Skip to main content

அறத்துப்பால்- துறவறவியல்-கள்ளாமை-The Absence of Fraud -Ne pas voler- 281-290.


அறத்துப்பால்-துறவறவியல் கள்ளாமை-The Absence of Fraud-Ne pas voler-281-290. 

எள்ளாமை வேண்டுவான் என்பான் எனைத்துஒன்றும்
கள்ளாமை காக்கதன் நெஞ்சு. 281

பிறரிடம் பழிசொல் கேட்க்காமல் உலகில் வாழ விரும்புகின்றவன் பிறர்பொருளைக் கவரும் எண்ணம் உள்ளத்தில் தோன்றாதவாறு தன்னைக்காத்துக் கொள்ள வேண்டும்

எனது கருத்து :

இப்பிடிப் பட்ட ஆக்கள் இண்டைக்கு இல்லையெண்டே சொல்லலாம் உங்களை ஒருத்தர் பிழை சொல்லக்கூடாது எண்டு நீங்கள் விரும்பினால் மற்றவைக்கு சொந்தமான சாமானுகளை மனசாலையும் நீங்கள் களவெடுக்க கூடாது கண்டியளோ

Who seeks heaven's joys, from impious levity secure, Let him from every fraud preserve his spirit pure.

Que celui qui est considéré de tous, comme désirant son salut et non comme le méprisant garde son cœur contre toute appropriation frauduleuse d’un objet quelconque!

உள்ளத்தால் உள்ளலும் தீதே; பிறன்பொருளை
கள்ளத்தால் கள்வேம் எனல். 282

குற்றமான செயல்களை மனதால் நினைப்பதும் பாவம் ஆதலால் பிறன் பொருளை அவனுக்குத் தெரியாமல் வஞ்சனையால் கவர்ந்து கொள்வோம் என்று நினைத்தலும் கூடாது

எனது கருத்து :

எனக்கு தெரிஞ்சு சீதையில இராவணனுக்கு ஒரு இது வந்து அவாவைக் கடத்திக் கொண்டு போனதால அவற்றை மானம் மரியாதை எல்லாம் போய் கடைசியில பேராய் புகழாய் இருந்த மனுசன்ரை நாடும் இல்லாமல் போட்டுது.

'Tis sin if in the mind man but thought conceive; 'By fraud I will my neighbour of his wealth bereave.'

Penser au péché est un péché. Que l’on ne pense donc pas à s’approprier frauduleusement la propriété d’autrui. 

களவினால் ஆகிய ஆக்கம் அளவுஇறந்து
ஆவது போலக் கெடும். 283

களவால் வரும் பிறர் செலவம் பெருகுவது போல் தோன்றி கடைசியில் உள்ளதையும் சேர்த்து அழித்து விடும்

எனது கருத்து :

மற்றவன்ரை வயித்திலை அடிச்சு தேடிற தேட்டங்கள் முதல் நல்லாய்த் தான் இருக்கும் ஆனால் கடைசியில ஒண்டும் இல்லாமல் நடுறோட்டில பிச்சைக்காறர் மாதிரி திரிவினம் . இதுக்கு கனக்க உதாரணங்களை சொல்லலாம் குறிப்பாய் கள்ள மட்டை அடிக்கிற கோஸ்ரியள் .

The gain that comes by fraud, although it seems to grow With limitless increase, to ruin swift shall go.

La fortune acquise par le vol semble prospérer, mais elle dépasse les limites et périt.

களவின்கண் கன்றிய காதல் விளைவின்கண்
வீயா விழுமம் தரும். 284

களவு செய்வதில் உண்டாகும் மிகுந்த விருப்பம் பயன் விளையும்போது அகலாத வருத்தத்தை அளிக்கும்

எனது கருத்து :

இதில எனக்கு ஒரு இடைஞ்சல் இருக்கு . ஐய்யன் சொன்ன இந்த குறள் அவற்றை காலத்தில சரியா இருக்கலாம் . ஏனெண்டால் , அவற்றை காலம் ஒழுக்கத்தை மதிச்ச காலம் . இப்ப மொள்ளமாரிக்கும் முடிச்சவிக்குக்கும் தானே காலமாய் கிடக்கு . நேர்மையா மனச்சாட்சியா நடக்கிறவன் பிச்சைக்காறனை விடக் கேவலாமா அல்லோ இருக்கிறான் ...

