுவரும்.
எனது கருத்து:
நியாயமான சீவியம் எண்டால் மற்றவனைப் போடுத்தள்ளாமல் இருக்கிறதுதான் அப்பிடி போட்டுத்தள்ள வெளிக்கிட்டால் பாருங்கோ சொந்தச் செலவிலை சூனியம் செய்யவேண்டிவரும் உதாரணத்திக்கு ஏன் வெளியாலை போவான் நம்மடை மகிந்து
What is the work of virtue? 'Not to kill'; For 'killing' leads to every work of ill. 
Qu’est ce que l’acte vertueux? C’est ne pas tuer; tuer engendre tous les péchés. 
பகுத்து உண்டு பல்லுயிர் ஓம்புதல், நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை. 322
கிடைத்ததைப் பகுத்துக்கொடுத்து தானும் உண்டு , பல உயிர்களையும் காப்பாற்றுதல் , அற நூலோர் தொகுத்துக்கூறிய அறங்கள் எல்லாவற்றிற்கும் தலையாய அறமாகும் .
எனது கருத்து:
மனுசனாப் பிறந்தால் கடைசி ஒருத்தனுக்காவது பிரையோசனமாய் இருக்கவேணும் கண்டியளோ . சிலபேற்றை வீட்டை போனியள் எண்டால் முழங்கையிலை பிடிச்ச…

அறத்துப்பால்-துறவறவியல் கூடாவொழுக்கம்-Inconsistent Conduct-Bonne conduite-De la conduite qu’on de doit pas tenir-271- 280.

அறத்துப்பால்-துறவறவியல்-கூடாவொழுக்கம்- Inconsistent Conduct-Bonne conduite-De la conduite qu’on de doit pas tenir-271-280. 

வஞ்ச மனத்தான் படிற்றுஒழுக்கம் பூதங்கள் ஐந்தும் அகத்தே நகும். 271
வஞ்சகனுடைய தீயொழுகத்தைக் கண்டு அவன் உடலில் உறுப்பாய் அமைந்துள்ள பஞ்சபூதங்களும் தமக்குள் ஏளனமாய் சிரிக்கும் .
எனது கருத்து :
ஊரை அடிச்சு உலையிலபோடுறவை அந்த நேரத்திலை நினைக்கலாம் தாங்கள் வெண்டிட்டினம் எண்டு ஆனால் எண்டைக்காவது ஒருநாள் அவையின்ர உடம்பு பஞ்சபூதங்கள் அவையைப் பாத்து சிரிக்கும் .
Who with deceitful mind in false way walks of covert sin,The five-fold elements his frame compose, decide within.
Les cinq sens se rient interieurement de la feinte moralité de l’hypocrite.
வான்உயர் தோற்றம் எவன்செய்யும் தன்நெஞ்சம் தான்அறி குற்றம் படின். 272
தன் நெஞ்சம் தான் அறிந்து செய்யும் குற்றத்தில் ஈடுபடுமானால் வானளாவிய அவனது தவத் தோற்றம் என்ன செய்யும் ?
எனது கருத்து :
தனக்கு பிழை எண்டு தெரிஞ்சும் ஒருத்தர் பிழை விடுகிறார் எண்டால் அவர் எப்பிடியான தவக்கோலங்கள் போட்டும் வேலையள் இல்லை .
What gain, though virtue'…