The lust inveterate of fraudful gain, Yields as its fruit undying pain.

Le désir effréné du vol a pour effet de causer de cuisantes douleurs.

அருள்கருதி அன்புடையார் ஆதல் பொருள்கருதிப்
பொச்சாப்புப் பார்ப்பார்கண் இல். 285

களவாடுவதற்கு தக்க காலத்தை எதிர்நோக்கிஇருப்பவர்களிடம் அருளைக்கருதி அன்புடையவராக இருக்கும் நிலை உண்டாகாது

எனது கருத்து :

இராவணன் ஒழுங்குமுறயா ராமரோடை கேம் கேட்டு படையெடுத்து போய் சீதையை கொண்டுவந்தால் இண்டைக்கும் இராவணன்தான் ஹீரோ . ஆனால் ராமருக்கு அல்வா குடுத்து சீதையை ஆட்டையை போடேக்கை அவனுக்கு ஈன இரக்கமோ ஒண்டும் இருக்கேல . எவ்வளவு பேர் சொல்லி பாத்தினம் எப்பாவது அசைஞ்சு குடுத்தானா ??

'Grace' is not in their thoughts, nor know they kind affection's power,Who neighbour's goods desire, and watch for his unguarded hour.

Le désir d’aimer le prochain, parce qu’on connaît le prix de la miséricorde, ne germe pas dans le cœur de Ceux qui convoitent le bien d’autrui et épient son défaut de vigilance.

அளவின்கண் நின்றுஒழுகல் ஆற்றார் களவின்கண்
கன்றிய காத லவர். 286

பிறர்பொருளை அபகரித்தலில் கருத்துக் கொண்டவர்கள் தம் வருவாயின் அளவுக்குத் தகுந்தபடி ஒழுக்கத்தோடு வாழ இயலாதவர்களே ஆவர்

எனது கருத்து :

மனுசனாய் பிறந்தவன் மற்றவனுக்காய் தன்ரை சீவியத்தை கொண்டுபோகாமல் இப்பிடித்தான் இருக்கவேணும் எண்டு கட்டுச்செட்டாய் இருக்கவேணும் பாருங்கோ .அப்பிடி இருக்கேலாத ஆக்கள்தான் மற்றவன்ரை சாமானுகளை ஆட்டையை போடுறதில வலு மும்மரமாய் இருப்பினம் .

They cannot walk restrained in wisdom's measured bound,In whom inveterate lust of fraudful gain is found.

Ceux qui ont l’amour immodéré du vol n’ont pas sens de la mesure et ne se conduisent pas en conséquence. 

களவுஎன்னும் கார் அறிவு ஆண்மை அளவுஎன்னும்
ஆற்றல் புரிந்தார்கண் இல். 287

களவென்னும் இருள்படர்ந்த அறியாமை அளவறிந்து வாழும் தன்மக்களிடத்தில் ஒருபோதும் இல்லாததாகும்

எனது கருத்து :

ஒருத்தன் உயிருகளில இரக்கம் காட்டி கட்டுச்செட்டாய் சீவியம் நடத்துவன் எண்டால் மற்றவன்ரை சாமானுகளை ஆட்டையை போடமாட்டான் .

Practice of fraud's dark cunning arts they shun, Who long for power by 'measured wisdom' won.

Ne se rencontre pas chez ceux qui ont le sens de la mesure, l’ignorance crasse appelée vol.

அளவுஅறிந்தார் நெஞ்சத்து அறம்போல நிற்கும்
களவுஅறிந்தார் நெஞ்சில் கரவு. 288

அளவறிந்து வாழ்பவரின் நெஞ்சத்தில் நிலைத்து நிற்கும் அறம்போல, களவுத் தொழில அறிந்தவரின் நெஞ்சில் வஞ்சகம் நிலைத்து நிற்கும்.

எனது கருத்து :

அடுத்தவன்ரை பொருளுகளை ஆட்டைய போடுறவன்ரை மனம் சுத்தபத்தமாய் இருக்காது எல்லாம் நச்சுக்கிருமியள் .ஆனால் நீதி நேர்மை எண்டு கட்டுசெட்டாய் இருக்கிறவையின்ரை மனசு வெள்ளையா சுத்தபத்தமாய் இருக்கும் . நீங்கள் எப்பிடி இருக்கவேணும் எண்டு நீங்கள்தான் முடிவு செய்யவேணும்.

As virtue dwells in heart that 'measured wisdom' gains;Deceit in hearts of fraudful men established reigns.

La fourberie a sa demeure fixe dans la cœur des professionnels du vol, comme la vertu a la sienne, dans le cœur de ceux qui ont le sens de la mesure.

அளவுஅல்ல செய்தாங்கே வீவர் களவுஅல்ல
மற்றைய தேற்றா தவர். 289

களவைத் தவிர வேறு நல்ல வழிகளைத் தெரியாதவர்கள் அளவற்ற செலவுகளைச் செய்து அழிவர்

எனது கருத்து :

மற்றவன்ரை பொருளுகளை ஆட்டையை போடுறதே தொழிலாய் இருக்கிறவை கடைசியில அதமச் செலுவுகள் செஞ்சு சொறிநாயை விட கேவலமாய் போவினம்.

Who have no lore save that which fraudful arts supply, Acts of unmeasured vice committing straightway die.

Ceux qui ne connaissent pas autre chose que le vol périssent instantanément, avec leurs mauvaises pensées démesurées. 

கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை; கள்ளார்க்குத்
தள்ளாது புத்தேள் உலகு. 290

களவு செய்வார்க்கு உயிர் வாழ்வதும் அரிதாய் விடும் களவு செய்யாதவர்க்கு தேவருலகத்து வாழ்வும் தவறிப் போகாது

எனது கருத்து :

களவெடுக்கிறவனை மற்றவை மதிக்கிறது மாதிரி வெளியில தெரிஞ்சாலும் அவன்ரை உயிரே மதிக்காது . களவே எடுக்காதவனை உலகமே கொண்டாடும் .

The fraudful forfeit life and being here below; Who fraud eschew the bliss of heavenly beings know.

Le corps des habituels du vol périt; le monde des dieux ne manque pas à ceux qui ne volent pas.Comments

Popular posts from this blog

அறத்துப்பால்- துறவறவியல்- கொல்லாமை-Not killing- Ne pas tuer- 321-330.

அறத்துப்பால்-துறவறவியல்-கொல்லாமை-Not killing-Ne pas tuer-321-330.


அறவினை யாதெனில் கொல்லாமை கோறல் பிறவினை எல்லாம் தரும். 321
அறச்செயல் எதுவென்றால் எந்த ஓர் உயிரையும் கொல்லாத செயலே . அவ்வாறு கொல்லுதல் பிறதீவினைகளை எல்லாம் தானே கொண்டுவரும்.
எனது கருத்து:
நியாயமான சீவியம் எண்டால் மற்றவனைப் போடுத்தள்ளாமல் இருக்கிறதுதான் அப்பிடி போட்டுத்தள்ள வெளிக்கிட்டால் பாருங்கோ சொந்தச் செலவிலை சூனியம் செய்யவேண்டிவரும் உதாரணத்திக்கு ஏன் வெளியாலை போவான் நம்மடை மகிந்து
What is the work of virtue? 'Not to kill'; For 'killing' leads to every work of ill. 
Qu’est ce que l’acte vertueux? C’est ne pas tuer; tuer engendre tous les péchés. 
பகுத்து உண்டு பல்லுயிர் ஓம்புதல், நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை. 322
கிடைத்ததைப் பகுத்துக்கொடுத்து தானும் உண்டு , பல உயிர்களையும் காப்பாற்றுதல் , அற நூலோர் தொகுத்துக்கூறிய அறங்கள் எல்லாவற்றிற்கும் தலையாய அறமாகும் .
எனது கருத்து:
மனுசனாப் பிறந்தால் கடைசி ஒருத்தனுக்காவது பிரையோசனமாய் இருக்கவேணும் கண்டியளோ . சிலபேற்றை வீட்டை போனியள் எண்டால் முழங்கையிலை பிடிச்ச…

இல்லறவியல் ஒழுக்கமுடைமை-The Possession of Decorum - La moralité .131 - 140.

அறத்துப்பால். இல்லறவியல் ஒழுக்கமுடைமை- The Possession of Decorum- La moralité-131-140.


ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும். 131
ஒழுக்கம் எப்போதும் மேன்மையைத் தருவதால் , அந்த ஒழுக்கமே உயிரினும் மேலானதாகப் போற்றப்படுகின்றது .
எனது கருத்து:
ஒருத்தருக்கு ஒழுக்கம் அக ஒழுக்கம் புற ஒழுக்கம் எண்டு ரெண்டு வகையாலுமே இருக்கவேணும் இருந்தால் மட்டும் காணாது அதை அவற்றை உயிரைவிட உயர்வாய் பேணிப் பாதுக்கவேணும் அதைத்தான் இந்தக் குறளும் சொல்லுது
Decorum' gives especial excellence; with greater care 'Decorum' should men guard than life, which all men share.
Puisque la moralité honore tous les hommes, il faut la conserver de préférence à la vie.
பரிந்துஓம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்துஓம்பித் தேரினும் அஃதே துணை. 132
வருந்தியேனும் ஒழுக்கத்தைப் போற்றிக் காக்கவேண்டும் . பலவற்றை ஆராய்ந்து பாரத்தாலும் ஒழுக்கமே உயிரிற்குத் துணையாகும் .
எனது கருத்து:
எப்பிடித்தான் பாத்தாலும் ஒழுக்கமாய் இருக்கிறதுதான் நல்லது ஆனால் அது அவ்வளவு லேசான விசையமில்லை அதுக்கு ஒருத்தர் கனக்க விலையள் குடுக்க …

அறத்துப்பால்-துறவறவியல்-நிலையாமை- Instability-De l’instabilité- 331-340.

அறத்துப்பால்-துறவறவியல்-நிலையாமை- Instability-De l’instabilité-331-340.


நில்லாத வற்றை நிலையின என்று உணரும் புல்லறி வாண்மை கடை. 331
நிலையில்லாதவற்றை நிலையானவை என்று எண்ணி மயங்குகின்ற புல்லறிவாண்மை ( அற்ப அறிவு )துறந்தார்க்கு இழிவாகும் .
எனது கருத்து :
ஒரு உயிரை உடம்புக்குளை கடவுள் விடேக்கை அதுக்கு ஒரு கால அளவை வைச்சுத்தான் விடுறார் . கொஞ்சக்காலத்தில அந்த உடம்பு இல்லாமல் போடும் . இது எங்களுக்கும் சரி இளையராசாவுக்கும் சரி ஒண்டுதான் . இதுகள் தெரியாமல் இந்த சனங்களுக்கை எவ்வளவு புடுங்குபாடுகள் குத்துபாடுகள் ?? இந்த அற்ப குணத்தாலை மனசிலை வளராத கூட்டங்களாய் இந்த சனங்கள் இருக்கிதுகள் .
Lowest and meanest lore, that bids men trust secure, In things that pass away, as things that shall endure!
C’est la dernière des sottises, que de croire que ce qui est instable est stable.
கூத்துஆட்டு அவைக்குழாத்து அற்றே பெருஞ்செல்வம் போக்கும் அதுவிளிந் துஅற்று. 332
பெருஞ் செல்வம் வந்து சேர்தல் கூத்தாடுமிடத்தில் கூட்டம் வந்து கூடுவதைப் போன்றது அது நீங்கிப் போதலும் கூத்து முடிந்ததும் கூட்டம் கலைவதைப் போன்றது
எனத…